Wednesday, June 03, 2009

Affiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள்

அமேசான் இணைய வர்த்தகத் தளத்தில் affiliate முறை ஒன்று இருப்பதைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பிர்கள். உங்களது இணையத் தளத்தின் மூலமாக யாரேனும் அமேசான் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கினால் அந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அமேசான் உங்களுக்கு அளிக்கும்.

நியூ ஹொரைசன் மீடியாவும் இதுபோன்ற ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. நியூ ஹொரைசன் மீடியாவின் இணைய வர்த்தகத் தளத்தின் affiliate ஆக, உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களது தளத்தில் நீங்கள் கொடுக்கும் தொடுப்பின்மூலம் ஒருவர் nhm.in இணையக் கடையில் புத்தகங்கள் வாங்கினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தொகை commission ஆக வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் மீண்டும் நேரடியாகவே எங்கள் தளத்துக்கு வந்து வேறு புத்தகங்களை வாங்கினால் அதற்குரிய கமிஷன் தொகையும் உங்களுக்கே கிடைக்கும்.

ஆனால் அந்த வாடிக்கையாளர் அடுத்து வேறு ஒரு தளத்தில் காணப்படும் affiliate சுட்டியின் மூலம் எங்கள் கடைக்கு வந்து புத்தகங்களை வாங்கினால் அன்றுமுதல் கமிஷன் தொகை கடைசியாக எந்தத் தளத்திலிருந்து வந்தாரோ அந்தத் தள உரிமையாளருக்குச் செல்லும். இதுவும் அமேசான் பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் தளத்தில் ஒரு குறிப்பிட்ட புத்தகம், ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் அனைத்துப் புத்தகங்கள், ஒரு குறிப்பிட்ட இம்பிரிண்டின் புத்தகங்கள், அல்லது எங்கள் நிறுவனம் விற்கும் அனைத்துப் புத்தகங்கள் என்று எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து அதற்கான விளம்பரங்கள் உங்கள் தளத்தில் வருமாறு செய்யலாம். விளம்பரங்களும் வெவ்வேறு அளவிலானவையாக இருக்குமாறு செய்யலாம். டெக்ஸ்ட் வடிவில் இருக்குமாறும் செய்யலாம்.

இது சோதனை முயற்சி என்பதால், சிலரை மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்க்க எண்ணியுள்ளோம். எனவே நீங்கள் அனுப்பும் அஞ்சலில் உங்கள் வலைப்பதிவு அல்லது இணையத்தள முகவரியையும் அனுப்புங்கள். நீங்கள் ஆல்ஃபா சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலோ (அல்லது இப்போதைக்கு உங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்றாலோ) அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு லாகின் வழங்கப்படும். அதில் நுழைந்து எப்படி affiliate code-ஐப் பெறுவது, எப்படி அந்த code-ஐ உங்கள் தளத்தில் சேர்ப்பது ஆகியவை உங்களுக்கு விளக்கப்படும்.

ஆரம்பத்தில் கமிஷன், அஞ்சல் செலவு தவிர்த்த விற்பனைத் தொகையில் 7.5% என்று இருக்கும். நாளடைவில் இந்த சதவிகிதம் மாறலாம். உங்களுடைய கமிஷன் தொகை மாதம் ஒரு முறை அல்லது அது ரூ. 500-ஐத் தாண்டியபின், நீங்கள் குறிப்பிடும் இந்திய முகவரிக்கு, காசோலையாக அனுப்பப்படும்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் வலைப்பதிவர்கள் மற்றும் இணையத்தளம் வைத்திருப்பவர்கள், உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி: affiliate@nhm.in

நன்றி.
பத்ரி

19 comments:

  1. மெயில் அனுப்பினேன், போகவில்லை!

    சரிபார்க்கவும்,

    மேலும் இங்கேயே சொல்லிவிடுகிறேன்,
    எனக்கு சம்மதம், உங்கள் விளம்பரங்களை வெளீயிட!

    ReplyDelete
  2. பா. ரெங்கதுரைWed Jun 03, 08:29:00 PM GMT+5:30

    பாராட்டப்பட வேண்டிய முயற்சி. இதனால் தமிழ்ப் புத்தகங்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும் வாய்ப்பு சொற்பமே என்றாலும், இணையம்மூலம் புத்தகம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. வாசிப்பு பழக்கத்தை பரவலாக்கும் என்றே நம்புகிறேன்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  4. You seem to be towing amazon.com;
    you have a flavour of amazon's super saver, now amazon's associates program. Are we seeing a future foray into full fledged on line retailing?

    ReplyDelete
  5. aha.
    You are going amazing way in every step for marketing with current trend. This is a good try. this will be test drive for affiliate marketing in tamil.
    -Vibin, cbe

    ReplyDelete
  6. வால்பையன்: அஞ்சல் அனுப்பிப் பார்த்தேன்; அந்த முகவரிக்குச் சென்றதே? மீண்டும் சரிபார்க்கிறேன்.

    ReplyDelete
  7. Anon: Re: full-fledged online retailing, the answer is no, in the short to medium term. It is an extremely painful process dealing with Tamil book publishers to offer a sensible online (or for that matter offline!) retailing.

    We are, however, keen to offer our distribution platform to others for distributing their books. We are already distributing some books published by others. I will make a formal announcement in this regard shortly, in my blog and in NHM blog.

    ReplyDelete
  8. மெயில் அனுப்பியாகி விட்டது பத்ரி.

    ReplyDelete
  9. the mail is not sent. It says

    Delivery to the following recipient failed permanently:

    affiliate@nhm.in

    please check it

    ReplyDelete
  10. திரு பத்ரி அவர்களே ,

    நல்ல முயற்சி. கிழக்கு பதிப்பகத்தின் புத்தக கண்காட்சிக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

    என்னிடம் இருந்து சில கருத்துக்கள்

    1) இணையம் மூலம் புத்தக விற்பனை இன்னும் அந்த அளவு பிரபலம் ஆகவில்லை, அதனால் இந்த கமிஷன் கொடுக்கும் திட்டத்திற்கு ஆகும் செலவில் ஒரு பகுதியை மக்களிடையே வெகுவாக புழங்கும் வாரப்பத்திரிக்கைகள் , கல்லூரி , பேருந்து நிலையம் போன்றவற்றில் கவணத்தை ஈர்க்கும்படி சுவரொட்டி/நோட்டீஸ் மூலம் பிரபலமாக்கலாம்.
    உதாரணம் சில வார இதழ்களில் வர்த்தமானன் பதிப்பகத்தின் புதிய பதிப்புகள், சலுகைகள் போன்ற விளம்பரங்களை கானலாம். இதன் மூலம் தமிழ்நாட்டின் இணைய வாசகர்களுக்கு மட்டுமின்றி வாரப்பத்திரிகைகள் படிக்கும் வாசகர்களுக்கும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் பற்றிய விபரம் சென்றடையும்.

    2)லாண்ட்மார்க் , பவுண்டன்ஹெட் , ஹிக்கின்பாதம்ஸ் போன்ற கடைகளில் புத்தக வெளியீடு மற்றும் ஆசிரியருடன் கலந்துரையாடல் , ஆசிரியர் ஆட்டோகிராஃப் செய்த புத்தங்கள் மூலம் மக்களிடையே நல்ல விளம்பரம் பெறலாம்.

    3) இந்த கமிஷன் செலவின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியாக கொடுக்கலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இத்தனை சதவிகிதம் தள்ளுபடி என்று , அல்லது குறிப்பிட்ட புத்தகங்களை சேர்த்து வாங்கினால் தள்ளுபடி என்று.

    நான் கூறிய கருத்துக்களை நீங்கள் ஏற்கனவே செயல்படுத்தியிருக்கிறீர்களா என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த கருத்துக்களை கூறியுள்ளேன்.

    நன்றி,
    ராம்குமரன்

    ReplyDelete
  11. Please give discount for direct purchase of book from your website.

    ReplyDelete
  12. மெயில் அனுப்பியிருக்கிறேன்.

    பத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்த முதல் தனிநபர் வலைப்பூவை தயவுசெய்து திட்டத்தில் சேர்க்கவும்.

    ReplyDelete
  13. பத்ரி,

    இந்த applet (or whatever it is) கொஞ்சம் un-user-friendlyஆக எனக்குத் தோன்றுகிறது. புத்தகத்தின் பெயர் குடுகுடுவென்று ஓடுவதைவிட நிலையாக நின்றால் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்குமோ?

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  14. பெரிய எழுத்துப் புத்தகங்கள்!

    தமிழ்ப் பதிப்புத் துறையில் முக்கியமான சிறப்பு என்று பெரிய எழுத்துப் புத்தகங்-களைச் சொல்வேன். இதில் முன்னோடி பதிப்பகம் ரத்னநாயக்கர் அண்ட் சன்ஸ். தமி-ழக நாட்டுப்புறக் கதைப் பாடல்கள், கொலைச்சிந்து, மகா பாரதக் கதைகள் போன்-றவற்றைப் பெரிய எழுத்துப் புத்தகங்களாக வெளி-யிட்டு இருக்---கிறார்கள்.

    மதுரைவீரன் கதை, அல்லிஅரசாணி மாலை, பவளக்கொடி, விக்கிரமாதித்யன் கதை, கோவலன் கதை என்று இவர்கள் வெளியிட்ட முக்கியமான பெரிய எழுத்துப் பிரதிகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளும் வயதானவர்களும் படிப்-பதற்குப் பெரிய எழுத்தில் அச்சிடப்படுவது அவசியம். அதை அறிந்து செயல்-படுத்தியவர்கள் இவர்களே!

    சித்திரங்களுடன் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் அற்புதமான கதை சொல்லும் முறையுடன் இருந்தன. இதில் உள்ள சித்திரங்கள் நுட்பமும் கலைத்திறனும் மிக்கவை... இன்று அச்சுத் தொழில் இவ்வளவு நவீனமாக வளர்ந்துவிட்டபோதும் பெரிய எழுத்துப் புத்தகங்கள் போல எதையும் நாம் உருவாக்கவே இல்லை. பெரிய எழுத்துப் புத்தகங்கள் இன்று கவனிப்பார் அற்றுப் போய்விட்டன. பெரும்-பான்மைப் பிரதிகள் மறுபதிப்பு இன்றி அழிந்துவிட்டன.

    '1001 அராபிய இரவுகள்' போன்ற உலகப் புகழ்பெற்ற கதைத் தொகுதி யைக்கூட பெரிய எழுத்துப் புத்தகமாக ரத்னநாயக்கர் அண்ட் சன்ஸ் வெளியிட்டு இருக்கிறது. கப்பல் சாஸ்திரம், சாமுத்திரிகா லட்சணம், தச்சு சாஸ்திரம் போன்றவையும் பெரிய எழுத்துப் புத்தகங்களாக வந்திருக்கின்றன. இந்த மரபுக்கு இன்று தொடர்ச்சி இல்லை.

    சென்னைக்கு ஹைகோர்ட் வந்ததைப் பற்றிய ஹைகோர்ட் அலங்காரச் சிந்து, துளசிங்க முதலியார் அச்சகத்தில் சூளைமேட்டில் 1904-ல் அச்சிடப்பட்டு இருக்கிறது. பெரிய எழுத்துப் புத்தகங்கள் மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை போன்ற நகரங்களிலும் அச்சிடப்பட்டு இருக்கின்றன.

    கவனிப்பார் அற்றுப்போன இந்தப் பெரிய எழுத்துக் கதைகளை மீட்டு எடுத்து, புத்துருவாக்கம் செய்ய வேண்டியது பதிப்புலகின் அவசியமான செயலாகும்!

    Courtesy: Anandha Vikatan (10-06-2009).

    Badri! Can you do something?

    ReplyDelete
  15. நேற்று மின்னஞ்சல் அனுப்பினேன். அனுப்ப இயலவில்லை என பதில் வந்தது.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  16. ஆங்கில தளங்களிலும் சேர்க்கலாம் தானே

    ReplyDelete
  17. அட வரவேற்க்கதக்க முயற்சி!
    நானும் ரெடி!!

    ReplyDelete
  18. நானும் ரெடி. முயற்சித்து பார்க்க....

    ReplyDelete
  19. சொக்கன்: இப்போது இருக்கும் flash applet, அவ்வளவு சிறப்பானது என்று சொல்லமாட்டேன். அதற்காகத்தான் இந்த ஆல்ஃபா சோதனையே. சில மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். அவற்றைச் செய்யும்போதே உங்களைப் போன்ற சில எலிகளை வைத்துச் சோதனை செய்தால் வேகமாக மாறுதல்களைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை:-)

    ReplyDelete