Friday, May 06, 2005

தேவன் நினைவுப் பதக்கம்

நேற்று (வியாழன், 5 மே 2005) மாலை 6.00 மணிக்கு ஆழ்வார்பேட்டை எம்சிடிஎம் பள்ளி வளாகத்தில், சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் தேவன் அறக்கட்டளை சார்பில், மறைந்த எழுத்தாளர் தேவன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தேவன் நினைவாக நகைச்சுவையைக் கையாள்பவர்களுக்கு நினைவுப் பதக்கம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேவன் நினைவுப் பதக்கத்தைப் பெற்றவர்கள் ஜே.எஸ்.ராகவன், 'கிரேசி' மோகன்.

சாருகேசிஜே.எஸ்.ராகவன் நகைச்சுவை எழுத்தாளர். தற்பொழுது மாம்பலம் டைம்ஸ், அண்ணா நகர் டைம்ஸ் எனப்படும் உள்ளூர் வார இதழ்களில் 'தமாஷா வரிகள்' என்ற பத்தியை எழுது வருகிறார். இவரது கடந்த பத்திகளைத் தொகுத்து கிழக்கு பதிப்பகம் வரி வரியாகச் சிரி என்றதொரு புத்தகத்தை மார்ச் 2005-ல் வெளியிட்டுள்ளது.

'கிரேசி' மோகன் நகைச்சுவை நாடகங்களில் தொடங்கி, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுபவர். இவர் சிரிக்கச் சிரிக்க வைக்கும் புத்தகங்களையும் எழுதுபவர். நடு நடுவே சந்தக் கவிதைகளையும் எழுதுபவர். (பார்க்க: இந்த வார 'கற்றதும் பெற்றதும்', ஆனந்த விகடன்). கூடிய விரைவில் (இந்த மாதத்தில்) 'கிரேசி' மோகன் எழுதிய இரண்டு புத்தகங்கள் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவர இருக்கின்றன: K.P.T.சிரிப்புராஜ சோழன், Mr.கிச்சா ஆகியவை.

விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று சாருகேசி பேசினார். தேவன் அறக்கட்டளை பற்றியும், இந்த அறக்கட்டளை மூலம் தாங்கள் செய்துவரும் செயல்களைப் பற்றியும் பேசினார்.

விழாவுக்கு அசோகமித்திரன் தலைமை தாங்கினார். தேவன் படைப்புகள் பற்றிப் பேசினார். தேவன் தனது கடைசிச் சில வருடங்களில் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்றார். தேவன் - ஜெமினி வாசன் உறவு பற்றிப் பூடகமாகக் குறிப்பிட்டார். எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் எழுதுங்களேன்? தேவன் மறைந்த அன்று அவரது இறுதி அஞ்சலிக்கு ஒரு பத்து பேராவது இருக்க வேண்டுமென்று அப்பொழுது ஜெமினி ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டிருந்த அசோகமித்திரன் ஒரு வேனில் ஆள்களைத் திரட்டிக்கொண்டு போனதாகச் சொன்னார்.

அசோகமித்திரன், ஜே.எஸ்.ராகவன்இந்தச் செய்தி ஆச்சரியமாக இருந்தது. தேவன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர்? கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனை விட்டுப் பிரிந்ததும் தேவன் ஆனந்த விகடனின் ஆசிரியரானார். விகடனில் எழுதித் தள்ளியிருக்கிறார். தன் பெயரில், பிற பல பெயர்களில் என்று.

நான் முதன்முதலில் தேவன் எழுதிய கதைகளில் படித்தது Mr.வேதாந்தம். அதற்கு முன்னரே சிறுவனாக இருந்தபோது துப்பறியும் சாம்புவை கார்ட்டூனில் படித்த ஞாபகம். ஆனால் அந்தப் பாத்திரத்தைப் படைத்தது தேவன் என்று தெரியாது. பின் துப்பறியும் சாம்புவை முழுதாகக் கதைகளில் படித்திருக்கிறேன். அதன்பின் தேவனின் சில கதைகளைத் தேடிப்பிடித்துப் படித்தேன். இன்னமும் பலவற்றைப் படிக்கவில்லை.

ஆனால் மேடையில் இருந்தவர்கள் - அசோகமித்திரன், ஜே.எஸ்.ராகவன், 'கிரேசி' மோகன் மூவரும் தேவனை முழுமையாகப் படித்திருந்தவர்கள். ராகவன், மோகன் இருவருமே தேவன் எழுத்துகளிலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டி அரங்கில் இருந்தவர்களைச் சிரிக்க வைத்தனர். அசோகமித்திரன் பேசும்போது நகைச்சுவை எழுதுபவர்கள் கடைசியில் எங்காவது அசடு வழிய வேண்டியிருக்கும், அல்லது பிறரைக் கேலிசெய்து அதன்மூலம் சிரிக்க வைக்க வேண்டியிருக்கும். ஆனால் தேவனின் நகைச்சுவை வன்முறையே இல்லாத நகைச்சுவை என்றார். உண்மைதான்.

ஜே.எஸ்.ராகவன் தான் பிறந்தது தேவன் மறைந்தற்கு அடுத்த நாள் என்றார். (இன்று பிறந்த நாள் காணும் ஜே.எஸ்.ராகவனுக்கு வாழ்த்துகள்!)

அசோகமித்திரன், கிரேசி மோகன்'கிரேசி' மோகன், தான் இன்று வாழ்க்கையில் உருப்படியாக இருப்பதற்குக் காரணமே தேவன்தான். சிறுவயதில் தேவன் புத்தகமும் கையுமாகவே இருந்தவர். தேவன் எழுத்தின் inspirationதான் தனது நகைச்சுவை கலந்த எழுத்து என்றார். தான் 'தேவன் மகனாக' இருக்க ஆசைப்படுவதாகச் சொன்னார். மோகன் பேச்சில் அவரது பிராண்ட் பஞ்ச் லைன்கள் நிறைய இருந்தன. (எனக்கு இரண்டு தேவன்களைப் பிடிக்கும் - ஒன்று கல்கியின் வந்தியத்-தேவன், மற்றொன்று விகடனுக்காக வியர்வைகளைச் சிந்தியத்-தேவன் - ஆர்.மாகாதேவன்)

அசோகமித்திரன் தனக்கு தேவன் நினைவுப் பரிசு கிடைத்ததை நினைவுகூர்ந்து, அப்பொழுது தனக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்றதையும் சுட்டிக்காட்டினார். பின் ஜே.எஸ்.ராகவனுக்கும், 'கிரேசி' மோகனுக்கும் பதக்கங்களை அணிவித்தார். ("தங்கமா, அல்லது வேறெந்த உலோகமான்னு தெரியல")

அதன்பின் மற்றுமொரு நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தேறியது. தேவன் எழுதிய "ஐந்து நாடுகளில் அறுபது நாள்" என்னும் புத்தகத்தை அசோகமித்திரன் வெளியிட்டார். அதுவரையில் அரங்கின் முன் நின்று படங்கள் எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கூப்பிட்டு புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளச் சொன்னார்கள். எந்தத் தகுதி இருக்கிறதென்று என்னைக் கூப்பிட்டனர் என்று தெரியவில்லை. முன்னதாகவே சொல்லியிருந்தால் அரை டிரவுசர் அணிந்து சென்றிருப்பேன். அதைத் தொடர்ந்து என்னைப் பேசவும் அழைத்தனர். அதற்கு முன் பா.ராகவன் எனக்கு crash course ஆக தேவன் பற்றி நான்கு வரிகளைச் சொல்லிக்கொடுத்தார். மேலே ஏறி மைக்கைப் பிடித்து சம்பிரதாயமாக தேவன் பற்றி நான் நாலு வார்த்தைகள் சொல்லி அதற்குமேல் என் மானத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் கீழே இறங்கி, மீண்டும் என் கேமராவைக் கையில் எடுத்தேன்.

ஆனால் என் மானத்தைக் கப்பலேறியே தீருவேன் என்று தினமலர் கடும் முயற்சி செய்துள்ளது. நான் புத்தகத்தைப் பெற்றதை போட்டோ எடுத்தவர் என்னிடம் என்னைப் பற்றிய தகவல்களை எழுதித்தருமாறு கேட்டார். நான் பத்திரமாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதித்தந்தேன். (Badri Seshadri/பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்.) இன்றைய தினமலரில் அழகான படம் - பக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீட்டாளர் பத்ம சேஷாத்ரி.

9 comments:

  1. //இன்றைய தினமலரில் அழகான படம் - பக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீட்டாளர் பத்ம சேஷாத்ரி. //


    அடப்பாவிகளா,. எங்க கவனத்த வச்சுண்டு எழுதறா இவாள்ளாம்? சிலவேளைகள்ள ரொம்ப பயமாக்கூட இருக்கு,..

    ஒரு பெயரைச் சரியாக எழுதமுடியாமல் ஒரு பத்திரிக்கை,..ஹூஹ்ம்,.

    ReplyDelete
  2. ஆனாலும், தினமலருக்கு இந்த குசும்பு ஆகாது. நகைச்சுவை நிகழ்ச்சியை எழுதினால், இறுதியில் குசும்பாய், ஏதாவது ஒரு சிரிப்பினை அள்ளி தெளிக்க எடிட்டர் சொன்னாரோ என்னவோ, நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள். தேவனின் Mr. சாம்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை. அவ்வப்போது வரும் விகடன் மலர்களில் பார்த்து ரசித்ததுண்டு

    ReplyDelete
  3. ஆஹா... தேவன் எனக்கும் பிடிக்கும். ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும் போது, துப்பறியும் சாம்பு படித்து விட்டு, பின் அவரது புஸ்தகங்களை லெண்டிங் லைப்ரரியில் தேடிப் படித்திருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, மரத்தடியில் திரி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நல்ல தகவல்கள் கிடைக்கும். இட்லி வடையும் , தேவன், ஜே.எஸ்.ராகவன், எஸ்.வி.வி பற்றி அருமையான சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆவணத்தில் இருந்து சில சுட்டிகள்

    1
    2
    3
    4
    5
    6

    // (Badri Seshadri/பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்.) இன்றைய தினமலரில் அழகான படம் - பக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீட்டாளர் பத்ம சேஷாத்ரி. //

    நல்ல வேளை பத்மா சேஷாத்ரி என்று எழுதாமல் விட்டார்களே! அப்புறம் ஒய்ஜிபி மாமி சண்டைக்கு வந்திருப்பார் :-)

    ReplyDelete
  4. «ñ½¡,

    ±ýÉ? «¨Ã ÊÃ׺÷ «½¢ó¾¢ÕôÀ£÷ ±ýÚ ÜÈ¢ÔûÇ£÷¸û §ÅÈÁ¡¾¢Ã¢Â¡É §¸¡Äò¾¢ø þÕó¾¾É¡ø ÜôÀ¢ð¼¡÷¸§Ç¡!? ±ÉìÌ ÒâÂÅ¢ø¨Ä ±õÁ¡¾¢Ã¢ ¿¢ýÈ£÷¸û ±ýÀ¨¾ ÜÈ×õ.

    À¢ÈÌ, ¾¢ÉÁÄ÷ ÀüȢ ¦ºö¾¢¨Â ¿¢¨Éò¾¡ø «Å÷¸Ç¢ý ¸¡úôÒ½÷ ±ýÚ ¸Õи¢§Èý. §ÁÖõ «Å÷¸û ¯í¸û þ¨½Âò¾Çò¨¾ «¾¢¸õ ÀÊôÀ¡÷¸§Ç¡ ±ýɧš, ²¦ÉýÈ¡ø «Å÷¸Ùì̾¡ý àÂò¾Á¢Æ¢ø ¦ÀÂ÷¨ÅòÐ ±Ø¾¢É¡ø À¢Ê측§¾.....! ¯í¸Ç¢ý ŨÄôÀ¾¢Å¢ø ÅÕõ ¿øÄ ¾Á¢¨ÆôÀÊòÐ ±í¸¨Ç §À¡ýÈ þ¨Ç»÷¸û ¾Á¢ú¿¡ðÊø ¾¢Õó¾¢É¡ø ¬ÀòÐ «Å÷¸û Àò¾¢Ã¢ì¨¸ìÌ ±ýÚ ¸Õ¾¢Å¢ð¼¡÷¸§Ç¡?.

    º¢Ä Å¡Ãí¸ÙìÌ Óý ¾¢ÉÁÄ÷ ¿øÄ ¿øÄ ¾Á¢ú ¦ÀÂ÷¸¨Ç ¸½¢É¢ ºõÀó¾Àð¼ ¸ðΨÃìÌ ÀÂýÀÎòи¢ÈÐ ±ýÈ ¯í¸Ç¢ý ¸ÕòÐìÌ Ü¼ ÀÆ¢ Å¡í¸Ä¡Á¢øÄ...

    ¿ýÈ¢, Žì¸õ
    Ò.Ó.ͧÄ
    Á§Äº¢Â¡.

    ReplyDelete
  5. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிருபரை சரியாக 'கவர்' செய்யவில்லையோ, என்னவோ? :-)

    ReplyDelete
  6. பத்ரி அவர்களே, தேவன் வாசன் சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் நான் கேள்விப்பட்டவரை இங்கு எழுதுகிறேன்.

    விகடனில் வந்த எல்லா எழுத்துக்களுக்கும் வாசன் காப்பிரைட் உரிமை கொண்டாடினார். அதிலும் முக்கியமாக அதில் முழுநேர வேலை பார்த்தவர்களுக்கு காப்பிரைட் இல்லை என்ற பிரமையை உண்டாக்கினார்.

    இதனால்தான் கல்கி 1954 திசம்பரில் இறந்ததும் "கல்கி வளர்த்த தமிழ்" என்றத் தலைப்பில் கல்கி அவர்கள் விகடனில் ஆசிரியராக இருந்த போது எழுதிய படைப்புகள் முக்கியமாக சிறுகதைகள் வந்தன. தேவன் இறந்த பிறகு அதே மாதிரி "துப்பறியும் சாம்பு" சித்திரத் தொடர்கதையாக வந்தது. அதுவும் முழுக்க வரவில்லை. அதைத்தான் நீங்கள் பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் படித்திருக்க வேண்டும்.

    இந்த தர்மசங்கடமான நிலைமையை சாவி அவர்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார். வாசன் அவர்கள் சாவியைக் கேட்காது அவருடைய "வாஷிங்டனில் திருமணம்" கதைக்கு ஒருவரிடம் நாடகமாக்கும் உரிமையைக் கொடுத்து விட்டார். சாவி அவரை உடும்பு பிடியாக பிடித்து, சட்டப்படி கதை அதை எழுதியவருக்குத்தான் சொந்தம் என்பதை அவருக்கு புரிய வைத்தார். அதன் பிறகே நிலைமை சீராகியது. பிறகு கல்கியின் பொன்னியின் செல்வன் முதலிய நாவல்கள் கல்கியில் திரும்பத் திரும்பப் பிரசுரம் செய்யப்பாடன.

    வாசனின் இன்னொரு முகம் அவ்வளவு சந்தோஷம் அளிக்கக் கூடியது அல்ல. நல்ல சம்பளம் எல்லாம் கொடுப்பார், அதே சமயம் தான்தான் முதலாளி என்பதை வெளிப்படையாகக் கார்ரிவிடுவார். ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால் உடனே அவரை வேலையை விட்டு தூக்கி விடுவார். கல்கியை அவ்வாறுதான் தூக்கினார். அவர் கருத்துப்படி யாருமே ஸ்தாபனத்துக்கு இன்றியமையாதவர்கள் அல்ல. தேவனுக்கும் அதே நிலைமை இருந்திருக்கும் போல. இது மட்டும் என் ஊகமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. சிறுவயது முதலே எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்களில் ஒருவர் தேவன். அநாயாசமான நகைச்சுவை. எங்கள் வீட்டின் அருகில் இருந்த நூலகத்தில் நான் எடுத்த பல புத்தகங்கள் தேவனுடையவையே. மீண்டும் மீண்டும் கூட.

    ReplyDelete
  8. இன்றைக்கும் குமுதத்தில் எல்லா உரிமையும் குமுதம் ஆசிரியருக்கே என்று எழுதியிருக்கிறது.

    தேவனின் கடைசிக் காலத்தில் மணியன் விகடனில் சேர்ந்தார். அவராலும் சில பிரச்னைகள் நேர்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் மணியன் அடிக்கடி தேவனைப் பற்றி காழ்ப்புடன் எழுதியிருக்கிறார்.

    தேவனின் படைப்புக்களை சேர்த்து வருகிறேன். முன்பு மங்கள நூலகம் வெளியிட்டவை மற்றும் தற்போது அல்லையன்ஸ் வெளியிடுபவை. ஆனால் மதுரையில் சாலையோரத்தில் வாங்கிய "பைண்ட்" சேர்க்கைகள்தான் ஒரு nostalgic effect கொடுக்கின்றன.

    ReplyDelete
  9. நரேன் ! இதோ தேவன்..தேசிகன் பக்கத்தில்...


    http://www.employees.org/~desikan/cc_devan.htm

    ReplyDelete