Friday, June 19, 2009

மேற்கு வங்கக் கலவரம்

கடந்த சில நாள்களாக மேற்கு வங்கத்தில் நடைபெறும் அதிரடித் தாக்குதல்கள் பயமுறுத்துகின்றன. மாவோயிஸ்டுகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் சேர்ந்து காவல்துறையினரையும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களையும் தாக்கிக் கொன்றுள்ளனர். சில பகுதிகளை (லால்கார்) “கைப்பற்றி” அந்தப் பகுதிகள் “விடுதலை செய்யப்பட்டுள்ளதாக” அறிவித்துள்ளனர். இப்போது காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் சேர்ந்து கலவரக்காரர்களை அடித்து நொறுக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

சில கேள்விகள்:

1. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் காவலர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து எந்தவித அட்டூழியங்களைச் செய்துள்ளனர்? எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் திரிணமுல் காங்கிரஸும் இதை ஒட்டி வெள்ளை அறிக்கை தயாரிப்பார்களா?

2. மாவோயிஸ்டுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை அளிப்பவர்கள். அவர்களுக்கு சரியான கொள்கை உறுதிப்பாடு ஏதும் இல்லை. அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்ற ஒரே கொள்கைதான். ஆனால் அரசுகளின் உதவாக்கரை மனப்பான்மையால் பெரும்பாலான பின்தங்கிய பழங்குடி மக்களும் கிராமப்புற ஏழைகளும் இந்த மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை உடனடியாகத் தடுக்கும் வகையில் மக்களுக்கு நலத்திட்டங்களைச் செய்ய மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசே ஏன் தடுமாறுகிறது? சட்டிஸ்கர் அல்லது ஆந்திராவில் பிரச்னைகள் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில்?

3. திரிணமுல் இந்தக் குழப்பத்தில் எந்த மீனைப் பிடிக்க நினைக்கிறது? தீதி மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கும்மி அடித்தால், நாளை அவரையே தீர்த்துக்கட்டவும் மாவோயிஸ்டுகள் தயங்கமாட்டார்கள் என்பது அவர் அறியாததா?

4. “காவல்துறை அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு” என்ற அமைப்பு உருவானது நந்திகிராம் வன்முறைகள் தொடர்பாகத்தானே? ஏன் நந்திகிராம் தொடர்பாக ஒரு வெளிப்படையான விசாரணை கமிஷன் அமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நஷ்ட ஈட்டைக் கொடுத்து, பிரச்னையை மூடாமல், வளரவிடுகிறது கம்யூனிஸ்ட் அரசு?

5. மாவோயிஸ்டுகளை ஒழிக்க ராணுவ, பாரா மிலிட்டரி படைகள் மட்டும் போதாது. அவர்கள் உருவாவதற்கான காரணிகளை முதலில் அழிக்கவேண்டும். புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் காங்கிரஸ் அரசு அதற்கு என்ன செய்யப்போகிறது?

2 comments:

  1. Really sensible post. I have seen some intellectual types supporting the Maoists. The role model for these maoists are people like Mao and Pol Pot. What the intellectual types don't seem to recognize is that if the maoists succeed, first thing they would do is to purge all intellectuals just as Mao did during cultural revolution. The irony is lost on the intellectuals who don't realize that if they Maoists come to power they would be lucky to be spending their rest of their lives in some dingy coal mine.

    ReplyDelete
  2. இது போல் குஜராத்தில் நடந்திருந்தால் எப்படி இருக்கும் ?

    சும்மா, ஒரு தண்ணியடிக்கும் பெண்ணை அடித்ததற்கே 10 நாள் டாப் டென் செய்தியில் இடம்பிடித்தான் ராம சேனைத் தலைவன்.

    இப்படி தேச துரோக மாவோயிஸ்டுக் கும்பல் செய்யும் அட்டூளியத்தைச் சொல்ல செய்திகள் வருவதே இல்லை ? ஏன் ? அப்படியே வந்தாலும் 3ம் 4ம் பக்கத்தில் கட்டம் போட்டு வருகிறது!

    எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எதற்குக் கூடாது என்பது கூடத் தெரியாமல் பல செய்தி ஊடகங்கள் இயங்குகிறது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

    ReplyDelete