காங்கிரஸ் கட்சியின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்திதான். அடுத்த பத்தாண்டுகளுக்குள் அவரால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும். அதைச் செய்யும் காரியத்தில் அவர் இறங்கியுள்ளது நன்கு தெரிகிறது.
அரசியலில் பத்தாண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். ஆனால் அடுத்து வரும் பத்தாண்டுகள் தமிழகத்தில் மிகவும் சுவாரசியமான காலகட்டம்.
திமுக கட்சி கருணாநிதிக்குப் பிறகு எவ்வளவு வலுவாக இருக்கும் என்ற கேள்விக்குறி உள்ளது. உள்ளார்ந்த குடியாட்சி முறையில் கட்டப்படாத, தனி நபர் விசுவாசம் சார்ந்த கட்சிகள் அனைத்துமே தள்ளாடும். கருணாநிதியின் வாரிசுகள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டால், கட்சி உடைவதை யாரும் தடுக்கமுடியாது.
அதிமுக, மேலும் மோசமான நிலையில் உள்ளது. ஜெயலலிதாவுக்கு என தெளிவான கொள்கைகள், செயல்திட்டம் என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது. என் கணிப்பில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளில் அதிமுகதான் முதலில் உடைந்து சிதறும் என்பேன்.
பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் தம் கட்சிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நான் எதிர்பார்த்த அளவுக்கு இறங்கவில்லை. தேமுதிகவுக்குக் கிடைக்கும் வாக்குகள் எல்லாமே திமுக/அதிமுக எதிர்ப்பு வாக்குகள். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் இந்த வாக்குகள் காங்கிரஸுக்குச் செல்லும்.
ஈழப் பிரச்னை சில ஆண்டுகளில் மறக்கப்பட்டு, காங்கிரஸ் மன்னிக்கப்பட்டுவிடும். கருணாநிதி பொறுப்பில் திமுக இருக்கும்வரை காங்கிரஸ் அடக்கியே வாசிக்கும் என்று தோன்றுகிறது.
கம்யூனிஸ்டுகள் இப்போது இருப்பதற்குமேல் வலுப்பெற வாய்ப்புகள் இல்லை. பாஜக தமிழகத்தில் வளர்வதற்கும் அடுத்த பத்தாண்டுகளில் வாய்ப்பு இல்லை.
சில ஹேஷ்யங்கள்:
2011 சட்டமன்றத் தேர்தல்: திமுக/காங்கிரஸ் கூட்டணி வெல்லும். ஸ்டாலின் முதல்வர் (அதற்கு முன்னரே அவர் முதல்வர் ஆகியிருக்கலாம்). ஆனால் மிகக் குறைந்த இடங்களே முன்னணியில் இருப்பர். எதிர்க்கட்சிகள் உடைந்து சிதறி இருக்கும். கூட்டணி ஆட்சி எப்படி நீடிக்கும் என்று சொல்வது கடினம்.
2014 நாடாளுமன்றத் தேர்தல்: திமுக/காங்கிரஸ் கூட்டணி ஏற்படாமல் போகலாம். இந்தப் பிரச்னை காரணமாக, பெரும்பான்மை வலு இல்லாத ஆட்சி கவிழலாம்.
2014 (அல்லது) 2016 சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடும்?
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
11 hours ago
முக்கிய கட்சிகள் பிளவுபடும் பட்சத்தில் காங்கிரசிலும் பல கோஷ்டிகள் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.பாரம்பரியத்தை விட முடியாது.
ReplyDelete2014 ~ 2016 காங்கிரசுக்கா? அப்படி காங்கிரஸ் கனவு கண்டால் அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கும்.
பத்ரி
ReplyDeleteகாங்கிரஸ் தமிழ் நாட்டில் தேறும் என்ற நம்பிக்கை என்னை போலவே பலருக்கும் இல்லை.
தமிழ்நாட்டில் நல்ல அருமையான காங்கிரஸ் பேச்சாளர்கள் இல்லை. இளைஞர்களை அல்லது பொதுவான மக்களை கவர்ந்து இழுக்ககூடிய பேச்சாளர்கள் ஒவ்வோரு கட்சிக்கும் முக்கியம் அல்லவா?
நல்ல தலைமை இல்லை! காங்கிரஸில் இன்னாள் / முன்னாள் சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைவர்கள்!!!
மேலும் எல்லாவற்றையும் டெல்லி கட்டுபடுத்துவது எப்படி நியாயம்? கடைக் கோடி கிராமத்து தேர்தல், அல்லது நகராட்சி தேர்தல் கூட டெல்லியில் இருந்து வர வேண்டியுள்ளது?!
எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ் மண் - பெரியார், அண்ணா, கலைஞர் என்று மிக அழமாக திராவிட சிந்தனைகள் நிறைந்த மண், இவற்றில் காங்கிரஸ் போட்டி போடுவது என்பது இயலாத காரியம்!
காங்கிரஸ் தலைவர்களுக்கு மொழி ஆளுமை, மொழி மீது பற்று இல்லை, தமிழ் உணர்வு மருந்து அளவும் கிடையாது! எப்படி இவர்களால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியும்?
கலைஞருக்கு பிறகு திமுக நிச்சயம் உடையாது. காரணம் மதுரை அழகிரி மத்திய அமைச்சர் ஆகிவிட்டார். இனிமேல் தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற தொகுதியில் செயித்துக் கொண்டே இருப்பார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராக இருப்பார்.
2016 - தேர்தல் களம் நிச்சயம் நிறைய மாறுதல்கள் இருக்கலாம்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
INC fought for 100+ Years to get rid of British Administration. It just took 12 years for an Italian to bring the INC and the whole country under her rule. In an era of outsourced leadership and dynasty politics, TN getting into the Persian's pocket, is very much likely to happen. Voices that could challenge the math are either destroyed or bought for money. An Intelligible congress party man wont ruin his career by thinking against the family. On the other the Side, There is no promising next gen politician promoted/supported by AIADMK leadership. Stalin is not welcomed in all sectors of DMK. Less chances are for the present support, to last for 1 full year for him after M.K's d**th.
ReplyDeleteNo wonder if congress sits on the throne again.. Their Controversial Policies and Continuing sponsor of genocide are not going to change a going-to-happen scenario of TN.
2009 மே மாதத்திலேயே, காங்கிரசுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. லாலுவையும், முலாயம் சிங்கையும் ஊதித் தள்ளின மாதிரி, இங்கேயும் வெளியே இருந்து ஆதரவு என்று இதயத்தில் மட்டும் இடம் கொடுப்பவர் விறைத்துக் கொண்டு திரும்பினபோது, காங்கிரஸ், லாலுவை ஒன்றுமில்லாமல் பண்ணினமாதிரியே, இங்கேயும் கொட்டத்தை அடக்கியிருக்க முடியும். இப்போதும் கூட முடியும்!
ReplyDeleteஅதென்னவோ, நேரு காலத்தில் இருந்தே காங்கிரசுக்குத் தெளிவான பார்வை, தொலைநோக்குப் பார்வை என்று எதுவுமே இல்லாமல், பார்வைக் கோளாறு முற்றிப்போன கட்சியாகவே, இன்னமும், ரஜினி, விஜய் என்று யார் யாரையோ தடவிக் கொண்டிருக்கிறது.
உங்களுடைய ஹேஷ்யங்கள் கூட காங்கிரஸ் கட்சி போடுகிற மாதிரித் தப்புக் கணக்காகவே இருப்பதாகத் தான் தோன்றுகிறது!
வெறுமனே அதிமுக சிதறும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சின்ன திருத்தம் சசிகலா & கோ வின் தலையீடு தொடரும் பட்சத்தில் அது உடனடியாக நிகழ வாய்ப்பு உள்ளது. அம்மா தனது தொடர் ஓய்வை தொடர்ந்தால் அதிமுக வின் எதிர் காலம் கேள்விக்குறி தான்.
ReplyDeleteமாவட்டம் தோறும் கழக நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்தால் நிச்சயம் ஒரு பெரிய அரசியல் மாற்றம் ஏற்பாடும். அது நடக்கும்மா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி?
சீரியஸான பதிவில் கடைசி லைன் மட்டும் காமெடி :)
ReplyDeleteYou first say:
ReplyDelete//காங்கிரஸ் கட்சியின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்திதான். அடுத்த பத்தாண்டுகளுக்குள் அவரால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும்.//
In the next paragraph you say:
//உள்ளார்ந்த குடியாட்சி முறையில் கட்டப்படாத, தனி நபர் விசுவாசம் சார்ந்த கட்சிகள் அனைத்துமே தள்ளாடும். //
What contradictory statements!
You either have a short memory of history or don't understand the political dynamics of Tamil country. Just after MGR died half-Parsi-half-Kashmiri Rajiv Gandhi invaded Tamil Nadu (if my memory serves correct 19 times, i.e. more than Mahmud of Gazni's previous record of invasions) with a dream of conquering. He tried both hook and crook--hugged old women, kissed babies, and laid foundation stones every nook and corner, whatever happened to those stones only God knows, and extended the President's rule for one year. To help his master the bueracrat-turned-governer P.C. Alexander tried all tricks. He went to the ridiculous extent of ordering not to fly party flags and paint with party symbols on autoriskshaws because, you know which party flags and party symbols they would have sported. At last when the elections were conducted Congress was soundly defeated in a four-cornered election. In the first post-MGR elections, with a vertical split in AIADMK, its rival DMK which out of power only for 13 years could easily win while Congress which was defeated 22 years before bit the dust. One must also remember that Rajiv sent his army to Eelam at that time. As if it was not enough an insult, he was in Dravidian bashing spree during his campaign trips in Tamil Nadu. One should read a series of rebuttals by George Fernandes at that time how immatured and ignorant Rajiv was. Now history is in the process of repeating itself. Just as MGR disappeared from the political scence, Jaya might disappear (if she indeed plans to retire). Just as Rajiv sent IPKF, India under colluded with Sri Lanka in the genocide of Tamils in Eelam. If this immatured and ignorant half-Italian-quarter-Parsi-quarter-Kashmiri Rahul tries to use just his fair skin as a political capital in Tamil Nadu, well, he will fail much more miserably than his dad did. But of course, it is good to gauge the real strength of the party
ReplyDeleteதமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பதை தங்கபாலுவே நம்ப மாட்டார்.
ReplyDeleteதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மு.கருணாநிதி அதை ஒத்துக்கொள்ள மாட்டார்.
மு. கருணாநிதி ஒத்துக்கொண்டாலும் ப.சிதம்பரம் அதை அனுமதிக்க மாட்டார்.
ப.சிதம்பரம் அனுமதித்தாலும் இளங்கோவன் கோஷ்டி வாசன் அமைச்சராக அனுமதிக்க மாட்டார்.
வாசன் முதலைமைச்சரானால் அதை தடுத்து நிறுத்த வசந்தகுமார் டில்லிக்கு போவார்.
வசந்தகுமார் டில்லிக்கு போனால் கிருஷ்ணசாமி மீண்டும் கமிட்டி தலைவராவார்.
கிருஷ்ணசாமி கமிட்டி தலைவரானால் யசோதா அதிமுக வுக்கு வாய்ப்பளிக்கலாம் என சொல்லுவார்.
அதிமுக கூட்டணி வாய்பளித்தால் சுதர்சனம் போட்டியிடமாட்டார்.
சுதர்சனம் போட்டியிட்டாலும் பீட்டர் அல்போன்ஸ் திமுக விற்காக பேசுவார்.
பீட்டர் அல்போன்ஸ் எவ்வளவு பேசினாலும் அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்பது ஞானசேகரனுக்கு தெரியும் என்பதால்...
மீண்டும் ஸ்டாலினே முதலமைச்சர் ஆவார். என்பதால் மீண்டும் தங்கபாலு திமுகவை ஆதரிப்பார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலும் காங்கிரஸூக்கு அமைச்சரவையில் பங்குகிடைக்காது என்பது தங்கபாலுவுக்கு தெரியும்.
தங்கபாலு ஒரு காமெடி பீஸ் என்பதை தமிழகம் நம்பி பல நாள் ஆகிறது.
- சென்னைத்தமிழன்
"கனவு காணுங்கள்"
ReplyDeleteமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழி!
Do u think tamilnadu people accept evks elangovan/thanga balu / vasan as chief minister.
ReplyDeletehttp://thoughtsintamil.blogspot.com/2004/05/blog-post_11.html
ReplyDeleteஅனான்: சரியாகப் பிடித்தீர்கள்! நான் ராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடு விஷயத்தில் சொன்ன ஜோசியம் பெரும்பாலும் தவறாகப் போனது. சிரஞ்சீவி என்ற ஒரு ஆள் கட்சி ஆரம்பிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரெட்டிக்கு நல்ல மக்கள் ஆதரவு இருக்கும் என்று நான் கணிக்கவில்லை.
ReplyDeleteஅதனால் என்ன? புதிதாகக் கணிப்புகளை தைரியமாக வெளியாகிக்கிக்கொண்டே இருப்பேன்:-) நாலில் ஒன்று பலிக்காதா என்ன?