Friday, June 05, 2009

தமிழ் வணிகம் பேட்டி



தமிழ் வணிகம் தளத்தில் என்னுடைய பேட்டி.

8 comments:

  1. அருமையான பேட்டி. தென் சென்னை சரத்பாபு மட்டும் அல்ல நீங்களும் என்னை போன்ற இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி.

    ReplyDelete
  2. Nice interview Badri.

    What kind of turnover does NHM have? I ask this bcoz you have investors in Rajesh Jain et al... and might go for an IPO in next few years, as you yourself have told about huge investment needs.

    Note - Infosys, used to publish their Annual results, while being a Pvt. Ltd. co. (3 years before IPO?). I remember Narayanamurthy telling about his, and when someone asked why this was done, he told something about conscious clearing... etc... and to avoid the questions of his obvious political nexus with Congress guys, like S M Krishna.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் பத்ரி.

    ReplyDelete
  4. பத்ரி,

    நல்லதொரு நேர்காணல். இன்னும் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். உங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுக்களை பூசி மெழுகாமல் நேர்மையாகவே எதிர்கொண்டிருக்கிறீர்கள். 'அறிவுச்சொத்தை அனுமதியில்லாமல் கையாள்வது' என்பதை பெரும்பான்மையான பதிப்பகங்கள் தன்னிச்சை நடைமுறையாகவே கொண்டுள்ளன. ஆனால் உங்கள் பதிப்பகம் அதிலிருந்து விலகி ஒரு முன்னோடியாக செயல்பட வேண்டும். படங்களை காசு கொடுத்து கையாள்வதில் விழிப்பாக இருக்கும் நீங்கள் எழுத்துக்களை கையாள்வதிலும் அதேயளவு விழிப்பாக இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    நான் வாசித்தவரை, புனைவிலக்கியம் தவிர கட்டுரை நூல்கள், வாழ்க்கை வரலாறு போன்றவற்றின் எழுத்து நடை -அது யாரால் எழுதப்பட்டாலும் - ஒரே மாதிரியான வார்ப்பில் இருக்கிறது. இதை ஒரு பெரும் குறையாக நான் பார்க்கிறேன். இதைப் பற்றி என்னுடைய இந்தப் பதிவில் இடையீடாக சொல்லியிருக்கிறேன். இது உங்கள் கவனத்திற்கு.

    http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_1363.html

    ReplyDelete
  5. ராஜு: நாங்கள் இன்னமும் சின்ன நிறுவனம்தான். ஐ.பி.ஓ செல்வதற்கு இன்னும் 20 மடங்காவது பெரிதாகவேண்டும்.

    சுரேஷ் கண்ணன்: உங்களது பதிவைப் பார்த்தேன். டெம்ப்ளேட் அல்லது வார்ப்பு பல புத்தகங்களுக்கு ஒரே மாதிரியாக உள்ளது என்பது ஏற்கக்கூடிய குற்றச்சாட்டே. மாறுதல்கள் தேவை. நாங்கள் பல அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவருகிறோம். அவற்றின் எழுத்து நடை வித்தியாசமாக உள்ளது என்றே நம்புகிறேன்.

    இனி வரும் பல புத்தகங்களில் எழுத்திலும் கருத்திலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். மிக முக்கியமான பல புத்தகங்கள் அடுத்து வர உள்ளன.

    மேலும் பல புது எழுத்தாளர்கள் எங்களுக்குப் புத்தகம் எழுதும்போது தானாகவே இந்தக் குறை நீங்கிவிடும்.

    உலக சினிமா திரையிடலுக்கு வரும்போது முற்றிலும் புதியதாகவும் டெம்ப்ளேட் எதிலும் அடங்காததுமாக குறைந்தபட்சம் 50 புனைகதையல்லாத புத்தகங்களையாவது உங்களுக்குக் காண்பிக்கிறேன்:-)

    ReplyDelete
  6. தமிழ் புத்தக உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இந்தியா அறிவுசார் சமூகமாக மாறவேண்டும் என்ற உங்களுக்கு வாழ்த்துகள் பத்ரி.

    ReplyDelete
  7. பத்ரி, தமிழ் வணிகம் இணைய இதழின் எடிட்டர் யார்..? தகவல் கிடைக்குமா..??

    ReplyDelete
  8. சார்..
    எனது பெயர் ஜோதிக்குமார். நான் குமுதம்-ஆஹா எப்.எம் மில் ஸ்கிரிப்ட் ரைட்டராக வேலை பார்த்து வருகிறேன். கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். நான் கொஞ்சம் எழுதவும் செய்வேன். எனக்கென ஒரு ப்ளாக்கை தற்போது ஆரம்பித்துள்ளேன். அதில் பதிவு செய்ய NHM Writer உபயோகிக்கிறேன். (Bamini Unicode)ஆனால் அதில் மெய்யெழுத்துக்களை பதிவு செய்கையில் எழுத்துக்கு மேல் வைக்கும் புள்ளியானது சற்று தள்ளி விழுகிறது. எனது கம்ப்யுட்டரில் இது தெரியவில்லை. மற்ற கம்ப்யுட்டரில் பார்க்கும்போது தெரிகிறது. இதை சரி செய்ய எனக்கு உதவுவீர்களா? எனது முகவரி...
    jothikumar@aahaafm.com
    எனது Blog முகவரி...
    http://frames4you.blogspot.com/

    Phone 9994701278

    நன்றி...

    ReplyDelete