Saturday, July 29, 2006

ஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா

சிறப்பு விருந்தினர் ரத்தன் டாடா. இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதைப்போன்ற கவுரவ டாக்டர் பட்டங்களால் என்ன பயன் என்று புரியவில்லை. இதனால் யாருக்கு என்ன லாபம்? ஏற்கெனவே ரத்தன் டாடாவுக்கு சில கவுரவ டாக்டர் பட்டங்கள் கிடைத்துள்ளன. இதற்குமேல் ஐஐடி மெட்ராஸ் வழங்கி என்ன ஆகப்போகிறது?

ரத்தன் டாடா தன் பேச்சின்போது பட்டம்பெறும் இளைஞர்கள் தத்தம் துறைகளில் தலைவர்களாக வர முயற்சி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். செய்வது எதுவாக இருந்தாலும் ஐந்து விஷயங்களை மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.

1. Integrity - கண்ணியம் / வழுவாமை
2. Social responsibility - சமூகக் கடமை
3. Technical excellence and not just money - பணத்துக்காக மட்டும் என்றில்லாமல் நுட்பத்துறையில் மேன்மைக்காகவும் செய்யவேண்டும்.
4. Team work - கூட்டுமுயற்சி
5. Be just and fair to all the stakeholders - அனைத்துப் பங்காளிகளுக்கும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளுதல்

பட்டம் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, இன்ன பிறருக்கும் தேவையான அறிவுரைகள்.

நமது சிந்தனை பொதுவாகவே 'சிறியதாகவே' உள்ளது. அதனை மாற்றி பெரிய அளவில் சிந்திக்க முயற்சி செய்யவேண்டும் என்றார்.

மற்றபடி புதிய சிந்தனைகள் என்று எதுவும் இல்லை அவரது பேச்சில்.

தி ஹிந்து செய்தி
படங்கள்

2 comments:

  1. //நமது சிந்தனை பொதுவாகவே 'சிறியதாகவே' உள்ளது. அதனை மாற்றி பெரிய அளவில் சிந்திக்க முயற்சி செய்யவேண்டும் என்றார்.//

    இது முற்றிலும் உண்மை.

    பெரிய சிந்தனை இருந்தால் தான் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும்.

    ReplyDelete
  2. //ஏற்கெனவே ரத்தன் டாடாவுக்கு சில கவுரவ டாக்டர் பட்டங்கள் கிடைத்துள்ளன. இதற்குமேல் ஐஐடி மெட்ராஸ் வழங்கி என்ன ஆகப்போகிறது?//
    இவை இரத்தன் டாடாவிற்கு பெருமை இல்லை. ஐ.ஐ.டி யின் டாக்டர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, தங்கள் rollcallஇல் பிரபலங்கள் இருப்பது பெருமை.

    ReplyDelete