Tuesday, June 10, 2008

ஏன் பராக் ஒபாமா? - 2

பராக் ஒபாமா சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்திலிருந்து வரவில்லை. நன்கு படித்திருக்கிறார். நல்ல வேலையில் இருந்திருக்கிறார். இப்போது செனேடராக உள்ளார். ஆனாலும் ஒரு கென்ய நாட்டைச் சேர்ந்த, அமெரிக்காவுக்கு வந்த தந்தைக்கு மகனாகப் பிறந்திருக்கிறார். கறுப்பினப் பெண் ஒருவரை மணம் புரிந்திருக்கிறார். அமெரிக்காவில் கறுப்பர் நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துவைத்திருப்பார் என்று நம்புகிறேன். Discrimination, இன/தோல்நிற வேறுபாடு காரணமாக வாய்ப்புகள் மறுக்கப்படுவது என்பதை நன்கு உணர்ந்தவராக இருப்பார் என்று நம்புகிறேன். உலகெங்கும் உள்ள பெரும்பான்மை பிரச்னைகள் மனிதர்கள் சமமாக நடத்தப்படாததால்தான். இதன் காரணமாகவே தீவிரவாதம், நாடுகளுக்கு இடையேயான போர் ஆகியவை ஏற்படுகின்றன. வாய்ப்பு மறுக்கப்படுவதை உணரும் ஒருவர் அது ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகே, போர் என்பது நாடுகளுக்கு இடையேயான எந்தப் பிரச்னையையும் தீர்க்காது என்று தெரிந்துவிட்டது. இதுவரையில் எந்தப் பிரச்னை போரால் தீர்ந்துள்ளது? ஆனால் அமெரிக்காவின் தலைவர்கள் அனைவருமே தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய ராணுவ பலத்தால், போரின்மூலம் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்கள். பராக் ஒபாமா ஒருவர்தான் போர் கூடாது என்று தெளிவாகச் சொன்னவர். அப்படிச் சொல்வதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பதால்தான் அவர் அப்படிச் சொன்னார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மெக்கெய்ன் ஈராக்கில் தொடர்ந்து போரை நடத்துவேன் என்று சொல்லும் ஒரே காரணத்துக்காக எதிர்க்கப்படவேண்டியவர்; தோற்கடிக்கப்படவேண்டியவர். நாளையும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மேற்கொண்டு போரை நடத்தவே இவர் விரும்புவார். அவ்வாறு அவரைத் தூண்ட, அமெரிக்காவின் நியோகான்கள் விரும்புவர்.

இன்று அமெரிக்காவின் தலைமையை ஏற்பவர் செய்யவேண்டியது:

* அரசு செய்யும் ஊதாரிச் செலவை ஒரேயடியாகக் குறைக்கவேண்டும். ராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை அறவே ஒழித்தால் போதும்.
* பொதுமக்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாகச் சேமிக்கவேண்டும் என்று சொல்லி, அதற்கான வேலைகளில் ஈடுபடவேண்டும்.
* வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்து, டாலரை நிலையாக இருக்குமாறு செய்யவேண்டும். அதற்காக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க என்ன வேண்டுமோ அதனைச் செய்யவேண்டும். குறைந்த விலை இறக்குமதிகளைக் கொஞ்சம் தடுத்தாலும் தவறில்லை; அதற்காக சில பொருள்களின்மீது டாரிஃப் சுமத்துவதும் தவறில்லை. இதனால் சில ஆசிய நாடுகள் (இந்தியா சேர்த்து) பாதிக்கப்பட்டாலும் தவறில்லை.
* சப்-பிரைம் கடன்களால் வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு உதவி.
* ஏழை மக்களுக்கு ஹெல்த்கேர், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்யவேண்டும். ராணுவத்துக்கும் போருக்கும் வீணாகும் பணத்தை உபயோகமாக இங்கே செலவழிக்கலாம்.
* சோஷியல் செக்யூரிட்டி, பென்ஷன் பிரச்னைகளுக்கு உடனடியாக சீரியசான தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.
* அமெரிக்காவில் சிறுபான்மையினர் - கறுப்பினத்தவர், செவ்விந்தியர்களில் எஞ்சியவர்கள், ஹிஸ்பானியர்கள், (இந்தியர்கள் சேர்த்து பிறர்), ஆகியோர் முன்னேற, அவர்களை பிறர் சமூக அளவில் சமமாக நடத்த வேண்டியவற்றைச் செய்வது.
* அமெரிக்கர்கள் குடம் குடமாக பெட்ரோலைக் குடிக்கும் கார்களை ஒழித்துக்கட்ட, கடுமையான வரிகளைக் கொண்டுவரவேண்டும். பொதுவாகவே அமெரிக்காவில் வீணாகும் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைச் சேமிக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
* வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை இப்போது அதிகமாகிக்கொண்டு வருகிறது. பொருளாதாரம் ஆட்டம் காணும் நேரத்தில் இவ்வாறு இருப்பது இயல்பே. பொருளாதாரம் மீண்டு வரும்வரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பலவற்றைச் செய்யவேண்டும்.
* கல்வியில் நிறைய முதலீடு.
* வெளியுறவுக் கொள்கையில் சண்டியர்தனம் செய்யாமல் தன்மையோடு நடந்துகொள்வது.
* உலக நாடுகளுடன் ஒத்திசைந்து போவது. கியோட்டோ புரோட்டோகால் முதல் உலக வர்த்தக நிறுவனம் வரையில் எதற்கெடுத்தாலும் தான் சொல்வதே சரியானது என்று சாதிக்காமல் பிறரது கருத்துகளுக்கும் இடம் கொடுப்பது.

அடுத்த பதிவுகளில் ஒபாமா, மெக்கெய்ன் இருவரும் முன்வைக்கும் கருத்துகளை ஆழ்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

5 comments:

 1. இர‌ண்டு ப‌திவுக‌ள் போட்டுவிட்டீர்க‌ள். இன்னும் "ஏன் பராக் ஒபாமா" என்ப‌த‌ற்கான‌ வ‌லுவான‌ கார‌ண‌ங்க‌ளைச் சொல்ல‌வில்ல‌யே!
  பராக்'ன் ப‌ராக்கிர‌ம‌ங்க‌ள் என்ன‌? இத‌ற்குமுன்பு அவ‌ர் என்ன‌ செய்திருக்கிறார்..அவ‌ரை ந‌ம்புவ‌த‌ற்கு..ச‌ற்று விரிவாக‌ த‌லைப்பை ஒட்டி எழுதிவீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.

  ReplyDelete
 2. Badri

  A very good article. India today reflects this. NYTimes is pulling him to use the race card. With only 12% of African descent Americans there, it would backfire. I wish McCain loses to save Iran and oil.

  Regards
  Vijay

  Note: please visit http://charuonline.com/newarticls/request.html and see whether Kizhakku & Thamizh imprint advertisements can be given there.

  ReplyDelete
 3. badri, Thanks for starting this. But i still do not understand on why we should hope (not pray !) for obama to win.

  What i also would like to understand is whether you are writing this in american perspective, or an indian perspective or writing it in idealistic view point

  with regards
  manikandan

  ReplyDelete
 4. Badri -
  Most of the time, I agree with your points - well, I can't say 100%. But if you're following things here, Most of the item the action items that you mentioned, they are taken up seriously here. The recent one being revoking some restrictions on Cuba travel/remittences. The next big thing, high speed mass transist trains - I think thats going to be big puller on the oil spending. So, how about you posting on the developments that happened till now - would be interested to hear from you.

  - Suria

  ReplyDelete
 5. இன்று அமெரிக்கா செய்யவேண்டியது:

  //அரசு செய்யும் ஊதாரிச் செலவை ஒரேயடியாகக் குறைக்கவேண்டும்//

  மிக உண்மை ! 2-3 வருடங்களாக சொல்லிக்கொண்டு இருப்பதுதான்

  ReplyDelete