Monday, June 30, 2008

NHM Lister - புது இணையச் சேவை

சும்மா டைம் பாஸ் மச்சி!

தமிழ் வலைப்பதிவர்கள் தாங்கள் எழுதுவதை தாங்களே ஆராய்ச்சி செய்வதில்லை. என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? அவற்றுள் எந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவர் அதிகமாகப் பயன்படுத்தும் சொல் “மொக்கை” அல்லது “கும்மி” அல்லது “ஜட்டி” அல்லது வேறு ஏதாவதா? சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப் பயன்படுத்தாமல் ஒரு முழுப் புத்தகத்தை எழுதினாரா? ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் எந்தெந்தச் சொற்களை அதிகம் பயன்படுத்தி எழுதுகிறார்கள்?

இதுபோன்ற அற்புதமான கேள்விகளுக்கு விடை வேண்டுமா? NHM Lister என்ற இடத்தில் இந்தக் கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஆராயவேண்டிய டெக்ஸ்டை அப்படியே வெட்டி, ஒட்டி, “Generate List” என்ற பட்டனைத் தட்டுங்கள். பக்கத்தில் வரும் பட்டியலைப் பார்த்து மனம் மகிழுங்கள்.

இதைத்தவிர மேலும் பல தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும். முழு விவரமும் அறிய, இந்த இடத்துக்குச் செல்லுங்கள்.

[பின்குறிப்பு: இந்த பதிவுக்கான புள்ளிவிவரம் (பின்குறிப்பைச் சேர்க்காமல்):
மொத்தச் சொற்கள்: 95
தனிச் சொற்கள்: 84
அதிகம் பயன்படுத்திய தமிழ்ச் சொல்: அல்லது
மொத்த “ஒரு” = 3
மொத்த “ஓர்” = 1
மொத்த “என்ற” = 2
மொத்த “என்பதை” = 1]

6 comments:

 1. I have read about computer aided word pattern analysis of Shakespeare's plays. Is this something of the same category (or is supposed to evolve into)?

  ReplyDelete
 2. மிக அருமையான கருவி.

  தவறுகளை திருத்த முடிகிறது.

  அடுத்து என்ன - Spell Checker ஆ :) :) :)

  ReplyDelete
 3. முருகன்: இது புருனோ யூகித்தமாதிரி ஸ்பெல்செக்கை நோக்கிச் செல்வதற்காக உருவாக்கியது. அதே நேரம் பதிப்பக வேலைகளுக்குத் தேவையான சிலவற்றைச் செய்யும் ஒரு கருவியும் இதன்மேல் கட்டப்படும்.

  ReplyDelete
 4. ஸ்பெல் செக் என்றால் புதுசாக வந்து சேரும் எடிட்டர்கள் கண்ணில் காட்டவே காட்டாதீர்கள்.

  'தாபாவில் ரொட்டி சாப்பிட்டான்' என்று நான் எழுதியதை 'தபாலில் ரொட்டி சாப்பிட்டான்' என்று additional level magical realism சேர்த்தும், 'பந்த்ரெண்டு' என்பதை கர்ம சிரத்தையாக 'பன்னிரெண்டு' என்றும் மாற்றி அச்சுக்கு அனுப்பியவர்கள் இன்னும் கையில் கிடைக்கவில்லை!

  ஒரு பத்திரிகை ஆசிரியரம்மா ஒரு படி மேலே போய் நான் எழுதிய கதையில் ஜப்பான் சூஷி உணவுமுறை பற்றி வந்த இடத்தில் எல்லாம் சூஷிக்குப் பதிலாக குஷி குக்கிங் என்று படு குஷியாக மாற்றி வெளியிட்டுக் கஷ்டப்படுத்தியது இன்னும் மறக்கவில்லை:-)

  புனைகதையில் இதுதான் கஷ்டம். எழுத்தாளன் வேவ்லெங்க்த் எடிட் குழுவுக்கு இல்லாது போனால சிரமம். தடுக்க ஒரே வழி, அச்சுக்குப் போவதற்கு முன் எழுத்தாளரோடு ஒரு கடைசி கட்ட சந்திப்பு நடத்தி, பிரதியை சீல் செய்வது. அதற்கு அப்புறம் யாரும் அதில் கை வைக்கவே கூடாது.

  workflow based content management & edit-publish applications, as you know, are available off the shelf; customizing these for handling Tamil content may be quite challenging.

  ReplyDelete
 5. வேலை நெருக்கடி காரணமாக இப்போது தான் லிஸ்டரை பயன்படுத்தி பார்த்தேன். கலக்கலாக இருக்கிறது.

  லிஸ்டரை பார்த்துவிட்டு இங்கே பின்னூட்டம் போட்டுவிட்டேன் என்று நாகராஜிடம் சொல்லிவிடவும் :-)

  ReplyDelete
 6. //சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப் பயன்படுத்தாமல் ஒரு முழுப் புத்தகத்தை எழுதினாரா?//

  ழோர் பெரெக்கின் 'ஒரு புத்தகமும்' உள்ளது :-)

  -சன்னாசி

  ReplyDelete