நீங்கள் சென்ற இரண்டு இடங்களும் [ஆலப்புழை, திருவனந்தபுரம்] தமிழக எல்லையை ஒட்டிய கேரளப்பகுதிகள். அங்கே தமிழ்ப்படங்கள் ஓடுவதில் ஆச்சரியம் இல்லை. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் தமிழ் படங்களை பார்க்க முடியாது.இன்று பல செய்தித்தாள்களில் பிடிஐ செய்தி ஒன்று வெளியாகியுள்ளது: Malayalam films have few takers in Kerala
தமிழ்ப்படங்கள் அப்படியே, தெலுங்குப் படங்கள் மொழிமாற்றப்பட்டு. இவை கேரளத்தை ஆக்ரமிப்பதால் உள்ளூர் மலையாளப் படங்கள் பயங்கரமாக அடிவாங்கியுள்ளனவாம். ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு கேரளாவிலிருந்தும் கொஞ்சம் பணம் கிடைக்கும்!
பத்ரி,
ReplyDeleteஇது பற்றிய செய்தி இன்று காலை பிஸினஸ் லைனிலோ/ பிஸினஸ் ஸ்டான்டர்டிலோ படித்தேன். இது இன்று நேற்றல்ல. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு (ஜுன் 15, 2007) 'சிவாஜி' படம் வெளிவந்தது. அப்போது கேரளாவில் 50 திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஒடியது. ஷகிலா படங்களை எப்படி நாம் ஆதரித்து கொண்டோமோ, அதற்கு ஈடாக தமிழ் படங்களை மலையாளிகள் சுவீகரித்து கொண்டார்கள். கடந்த 6 மாதங்களில் வெறுமனே நான்கு மலையாள படங்கள் மட்டுமே ஹிட் அங்கே. 'அஞ்சாதே' 'வெள்ளித்திரை' போன்ற படங்கள் அங்கே சூப்பர் ஹிட்.
மலையாள திரையுலகம் கடந்த 2-3 வருடங்களாகவே டல்லடிக்கிறது. தமிழ் சினிமா கடந்த 5 வருடங்களாக மிக நன்றாக இருக்கிறது.
மற்றபடி, விவரம் தெரிந்த வட்டாரங்களோடு இருப்பதால், ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு 'கொஞ்சம்' பணம் அல்ல, நிறையவே சம்பாதித்து விட்டார் :)