அனில் கும்ப்ளே © AFP via Cricinfo.com |
இந்தியாவின் மோசமான உலகக் கோப்பைத் தோல்வியை அடுத்து, 2007-ல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். ராகுல் திராவிட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய காரணத்தால், கும்ப்ளே டெஸ்ட் கேப்டன் ஆனார்.
தொடர்ந்த தோள்பட்டை காயங்கள் காரணமாகவும், இன்று நடந்து முடிந்த டெல்லி டெஸ்டில் பட்ட விரல் காயத்தாலும் ஓய்வெடுக்க முடிவு செய்ததாக அறிவித்தார். ஆனால் அதற்கும் மேலாக ஒன்று அவர் மனத்தை உறுத்தியிருக்கவேண்டும். மொஹாலியில் தனது முதல் டெஸ்டில் விளையாடிய அமித் மிஷ்ரா என்ற லெக் ஸ்பின்னரின் பந்துவீசும் திறமை.
தான் தொடர்ந்து விளையாடினால், அமித் மிஷ்ராவால் விளையாட முடியாது என்று கும்ப்ளேவுக்குத் தெரியும். தனது உடல் இனியும் ஒத்துழைக்காது; இந்தியாவுக்கு தான் அளிப்பதைவிட, அமித் மிஷ்ராவோ, பியுஷ் சாவ்லாவோ மேலும் நன்றாகப் பந்துவீசி சேவையைத் தரமுடியும் என்ற எண்ணம் கும்ப்ளேவுக்கு நிச்சயம் தோன்றியிருக்கவேண்டும்.
***
கடந்த 18 ஆண்டுகளில், கும்ப்ளே அளவுக்கு யாருமே - டெண்டுல்கர் கூட! - இந்தியாவுக்கு ஆட்டங்களை வென்றுகொடுத்தது கிடையாது.
கும்ப்ளேயின் பங்களிப்பு இரண்டுவிதமான ஆடுகளங்களில் இருந்துள்ளது. இந்தியாவின் டிசைனர் சுழற்பந்துவீச்சு மைதானங்களில். அசாருதீன் - வடேகர் கூட்டணியில், மணற்குவியலை ஆடுகளம் என்று சொல்லி இந்தியா தொடர்ச்சியாக எதிரணிகளை அடித்து நொறுக்கிய கட்டம். [விளக்கம்: 1990களில் அசாருதீன் இந்திய அணியின் கேப்டனாகவும் அஜித் வடேகர் பயிற்சியாளராகவும் இருந்தனர். அப்போதுதான் இதுபோல ஸ்பின் அதிகமாக எடுக்கும் மணற்குவியல் ஆடுகளங்கள் அதிகமாகத் தயாராக்கப்பட்டன. இந்தியா வரும் எந்த நாடும் ஸ்பின்னர்களால் தோற்கடிக்கப்படும். இந்திய அணியில் ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே ஒப்புக்கு இருப்பார். 3 ஸ்பின்னர்கள் விளையாடுவார்கள். கும்ப்ளே அதில் ஒருவர்.]
ஆடுகளத்தில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றியிருக்க மாட்டார்கள். புல்லைக் களிமண்ணுடன் சேர்த்துப் பிசைந்து அழுத்தமானதாக ஆக்கியிருக்க மாட்டார்கள். இதனால் இரண்டாம் நாளிலிருந்தே மேல்பரப்பில் மண் உதிர ஆரம்பிக்கும். அதில் விழும் பந்து, விழுந்தபிறகு சரேலென எழும்பும். பந்தில் கொடுக்கப்படும் சுழற்சியில் பந்து எப்படி எகிறும், எந்தத் திசையில் திரும்பும் என்று சொல்லமுடியாது. அதிலும் கும்ப்ளே வீசும் வேகத்தில், எதிராளி திக்குமுக்காடிப் போவார்.
ஆனால், கும்ப்ளே இந்த இடத்தில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவான நல்ல பவுன்ஸ் உள்ள ஆடுகளங்களிலும் சோபித்தார். ஷேன் வார்ன் அளவுக்கு இல்லை என்றாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார்.
ஒரு வலது கை லெக் ஸ்பின் சுழற்பந்து வீச்சாளர், மணிக்கட்டைத் திருப்பி அதன்மூலம் பந்துக்கு சுழற்சியைக் கொடுப்பார். பொதுவான பந்து, வலதுகை ஆட்டக்காரரின் கால் திசையில் விழுந்து, ஆஃப் திசையை நோக்கி வெளியே செல்லும். பந்து வலமிருந்து இடமாகச் சுழலும் (anti-clockwise). பந்து தரையில் விழும்போது, அதில் உள்ள தையல் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தரையில் படும். எந்த அளவுக்குப் பந்தில் சுழற்சியைக் கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு தரையில் விழுந்த இடத்திலிருந்து வெளியே செல்லும் கோணம் அதிகமாக இருக்கும். இதுதான் லெக் ஸ்பின்னரின் ஸ்டாக் பந்து. இந்தப் பந்தின் பெயரும் லெக் ஸ்பின்னர்தான் (leg spinner).
ஆனால் ஒரு லெக் ஸ்பின் பந்துவீச்சாளரின் அம்புறாத்தூணியில் மேலும் பல அம்புகளும் உண்டு.
கூக்ளி (googly) என்று சொல்லப்படும் பந்து, லெக் ஸ்பின்னர் போடுவதைப் போலவே இருக்கும். ஆனால் கடைசி நேரம், மணிக்கட்டை வேறுவிதமாகத் திருப்பி, பந்துக்கு இடமிருந்து வலமான சுழற்சியைத் தருவது (clockwise). அல்லது, கடைசி நேரம் மணிக்கட்டைச் சுழற்றாமல், விரலைச் சுழற்றுவதால் இடமிருந்து வலம் சுழற்சியைத் தருவது. இது ஆஃப் ஸ்பின் போல, வலதுகை மட்டையாளருக்கு ஆஃபில் விழுந்து உள்ளே வரும்.
டாப் ஸ்பின்னர் (top spinner) என்பது மற்றொரு பந்து. இது சாதாரண லெக் ஸ்பின்னர் போலவே போடப்படுவது. ஆனால் பந்தின் தையல், வீசும் திசைக்கு நேராக இருக்கும். பந்தின் சுழற்சி வலமிருந்து இடமாக இருக்கும். மணிக்கட்டால் சுழற்றப்படும் பந்து இது. பந்தின் சுழற்சி நேராக இருப்பதால், பந்து தரையில் பட்டதும் சராலென எழும்பும். பந்து விழும் இடமும் சற்றே அளவு குறைவாக இருக்கும். பக்கவாட்டில் நகர்வு இருக்காது.
ஃப்ளிப்பர் (flipper) எனப்படுவது டாப் ஸ்பின்னருக்கு நேர் மாறானது. தையல் நேராக இருக்கும். ஆனால் சுழற்சி இடமிருந்து வலமாக இருக்கும். எனவே பந்து கீழே விழுந்ததும் மட்டையாளர் எதிர்பார்க்கும் அளவுக்கு எழும்பாது.
லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் அதிகமாகப் பயன்படுத்துவது ஃப்ளைட் (flight) எனப்படும் மிதவை. பந்தைக் காற்றில் மிதக்குமாறு தூக்கி எறிவது. இதைச் சரியாகப் பயன்படுத்தினால், பந்து காற்றில் மிதந்து வந்து சரேலென ‘டிப்’ ஆகும்; அதாவது கீழே இறங்கும். கொஞ்சம் தவறு செய்தாலும் பந்து ஃபுல் டாஸ் (full toss) ஆகிவிடும். ஃப்ளைட் கொடுக்கவேண்டும் என்றால் பந்தை வீசும் வேகம் குறைவாக இருக்கவேண்டும்.
கும்ப்ளே, பொதுவாக டாப் ஸ்பின்னர்களைத்தான் தனது ஸ்டாக் பந்தாக வைத்திருந்தார். நிறைய ஃப்ளிப்பர்களையும் கூக்ளிகளையும் வீசுவார். லெக் ஸ்பின்னர்களைக் குறைவாகத்தான் வீசுவார். அவர் வீசும் பந்தின் வேகம் அதிகம். அதனால் அவரிடம் ஃப்ளைட் குறைவு. அதனால் லூப் குறைவு.
கும்ப்ளே அதனாலேயே ‘ஆசாரமான’ லெக் ஸ்பின்னர் என்று கருதப்படவில்லை.
கும்ப்ளேயின் பலம் அவரது துல்லியம். அத்துடன் அலுக்காமல் சளைக்காமல் வீசிக்கொண்டே இருப்பது. அதிக ரன்கள் தராமல் வீசிக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் எதிராளியின் விக்கெட் விழத்தானே செய்யும்?
கும்ப்ளே ஓடிவந்து, ஒரு குதி குதித்து வீசுவார். அவரது பந்துகளும் டாப் ஸ்பின்னராக இருப்பதால் எழும்பிக் குதித்துத்தான் வரும். அதனால் ‘ஜம்போ’ என்று (விக்கெட் கீப்பர்) நயன் மாங்கியாவால் அழைக்கப்பட்டார். அப்போதிலிருந்தே ‘கமான் ஜம்போ’ என்று கும்ப்ளேயை விக்கெட் கீப்பர்கள் உற்சாகப்படுத்தத் தொடங்கினர்.
கும்ப்ளே டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஓர் இன்னிங்க்ஸில் பத்து விக்கெட் எடுத்தார் என்பதைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கும்ப்ளே மட்டையால் பெற்ற டெஸ்ட் சதம்.
இந்திய விளம்பரதாரர்கள் பொதுவாகவே மட்டையாளர்களுக்குச் சாதகமானவர்கள். ஓரிரு சதம் அடித்தால் போதும்; மட்டையாளர்களுக்கு பணமும் புகழும் குவிய ஆரம்பிக்கும். ஆனால் பந்துவீச்சாளர்களை யாரும் சீண்டுவதில்லை. இந்த வருத்தம் கும்ப்ளேவிடம் நிறையவே உண்டு.
இந்தியாவின் பல ஸ்பின்னர்கள் திடீரென வானில் தோன்றும் எரி நட்சத்திரங்களாக இருந்து, விரைவில் கருகிக் காணாமல் போயிருக்கிறார்கள். முக்கியமாக லெக் ஸ்பின்னர்கள். நரேந்திர ஹிர்வானி, லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் - உடனே ஞாபகத்துக்கு வரும் இரண்டு பெயர்கள். கும்ப்ளே அப்படி ஆகாமல் பார்த்துக்கொண்டார். எப்போதும் ஒளிரும் நட்சத்திரமாக இருந்தார்.
வலதுகை ஆஃப் ஸ்பின்னர்கள் (ஹர்பஜன் சிங், வெங்கடராகவன்) அல்லது இடதுகை ‘ஆசார’ ஸ்பின்னர்கள் (பிஷன் சிங் பேதி, திலீப் தோஷி) - இருவருமே விரலால் பந்தை ஸ்பின் செய்பவர்கள். இவர்கள் அதிக காலம் ஆட்டத்தில் இருப்பார்கள். ஆனால் கொத்து கொத்தாக விக்கெட் எடுப்பார்கள் என்று சொல்லமுடியாது.
வலதுகை மணிக்கட்டு ஸ்பின்னர்கள் (இடதுகை மணிக்கட்டால் பந்துவீசுபவர்கள் வெகு குறைவு!), மிக அதிக நாள்கள் விளையாட்டில் இருக்கமாட்டார்கள். ஆனால் விளையாடும் காலத்தில் அதிகம் விக்கெட் எடுப்பார்கள். ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே இருவரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இதில் ஷேன் வார்ன் வீசுவதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகப் பந்துவீசுபவர் கும்ப்ளே.
இருவரும் சமகாலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது லெக் ஸ்பின்னின் பொற்காலம்.
கும்ப்ளே இந்தியாவுக்காக அதிகம் சாதித்த லெக் ஸ்பின்னர் மட்டுமல்ல. இந்தியாவுக்காக மிக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தவர். 132 ஆட்டங்களில் 619 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். அடுத்த நிலையில் இருக்கும் கபில் தேவ், 131 டெஸ்ட்களில் 434 விக்கெட்டுகளை மற்றுமே பெற்றிருந்தார் என்பதைக் கவனியுங்கள். இவர்கள் இருவரையும் தவிர, வேறு எந்த இந்தியப் பந்துவீச்சாளரும் 300 விக்கெட்டுகளைத் தாண்டவில்லை. (ஹர்பஜன் சிங் இப்போது 299 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.)
இதிலிருந்தே கும்ப்ளே இந்தியாவுக்கு ஆற்றியிருக்கும் மகத்தான சேவை தெரியவரும்.
இனிவரும் காலங்களில் அவர் தான் எடுத்துக்கொள்ள இருக்கும் பணிகளில் சிறப்பான சாதனை புரிய வாழ்த்துகள்.
Well done Kumble! I hope senior players will take decision on time. No body is there to replace the "fab four"
ReplyDeleteHe was the our only match winner in 1990S
ReplyDeleteகும்ப்ளே சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால்...
ReplyDelete//கும்ப்ளே அளவுக்கு யாருமே - டெண்டுல்கர் கூட! - இந்தியாவுக்கு ஆட்டங்களை வென்றுகொடுத்தது கிடையாது.
//
இது அநியாயம்.
பிரசன்னா: இதில் அநியாயம் ஒன்றும் கிடையாது. கிரிக்கின்ஃபோ ஸ்டாட்ஸ்குருவை வைத்துக்கொண்டு, இந்தியா கடந்த 18 வருடங்களில் ஜெயித்த டெஸ்ட் ஆட்டங்களை எடுத்து, அதில் டெண்டுல்கரின் பங்களிப்பு என்ன, கும்ப்ளேவின் பங்களிப்பு என்ன என்று செய்து பார்க்கவும். அதிலிருந்து யார் வெற்றிக்கு அதிகமாகப் பங்களித்துள்ளார் என்பது தெரியவரும்!
ReplyDeletePrasanna, you can refer the following link that justifies what Badri says - Kumble won more matches for India than Tendulkar
ReplyDeletehttp://content-gulf.cricinfo.com/india/content/current/story/376711.html
கும்ளே மனதுக்குள் வைத்திருந்ததை போட்டு இப்படி உடைச்சிட்டீங்களே!!அதோட ஸ்பின் விபரஙகள் அருமை.
ReplyDeleteஇப்ப பந்தை எடுத்து முயற்சிக்கனும் என்று தோனியது .
It's a good tribute to legend of spinners.
ReplyDeletebest of luck, Kumble !
கும்ளே ஒரு தலைசிறந்த வீரர், சரியான நேரத்தில் விலகி இளம் வீரர்களுக்கு வழி விட்டுள்ளார்.
ReplyDelete//வலதுகை ஆஃப் ஸ்பின்னர்கள் அதிக காலம் ஆட்டத்தில் இருப்பார்கள். ஆனால் கொத்து கொத்தாக விக்கெட் எடுப்பார்கள் என்று சொல்லமுடியாது.
வலதுகை மணிக்கட்டு ஸ்பின்னர்கள் மிக அதிக நாள்கள் விளையாட்டில் இருக்கமாட்டார்கள். ஆனால் விளையாடும் காலத்தில் அதிகம் விக்கெட் எடுப்பார்கள்//
என்றும் எழுதியுள்ளீர்.
அது எப்படி?
கும்ளே 19 ஆண்டுகள் தாக்குபிடித்துள்ளாரே?
மற்றும் முரளிதரன் ஒரு ஆஃப் ஸ்பின்னர் ஆனால் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளாரே?
சந்திரசேகரன்: சரியான கேள்வியைப் பிடித்தீர்கள். அதனால்தான் கும்ப்ளே, வார்ன், முரளி ஆகியோர் பெரிய சாதனையாளர்கள். கும்ப்ளே தாக்குப்பிடித்ததன் ரகசியம் அவர் வித்தியாசமான பந்துவீச்சாளர்; ரெகுலர் லெக்ஸ்பின்னர் கிடையாது. வார்ன் தாக்குப்பிடித்ததன் ரகசியம் அவர் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியது. அவருக்கு உறுதுணையாக எதிர்ப்பக்கம் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். மேலும் ஆஸ்திரேலியா அணி எப்போதும் ஜெயித்தது; அதற்கு வார்னும் ஒரு காரணம்.
ReplyDeleteமுரளியும் சாதா ஆஃப் ஸ்பின்னர் கிடையாது - ஹர்பஜன் போலல்ல. முரளிதான் உலகிலேயே வலது கை மணிக்கட்டால் ஆஃப் ஸ்பின் வீசுபவர். மற்ரவர்கள் எல்லாம் விரலால் ஆஃப் ஸ்பின் போடுபவர்கள். இது தனி போஸ்டாக எழுதவேண்டிய சங்கதி.
முரளியின் வித்தியாசமான பந்துவீச்சுதான் அவர் ‘எறிகிறார்’ என்ற குற்றச்சாட்டைக் கொண்டுவந்தது. அதுதான் எந்த ஆடுகளத்திலும் அவரால் ஸ்பின் செய்யமுடியும் ரகசியமும். அதுதான் அவர் எடுக்கும் எக்கச்சக்க விக்கெட்டுகளுக்கும் காரணம்!
நன்றி பத்ரி.
ReplyDeleteஸ்பின் விவரங்கள் எல்லோருக்கும் புரியும்படி அருமையாக இருந்த்து.
முரளிதரன் ஒய்வு பெற்றால் வாசகர்களாகிய நாங்கள் இதே போல் ஒரு பதிவை எதிர்பார்ப்போம்.
---முரளிதரன் ஒய்வு பெற்றால் வாசகர்களாகிய நாங்கள் இதே போல் ஒரு பதிவை எதிர்பார்ப்போம்.---
ReplyDelete(சூட்டோடு சூடாக) ஓய்வு பெறுவதற்கு முன்பே ஒன்றை எதிர்பார்க்கிறேன்.
கும்ப்ளேயால் இந்தியா பல வெற்றிகள் பெற்றது என்பதில் சந்தேகம் இல்லை.
ReplyDeleteகும்ப்ளே அளவுக்கு யாருமே - டெண்டுல்கர் கூட! - இந்தியாவுக்கு ஆட்டங்களை வென்றுகொடுத்தது கிடையாது.
அதே நேரம் Kapil's strike-rate is better by just two balls, while Kumble has more five and ten-wicket hauls, largely because he bowled more overs per Test than Kapil did.
என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்
//
Prasanna, you can refer the following link that justifies what Badri says - Kumble won more matches for India than Tendulkar
http://content-gulf.cricinfo.com/india/content/current/story/376711.html
//
மகேஷ் அண்ணா !!
இதில் டெண்டுல்கர் பற்றி எங்கு இருக்கு
--
கபிலை விட கும்ப்ளே விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணியில் அதிக ஒட்டங்களை பெறக்கூடிய மட்டையாளர்கள் - சச்சின், காம்ப்ளே, திராவிட், கங்குலி, லக்ஷ்மண் இருந்தனர் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
--
கும்ப்ளே அளவுக்கு யாருமே - டெண்டுல்கர் கூட! - இந்தியாவுக்கு ஆட்டங்களை வென்றுகொடுத்தது கிடையாது. ஆனால் அதற்கு கும்ப்ளே விளையாடிய அணியும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்
//Prasanna, you can refer the following link that justifies what Badri says - Kumble won more matches for India than Tendulkar
ReplyDeletehttp://content-gulf.cricinfo.com/india/content/current/story/376711.html//
The shift happened from the England tour of 2002, when Rahul Dravid started his golden run at No. 3, producing several match-winning efforts overseas. With Sachin Tendulkar scoring consistently, and VVS Laxman and Sourav Ganguly contributing as well, Kumble had enough runs to play with. It helped that during this period he added more variety to his bowling, bringing in the slower legbreak and the googly, and the difference in stats thereafter was significant.
கடந்த 20 வருடங்களாக அணித்தலைவர் ஒருவர் ஓய்வு பெறுவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஇந்திய அணியில் 1990க்கு பின் வேறு யாராவது அணித்தலைவராக இருந்து கொண்டே ஒய்வை அறிவித்திருக்கிறார்களா ??
ஸ்பின் பற்றி மிக அழகாக, எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.. நன்றி..
ReplyDeleteமுரளிதரனின் தூஸ்ரா பற்றி எழுதுங்களேன்..
முரளியை சோதனை செய்த காட்சியை மட்டும் ஒரு முறை தொலைக்காட்சிகளில் பார்த்து பயந்து போனேன்.. அப்போதும் அவரைப் பற்றி புகார் சொன்னது ஆஸ்திரேலியக்காரர்கள் மட்டும்தான்..
கும்ப்ளேயின் சாதனை பந்துவீச்சில் மட்டும்தானே.. அதே நேரம் அதே போட்டியில் அதிக ரன்களையும் எடுத்து வைத்திருந்தவர்கள் பட்டியலில் நிச்சயம் டெண்டுல்கர் முதலிடத்தில்தான் இருப்பார்.
உங்களுடைய அளவீடு எப்படி என்று எனக்குப் புரியவில்லை..
நாங்கள் அவரை எப்போதும் வேகப்பந்து வீச்சாளராகவே பார்ப்போம். ஒரு கால கட்டத்தில் { அநேகமாக டெண்டுல்கர் தலைமை ஏற்ற புதிதில்] அவர் ஒருவர் மட்டுமே பந்து வீச்சாளராக இருப்பார். மற்றவர்களை எந்த அணியினருமே பந்து வீச்சாளர்களாக மதித்தது கிடையாது.
ReplyDeleteவார்னேக்கு அமைந்தது போல் துணை அமைந்திருந்தால் மேலும் பல விக்கெட்டுகளும், பல நூறு ரன்களும் எடுத்திருப்பார்.
ReplyDelete