Friday, November 14, 2008

நல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்

நியூ ஹொரைசன் மீடியா பதிப்பித்துள்ள இரு புத்தகங்களுக்கு நல்லி - திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள் கிடைத்துள்ளன.

      

ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, K.S.சுப்ரமணியனின் மொழிமாற்றத்தில் ஆங்கிலத்தில், Once an Actress என்ற தலைப்பில் Indian Writing பதிப்பாக வெளியானது. வைசாகன் என்ற மலையாள எழுத்தாளரின் சிறுகதைகள், வைசாகன் சிறுகதைகள் என்ற பெயரில் ரகுராமின் மொழிமாற்றத்தில் தமிழில் வெளியானது. இவை இரண்டுக்கும் விருதுகள் கிடைத்துள்ளன. பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் நேரடியாகச் செல்லும் புத்தகங்களுக்கு திசை எட்டும் காலாண்டிதழ், நல்லி குப்புசாமி செட்டியாருடன் சேர்ந்து, இந்த விருதுகளை ஆண்டுதோறும் வழங்குகிறது.

இந்த மாதம் 23-ம் தேதி மதுரையில் இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

5 comments:

  1. எத்தனை பொற்காசுகள் வழங்கப்படும்?

    ReplyDelete
  2. மொழிமாற்றுனர் ஒவ்வொருவருக்கும் ரூ. பத்தாயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். தமிழின் நல்ல நவீன இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்வது அதுவும் கிழக்கு போல ஒரு மார்க்கெட்டிங் உக்திகள் தெரிந்த நிறுவனம் செய்வது தமிழ் இலக்கிய உலகுக்கு நல்லதுதான்.

    ReplyDelete
  4. ///////கிழக்கு போல ஒரு மார்க்கெட்டிங் உக்திகள் தெரிந்த நிறுவனம் செய்வது தமிழ் இலக்கிய உலகுக்கு நல்லதுதான்////Fri Nov 14, 02:31:00 PM IST

    ஆமாம்.. நானும் ஆமோதிக்கிறேன்...இன்று கூட Mytoday வில்,BUY BASIC DIABETES BOOK-RS.80.Sms START NHM to 575758 TO SIGNUP http://nhm.in என்று குறுந்தகவல் வந்தது...பத்ரி சார் 575758 பற்றியும் Mytoday வில் விளம்பரம் செய்ய ஆகும் செலவு பற்றியும் விவரியுங்களேன்...

    ReplyDelete