Monday, November 24, 2008

அறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்

80 பக்கங்களில், ரூ. 25 விலையுடன் நல்ல தாளில், பள்ளி மாணவர்களுக்கான பல புத்தகங்களை NHM நிறுவனம், Prodigy Books என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு வருகிறது. இவற்றை ஒவ்வொரு சிற்றூரிலும் பெரு நகரங்களிலும் பெட்டிக் கடைகளில்கூட வாங்கமுடியும்.

இது தொடர்பாக வாசகர்களிடம் நடத்திய கணிப்பின்மூலம், வாசகர்கள் நாட்டு நிகழ்வு, இந்திய அரசியல், உலக அரசியல் ஆகிய துறைகளிலும் இதுபோன்ற "Quick Read" புத்தகங்களை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். எனவே Prodigy பாணியிலேயே, 80 பக்க, ரூ. 25 புத்தகங்களை NHM அறிமுகம் செய்கிறது. இந்தப் பதிப்புக்கு MiniMax என்று பெயர்.

           

முதல் எட்டு புத்தகங்களில் நான்கு தமிழகக் கட்சிகளின் சுருக்கமான வரலாறாக உள்ளன. இப்போது வெளியாகியுள்ள புத்தகங்கள்:

திமுக
அதிமுக
பாமக
மதிமுக

இதே வரிசையில் இன்னும் பல புத்தகங்கள் வெளிவர உள்ளன.

           

மினிமேக்ஸில் தற்போதைக்கு வெளிவரும் உடல்நலம் சார்ந்த புத்தகங்கள்:

எச்.ஐ.வி - எய்ட்ஸ்
தலைவலி
யோகாசனங்கள்
சித்தமருத்துவம்

இனி வரும் நாள்களில் பல இந்திய, தமிழக, உலக அரசியல் நிகழ்வுகள், பொருளாதார நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றுடன் உடல்நலம் சார்ந்த சில புத்தகங்களும் இந்தப் பதிப்பில் வெளியாகும்.

8 comments:

  1. பத்ரி!
    காலத்திற்கேற்ற மிகவும் நல்ல முயற்சி!
    வாழ்த்துக்கள்!
    புத்தகக் கண்காட்சியில் வாங்குகிறேன்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

    ReplyDelete
  2. Commendable effort Badri ! I would like to see genres like arts and wildlife covered too - biographies of Picasso, Van Gogh, etc and books on wildlife parks, etc.

    ReplyDelete
  3. Congrats Badri. i would like to see good fundamental physics and Maths books.

    may be translating great science books will be good starting point,

    1. maths - some of great Russian math puzzle books. i could not remember the name now ...

    2. physics - Feynman Physics books.

    3. explaining the physics & Maths fundamental concepts in Tamil helps the rural OR other than chennai students in a long way. may be you can write with the help of a proffesor.


    - ganesh

    ReplyDelete
  4. Very nice you can try more in the area of (stress relief)self development, counseling in audio book & mind relaxing music etc with the help of professionals in the field.This is the need of the hour for today's competitive world.

    ReplyDelete
  5. Is there any shops in coimbatore to get the nhm books?

    ReplyDelete
  6. Dear Anon
    You can get the NHM books from Vasanth & Co, Vijaya Pathippagam (Town hall), Anweshana, Avinashi Road(Formerly Landmark) & all the other major book shops.

    Hope this helps!

    Venkatramanan[at]gmail[dot]com

    ReplyDelete
  7. புத்தக அட்டை வடிவமைப்பு நன்றாக உள்ளது.

    ReplyDelete
  8. நல்லது பத்ரி ஸார்..

    தங்களுடைய பல்வேறு வகைப்பட்ட புத்தக விற்பனை எண்ணங்கள் சிறுகச் சிறுக படிப்பவர்களை நிச்சயம் சென்று சேரும்..

    ReplyDelete