Wednesday, September 02, 2009

கல்லூரி மாணவர்களுடன்...

கடந்த இரு மாதங்களாக வேலைப் பளு காரணமாக பள்ளிகள், கல்லூரிகளில் சென்று பேசுவது தடைப்பட்டது. வரும் சில நாள்களில் கீழ்க்கண்ட இடங்களில் பேசுகிறேன்:

1. வெள்ளிக்கிழமை (4-9-2009) அன்று திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கலை அறிவியல் கல்லூரியின் இளைஞர் நலத் துறை மாணவர்களிடம் ‘சிகரம் நோக்கி...’ என்ற தலைப்பில் பேசுகிறேன்.

2. திங்கள்கிழமை (7-9-2009) மதுரை இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயன்சஸ் கல்லூரியில் ஒரு தினம் முழுதும் அங்குள்ள மாணவர்களுடன் கழிக்கிறேன். தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாணவர்கள் எப்படிப் பயன்பெறலாம்; தகவல் தொழில்நுட்பம் கொண்டு ஒரு சமூகம் எப்படி முன்னேறலாம் ஆகியவை பற்றி காலை, மாலை இரு வேளைகளிலும் பேசுகிறேன். அத்துடன் செயல்வழிப் பயிற்சியும் இருக்கும்.

3. செவ்வாய்க் கிழமை (8-9-2009) சென்னை ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில், New Media Journalism பற்றிப் பேசுகிறேன். சென்ற ஆண்டும் இதே தலைப்பில் பேசியிருந்தேன். இப்போது வேறு புது மாணவர்களிடம் பேசவேண்டும். இந்தக் கல்லூரி மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள். கூர்ந்து கவனிப்பது, தீர்க்கமான கேள்விகள் கேட்பது என்று ஆர்வத்தோடு பங்கு பெறுவார்கள்.

(இதில் சிலவற்றை ஒலிப்பதிவும், சிலவற்றை ஒளிப்பதிவும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்.)

3 comments:

  1. காலேஜிக்கு பேண்ட் போட்டு போவிங்களா?
    இல்ல சார்ட்ஸ் போட்டு போவிங்களா?

    சும்மா ஒரு ஜென்ரல் நாலேஜுக்காக கேட்டேன்!

    ReplyDelete
  2. சென்னை ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்
    வால் பையன் இங்கு தான் படிச்சிருப்பார் போல் இருக்கு!! :-))

    ReplyDelete
  3. Looking forward for those recordings ...

    ReplyDelete