Thursday, June 18, 2009

சுயநிதி கல்லூரிகளில் ரெய்டு

இப்போது சென்னையில் சில சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ரெய்டு ஒரு நல்ல விஷயமாகத் தோன்றுகிறது. மீனாக்ஷி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ வேங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் ரெய்டுகள் நடந்துள்ளன.

ஆனால், இந்த மூவர் மட்டும்தான் குளறுபடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று நம்ப முடியவில்லை. டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் கல்லூரிகளிலும் ரெய்டு நடக்கும் என்று நம்புவோம்.

எனக்குத் தெரிந்து தமிழகத்தில் மொத்தம் இருக்கும் சுமார் 300 தனியார் பொறியியல் கல்லூரிகளில், ஓரிரண்டில் மட்டும்தான் திருட்டுத்தனம் நடப்பதில்லை. ஷிவ் நாடாரின் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி நியாயமான கல்லூரி என்று கட்டாயமாகச் சொல்லிவிடமுடியும். அங்கே அதிகமான கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. அப்படிப்பட்ட கல்லூரிகள் வேறு எவை என்று தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆனால், ஒரு விதத்தில் இந்த செலக்டிவான ரெய்டே நல்ல விஷயம் என்று தோன்றுகிறது. இதன் காரணமாக, தனியார் பொறியியல் கல்லூரி ‘ஓனர்கள்’ குழுவில் விரிசல் ஏற்படும். ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்க முயற்சி செய்தால் அது மிகவும் நன்றாக இருக்கும்.

ஆனால், இதனால் நிரந்தரத் தீர்வு ஏதும் இருக்காது. தனியார் பொறியியல் கல்லூரிகளை நடத்துபவர்கள் பெரும்பாலானோர் திட்டமிட்டேதான் இந்தக் கொள்ளையைச் செய்கின்றனர். அதே நேரம், அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை மட்டும் வைத்துக்கொண்டு தரமான கல்வியைத் தரவும் முடியாது. (ஷிவ் நாடார் கல்லூரியில் மேற்கொண்டு தேவைப்படும் பணத்தை அவரது அறக்கட்டளை வழங்குகிறது.) எல்லோரும் தேச சேவை என்று தங்கள் பணத்தைப் போட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி நடத்தவேண்டும் என்பது அவசியமில்லை. எனவே தேவையான செலவுகளுக்கு ஏற்றவாறு கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

4 comments:

  1. Even SSN has a selective donation campaign of Rs 5 lakhs for their MTech VLSI program, which allows a person to get US Visa guaranteed for some time. There are guys wanting it!

    ReplyDelete
  2. பா. ரெங்கதுரைThu Jun 18, 06:16:00 PM GMT+5:30

    மூன்றே மூன்று கல்லூரிகளில் மட்டும் ரெய்டு நடத்தியிருப்பது அரசாங்கத்தின் பச்சையான அயோக்கியத்தனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது. ”பாருங்கப்பா, ரெய்டுக்கு வரப்போறோம். மத்தவங்கள்ளாம் உஷாரா இருங்க, பதுக்க வேண்டியதை பதுக்கிடுங்க” என்று புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்லியிருக்கிறார்கள்.

    இதை வரவேற்றிருப்பதன்மூலம் இத்தகைய விஷயங்களில் உங்களுக்கு விவரம் போதவில்லை என்பது வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். விரைவில் கற்றுக்கொள்ள வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ---இதன் காரணமாக, தனியார் பொறியியல் கல்லூரி ‘ஓனர்கள்’ குழுவில் விரிசல் ஏற்படும். ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்க முயற்சி செய்தால் அது மிகவும் நன்றாக இருக்கும்.---

    hmmm! :)

    ReplyDelete
  4. க. கா. அ. சங்கம்Fri Jun 19, 07:42:00 AM GMT+5:30

    "கான்" "கிராஸ்" கட்சியினருக்கு தர்மசங்கடத்தைக் கழகக் கண்சனிகள் கொடுக்கக்கூடாது என்பதற்காக கழகத்திற்கு கொள்ளையில் பங்கு கொடுக்கும் கல்லூரிகளில் ரெயிடு நடத்தப்படுகிறது. இது கொஞ்சநாளில் காற்றில் விட்ட குசு போல் காணாமல் போய்விடும்.

    ReplyDelete