Wednesday, June 18, 2008

திமுக - பாமக

திமுக-பாமக கூட்டணி சாத்தியமில்லாத ஒன்று. இவ்வளவு நாள் தாங்கியதே பெரிய விஷயம். சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே பாமகவுக்கு குறைந்த இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும், காங்கிரஸுக்கு அவர்களது மதிப்பையும்விட அதிகமான இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும் நான் நினைத்தேன்.

வளர்ந்து, பெரிய கட்சியாகி ஆட்சியைத் தனியாகவோ அல்லது தங்களது தலைமையிலான கூட்டணியாகவோ பிடிக்கவேண்டும் என்பது பாமகவின் ஆசை. மற்றொரு பக்கம், காங்கிரஸ் அந்த ஆசையைச் சுத்தமாகத் துடைத்து எறிந்துவிட்டு, யாராவது ஒருவருக்கு ஜிங்க்சா போட்டு, தங்களது பல்வேறு உட்குழுக்களுக்கு வேண்டிய இடங்கள் கிடைத்தால் மட்டும் போதும் என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.

திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே எப்போதும் சாசுவதம் இல்லை. உட்கட்சிப் பூசல்கள் வரும். குடும்ப உறுப்பினர்களுக்குள் சண்டை, போட்டி, குழப்பம். கட்சி உடைந்து சிதறலாம். அல்லது இரண்டாகப் பிளந்து வாக்குகள் சிதறலாம். அப்படிப் பார்த்தால் பாமக வளர்ந்து, சிதறும் வாக்குகளைப் பெற்று, ஆட்சியை அமைக்கக்கூடிய கட்சியாக வருவது சாத்தியமே.

பாமகவுக்கு ஆட்சி ஆசை உண்டு என்பதே திமுகவுக்கும் பாமகவுக்கும் உரசல்களை ஏற்படுத்தக் காரணம். ஆனால் அதற்கு மேற்கொண்டு, பாமக, திமுக அரசின் ஒவ்வொரு செயலையும் விமரிசனம் செய்தது. இது குடியாட்சி முறைக்கு மிகவும் அவசியமான செய்கை. ஆனால் தோழமைக் கட்சி விமரிசனம் செய்யலாமா என்று திமுகவிடமிருந்து கோபம்தான் கிடைத்ததே தவிர சரியான பதில் வரவில்லை. அடுத்து, பாமக, திமுக அரசுத் திட்டங்கள் பலவற்றுக்கும் கடுமையான எதிர்ப்பை முன்வைத்தது. ஆளும் தோழமைக் கட்சிக்கு குடைச்சல் தரலாமா என்று இங்கும் திமுக சுணங்கியதேதவிர, இந்த எதிர்ப்புகள் நியாயமானவையா என்று கொள்கை அளவில் இவற்றை எதிர்கொள்ளவில்லை.

தனது கட்சியினருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், மாற்று நிதிநிலை அறிக்கை தயாரித்தல், அரசின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் கொடுத்தல், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, கருத்தரங்கங்கள் மூலம் அவற்றைப் பொது விவாதத்துக்கு உட்படுத்துதல் என்று பல நல்ல விஷயங்களை முன்வைத்துள்ள ஒரே கட்சி தமிழகத்தில் பாமகதான். அனைத்தையும்விட, மதுவிலக்கு தொடர்பான தெளிவான கொள்கையை முன்வைப்பது, தமிழ் தொடர்பாக வெறும் வாய்ச்சொல் தவிர்த்து, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது (தமிழிசை, தொலைக்காட்சியில் நல்ல தமிழ் ...) ஆகியவை அனைவராலும் பாராட்டப்படவேண்டியவை.

ராமதாஸ் நிச்சயம் மதிக்கப்படவேண்டியவர். ஆனால் அவரிடமும் குறைகள் இல்லாமல் இல்லை. ‘மரம் வெட்டிய' பின்னணி, வன்னியர் சங்க வாடை தூக்கலாக இருத்தல், குடும்பத்தை முன்நிறுத்துதல், காடுவெட்டி குரு போன்ற ரவுடிகள் உறவு ஆகியவை குறைந்தால், தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை இவர் ஏற்படுத்துவார்.

அடுத்த தேர்தல் வியூகத்தின்போது சகோதரியிடம் அடைக்கலம் புகாமல் தனித்திருந்தால், அது ராமதாஸின் வலிமை என்ன என்பதைப் பிறர் உணரவைக்கும். பலமுனைத் தேர்தல் போட்டிகளில் பாமக போன்ற கட்சிகளுக்கு நிறைய இடங்கள் கிடைக்காது போகலாம். ஆனால் அவர்களது உண்மையான பலம் என்ன என்பது அப்போதுதான் எதிராளிகளுக்குத் தெரியவரும்.

விஜயகாந்த் போன்றவர்கள் வளர்க்கும் கட்சிகள்மீது எனக்கு மரியாதையில்லை. களப்பணி செய்யாமல், வேரிலிருந்து கட்சியை உருவாக்காமல், சினிமா புகழை மட்டும் காண்பித்து மேலிருந்து உருவாக்கப்பட்ட கட்சியால் எதையும் சாதித்துவிடமுடியாது.

வரும் தேர்தல்களில் ராமதாஸ் ஜெயித்து, தமிழகத்தில் குடியாட்சி முறையை வலுவடையச் செய்ய எனது வாழ்த்துகள்.

15 comments:

 1. "வரும் தேர்தல்களில் ராமதாஸ் ஜெயித்து, தமிழகத்தில் குடியாட்சி முறையை வலுவடையச் செய்ய எனது வாழ்த்துகள்"

  :)
  Krithika

  ReplyDelete
 2. Your comments about PMK and Ramdoss are true. Media never take this into people.
  I agree that PMK started with violent but current stand should be appreciated. As you explained, we could see professionalism in the party which differ from other parties in Ttamil Nadu. We look forward the people support for the PMK in future.

  ReplyDelete
 3. //தனது கட்சியினருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், மாற்று நிதிநிலை அறிக்கை தயாரித்தல், அரசின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் கொடுத்தல், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, கருத்தரங்கங்கள் மூலம் அவற்றைப் பொது விவாதத்துக்கு உட்படுத்துதல் என்று பல நல்ல விஷயங்களை முன்வைத்துள்ள ஒரே கட்சி தமிழகத்தில் பாமகதான். அனைத்தையும்விட, மதுவிலக்கு தொடர்பான தெளிவான கொள்கையை முன்வைப்பது, தமிழ் தொடர்பாக வெறும் வாய்ச்சொல் தவிர்த்து, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது (தமிழிசை, தொலைக்காட்சியில் நல்ல தமிழ் ...) ஆகியவை அனைவராலும் பாராட்டப்படவேண்டியவை.//

  ஓங்கி குரல் கொடுக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் பல விசயங்கள் வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே இருக்கின்ற மாதிரி தெரிகிறது. உதாரணம் 'குரு' மேலிருக்கும் வழக்குகளும், அவருடைய ஆசியுடன் நடக்கும் சாராய பிஸினஸ். மதுவிலக்கை வலியுறுத்தினால் மட்டும் போதுமா என்ற கேள்வி எழுகிறது.

  வேறு ஏதாவது 'நல்ல' காரணத்தை சொல்லி பாமக-வை வாழ்த்தியிருக்கலாம். குடியாட்சி முறை என்றெல்லாம் சொல்லி காமெடியாக முடித்து விட்டீர்கள்.

  ReplyDelete
 4. ungal pathivu enaku viyapu alikirathu

  ReplyDelete
 5. Badri, your post was disappointing..

  1) Do you think that who ever critizes well can form a good government?

  2) Have you heard 'kaduvetti' (??) Guru's speech? Ramadoss agreed that it was spoken in PMK meeting. What kind of leadership can allow such vulgar speech?

  3) Who are the second layer leaders in PMK? What is their back ground?

  4) Did you support because it was the best among the devils?

  5) You asked them to stand alone. Let them do it if they dare. They always support any one and gather necessary seats to be in power.

  6) Why do Ramadoss always starts many controversies (lottery, liquor, pan, etc) and suddenly become silent afterwards? Gets enough payment?

  7) How did they get all that wealth without even being ruling party in state?

  8) Tamil, culture and all that are not the need of the hour for Tamilnadu. We need a strong visionary leadership taking the state forward...

  ReplyDelete
 6. You are naive.Ramadoss never opposed the decisions of the Central government except in case of privatising NLC.He never talks
  of prohibition at the national level or opposes SEZs elsewhere.
  His concern for Tamil borders on
  fanaticism and his intolerance for unconventional views is too well
  known (e.g. Khusboo and her views).
  He is greedy and is after power.
  if MK is bad he is worse.He is a
  crude manipulator.

  ReplyDelete
 7. As u say let them stand alone .... Vijaykant will alone give a run for their money .... :) ....
  the most disappointing post I have read from u ....
  -Rams

  ReplyDelete
 8. பத்ரியின் கருத்துக்கள் சரியே !

  //வரும் தேர்தல்களில் ராமதாஸ் ஜெயித்து, தமிழகத்தில் குடியாட்சி முறையை வலுவடையச் செய்ய எனது வாழ்த்துகள்.//
  இதில் என்னமோ சந்தேகம் தான் ...பா.மா.க கஜானா அவ்வளவு பெரியதில்லை ....கட்சி தாவுவதர்க்கான முக்கிய காரணமே கட்சிகென்று பணம் ஈட்டதானே .அட குடும்பத்துக்கும் சேர்த்து தான் :)


  //விஜயகாந்த் போன்றவர்கள் வளர்க்கும் கட்சிகள்மீது எனக்கு மரியாதையில்லை. களப்பணி செய்யாமல், வேரிலிருந்து கட்சியை உருவாக்காமல், சினிமா புகழை மட்டும் காண்பித்து மேலிருந்து உருவாக்கப்பட்ட கட்சியால் எதையும் சாதித்துவிடமுடியாது.//

  தமிழ் மக்களுக்கு கலை மீது கொண்ட பற்று குறையவே இல்லை ...இதற்க்கு முற்று புள்ளி வைக்க பா. மா.க மற்றும் bjpயால் மட்டுமே முடியும் ....தமிழனுடைய வளர்ச்சி தமிழ்வழி கல்வியால் தான் முடியும் என்று உரக்க சொல்லுவதில் பா.மா.க விற்கே முதலிடம் ....
  pmk pays value to the better education....also they gives more importance to the agriculture.these are the reasons which admire me a lot

  //தனது கட்சியினருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல், மாற்று நிதிநிலை அறிக்கை தயாரித்தல், அரசின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் கொடுத்தல், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, கருத்தரங்கங்கள் மூலம் அவற்றைப் பொது விவாதத்துக்கு உட்படுத்துதல//
  வரவேற்க்க வேண்டியவை ...


  //1) Do you think that who ever critizes well can form a good government?

  2) Have you heard 'kaduvetti' (??) Guru's speech? Ramadoss agreed that it was spoken in PMK meeting. What kind of leadership can allow such vulgar speech?

  3) Who are the second layer leaders in PMK? What is their back ground?//

  நல்ல சிந்தனைகள் இருந்தால் மட்டுமே ...நல்ல விமர்சனங்கள் வரும் .... பா மா க வில் நன்கு படித்த அரசியல் வாதிகள் அதிகம் ...

  அப்ப -தி.மு.கா , அ.தி.முகா வில் ....சிறந்த second layer leaders இர்ருக்கங்கன்னு சொல்ல வரிங்களா ???
  என்ன காமெடி சரவணா இது :))

  ஆனால் பா.மா.க வன்முறையை கையாளுவதில் கை தேர்ந்தவர்கள் ,, பார்ப்பனிய எதிர்ப்பும் வுண்டு ..மேலும் சாதாரண (வன்னிய சமுக ) மக்கள் சாதி என்னும் சூழ்ச்சி வலையில் சிக்கி கிடப்பவர்கலே ....


  விஜய் பிரசன்னா .

  ReplyDelete
 9. உங்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ 'தசாவதார' விரக்தியில் இப்படி சொல்லியிருக்கலாம்
  என்று நினைக்கிறேன்.

  உண்மையிலேயே மது விலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர் கட்சியினர் சாராயம் காய்ச்சுவதை நிறுத்தினாலே போதும்.
  இவர்களின் கருத்துக்கள் எல்லாம் நல்ல மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாக்க முடியாதவைதான் (மது விலக்கு, புகை பிடித்தல், திரைப்படங்கள்).
  ஆனால் நடைமுறை சாதியமற்றவை.

  ஒரு தொலைகாட்சி சேனலை வெண்டுமானால் இவர்களது விருப்பத்திற்கு நடத்த முடியும், நிச்சயம் நாட்டையல்ல.

  ராமதாஸின் ஆரம்ப கால கொள்கைகளில் ஒன்றான குடும்பத்தை முன்னிறுத்த மாட்டேன், சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ
  என் குடும்பத்தினர் கால் கூட படாது என்ற முதல் கொள்கையையே காற்றில் பறக்க விட்டாகி விட்டது. அது போலத்தான் இவர்களது
  மற்ற கொள்கைகளும் நாளடைவில் கைவிடப்படும் (தி.மு.க வின் திராவிடநாடு, ஆளுனர் பற்றிய கொள்கைகள் போல).
  இது ஒரு ஜாதீய கட்சி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவர்களின் அட்டூழியங்களை, அக்கிரமங்களை சென்னையில் இருந்து
  கொண்டு நிச்சயம் உணர முடியாது. இவர்கள் பெரும்பான்மையாக விளங்கும் மாவட்டங்களில் வசித்து பாருங்கள், தெரியும்.
  இன்னும் அரசியலில் வன்முறையை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் (பாபா திரையிட்ட தியேட்டர்கள்) ஒரு கட்சி இது. விஜயகாந்திடம் மட்டும்
  இவர்கள் பருப்பு வேகவில்லை.

  அரசியல் ஆதாயத்துக்காக எந்த ஒரு கேடு கெட்ட கட்சியுடனும் கூட்டு வைக்கும் சாதாரண, வழக்கமான கட்சிதான். கொள்கைகள், கோஷங்கள் எல்லாம் அவர்கள் ஜாதி ஓட்டு தவிர்த்து மற்ற பொதுவான நடுநிலை ஓட்டுக்களை கவரத்தான்.

  உங்களையே நம்ப வத்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  இப்போதே இவர்களின் ஆட்டம் தாங்க முடிய வில்லை.

  இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், தமிழ்நாட்டை அந்த ஆண்டவன் தான் காப்பாற்றனும்.

  ReplyDelete
 10. I totally agree with you Beekay..

  ReplyDelete
 11. I beg to differ with you. PMK is not definitely a good alternative to DMK or ADMK. I am afraid they may prove to be worse going by lot of hot air spewed by its leaders.

  ReplyDelete
 12. //உண்மையிலேயே மது விலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர் கட்சியினர் சாராயம் காய்ச்சுவதை நிறுத்தினாலே போதும்.// என்னவாகும்?? ..நீங்க சொல்லுறத பார்த்தா pmkல join பன்னனும்னா basic qualificationஆ கள்ள சாராயம் காய்ச்சனும் என்ற கொள்கை இர்ருக்குங்க்ற மாதிரில இருக்கு !


  //இவர்களின் கருத்துக்கள் எல்லாம் நல்ல மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாக்க முடியாதவைதான் (மது விலக்கு, புகை பிடித்தல், திரைப்படங்கள்).
  ஆனால் நடைமுறை சாதியமற்றவை. //
  என்ன யா இது :( இப்பலாம் நல்ல விசியத்த யாரவது சொன்னா ..இவன்னுங்க விளம்பரம் தாங்க முடியலன்னு கிண்டல் அடிக்கிறிங்க ..ம்ம்ம்ம்ம்ம் தமிழ்நாடு வளர்ச்சி அதி பயங்கரமா இர்ருக்கு பா :)

  //இது ஒரு ஜாதீய கட்சி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவர்களின் அட்டூழியங்களை, அக்கிரமங்களை சென்னையில் இருந்து
  கொண்டு நிச்சயம் உணர முடியாது. இவர்கள் பெரும்பான்மையாக விளங்கும் மாவட்டங்களில் வசித்து பாருங்கள், தெரியும்.
  இன்னும் அரசியலில் வன்முறையை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் (பாபா திரையிட்ட தியேட்டர்கள்) ஒரு கட்சி இது. விஜயகாந்திடம் மட்டும்
  இவர்கள் பருப்பு வேகவில்லை.//

  நீங்க எங்க வசிக்கிரிங்க நண்பரே ..இப்பலாம் தமிழ் நாடுனா சென்னை ...சென்னை தான் தமிழ்நாடுன்னு ஆக்கிபுட்டாணுவ ...இதுக்கு நீங்க என்ன பண்ணுவீர்கள் பாவம் :(

  முதல்ல நீங்க தெளிவா இர்ருங்க .

  நல்ல கல்வி - இப்ப இர்ருக்க நிலைமை ரொம்ப மோசம் :(
  நல்ல உணவு - already நம்ம அடுத்தவன எதிர்பாக்க ஆரம்பிச்சாச்சி
  நல்ல தண்ணீர் - என்ன சொல்லுறது ..
  சிறந்த தொழில்மயக கொள்கை ,நல்ல பொருளாதாரக் கொள்கை , இவை அனைத்தும் பாமக வின் கொள்கைகள் ....இவை அனைத்தும் மக்களை கவரக்கூடியவை மட்டும் இல்ல ...நன்மை உடையதும் கூட ...இது போன்ற விசயங்களை வைத்தே பத்ரி விமர்சனம் செய்துள்ளார் என்பது என்னுடிய கருத்து ..

  ReplyDelete
 13. பாமக பற்றி சுருக்கமாக.

  நம்முடைய குடியாட்சி முறை முதிர்ச்சியடையாத ஒன்று. அமெரிக்க, பிரிட்டன் நாடுகளில் உள்ள கட்சிகளைப் போன்று நம் கட்சிகள் இல்லை. இங்கே தலைவர்தான் பிரதானம். பிறர் அந்தக் கட்சியில் அடிமைகளைப் போல. கட்சியின் ‘உரிமையாளர்' போலவே இவர்கள் நடந்துகொள்கிறார்கள். எனக்குப் பிறகு என் மகன் அல்லது மகள். பிடிக்காவிட்டால் பிரிந்துசென்று தனிக்கட்சி ஆரம்பித்துக்கொள். கொள்கை அது இது என்று நேரத்தை வீணாக்காதே. ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே நோக்கம். அதற்குப் பிறகு பணம் பார்ப்பது. பிறகு? ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது.

  இந்நிலையில், எல்லாக் கட்சிகளுமே மோசம் என்று அழுதுகொண்டு, தி ஹிந்துவுக்கும் தினமணிக்கும் ஆசிரியர் கடிதம் அனுப்பிவிட்டு, சூடாக பஜ்ஜி சாப்பிடப் போகலாம். அல்லது இருக்கும் கட்சிகளில் எதற்கு குடியாட்சிக் கூறுகள் அதிகமாக உள்ளது என்று ஆராய்ந்து, அவர்களது பிற தவறுகளை இடித்துரைத்துக்கொண்டே, அவர்களது நல்ல கூறுகளுக்காக அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம்.

  இன்று தமிழகத்தில் இருக்கும் கட்சிகளை இப்படிப் பார்க்கலாம்:

  அஇஅதிமுக: முதுகெலும்பில்லாத கட்சி. ஜெயலலிதா சொல்வதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அம்மா காலில் விழு, இல்லாவிட்டால் வெளியே தூக்கி எறியப்படுவாய். அம்மா புகழ் பாடு, வட்டச் செயலராகு. இந்தக் கட்சி அடுத்த பத்தாண்டுகளில் தான் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அடுத்த தலைவர் யார் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை. எனவே காலவெள்ளத்தில் சீக்கிரமே காணாமல் போய்விடும்.

  திமுக: அஇஅதிமுக-வைவிட அதிகம் உட்கட்சி அமைப்பு கொண்ட கட்சி. திராவிட இயக்கப் பின்னணி வலுவாக உள்ளது. ஆனால் இன்று கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் பதவி ஆசைகளுக்கான போட்டிக் களமாக மாறியுள்ளது. தான் பதவியை விட்டால் அடுத்து நடக்கும் அடிதடிகள் மோசமாக இருக்கும் என்ற காரணத்தாலேயே கருணாநிதி முதல்வர் பதவியில் தொடர்ந்து இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். ஸ்டாலின், அழகிரி என்னும் அடிதடி ராஜா, கனிமொழி ஆகியோருக்கு இடையே நடக்கும் போராட்டம் எந்தப் பக்கம் செல்லும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த nepotism மிக மோசமானது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் பலர் உள்ள இந்தக் கட்சியில் தலைமைப் பதவிக்கு ஒரு துரைமுருகனோ, ஒரு ஆற்காடு வீராசாமியோ போட்டியிடத் தயங்குவார்கள் என்றால் அது அபத்தம்.

  காங்கிரஸ்: குப்பை. மத்திய ஆட்சியை அவ்வப்போது பிடித்துவந்தாலும் மாநிலத்தில் சரியான தலைமை இல்லாதிருப்பது, நாலு பேர், நாற்பது குழுக்கள். ஒருவரை ஒருவர் அழிப்பதிலேயே குறியாக இருப்பது என்ற காரணத்தால் தமிழகத்தில் இவர்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை.

  கம்யூனிஸ்டுகள்: 50 வருஷமாக துளியும் வளராமல், அதே நேரம் இருக்கும் வாக்குகளை அப்படியே வைத்திருக்கும் இவர்களும் முக்கியப்பட்டவர்களாகத் தெரியவில்லை. இவர்களுக்குமே தங்களால் சொந்தமாக ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்ற நம்பிக்கையே கிடையாது. அதற்காக எந்த முயற்சிகளும் எடுப்பதில்லை.

  தேமுதிக: இன்னும் பத்து வருடங்கள் பார்த்தால்தான் சொல்லலாம்.

  பாஜக: இன்னும் இருபது வருடங்களுக்குப் பிறகுதான்.

  பாமக: ஆயிரம் குறைகள் இருந்தாலும் இவர்கள்தான் மேலே சொன்ன கட்சிகளிலிருந்து சற்றே விலகி, சில புதுமைகளை முயற்சித்து வருகிறார்கள். அனைவரும் இவர்களது குறைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளனர். அதே குறைகள் எல்லா இடத்திலும் உள்ளன. ஆனால் என் கண்ணுக்கு அந்தக் குறைகளைமீறி பல நிறைகள் தென்படுகின்றன. இவற்றை சரியாகச் செய்யக்கூடிய, பாமகவைவிடச் சிறப்பான வேறு ஒரு கட்சி கண்ணில் பட்டால் நிச்சயமாக நான் அவர்களைப் பாராட்டுவேன்.

  பாமகவிலும் கட்சித் தலைவர் குடும்பத்தின் ஈடுபாடு பெரிதாகத் தெரிகிறது. இது பெரிய குறைபாடு. ரவுடிகள் உள்ளனர். இதுவும் பிற கட்சிகளைப் போலவே குறைபாடுதான். ஆனால் அவற்றையும் மீறி நான் ஏற்கெனவே எழுதியுள்ளதுபோல பல நல்ல விஷயங்களைப் பார்க்கிறேன். அதனால்தான் குடியாட்சி முறைக்கு இவர்களால் பல நல்ல விஷயங்கள் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

  ReplyDelete
 14. Ur views n observations on the pmk made interesting reading..i wonder why the so called intellectuals(?!?)alwaz seek 2 malign that party..i dont understand why it is still labelled a violent party b(i)ased on an agitation yrs ago..they cut down trees (which they have planted 50 times more)not people..they didnt burn people alive or throw petrol bombs inside offices killing innocent people..ah! n then what is their next crime? the baba episode which affected so many people ?!11what a shame to deprive the people of their hero (who has done so much for them(???) n never expected ANYTHINGin return.(except a few paltry crores which he spends for the people's benefit!??)ha, ha wtat a joke..will people never learn?what public issues has this fellow or any other party raised for the benefit of the people?v shud commend someone if they do something right..not blindly criticise them biased on past mistakes..as u say give them a chance!someone has 2 take an initiative..give them marks based on their current performance..

  ReplyDelete
 15. We r always quick to point out the faults in others never pausing to consider the good in them..This is true in the case of the pmk which has been cruelly and wantonly portayed in a bad light by the media..We the public complain that no party raises the issues of the common man.But when they do so we dismiss it as stunts or cheap publicity! what hypocrisy is this? whatever be the shortcomings of the pmk u cannot deny that it has repeatedly raised people's issues and strived to create public awareness regarding key issues like educational looting,prohibition,environment and economic strategy.A hue and cry was made about their opposition to SEZ..Are towering buildings and selfish MNC'S the key to progress?Shud poor agriculturers be sacrificed at the altar of progress?How selfish of us to harp about progress by displacing the poor of their only means of livelihood and homes?OK..HOW MANY OF US WUD BE WILLING TO HAND OVER OUR HOMES AND LAND TO PROMOTE AGRICULTURE?Then why this double standard? Let us look at our own back before hastily criticising someone who is atleast striving to make a change..this is for u buggers (Rams,Bharat,B.K n likeminded hypocrites) and no...before u ask...i am not a pmk sympathiser..just one who feels differently!

  ReplyDelete