ராகுல் காந்தி தமிழகம் வந்தார். நதிநீர் இணைப்பு அபாயகரமானது என்றார்.
தமிழகத்தைப் பொருத்தமட்டில் ‘நதிநீர் இணைப்பு’ என்பது ஒரு புனிதப்பசு. சேது சமுத்திரத் திட்டம் மாதிரி. யாருமே அதற்கு எதிராகக் கருத்து சொல்லக்கூடாது. சொன்னால் அடி உதைதான்.
தா.பாண்டியன், வைகோ ஆகியோர் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி (முட்டாள்) வக்கீல்கள் பதிலுக்கு அவர்களது உருவ பொம்மைகளை எரித்தனர். முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திரா காந்தியே இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்’ என்றார்.
இந்திரா காந்தி ஆதரவு அளித்தாரா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படியே அவர் ஆதரவு அளித்திருந்தால்தான் என்ன? அதனால் பேரன் ராகுல் காந்தி அதனை எதிர்க்கக்கூடாது என்பது பொருளா? பெரியாரும் அண்ணாவும் சொன்னால் மறு அப்பீலே கிடையாது என்ற மகத்தான பகுத்தறிவுத் திட்டத்தின் நீட்சிதான் இது.
தாய், தந்தை, பாட்டி, கொள்ளுத்தாத்தா சொன்னார்; எனவே நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லாமல், ஒவ்வொருவரும் தனக்குரிய கருத்துகளை தானே முன்வைப்பதுதானே பகுத்தறிவின் லட்சணம்?
பாஜக நதிநீர் இணைப்பை ஆதரிக்கிறது என்பதால் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலருமே இதுபோன்ற மெகா திட்டங்கள்மீது கவலை கொண்டுள்ளனர். நீர் ஆதாரங்களை வளர்க்க பல நல்ல, லோக்கல் திட்டங்கள் உள்ளன. அவற்றில் கொஞ்சமும் கவனம் செலுத்தாமல், பல லட்சம் கோடி செலவாகும், சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மெகா திட்டங்களில் இறங்குவது மதியீனம்.
தமிழகம் ஒன்றில்தான் நதிநீர் இணைப்பு என்ற திட்டத்துக்கு மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. ரஜினி காந்த் என்றோ ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று தூக்கிக் கொடுத்தார். பாஜக, மதிமுக, திமுக என்று அனைவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், இங்கு பெரும்பான்மையினர் கேட்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இதுபோன்ற திட்டத்தில் இறங்குவது சரியாகத் தோன்றவில்லை.
தைரியமாக மாற்றுக் கருத்தைச் சொன்ன ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்.
முந்தைய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
12 hours ago
are you going to join any political party?
ReplyDelete//ரஜினி காந்த் என்றோ ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று தூக்கிக் கொடுத்தார்//
ReplyDeleteகொடுப்பதாகச் சொன்னார் :-)
You are trying to exaggerate the reaction to Rahul's statement. Did anyone try to beat him up? Or is it possible? The opposit was true. The lumpen crowd of Congress could not take the reactions of seasoned leaders to novice Rahul. When MuKa says "even Indira Gandhi was in favor of linking rivers" the rationale behind it is "Indira Gandhi was more matured than Rahul". You seem to be impressed by Rahul for whatever reason. Did he suggest any alternative to solve the water problem of Tamil Nadu?
ReplyDeleteபெரும்பான்மையினர் கருத்துதான் சார் வாக்கு வங்கியில் முதலீடாகிறது :)
ReplyDeleteபெரியாரையும் அண்ணாவையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கும் வேறென்ன காரணம் இருக்க முடியும்?
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பத்ரி வாழ்க !
ReplyDeleteவருங்கால முதல்வரே வளர்க !
பாசமிகு அண்ணன் ராகுல் புகழ் ஓங்குக !
good analysis citizen ! local solutions will do. as saving rain waters etc.. we should not go against nature. right or not shout give a second thougt. we are not goats to ..as you say
ReplyDeletechina has not discussed like this they build mega dam in yellow river and they extened to dry parts in south china also, but we always discuss and discuss and waste our time and enaergy.
ReplyDeleteதிட்டம் ஆரம்பிச்சால் கோடி ரூபாய் தருவேன் என்றுதானே சொன்னார்?
ReplyDeleteBefore connecting all the rivers, let the government safeguard the current lakes, rivers etc. Look at Coovam rivers, Porur lake, encroached by politicians and their slaves.
ReplyDeleteநதி நீர் இணைப்பு ஒரு பெயிலியர் கான்செப்ட் என்பது மட்டுமல்ல...அமல் படுத்தப்பட்ட தேசங்களில் விபரீத விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் எதிர்கால அரசியலுக்கான ஒரு 'ரா மெட்டிரியலை' ராகுல் புஸ்ஸாக்குகிறாரே என்கிற எரிச்சல் இருக்காதா?!
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteபெரியாரையும் அண்ணாவையும் இழுக்காமல் உங்கள் கருத்தை வைக்கலாம்.பெரியாரும் அண்ணாவும் புனிதப்பசுக்கள் அல்ல. ஆனால் அவர்கள் நதிநீர் இணைப்பு பற்றிச் சொல்லியுள்ள கருத்துக்களை வைத்து விமர்சித்தால் நல்லது.
சேது சமுத்திரம் என்பது நல்ல திட்டம்தான். அதன் அரசியலைத் தவிர்த்து சாதக பாதகங்களை பார்க்கவும்.
கருணாநிதியோ அல்லது மற்ற அரசியல் கட்சிகள் செய்யும் விசயங்களுக்கு சும்மா திராவிடம், பெரியார் என்று இவர்களை ஏன் பலிகடாவாக்குகிறீர்கள்?
விவசாயி மான்யம் தவறு ஆனால் நான் அச்சடிக்கப்பயன்படும் புத்தகத்திற்கு மான்யம் வந்தால் நல்லது என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். நானும் அதையே சம்பந்தம் இல்லாமல் எல்லா இடத்திலும் இழுத்தால் ஏதாவது பயன் உண்டா?
***
எதுவும் புனிதப்பசு அல்ல. அப்படி நினைத்து விமர்சனத்தை ஏற்க மறுக்கும் மக்களைப் பற்றி நான் பேச வரவில்லை.
நதிநீர் இணைப்பு ஏன் தமிழகத்தில் ஆதரவு பெறுகிறது என்று யோசியுங்கள்.
தமிழகத்தின் நீராதரங்கள் மங்கிவரும் நிலையில், அண்டை மாநிலங்கள் செய்யும் அடாவடியினால்தான் "நதி நீர் இணைப்பு " என்னும் கருத்து இங்கே வலுப்படுகிறது. கர்நாடகத்தையோ, கேரளத்தையோ , ஆந்திராவையோ இந்த விசயத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போனதால் ,"நதி நீர் இணைப்பு " புது ஆயுதமாக , நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு மற்றும் உண்மையான நீராதரப் பிரச்சனைய திசை திருப்ப ஒரு ஆயுதம். மக்களுக்கு ஒரு நம்பிக்கை.
ஏரல் ஏரிக்கு நேர்ந்த கதிபோல ஒரு பக்கவிளைவு/அழிவு
http://en.wikipedia.org/wiki/Aral_Sea நாளை நதி நீர் இணைப்பால் இணையைப்போகும் நதிகளுக்கு ஏற்படலாம்.
ராகுல் என்ன மாற்றுத்திட்டம் வைத்துள்ளார் என்று தெரியவில்லை.இவர் தினந்தோறும் நடக்கும் விதர்பா விவசாயிகள் தற்கொலை பற்றி இதுவரை பேசியதில்லை. அல்லது தமிழக மீனவர் பிரச்சனை பற்றிப் பேசியது இல்லை. இதில் என்னத்தப் பேசி என்ன ஆகப்போகிறது
**
தமிழகத்தில் முதலில் இருக்கும் ஆறுகளை மண்லாரிகளால் கொள்ளையடிக்காமல் சீர் செய்து , மரம் ,கண்மாய்,ஏரி என்று மழை நீரைச் சேர்க்க சுயவழி தேடினாலே நன்று.
கல்வெட்டு: //விவசாயி மான்யம் தவறு ஆனால் நான் அச்சடிக்கப்பயன்படும் புத்தகத்திற்கு மான்யம் வந்தால் நல்லது என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள்.//
ReplyDeleteஎனக்கு இப்போதெல்லாம் மறதி வந்துவிடுகிறது. எங்கு, எப்போது இதனைச் சொன்னேன் என்று ஞாபகப்படுத்துங்கள். URL ஏதாவது உண்டா?
மற்றபடி, அண்ணா, பெரியாரை நான் எழுதும் பதிவுகளில் இழுக்க, அரசிடம் அல்லது திமுகவிடம், அல்லது உங்களிடம் உரிமத்தொகை செலுத்தவேண்டுமா என்ன? இங்கு அந்தப் பெரியவர்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? அவர்களைப் புனிதப்பசு என்று கருதும் இரண்டாம் நிலைத் தலைவர்களை அல்லது அதற்கும் கீழே இருக்கும் தொண்டர்களைப் பற்றித்தானே பேச்சு?
எனவே அண்ணா, பெரியார் இருவரும் நதிநீர் பற்றி என்ன சொன்னார்கள் என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை.
ராகுல் காந்தி வாழ்க என்று கோஷம் போடும் திட்டம் ஏதும் எனக்கில்லை. ஃப்ரெஷ் கருத்துகள் அரசியல் அரங்கில் பேசப்படவேண்டும்; கிராஸ்ரூட்ஸ் அளவில் மக்களைத் திரட்டி கட்சிக்குள் கொண்டுவரவேண்டும். இந்த இரண்டையும் இப்போது ராகுல் காந்தி செய்வதாகத் தோன்றுகிறது. மற்றவர்கள் செய்தாலும் அவர்களுக்கு என் ஆதரவே.
ReplyDelete1.கழக தோழர்களுக்கு எங்கே எப்பொழுது பெரியாரும், அண்ணாவும் நாங்கள் சொன்னது தான் உங்களுக்கு வேதவாக்கு
ReplyDeleteஎன்று சொன்னார்கள்.
2.எல்லாவற்றையும் பகுத்தறிவு சிந்தனையுடன் சொல்லுகின்ற செய்கின்ற மனபாங்கு தான் எல்லோருக்கும் வேண்டும் சொன்னார்களே தவிர
தலைவன் சொன்னால் எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் செய் என்கிற கொள்கை அவர்களிடம் இல்லை.
3.நீங்கள் முழுமையாக பெரியாரையும் அண்ணாவையும் பற்றி படித்துவிட்டு அவர்களைப் பற்றி பேசுங்கள் அவர்களது கொள்கைகளைப் பற்றி எழுதுங்கள்.
4.உங்களுடைய கோபம் எங்களுக்கு புரிகிறது பத்ரி, பிராமணர்களுக்கெதிராக பெரியாரும் திராவிட கொள்கைகளும் இருப்பதானால் தான் நீங்கள் அவ்வாரு சொல்கிறீர்கள் என்று.
5.நீங்கள் அந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வாருங்கள். இது தங்களுக்கு அழகல்ல.
6.ஏன்? எதற்கு? எப்படி? என்று கேளுங்கள் என்று போதித்தவர் பெரியாரும் அண்ணாவும். அதனால் தான் கடவுள் எங்கே இருக்கிறார்
என்று கேட்டார் பெரியார் புரிந்து கொள்ளுங்கள்.
7.ராகுல் காந்தி நதி நீர் பங்கீட்டு திட்டத்துக்கு மாற்று திட்டம் என்ன வைத்திருக்கிறார் என்று சொல்லவில்லை, அது தங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
8.மாற்று திட்டம் சரியானதாக இருந்தால் வரவேற்கும் மனப்பான்மையுடன் தான் இருக்கிறோம்.
//மற்றபடி, அண்ணா, பெரியாரை நான் எழுதும் பதிவுகளில் இழுக்க, அரசிடம் அல்லது திமுகவிடம், அல்லது உங்களிடம் உரிமத்தொகை செலுத்தவேண்டுமா என்ன?//
ReplyDeleteஇல்லை.
யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.ஆனால், இரண்டாம் கட்ட தலைவர்கள் அல்லது அடுத்த தலைமுறை செய்யும் எல்லா செயல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அண்ணா, பெரியாரை இழுப்பது உங்களின் பரிபூரண உரிமை.
உங்களின் உரிமையைக் கேள்வி கேட்கவில்லை. நதி நீர் பற்றிய பதிவில் ஏன் பெரியாரும் அண்ணாவும் வருகிறார்கள், அவர்கள் ஏதேனும் கருத்துச் சொல்லியுள்ளார்களா என்றே கேட்டேன்.
இதுவே நீஙகள் யாரோ ஒரு ராகவனையோ அல்லது ஜெயந்திரனையோ அல்லது ராம்சிங்கையோ குறிப்பிட்டு இருந்தாலும் அவர்கள் யார்? நதி நீர் இணைப்பு பற்றி என்ன சொல்லியுள்ளார்கள்? என்றும் கேட்டு இருப்பேன்.
*****
//எனவே அண்ணா, பெரியார் இருவரும் நதிநீர் பற்றி என்ன சொன்னார்கள் என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை.//
சரிங்க . கேட்கவில்லை.
******
//எனக்கு இப்போதெல்லாம் மறதி வந்துவிடுகிறது. எங்கு, எப்போது இதனைச் சொன்னேன் என்று ஞாபகப்படுத்துங்கள். URL ஏதாவது உண்டா?//
பத்ரி, சுட்டிகள் கொடுத்துத்தான் நிரூபிக்க வேண்டும் என்பது இல்லை. உங்கள் பார்வையில் விவசாயிகளின் மான்யம் சரியா? தவறா?
இலவசங்கள், மான்யங்களுக்கு என்றுமே எதிரானவன் என்று சொல்லும் நீங்கள் அரசாங்க மான்யத்தில் வரும் சமையல் எரிவாயுவையோ அல்லது பெட்ரோல் டீசல் , அச்சடிக்கப்பயன்படும் காகிதம் .... இன்னும் பலவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது.
பழைய கதை
ttp://thoughtsintamil.blogspot.com/2006/07/blog-post_21.html#comments
ஏன் உங்களுக்கு தரமான காகிதங்களும்,தரமான CDROM களும் போதாதா? எதற்கு வரி விலக்கும் சலுகையும்?
ஏன் என்றால் வரிவிலக்கு என்பது அரசு தனது இலாபத்தை விட்டுக் கொடுக்கிறது.இழப்பு அரசுக்கே இருக்க வேண்டும் தனக்கு கூடாது எனப்தே உங்களின் நோக்கம். உங்களைக் குற்றம் சொல்லவில்லை. அதுதான் வியாபாரம்.
ஏன் நீங்களே அரசின் வரியைச் செலுத்திவிட்டு உங்களின் இலாபத்தைக் அதற்குச்சமமாக குறைத்து அதே குறைந்த விலையில் புத்தகம் கொடுத்தால்..அதே பொதுமக்கள் அதிகமாகப் புத்தகங்கள் வாங்கமுடியும் சரியா?
பத்ரி, உங்களைப் போலவேதான் விவசாயியும் அரசிடம் இருந்து வேறு வகையில் சலுகை/உதவி கேட்கிறார்கள்.
இலவசங்கள்,மானியங்கள் அத்துடன் நீங்கள் சொல்லும் தரமான விதைகள்,குளிர்சாதனக் கிடங்குகள் எல்லாம் தேவை விவசாயத்திற்கு.
கல்வெட்டு: பொதுவாக இணைய விவாதங்களில் எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘நான் பெரியவனா, நீ பெரியவனா' வகையில்தான் அடிதடி நடக்கும். இங்கு அப்படி நடந்துவிடக் கூடாதே என்று அஞ்சுகிறேன். உங்களது கருத்தை நான் எங்காவது தவறாகப் புரிந்துகொண்டால் அதை உடனடியாகச் சுட்டிக்காட்டுங்கள்.
ReplyDelete1. நான் எங்காவது ‘எனக்கு மட்டும் மான்யம் தா, பிறருக்குத் தராதே' என்று சொல்லியிருக்கிறேனா? அப்படி நான் சொன்னதாக நீங்கள் சொன்னீர்கள். அதற்கு தரவுகள் தேவை. உங்களது சுட்டியில் நான் அப்படிச் சொன்னதாக இல்லை. நான் அப்படிச் சொன்னதாக நீங்கள் எழுதியதாக மட்டுமே வருகிறது. நான் எங்கே அப்படிச் சொல்லியுள்ளேன்?
2. இலவசங்கள், மான்யங்கள் ஆகியவற்றை நான் பெரும்பாலும் எதிர்க்கிறேன். அதனால் நான் மட்டும் பெட்ரோல் கடைக்குப் போய் எனக்கு மட்டும் ரூ. 100-க்குப் பெட்ரோல் ஒரு லிட்டர் கொடப்பா என்று எப்படிச் சொல்லமுடியும்? நாளையே கேஸ் விலையை ஏற்றிவிடுங்கள். நான் சண்டைக்கு வரமாட்டேன். அதனை ஆதரிப்பேன்.
எனக்குக் கிடைக்கும் மின்சாரம், கேஸ், நீர், பெட்ரோல் எல்லாம் மான்யம் வழியாக வருகிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த மான்யத்தை நான் விரும்புவதில்லை. இந்த மான்யங்கள் பெரும்பாலும் தேவைப்படுவோருக்கு மட்டுமே போகவேண்டும் என்று விரும்புகிறேன்.
போதுமா?
3. அடுத்து என் நிறுவனம். நான் வேறு, என் நிறுவனம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். என் கருத்தாக நான் இங்கே சொல்வதற்கெல்லாம், என் நிறுவனம் அதைச் செய்கிறதா, இதைச் செய்கிறதா என்று கேட்பது சரியல்ல. என் நிறுவனத்தில் நானும் ஒரு பங்குதாரர். பிற பங்குதாரர்கள் இருக்கிறார்கள். என் நிறுவனத்துக்கு என சில கோட்பாடுகள் இருக்கின்றன. எனக்கென்று சில கோட்பாடுகள் இருக்கின்றன.
புத்தகங்களுக்கு என்று எந்த மான்யமும் கிடையாது. செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் நியூஸ்பிரிண்ட் இறக்குமதி செய்துகொள்ள சில விலக்குகள் உண்டு. கிழக்கு பதிப்பகம் அப்படி எந்த வசதியையும் பெற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஓப்பன் மார்க்கெட்டில் தனியார் நிறுவனங்கள் விற்கும் பேப்பரை வாங்குகிறோம். அதற்கு விற்பனை வரி தருகிறோம். அச்சுக்கூலி கொடுத்து, சேவை வரி கட்டி, புத்தகங்களைத் தயாரிக்கிறோம். எங்கள் புத்தகங்களுக்கு எந்த மானியத்தை யார் தூக்கிக்கொடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
புத்தகங்களுக்கு விற்பனை வரி கிடையாது. அப்படி வரி இருந்தால் அவற்றை மக்களிடம் மேலதிகமாக வசூலித்து அதை அப்படியே அரசிடம் கட்டவேண்டும். சிடிக்களுக்கு உண்டு. அதனை அப்படித்தான் செய்கிறோம்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவையா?
4. மீண்டும் அண்ணா, பெரியார்... மேலே உள்ள பதிவு இந்த இருவரைப் பற்றியதும் அல்ல. மீண்டும் ஒருமுறை இந்தப் பதிவைப் படித்தால் அது உங்களுக்குப் புரியக்கூடும். இந்தப் பதிவு ராகுல் காந்தி, கருணாநிதி ஆகியோர் பற்றியது.
வாழ்க அண்ணா நாமம்!
//பொதுவாக இணைய விவாதங்களில் எதிராளியின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘நான் பெரியவனா, நீ பெரியவனா' வகையில்தான் அடிதடி நடக்கும். //
ReplyDeleteபத்ரி, நிச்சயமாக நான் விவாதமாகவோ அல்லது அடிதடியாகவோ இதைக் கொண்டு செல்ல விரும்பவில்லை. சம்பந்தமில்லாத பெயர்களை கட்டுரையில் தெளிப்பதால் நான் சொல்ல வேண்டி வந்தது.
***
அன்று நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. சொல்வது உங்கள் உரிமை. பின்னூட்டங்கள் உங்களின் பதிலை எதிர்பார்த்து போடுவது இல்லை.
// நான் எங்கே அப்படிச் சொல்லியுள்ளேன்?//
அன்று சொன்னது : கொள்கையளவில் நான் இலவச 'எதற்குமே' எதிரானவன்.
http://thoughtsintamil.blogspot.com/2006/07/blog-post_21.html?showComment=1153467360000#c115346741113500362
இன்று சொல்வது: இலவசங்கள், மான்யங்கள் ஆகியவற்றை நான் பெரும்பாலும் எதிர்க்கிறேன்.
***
//அதனால் நான் மட்டும் பெட்ரோல் கடைக்குப் போய் எனக்கு மட்டும் ரூ. 100-க்குப் பெட்ரோல் ஒரு லிட்டர் கொடப்பா என்று எப்படிச் சொல்லமுடியும்? நாளையே கேஸ் விலையை ஏற்றிவிடுங்கள். நான் சண்டைக்கு வரமாட்டேன். அதனை ஆதரிப்பேன்.//
பத்ரி, அது தேவையே இல்லை.
1. கேஸ் அரசாங்க மான்யத்தில்(அரசாங்க நிறுவனக்களில்) வாங்காமல் தனியாரிடம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்த பட்சம் உங்கள் கொள்கைக்காக இதைச் செய்யலாம்.
2. திருச்சியில் யாரோ ஒருவர் மன்மோகனுக்கு இந்தியக் கடனின் தொகையில் அவர் பங்காக செக் அனுப்பினார். நீங்களும் உங்களுக்குப் பிடிக்காத (கொள்கை) மான்யத்தை கணக்கிட்டு அரசாங்கத்திற்கு (ஆயில் நிறுவனங்களுக்கு) அனுப்பி விடலாம்.
இதைச் செய்யலாமே? இதற்கும் உங்கள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லையே?
ஏன் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை குற்றவுணர்வோடு செய்து கொண்டு இருக்கவேண்டும்?
குற்றவுணர்வு இல்லாமல் கொண்ட கொள்கையில் வாழ இந்த வழிமுறைகள் போதுமா?
***
//என் நிறுவனத்துக்கு என சில கோட்பாடுகள் இருக்கின்றன. எனக்கென்று சில கோட்பாடுகள் இருக்கின்றன.//
அதே தான் விவசாயிக்கும் - விவசாயத்திற்கும் உள்ள தொடர்பும். அது மட்டும் ஏன் புரியவில்லை?
மான்யம் வேண்டாம் என்பது தனிப்பட்ட விவசாயின் கொள்கையாக இருந்தாலும் , செய்யும் தொழிலும் (விவசாயம்) அதன் பங்குதாரர்களின் கொல்கையும் (குடும்ப உறுப்பினர்கள் விவசாயக் குடும்பத்தில் எல்லாருமே பங்குதாரகள்)பிரித்துப் பார்க்கப்பட வேண்டும்.
****
//எங்கள் புத்தகங்களுக்கு எந்த மானியத்தை யார் தூக்கிக்கொடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//
எந்த சலுகையும் வேண்டாம் (கொள்கை)எனும் பட்சத்தில்...
புத்தகங்களுக்கு விற்பனை வரி இல்லை எனபது ஒரு சலுகை. மறைமுக மான்யம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஏன் நீங்களே ஒரு குறிப்பிட்ட தொகையை மன்மோகனுக்கு வருடம் ஒருமுறை அனுப்பிவிட வேண்டியதுதானே?
வேறு ஏதேனும் ஆலோசனைகள் தேவையா?
***
//மீண்டும் அண்ணா, பெரியார்... மேலே உள்ள பதிவு இந்த இருவரைப் பற்றியதும் அல்ல. மீண்டும் ஒருமுறை இந்தப் பதிவைப் படித்தால் அது உங்களுக்குப் புரியக்கூடும்.//
ஏன் அவர்கள் வந்தார்கள் எனபதுதான் என் கேள்வி. அது உங்கள் உரிமை என்று சொல்லிவிட்டீர்கள் . மேற்கொண்டு பேச்சே இல்லை.
***
ஒழிக விவசாயிகள் !
Mr.Kalvettu is making a big issue out of nothing. Mr.Badri's statement is purely about the 'known ignorance' of today's politicians and nothing to do with the reputation of Anna or periyar. I wonder about the peculian view point of Mr.Kalvettu.
ReplyDeleteசெல்வா,
ReplyDelete//பெரியாரும் அண்ணாவும் சொன்னால் மறு அப்பீலே கிடையாது என்ற மகத்தான பகுத்தறிவுத் திட்டத்தின் நீட்சிதான் இது.// என்ற பத்ரியின் கருத்துக்கே எனது விமர்சனம்.
**
பெரியார் தன் சொத்தையே துறந்தார். அதே "மறு அப்பீலே கிடையாது" கொள்கையை கருணாநிதியோ வீரமணியோ பின்பற்றவில்லை. பின் எதற்கு ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட்?
ஏன் சம்பந்தம் இல்லாமல் பெரியார்,அண்ணா,பகுத்தறிவு ,சேது சமுத்திரம் என்று சொல்ல வேண்டும் என்று கேட்டேன்.
அது அவர் உரிமை என்று சொல்லி விட்டார். எனக்கும் விளக்கம் கிடைத்துவிட்டது.
**
உங்களுக்கு இது வேண்டாத கேள்வியாகப்படுகிறது என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால் மன்னிக்க.
//வாழ்க அண்ணா நாமம்!//
ReplyDeleteகல்வெட்டு,
பத்ரி சகிப்பின் எல்லையை தொட்டுவிட்ட மாதிரி தெரிகிறது. உங்கள் வாதத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு குழுவுக்கும் அவரவருக்கு பிரியமான பிரச்சினைகள் புனிதப்பசுக்கள் தான். சேது சமுத்திர திட்டம் திராவிடக்கட்சிகளுக்கு புனிதப்பசு என்றால் ராமன் திராவிட அரசியல் எதிரிகளுக்கு புனிதம். இல்லையென்றால் திராவிடக் கட்சிகளின் புனிதப் பசுவான சேது சமுத்திரத் திட்டத்தை கேவலம் "ராமர் பாலம்" என்கிற புனிதப் புளுகைக் காட்டி திராவிட அரசியல் எதிரிகளால் நிறுத்த முடியுமா? (சுற்றுச்சூழல் காரணங்களுக்காக எதிர்ப்பது வேறு விஷயம்)
//தமிழகம் ஒன்றில்தான் நதிநீர் இணைப்பு என்ற திட்டத்துக்கு மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது. ரஜினி//
ReplyDeleteஏனென்றால் இங்கு தான் தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது - கிடைப்பது குறைவாக உள்ளது
--
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். மின்சாரத்தை ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு விற்பது தவறு என்று யாராவது கூறினால் அப்பொழுது எந்த மாநிலத்தில் எதிர்ப்பு வரும் என்று நினைக்கிறீர்கள்
//
ReplyDeleteபுத்தகங்களுக்கு விற்பனை வரி இல்லை எனபது ஒரு சலுகை. மறைமுக மான்யம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
//
கல்வெட்டு சார்
புத்தகங்களுக்கு விற்பனை வரி இருந்தால் - அவர் வாங்கும் புத்தகங்களுக்கான காசைத்தான் அளிக்க வேண்டும் - விற்கும் புத்தகங்களுக்கு அல்ல என்று நினைக்கிறேன்
--
புத்தகத்திற்கு விற்பனை வரி இல்லாததால் பலன் அடைவது நுகர்வோர்தான்
--
உதாரணமாக உங்கள் தொலைபேசி கட்டணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு சேவை வரி உள்ளது. இதனால் நஷ்டம் நுகர்வோருக்குத்தான்.லாபம் அரசிற்கு.
சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டால் லாபம் நுகர்வோருக்கும், நஷ்டம் அரசிற்கும் தான். தொலைபேசி நிறுவனங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை (பணத்தை வசூலித்து செலுத்தும் வேலை குறைச்சல் என்பதை தவிர)
--
அப்படித்தானே சார்
புரூனோ,
ReplyDelete//புத்தகத்திற்கு விற்பனை வரி இல்லாததால் பலன் அடைவது நுகர்வோர்தான்//
சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் இத்யாதிகளுக்கு வழஙக்ப்படும் மான்யத்தால் பயன் யாருக்கு ? பெட்ரோல் நிறுவனங்களுக்கா? இல்லை நுகர்வோருக்கா? பயனாளிகளுக்கா?
**
வரிவிலக்கு என்பது நுகர்வோருக்கான நேரடிப் பயன் என்றாலும் அது அச்சுத்தொழிலுக்கு அரசு தரும் ஆதரவு.
நுகர்வோருக்கான -- நேரடிப் பயன்
தொழிலுக்கு -- ஊக்குவிப்பு
தொழில் நடத்துபவர்களுக்கு -- மறைமுகச் சலுகை. (வரிச்சுமை நுகர்வோர்வட்டத்தைக் குறைக்கும் என்றால் வரிச்சலுகை அதிகப்படுத்தும் அப்படியானால் அதிக இலாபம் யாருக்குப் போகும் அரசுக்கா?)
**
விவசாயிகளின் மான்யம் குறித்தான பிரச்சனையில் சலுகைகள் என்ற கான்சப்டிற்கே எதிரானவன் என்று பத்ரி சொன்னதாலேயே இந்த விளக்கங்கள்.
விவயாசத்திற்கான ஊக்குவிப்பில் மான்யம் என்பது அவசியமானது.
இது தவறு என்று சொல்பவர்கள் மான்யம் ,சலுகைகளாக தான் பெறுபவனவற்றை நேரடி மறைமுகமாக யோசிப்பது இல்லை என்ற ஆதங்கமே. கோடி கோடியாக மென்பொருள் நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும்போது விவசாயத்திற்கு வழங்கினால மட்டும் பொங்கிவரும் கோபம் ஏற்க இயலாதது.
**