NDTV-யில் இரவில் 9.30-10.00 (?) நேரத்தில் Documentary 24x7 என்ற ஒரு நிகழ்ச்சி சில நாள்கள் வருகிறது. அரை மணி நேர நிகழ்ச்சி.
2-3 வாரங்கள் இருக்கும். தமிழகத்தின் திருநங்கைகள் பற்றி தமிழில் ஓர் ஆவணப்படம் (ஆங்கில சப்டைட்டில்களுடன்) இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. பிரீதம் சக்ரவர்த்தி (சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இருவருள் ஒருவர்) மோனோ ஆக்டிங் செய்தார். பல திருநங்கைகளுடன் எடுத்த பேட்டியையும், இந்த மோனோ ஆக்டிங்குடன் சேர்த்து தொகுத்துத் தந்திருந்தனர்.
பிரீதம் சக்ரவர்த்தியின் மோனோ ஆக்டிங்கை மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். நன்றாக ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். நிறைய ஆராய்ச்சிகள் செய்து இதனை எழுதியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் உணர்வுபூர்வமாக நடித்தும் பேசியும் காண்பித்தார். ஆணாக இருக்கும் ஒருவர் தன் கதையை விவரித்துக்கொண்டே, கடைசியில் தனக்கு ‘நிர்வாண’ அறுவை நடப்பதை தத்ரூபமாக விளக்குமாறு அமைந்திருந்தது அந்த மோனோ ஆக்டிங். (வசனங்கள் சிறு குழந்தைகளுக்கு ஏற்புடையவை அல்ல. Parental guidance required!)
பிரீதம், குறிப்பிட்ட தினத்தன்று குறி அறுப்பதை நடித்துக் காட்டியதைப் பார்த்து, சில திருநங்கைகளே அசந்துபோய்விட்டதாக ஆவணப்படத்தில் குறிப்பிட்டனர்.
திருநங்கைகளின் வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்குத் தொட்டுப் போகும் இந்த ஆவணப்படம், காலக் குறைபாடு காரணமாக பலவற்றை விட்டுவிட்டது. இது சிடியாகக் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் மறக்காமல் நீங்கள் பார்க்கவேண்டும். NDTV 24x7 இதனை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யவும் வாய்ப்புள்ளது.
இதனை சென்சார் செய்யாது அப்படியே காண்பிக்கும் தைரியம் தமிழ் சானல்களிடம் இருக்காது என்றே நினைக்கிறேன்.
NDTV 24x7-ல் இதுவரை வேறு சில ஆவணப்படங்களையும் பார்த்துள்ளேன். எல்லாமெ உயர் தரம் என்று சொல்லமுடியாது. ஆனால் மிகவும் ஆதரிக்கப்படவேண்டிய, வரவேற்கவேண்டிய மாறுதல் இதுபோன்ற நிகழ்ச்சிகள்.
கவளம்
9 hours ago
பார்க்க தவறிவிட்டேன்.
ReplyDeleteவீடியோ லிங்க் கிடைக்குமா?
Yes Badri I too happened to watch it and it was quite gripping. In the same slot few weeks earlier or later, they showed Leena Manimekhalai's Goddesses documentary about 3 ordinary women -a funeral singer (oppari), gravedigger and a fisherwoman. It was of excellent quality,
ReplyDeleteவீடியோ லிங்க் ஆன்லைனில் இருப்பதாகத் தெரியவில்லை.
ReplyDeletei make it a point never to miss the show. the documentaries are bold, offbeat and interesting. will have wait for a while till the lazy webmaster show some karuNai upon those who missed the show.
ReplyDeletethe archives can be found from here :
http://www.ndtv.com/convergence/ndtv/video/videosearchlisting.aspx?pagenum=0&keyword=documentary&pageset=1
http://www.ndtv.com/convergence/ndtv/video/videosearchlisting.aspx?pagenum=1&keyword=documentary&pageset=1
http://www.ndtv.com/convergence/ndtv/video/videosearchlisting.aspx?pagenum=2&keyword=documentary&pageset=1
http://www.ndtv.com/convergence/ndtv/video/videosearchlisting.aspx?pagenum=2&keyword=documentary&pageset=1
இரண்டு மாதங்கள்முன் ப்ரீதம் சக்கரவர்த்தி பெங்களூர் வந்திருந்தார். அவருடைய Blaft anthology of tamil pulp fiction புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விழா, சில நடிகர்களுடன் இணைந்து அதன் பகுதிகளை நாடகமாக நடித்துக் காண்பித்தார், மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் தொழில்முறை நடிகர் / கலைஞர் என்பது அப்போது தெரியாது.
ReplyDeleteஉங்கள் ப்ளாக் படித்தபிறகு அவரைப்பற்றி இணையத்தில் தேடினேன், இந்த நாடகம் ‘நிர்வாணம்’ என்ற பெயரில் நடைபெறுவதாகத் தெரியவந்தது: http://www.theotherfestival.com/2003/pritham.html
- என். சொக்கன்,
பெங்களூர்
//the archives can be found from here ://
ReplyDeleteநன்றி தல