இன்று பல செய்தித்தாள்களிலும் CDAC விளம்பரம் செய்து, தனது மொழிவளர்ச்சிக்கான மென்பொருள் தயாரிப்பில் பங்குபெற ஆள் தேடுகிறது. இது ஒரு டெண்டர் அல்ல. [பக்கத்தில் உள்ள படத்தை சுட்டியால் தட்டி, பெரிதான விளம்பரத்தைப் பார்க்கலாம்.]
ஆனால் இதுபோன்ற எந்த விளம்பரமும் தமிழ் குறுந்தட்டு வெளியாவதற்கு முன்னர் வரவில்லை. மேலும் இந்த விளம்பரத்தில் எங்குமே தமிழில் ஒரு குறுந்தட்டு வெளியான விவரம் சொல்லப்படவில்லை. வரும் வாரங்களில் ஹிந்தியில்தான் முதன்முதலில் ஏதோ வெளியிட இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் 22 அதிகாரபூர்வ இந்திய மொழிகளிலும் மென்பொருள் தயாரிப்போர் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம் என்கிறார்கள். இன்னமும் தமிழில் ஏதேனும் செய்ய மென்பொருள் நிறுவனங்களுக்கு வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.
எதுவானாலும், இப்பொழுது பொதுமக்களுடன் பேசவாவது விரும்புகிறார்களே, அதுவே பெரிய விஷயம்தான். நான் இவர்களுக்கு ஒரு கடிதம் எழுதப்போகிறேன். எழுதியவுடன் அந்தக் கடிதத்தின் நகலை என் பதிவில் சேர்க்கிறேன்.
Thursday, May 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
உடனே செய்யுங்கள்.
ReplyDeleteகாலம் தாழ்த்தி சிந்தித்துயுள்ளது நடுவண் அரசு.
இதுவும் செம்மொழிப்போல் தமிழுக்கு அடியாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.
மறக்காமல் பதிவில் வெளியிடுங்கள்.
புமு.சுரேஷ்
மலேசியா.
ஏற்கனவே வெளியிட்ட தமிழ் மென்பொருள் குறுந்தகடுகளை அனுப்பி விட்டார்களா?
ReplyDeleteகுறுவட்டுகள் இலவசமாக வெளியிடப்படுவதாகவும் தேவைப்படுவோருக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கப்படும் எனவும் ஒரு வாரத்தில் அவை வந்து சேரும் என்றும் வெளியீட்டு விழாவின்போது அறிவிக்கப்பட்டிருந்ததே. பதிவு செய்தவர்களில் யாருக்காவது அப்படி வந்து சேர்ந்ததாக தகவல் உண்டா?
இதுவரை தங்கள் பெயரைப் பதிந்துவைத்த என் நண்பர்கள் சிலருக்கு குறுந்தட்டு வந்துசேரவில்லை.
ReplyDeleteநான் ஜோக்காகச் சொல்வதுண்டு... சி-டாக் குறுந்தட்டை நானே சி-டாக் இதுவரை கொடுத்ததைவிட அதிகமான பேர்களுக்கு என் செலவில் நகலெடுத்துக் கொடுத்திருக்கிறேன் என்று.
சும்மா முப்பதாயிரம், மூன்று லட்சம் என்று கதையடிக்கிறார்கள்.
அவசரமாக அரசு செலவில் ஒரு ஆடம்பர விழா/விளம்பரம் வேண்டியிருந்தது. நடத்தி முடித்து விட்டார் நம் அமைச்சர். முதலில் திறவூற்று மென்பொருள் தயாரிப்பாளர்களிடம் அனுமதி கேட்பது பற்றி கவலைப்படவில்லை. இப்போதோ வெளியிட்டதாகச் சொன்னது (அது தான் மேடையில் வெளியிட்டாச்சே.) நிறைவேற்றப் படுகிறதா என்பது பற்றி கவலைப்படவில்லை.
ReplyDeleteஅவர்தான் திறமையான நிர்வாகத் திறனுள்ள அமைச்சர் என்று பத்திரிகைகள் தேர்ந்தெடுக்கிறதாம். அவரது தொலைக்காட்சியில் அது தான் அவரது சாதனையாகக் காட்டப் படுகிறது.
//ஆனால் 22 அதிகாரபூர்வ இந்திய மொழிகளிலும் மென்பொருள் தயாரிப்போர் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம் என்கிறார்கள்.//
ReplyDeleteம்ம்.. குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி வேலை செய்யுது ? ;-) பார்ப்போம், ஆனால், 22 இந்திய மொழிகளில் என்றால் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையில்லை. காஷ்மீரியில், எழுத்துருக்கள் இருக்கின்றனவா ? இல்லையெனில் உருவாக்கப்போவது யார்? தமிழில் இதுவரை செய்த வேலைகளை இதில் சேர்ப்பார்களா, இல்லை காசை விரயம் செய்ய முற்று முழுதுமாக முதலிலிருந்து ஆரம்பிப்பார்களா. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவ்வாறாக விளம்பரமிடுவதே பெரிய முன்னேற்றமாக தெரிகிறது. பார்ப்போம், 6 மாதம் கழித்து சீடாக் எங்கே இருக்கிறது என்று. பதிந்து விட்டு (ஐய்யோ, பதிவது ஒரு கொடுமையான விஷயம் வேறு) இன்னமும், குறுந்தகடுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம், 2015-லாவிது வருகிறதா என்று.