Tuesday, June 03, 2008

வோடஃபோன் கிராஸ்வேர்ட் புத்தக விருதுகள் 2007

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் வெளியாகும் ஆங்கிலப் புத்தகங்களுக்காக கிராஸ்வேர்ட் புத்தகக் கடைச் சங்கிலி விருதுகள் தருகிறது. வோடஃபோன் செல்பேசிச் சேவை நிறுவனம் (முன்னர் ஹட்ச்) இதனை ஸ்பான்சர் செய்கிறது.

மொத்தம் மூன்று விருதுகள்:
  1. ஆங்கிலப் புதினம்
  2. ஆங்கில அ-புதினம்
  3. இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றப்பட்ட புதினம்.

ஒவ்வொரு விருதுக்கும் பல புத்தகங்கள் (லாங்லிஸ்ட்) வந்திருந்தன. இதிலிருந்து குறுக்கப்பட்ட பட்டியல் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளனர். முழுப் பட்டியல் இங்கே.

இதில் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள புத்தகங்களாக ஆறு புத்தகங்கள் குறுகிய பட்டியலில் வந்துள்ளன. அதில் இரண்டு நியூ ஹொரைசன் மீடியாவின் இண்டியன் ரைட்டிங் பதிப்பிலிருந்து வெளியானவை:
  1. Star Crossed by Ashokamitran (கரைந்த நிழல்கள்)
  2. The Ghosts of Arasur by Era Murukan (அரசூர் வம்சம்)

1 comment:

  1. My wishes to NHM to become one of leading Indian publishing House
    -Vibin

    ReplyDelete