இப்படி திகிலூட்டும் தலைப்பு வைத்தால் நீங்கள் இந்த கிழக்கு பாட்காஸ்டை முழுவதுமாக இறக்கிக் கேட்கக்கூடும்.
1998-ல் இந்தியா நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனையில் ஏதோ குற்றம் உள்ளது என்று அந்தச் சோதனையை DRDO சார்பாக வழிநடத்திய விஞ்ஞானி சந்தானம் சொல்லியிருந்தார். இந்தியா வெடித்த ஒரு குண்டு, எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை என்பது அவரது வாதம்.
உடனே அதனை மறுத்து அப்துல் கலாம், எம்.கே.நாராயணன், பிரஜேஷ் மிஸ்ரா, அனில் காகோட்கர், ஆர்.சிதம்பரம் ஆகியோர் மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டனர். சிதம்பரம் ஒரு முழு பவர்பாயிண்ட் பிரசெண்டேஷனையே காட்டினார். சந்தானம் யார்? பிறர் யாவர்? இந்தியாவிடம் அணு குண்டு உள்ளதா, இல்லையா? அப்துல் கலாம் பொய் சொன்னாரா, இல்லையா?
சகலத்தையும் அறிந்திட நீங்கள் கேட்கவேண்டியது: கிழக்கு பாட்காஸ்ட்
.
ஆலயம்
1 day ago
Thanks Badri. Downloaded and completely listened to the podcast. It was very informative.
ReplyDeleteThanks
Venkat
மிகவும் உபயோகமான தகவல்கள் தாங்கிய ஒலிப்பதிவுக்கு நன்றி பத்ரி. இணைய செய்தி ஊடகங்களில் இது நாள் வரை வெளிவந்த இது சம்பந்தமான செய்திகளின் சாரம் பிடிபடவே இயலாத நிலையில், இந்த ஒலிப்பதிவில் மூலம் கிடைத்த ஒட்டுமொத்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ReplyDeleteபாட்காஸ்ட்களை iTunes Store-லும் கிடைக்கச் செய்தால் வசதியாக இருக்கும்.
ReplyDelete