தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 'புரட்சி' என்னும் சொல்லுக்குப் பொருள் முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் என்று ஆளாளுக்கு சகட்டுமேனிக்குப் பெயர்களை வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த முறை எந்த வகையிலும் புதிதானல்ல. புரட்சிகரமானதும் அல்ல. இந்தியாவில் கூட ஐஐடிக்களில் சில முதுநிலைப் பாடங்களில் இந்த முறை புழக்கத்தில் உள்ளது. பல்வேறு உயர்கல்வி நிலையங்களிலும் இது உள்ளது என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவும் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புக்கே இந்தத் திறந்த புத்தகத் தேர்வுகள் நடக்கின்றன. நான் கார்னல் பல்கலைக்கழகத்தில் துணைவராக (Teaching Assistant) வேலை செய்த ஓர் இளநிலை வகுப்பில் கூட இதுபோன்ற தேர்வை எழுத வைத்திருக்கிறோம்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எனக்குத் தெரிந்து கீழ்க்கண்ட முறைகளில் 'எழுதும் தேர்வுகள்' நடத்தப்படுகின்றன:
- எந்தத் துணைக் கருவியும், புத்தகங்களும் இல்லாமல் வகுப்பில் எழுதும் தேர்வுகள், நேரக் கணக்கு இருக்கும் - closed book, in the classroom, time limited.
- எந்தத் துணைக் கருவி, புத்தகங்களும் இல்லாமல் வீடு சென்று எழுதும் தேர்வுகள், நேரக் கணக்கு இருக்கும் - closed book, take home exams, time limited
- எந்தத் துணைக் கருவி, புத்தகங்களும் இல்லாமல் வீடு சென்று எழுதும் தேர்வுகள், நேரக் கணக்கு கிடையாது - closed book, take home exams, unlimited time. பொதுவாக ஒரு வாரம் அல்லது மூன்று நாள்கள் வரை தேர்வை எழுதிவிட்டு விடைத்தாளைக் குறிப்பிட்ட ஒரு தினத்தில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும்.
- திறந்த புத்தகங்கள், குறிப்புகளுடன் வகுப்பில் எழுதும் தேர்வுகள், நேரக் கணக்கு இருக்கும் - open book, in the classroom, time limited.
- திறந்த புத்தகங்கள், குறிப்புகளுடன் வீட்டில் எழுதும் தேர்வு. நேரக் கணக்கு இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் யாருடனும் கலந்து ஆலோசிக்கக் கூடாது. Take home, open book exam, time may be limited or not. Cannot discuss with anybody.
- திறந்த புத்தகங்கள், குறிப்புகளுடன் வீட்டில் எழுதும் தேர்வு. நேரக் கணக்கு இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். பிறருடன் கலந்து ஆலோசிக்கலாம். ஆனால் பதிலை முழுமையாக அவருடன் சேர்ந்து பேசி எழுதக் கூடாது. Take home, open book exam, time may be limited or not. Can discuss with others, but cannot work together with the other person to write the answer.
இதன் அடிப்படையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. (1) எந்த விதிகளை அமைத்தாலும் அதை மாணவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஒழுங்காக, நேர்மையாகக் கடைப்பிடிப்பார்கள் என்னும் நம்பிக்கை. (2) இதுபோன்ற விதிகளை அமைக்கும் ஆசிரியரால் சரியான வகையில், இந்த விதிகளுக்கு ஏற்றதுபோல வினாத்தாளைத் தயாரிக்க முடியும் என்னும் நம்பிக்கை.
தேர்வுகளின் நோக்கமே ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களை மதிப்பிட்டு, இந்தப் பாடத்தில் யார் எத்தனை தகுதி வாய்ந்தவர் என்பதைக் கண்டறிவதே. சில பாடங்களுக்கு திறந்த புத்தகத் தேர்வுதான் சரியான தேர்வாக இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் கணினி மென்பொருள் மொழிகள் மீதான சில தேர்வுகள் திறந்த புத்தகங்களுடனும், சில தேர்வுகள் மூடிய புத்தகங்களுடனும் நடைபெறுவதே சரியான வழி. அதைப்போன்றே அறிவியல், கணிதம், பொறியியல் போன்ற பல பாடங்களுக்குமான தேர்வுகளும்.
-*-
ஆனால் விடைத்தாள்கள் மோசடி நிகழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் மேற்படி முறையைப் பார்த்து பலரும் அதிசயிக்கக் கூடும். அதனால்தான் தி ஹிந்து இந்தச் செய்தியைக் கட்டம் கட்டி முதல் பக்கத்தில் போட்டிருக்கிறது. அப்படிப் பெரிதாக அதிசயிக்க இதில் ஒன்றும் இல்லை. நிகழ்வில் இருக்கும் ஒரு விஷயம்தான் இது.
ஐ.ஐ.எம்.மில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து முறைகளிலும் நான் தேர்வுகள் எழுதியிருக்கிறேன்.
ReplyDeleteபத்ரி
ReplyDeleteஜிப்மரில் கூட take home exams உண்டு. அமெரிக்க பல்கலை கழகத்தில் புத்தகங்கள் இல்லாமல் எழுது தேர்வும், pop quiz மற்ற தேர்வுகளை விட எளிதாக இருக்கும். ஏனெனில் மற்றவற்றில் எதிர்பார்ப்பு மிக அதிகம். Take home தேர்வுகள் இருந்தால் பணம் கொடுத்து அடித்து உதைத்து தேர்வு எழுத சொல்லி தேர்ச்சி பெற்றுவிடும் நிலை வருமோ என்னவோ (munnabai MBBS)
IISc-யிலும் open book தேர்வுகள் எழுதியுள்ளேன். ஆனால் இந்த கருத்து நாம் குறிப்பிட்ட புகழ் பெற்ற இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு விரிவது நன்று.
ReplyDelete""இதுபோன்ற விதிகளை அமைக்கும் ஆசிரியரால் சரியான வகையில், இந்த விதிகளுக்கு ஏற்றதுபோல வினாத்தாளைத் தயாரிக்க முடியும் என்னும் நம்பிக்கை."
ReplyDeleteஇது மிகவும் முக்கியம். பதில் அளிப்பதை விட, கேள்வி கேட்பது எவ்வளவு கடினம் என்று அப்போது புரியும்.
BITS Pilani தேர்வுகள் பலவும் Open Book Examதான்.
-சிமுலேஷன்