Thursday, September 24, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட முதல் புத்தகம் சொக்கன் எழுதிய அம்பானி. முதல் பதிப்பு வெளியான மாதம் ஏப்ரல் 2004. அதன்பிறகு அந்தப் புத்தகத்தை மூன்று முறை மாற்றம் செய்துள்ளோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அதில் கைவைக்கவில்லை. ஆங்கிலத்திலும் கொண்டுவந்துள்ளோம். தமிழில் ஒலிப்புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம். தமிழில் இதுவரை 30,000 பிரதிகளுக்குமேல் விற்றிருக்கும். இப்போதும் தொடர்ந்து விற்றுவருகிறது.

சொக்கன் சித்ராவுடன் இந்தப் புத்தகம் பற்றியும், அம்பானி குப்பைமேட்டிலிருந்து கோடீசுவரர் ஆனது பற்றியும், அதற்காக அவர் மேற்கொண்ட வழியைப் பற்றியும், இப்போது அம்பானி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சச்சரவுகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.

கிழக்கு பாட்காஸ்ட்

சொக்கன் எழுதியுள்ள புத்தகங்கள்

இந்த பாட்காஸ்டுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள்:

           

3 comments:

  1. நான் முதன்முதலில் கிழக்கு வெளியீட்டில் படித்த புத்தகம் இதுதான்.

    (கிழக்கு வெளியிட்ட எல்லா புக்கையும் படிச்சுட்டியான்னெல்லாம் கேக்கப்படாது) :)

    ReplyDelete
  2. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புத்தகம் படித்தேன். நன்றாக இருந்தது!

    ReplyDelete
  3. தரவிறக்கம் செய்யாமல் வலையிலிருந்தே ஒரே அமர்வில் கேட்டு முடித்தேன். நல்ல ஒலித் தரத்துடன் சொக்கனின் பேச்சின் அழுத்தமும் சேர்ந்து கச்சிதமாக வந்துள்ளது.இன்னும் நேரமாகுமோ என மிச்ச நேரத்தைப் பார்க்கும் போது சரியாக ஒலிப் புத்தக இணைப்பு செய்திருக்கிறீர்கள். நல்ல வியாபார யுத்தியுடன் சரியான கலவையில் பிணைந்த அறிவார்ந்த கலந்துரையாடல்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete