Wednesday, August 02, 2006

நீதிபதி கற்பகவிநாயகம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

இதனை எழுதும்போது ஏதோ பொறி தட்டியது.

என் முந்தைய பதிவுகளைத் தேடிப் பார்த்தபோது, டிசம்பர் 4, 2005 அன்று எழுதியதிலிருந்து:

"சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி N.தினகர் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்."

6 comments:

  1. என்னதான் சொல்ல வர்றீங்க? :-)

    அன்புடன்,

    மா சிவகுமார்

    ReplyDelete
  2. தமிழ்நாட்டிலேர்ந்து போறவங்களுக்கு எப்படி கரெக்டா ஜார்க்கண்டே வந்துசேருதுன்னு - ஒரு விசேஷ ஒற்றுமை இல்லையா?

    ReplyDelete
  3. //ஒரு விசேஷ ஒற்றுமை இல்லையா?//

    ஒற்றுமையா? தண்டனையா :-))

    ReplyDelete
  4. திரு.கற்பக விநாயகம், நான் அறிந்து ஒரு நல்ல மனிதன் மற்றும் நீதிபதி என்றே நினைக்கிறேன். அவர் இல்லாதது, தமிழ் நாடிற்கு இழப்பு தான்.

    ReplyDelete
  5. தண்டனை உயர்வு???

    ReplyDelete
  6. கல்கத்தா, சென்னை மும்பை உயர்நீதிமன்றங்கள் சார்ட்டட் நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை பிரிட்டிஷ் அரசியினால் நேரடியாக இடப்பட்ட சார்ட்டர் என்ற ஆணையின் படி தோற்றுவிக்கப்பட்டன. எனவே இந்த மூன்று நீதிமன்றங்களில் பணியாற்றுவது ஒருவகையில் பெருமையாக கருதுகின்றனர். ஆனால் இந்திய நீதிதுறையில் தமிழகத்தின் ஆளுமை குறைவு. எனவே நம்மவர்களுக்கு எப்போதும் கிடைப்பது ஹிமாச்சல பிரதேசமும், ஜார்க்கண்டும்தான். இங்கு மொத்தமே ஐந்தோ அல்லது ஆறோ நீதிபதிகள்தான்.

    மற்றபடி இது தண்டனையல்ல. பதவி உயர்வே! நடைமுறைப்படி வெளி மாநிலத்தினை சேர்ந்தவர்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முடியும். இதற்கு கட்டுப்பட மறுத்தே நீதிபதி இஸ்மாயில் ராஜினாமா செய்தார்.

    தற்பொழுது உள்ள நடைமுறையின்படி தலைமை நீதிபதிகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கற்பக விநாயகம் இனி சுப்ரீம் கோர்ட் செல்ல வாய்ப்பு உள்ளது. அவரது கனவும் அதுவே!

    ReplyDelete