Thursday, June 19, 2008

இந்து தற்கொலைப் படை வேண்டும் - தாக்கரே

அனைவரும் கடுமையாகக் கண்டிக்கவேண்டிய ஒரு காரியத்தை மஹாராஷ்டிராவின் சித்தம் கலங்கிய அரசியல்வாதி பால் தாக்கரே செய்துள்ளார். உலகமே பயங்கரவாதத்தை எதிர்க்கும்போது, இஸ்லாமிய அறிஞர்கள் பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை என்று கூட்டம் போட்டுச் சொல்லும்போது, பால் தாக்கரே, இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்து தற்கொலைப் படை வேண்டும் என்று எழுதியுள்ளார். தி ஹிந்துவில் வந்துள்ள மேற்கோள் இதோ:
The threat of Islamic terror in India is rising. It is time to counter the same with Hindu terror. Hindu suicide squads should be readied to ensure existence of Hindu society and to protect the nation.
என்ன செய்யச் சொல்கிறார்? ஒரு பெரிய மைதானத்தில் இடுப்பில் குண்டுகளைக் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் இந்து பயங்கரவாதியும் ஓர் இஸ்லாமிய பயங்கரவாதியும் மோதி அதனை நேரடி ஒளிபரப்பாக தொலைக்காட்சியில் காண்பிக்கவேண்டும் என்கிறாரா? எப்படி இடுப்பில் குண்டுகட்டிய ஓர் இந்து பயங்கரவாதி, இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து உலகைக் காக்கப்போகிறார்?

உளறுவதற்கு ஒரு வரைமுறை கிடையாதா?

இந்த உளறலுக்காக இவரை சிறையில் தள்ளலாம் என்று தோன்றுகிறது. ஆனால் கருத்துகளுக்காக மட்டுமே ஒருவரை சிறையில் அடைப்பது நியாயமல்ல என்பது எனது கருத்தாக இருப்பதால், இவரைத் திட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

5 comments:

 1. வேண்டுமானால் இவரும், இவர் மகனும் உடம்பில் குண்டுகட்டிக் கொண்டு முதலில் போகட்டுமே.. அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? :(

  ReplyDelete
 2. நானும் ஒரு வன் இருக்கிறேன் என்னை மறந்து விடாதீர்கள் என்று இந்த சமுதாயத்திற்கு காட்டிக் கொள்வதற்காக இன்று சில பிரபலங்கள் செய்யும் மலிவான அரசியல் விளம்பரம் தான் இதுவே தவிர இந்துக்கள் மீது கொண்ட அன்போ கரிசனையோ கிடையாது எனபது இந்து சகோதரர்களுக்கு கூட நன்றாக தெரியும்.இப்படி எல்லாம் முட்டாள் தனமா ஒரு சில அறிக்கை விடலான்னா இணைக்கு இருக்கும் இயந்திர வாழ்வில் இவனை பற்றி எல்லாம் சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை என்பதை நன்றாக தெரிந்து இப்படி செய்வதனால் இதையெல்லாம் சகித்து தான் ஆக வேண்டும்.விவேக் ஸ்டைல் ல சொன்னா தண்ணியக் குடி தண்ணியக் குடி .................

  ReplyDelete
 3. Badri, Don't feel bad if you have to change your opinion on the rights of people to speak out. Why should not he be arrested for this ? If he provokes some more idiots and if someone takes up guns because of him, it would be ridiculus. And if we allow him to talk like this without taking any actions, he might be encouraged.

  In the past, lots of muslim leaders (head of jamma masjid is one of them) has provocated muslims of india by stupid utterances, and we are facing the brunt now. And so, it is stupid to encourage the same from the majority side.

  And this is not analogous to someone expressing their support for LTTE. Isn't that the freedom struggle excepting the killings of innocent people by both sides.

  mani

  ReplyDelete
 4. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், எவ்வளாவு தான் கத்தினாலும் இந்துத் தற்கொலைப்படை உருவாகாது என்பது தான்.

  ஆனால், தாக்கரேக்கு இன்ஸ்பிரேஷன் கொடுப்போரையெல்லாம் விட்டுவிட்டு தாக்கரேயை திட்டுவது என்பது செத்த பாம்பை அடிக்கும் வீராப்புக்குச் சமம்.

  ReplyDelete