கடந்த சில நாள்களாக சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் சிலரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளில் இந்த மாணவர்கள் கல்லூரி ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து விடைத்தாள்களை மாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவர்கள் செய்தது தவறுதான். ஆனால் அவர்கள் கைது செய்து ஜெயிலுக்குள் தள்ளுமாறு என்ன தவறு செய்துவிட்டார்கள் என்று புரியவில்லை. அவர்களைக் கல்விக்கூடங்களை விட்டு நீக்கலாம். இனி தமிழக அரசின் கல்விக்கூடங்கள் எதிலும் படிக்க அனுமதிக்கப்போவதில்லை எனலாம். அரசு, தன் தொடர்பான எந்த வேலைக்கும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை எனலாம்.
ஆனால் கைது செய்து ஏன் ஜெயிலில் அடைக்கவேண்டும்? எந்தச் சட்டங்களை அவர்கள் மீறினார்கள்? அவர்களால் நேரடியாக சமுதாயத்தில் யாருக்காவது தீங்கு வரப்போகிறதா?
கல்லூரி ஊழியர்கள் மீதாவது அலுவலக விதிமுறைகளை மீறினார்கள் என்று வேலை நீக்கமும், ஊழல், ஏமாற்று, லஞ்சம் போன்றவை தொடர்பாக கிரிமினல் வழக்கும் தொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் மாணவர்களைச் சிறையில் அடைப்பது முட்டாள்தனமாகத்தான் தோன்றுகிறது.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
14 hours ago
சிறைத் தண்டனை ஓவர்தான். பிக்பாக்கெட் மாதிரி இதைக் கருதியிருப்பார்கள். கல்லூரியிலிருந்து நீக்கலாம் - அதுவும் தற்காலிகமாக - அவர்கள் எதிர்காலத்தை உத்தேசித்து. அபராதம் போடலாம். சீர்திருத்தப் பள்ளிக்கு இவர்கள் ரொம்ப வயதானவர்கள். சிறை மிக அதிகம்தான். அதுவும் பல மலை முழுங்கிக் குற்றவாளிகள் அமர்க்களமாக வெளியே சுற்றுவதைப் படிக்க / காண நேரும்போது.
ReplyDeleteசமுதாயம் ஒருவரைச் சிறையில் அடைக்கும் போது, மூன்று விஷயங்களைச் செய்கிறது:
ReplyDelete1. இவரால், இவர் சிறையில் இருக்கும் கால இடைவெளிக்கு, சமுதாயத்திற்கு மேலும் தீங்கு வராமல் செய்வது
2. இவருக்கு தனது குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து மனம் மாறுவதற்கு வாய்ப்பளிப்பது
3. சமுதாயத்தின் இன்ன பிறரை எச்சரிப்பது.
மாணவர் கைது விஷயத்தில் மூன்றில் இரண்டு நடப்பதால், எனக்குப் பிரச்சினை இல்லை.
இதை விட பெரிய குற்றவாளிகள் வெளியில் இருப்பதால் தண்டனை கூடாது என்று சொன்னால், பிக்பாக்கெட்டுகளுக்கு எல்லாம் தீபாவளி தான்!
இந்த குற்றத்திற்கு முதலில் பெற்றோர்கள்தான் காரணம். கல்லூரியில் சேர்க்கும்போதே காசு கொடுத்து
ReplyDeleteசேர்ப்பது, பின்னர் காசு கொடுத்து பாஸ் பண்ணுவது, இவற்றிற்கு காரணமான பெற்றோர்களைத்தான்
முதலில் தண்டிக்க வேண்டும்.
ஒரு மாணவர் புத்தகத்தில் உள்ளதை எழுத்து பிசகாமல் காப்பி அடித்திருக்கிறார். மனப்பாடம் செய்து
வாந்தி எடுக்கும் பாடதிட்டமும் பரீட்சையும் பொறியியலுக்கு ஒத்து வராது. பல்கலைக்கழகத்தின்
தவறான கல்வி முறையையும், பரீட்சை முறையையும் சேர்த்து கண்டிக்க வேண்டும்.
ஹரி: எந்தெந்த ஃபோர்ஜரிக்கு எந்த மாதிரியான குற்றம்? அப்பாவின் கையெழுத்தை ரிப்போர்ட் கார்டில் போடுபவர்களுக்கு ஜெயில் தண்டனையா?
ReplyDeleteதேர்வில் ஏமாற்றுபவர்களை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் ஜெயில் தண்டனை அதிகம், கூடவே கூடாது என்றுதான் சொல்வேன். இதை பிக்பாக்கெட் போன்றதோடு சேர்த்துப்பார்க்க என்னால் முடியவில்லை.
இதுபோன்ற உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கு ஜெயில் தண்டனை கொடுத்து, அந்த மாணவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாகக் கெடுத்து, அவர்களை hardened criminals ஆக அத்தனை வழிகளையும் நாம் செய்துவருகிறோம்.
இதையும் கண்டிப்பு என்ற பெயரில் பலரும் வரவேற்பதுதான் எனக்கு வருத்தத்தைத் தருகிறது.
ஜெயிலுக்கு ஒருவரை அனுப்புவது என்பது மிகக்கடுமையான ஒரு செயல். அரசியல் காரணங்களுக்குத் தவிர, ஒருமுறை ஜெயிலுக்கு போயிருந்தாலும்கூட அவர்களது வாழ்க்கை அதன்பின் முற்றிலுமாக மாறிவிடும். என் கருத்துப்படி மிகச்சிலரைத்தவிர யாரையும் நான் ஜெயிலுக்கே அனுப்பமாட்டேன்.
குற்றத்தின் அடியை நாடி, அதை ஒழிக்கும் வேலையைத்தான் நாம் ஒழுங்காகச் செய்யவேண்டும்.
Badri, I honestly think that you are right..it is unpropotionate...
ReplyDeleteInternment is not the remedy as "we" tend to think and it not at all a solution.
சென்னையில் ஆங்காங்கு அன்றாடம் நடக்கும் நடப்புகளை, ஒரு நாள் காரை விட்டு இறங்கி நடந்து சென்ற போது கவனித்து விட்டு, "வன்முறை வாழ்க்கை" என்று பெரிதாக தலைப்பிட்டு ஒரு பதிவை பதிந்த பத்ரி, குற்றம் செய்த மாணவர்களை (கவனிக்க, இங்கே நடந்தது தவறல்ல..குற்றம்) ஜெயிலுக்கு அனுப்புவது தவறு என்று வாதிப்பது முரண்பாடாய் இருக்கின்றது.
ReplyDeleteரவியா: இந்த இருவருக்கும் கொடுக்கும் தண்டனை இவர்கள் திருந்துவார்கள் என்பதற்காக அல்ல. இந்த தவறை செய்ய காத்திருக்கும், நினைத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் மனது மாறுவார்கள் என்பதற்காக. அரசாங்க அலுவலகங்களில் நடைமுறையாகிப் போன லஞ்சம் போல் இந்த தவறு இன்னும் புரையோடவில்லை. இதுதான் ஆரம்பம். இப்போதே கிள்ளினால்தான் எதிர்காலம் குறைகள் அற்று இருக்கும். அதற்கு இந்த கடுமையான தண்டனைகள் மிகவும் அவசியம்.
வருங்கால முதல்வர் விஜயகாந்த் அடிக்கடி சொல்வது போல, முதல் குற்றவாளியை மன்னிப்பதால்தான் குற்றங்கள் தொடருகின்றன. முதன்முதலில் லஞ்சம் வாங்கிய அரசாங்க அதிகாரியின் கை வேண்டாம் குறைந்த பட்சம் ஒரு விரலாவது துண்டிக்கப்பட்டிருந்தால் இன்று நமது நாட்டில் லஞ்சம் என்பது நியாயமாகி இருக்காது.
- ஞானசூனியம்
//முதன்முதலில் லஞ்சம் வாங்கிய அரசாங்க அதிகாரியின் கை வேண்டாம் குறைந்த பட்சம் ஒரு விரலாவது துண்டிக்கப்பட்டிருந்தால் இன்று நமது நாட்டில் லஞ்சம் என்பது நியாயமாகி இருக்காது.
ReplyDelete- ஞானசூனியம் //
ஆஹா ..என்ன பொருத்தமான பேரைய்யா உங்களுக்கு ?
ஹரி: மாணவர்கள் செய்தது தவறு. ஆனால் எந்த சட்டங்களை மீறியுள்ளனர் என்று நான் கேட்டேன். லஞ்சம் கொடுத்தது பற்றிச் சொன்னீர்கள். நிஜமாகவே குற்றவியல் சட்டங்களில் எவற்றை இந்த மாணவர்கள் மீறியுள்ளனர் என்று நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
ReplyDeleteசற்று விசாரித்துவிட்டு இதைப்பற்றி எழுதுகிறேன். காவலர்கள் இந்த மாணவர்கள் மீது எந்தெந்தக் குற்றப்பிரிவுகளின்மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர் என்று தெரிந்துகொள்வது நம் விவாதத்துக்கு வசதியாக இருக்கும்.
===
லஞ்சம் வாங்குபவன் கையை, விரலை வெட்டுவோம் என்றெல்லாம் ஹாமுராபி சட்டங்களைப் போலப் பேசுவது நவீன மக்களாட்சிக் குடிமைகளுக்குப் பொருந்தாது. 'வருங்கால முதல்வர்' விஜயகாந்த் இப்பொழுது தனது பொறியியல் கல்லூரியில் மாணவர்களை எப்படி நடத்துகிறார் என்று தெரிந்தால் சொல்லுங்கள்.
காப்பியடித்தால் கை வெட்டா? பாடம் ஒழுங்காக சொல்லித்தராத வாத்தியாருக்கு நாக்கு வெட்டா? அட்மிஷன் சமயத்தில் டேபிளுக்கு அடியில் பணம் வாங்கும் நிர்வாகத்துக்கு எங்கு வெட்டு?
//அடியில் பணம் வாங்கும் நிர்வாகத்துக்கு எங்கு வெட்டு?
ReplyDelete//
பத்ரி, இவ்வரியில் நீங்களே பதில் சொல்லிவிட்டு கேட்டால் எப்படி??
:))
///அவர்களைக் கல்விக்கூடங்களை விட்டு நீக்கலாம். இனி தமிழக அரசின் கல்விக்கூடங்கள் எதிலும் படிக்க அனுமதிக்கப்போவதில்லை எனலாம். அரசு, தன் தொடர்பான எந்த வேலைக்கும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை //
ReplyDeleteஇதுவே அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் போதுமான பாடமென்றே எனக்கு தோன்றுகிறது.
//வருங்கால முதல்வர் விஜயகாந்த் அடிக்கடி சொல்வது போல, முதல் குற்றவாளியை மன்னிப்பதால்தான் குற்றங்கள் தொடருகின்றன. //
தமிழ் சினிமாவின் தாக்கம் ஞானசூனியம் !!!!
பத்ரி சொல்லுவது போல் quote /அந்த மாணவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாகக் கெடுத்து, அவர்களை hardened criminals ஆக அத்தனை வழிகளையும் நாம் செய்துவருகிறோம்.
இதையும் கண்டிப்பு என்ற பெயரில் பலரும் வரவேற்பதுதான் எனக்கு வருத்தத்தைத் தருகிறது/ end quote
oru veettai vaadagaiku eduthu ange ivargale pareetchayum ezudhi irukkiraargal. idhu kiriminal kutrama illaya ? sondhamaga stamp paper adithavargal kuda perusa enna senjuttanga? yedho avanga pressle thangal ubayogathuku stamp paper adichanga nu sollalam.
ReplyDeleteஅய்யா ஐகாரஸ், பெயர் பொருத்தத்தை பாராட்டியமைக்கு மிக்க நன்றி. இம்முறை உம்மைப் போல் புத்திசாலித்தனமாகப் பதிலளிக்கப் போவதால் ஞானி என்று பெயரிட்டுக் கொள்கின்றேன்.
ReplyDeleteவிரலை துண்டிக்கவேண்டும் என்று சொன்னதை "சோ" மாதிரி(தனக்கு சாதகமானதை மட்டும்) எடுத்துக் கொண்டு திறமையாக வாதாடுகின்றீர்கள். அந்த வரியின் உள் அர்த்தம் குற்றங்களுக்கு சற்று கடுமையான தண்டனைகள் தேவை என்பதுதான். ஹாமுராபி சட்டங்கள் இந்த குடியாட்சிக்கு உதவாது என்பதை நாம் அறிவோம். குற்றங்களுக்கெல்லாம் ஜெயிலே கூடாது என்னும் லீனியன்ட் சட்டங்களும் நமது குடியாட்சிக்கு உதவாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அய்யா, ஜெயில் என்றாலே ஏதோ உள்ளே நுழைந்து வருபவர்களை எல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியர்களாக வார்த்தெடுக்கும் பட்டறையாக நீங்கள் நினைப்பதுதான் தமிழ் சினிமாவின் தாக்கம். ஜெயிலில் உண்மை நடப்பு என்ன? என்ன மாதிரி குற்றங்களுக்கு எந்த பிரிவு ஜெயில், எப்படிப்பட்ட வசதிகள், எத்தனை நாட்கள் ஜெயில் இது போன்ற விசயங்களை எல்லாம் பத்ரி அவர்கள் ஒரு முறை சிறை சென்று (சும்மா போயி) பார்த்துவிட்டு, பிறகு ஒரு முடிவுக்கு வரட்டும்.
//அவர்களைக் கல்விக்கூடங்களை விட்டு நீக்கலாம். இனி தமிழக அரசின் கல்விக்கூடங்கள் எதிலும் படிக்க அனுமதிக்கப்போவதில்லை எனலாம். அரசு, தன் தொடர்பான எந்த வேலைக்கும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை //
இது என்ன மாதிரியான தீர்வு என்று ரவியா இதை ஒன்றுக்கு இரண்டு முறை பாராட்டியுள்ளார்!? வேடிக்கையாய் இருக்கின்றது. வீட்டைக் கொளுத்தியவன் கையில் இருக்கும் தீப்பெட்டியை பிடுங்கி கொண்டு, இப்ப என்ன செய்வாய் என்று கேட்பது போல் இருக்கின்றது. அரசு நிறுவனங்களை நம்பி இன்று யார் இருக்கின்றார்கள்? ரொம்ப சந்தோசம். இருக்கவே இருக்கின்றது எனக்கு ஆயிரம் தனியார் நிறுவனங்கள் என்று பெப்பே காட்டி சென்று விடுவர்.
நான் அதிகம் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. விஜயகாந்தை எனக்கு பிடிப்பதும் இல்லை. அவர் கல்லூரி குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. அதே சமயம் அவர் திரைப்படத்தில் சொல்லுவதையெல்லாம் அவர் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் நான் எதிர்பார்க்கவில்லை. அவர் வசனத்தின் மூலம் நான் சொல்ல வந்தது "குற்றத்திற்கான தண்டனை குறைந்த பட்சமாக இருக்கும் போது, அட இவ்வளவுதானா.. என்று அது மற்றவர்களுக்கு ஒரு தவறான பாடமாகி விடுகின்றது" என்பதுதான். என்னால் ஆயிரக்கணக்கில் உதாரணங்கள் காட்ட முடியும். ஏன்.. உங்களுக்கே நன்கு தெரியும். "அதிகபட்சம் என்ன பண்ணிடுவாங்க... அவ்வளவுதான் செய்யமுடியும்." என்பது மாதிரியான வசனத்தை நம் வாழ்வில் எத்தனை சந்தர்ப்பங்களில் நாம் கேட்டு இருக்கின்றோம்.
குடியாட்சிக்கு ஒவ்வாத வகையில் புதிதாக கடுமையான சட்டங்களை இயற்றச் சொல்லி நாங்கள் கேட்கவில்லை. இருக்கும் சட்டங்களை நடைமுறைப் படுத்துவதைப் பாராட்டுகின்றோம். ஆனால் நீங்களோ, இருக்கும் சட்டமே கூடாது என்பது போல் வாதாடுகின்றீர். இதற்கு மேல் என்ன சொல்வது?
- ஞானி
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20050511113527&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0
ReplyDeleteஇதுபோன்ற உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கு ஜெயில் தண்டனை கொடுத்து, அந்த மாணவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாகக் கெடுத்து, அவர்களை hardened criminals ஆக அத்தனை வழிகளையும் நாம் செய்துவருகிறோம்.
ReplyDelete50 ruuvaa pickpocket adippavanukku 6 maasam kidaikkum. oru amaippaye yemaatriyavargalai paadhukaakka vendum. kashtamda saami.
என்ன சொல்லவர்ரீங்க பத்ரி.. பெரிய தப்பெல்லாம் செஞ்சுட்டு பதவிசா திரியறாங்க.. இவங்களுக்கு எதுக்குங்கரீங்களா..
ReplyDeleteபெரிய மனுசன் செய்யிறததான் ஒன்னும் செய்யமுடியலை.. இந்த மாதிரி சின்ன பசங்க தப்பு செய்யிறதையாவது தண்டனை குடுத்து (குடுத்தாவது!).. திருந்திய (அல்லது) தப்பு செய்ய பயப்படுற பெரியவங்களா உருவாக்க முயற்ச்சி செய்யுவமே..
சூப்பரா சொன்னாரு ஐகாரஸ்! இதுனால சமுதாயத்துக்கு என்ன பாதிப்புன்னு?!!
ReplyDeleteஇவங்க இப்படி காப்பியடிச்சு நல்ல மார்க்கு வாங்கறதால நெஜமாவே படிச்சு எழுதற பசங்களுக்கு பாதிப்பில்லையா? இது சமுதாயத்துக்கு பாதிப்பு இல்லையா?
ஒன்னு செய்யுங்க..காப்பி அடிக்கறவங்களுக்கு தனிமார்க்சீட்டும், படிச்சு எழுதவறங்களுக்கு தனிமார்க்சீட்டும் குடுங்க.. அவங்கவங்க கேட்டகிரில அவங்கவங்க திறமைய காட்டட்டும்!
நாசமாப்போச்சு! அவசரத்துல பத்ரிக்கு பதிலா ஐகாரஸ் பேர அடிச்சுட்டேன். icarus - மன்னிச்சிடுங்க!
ReplyDeleteபின்னூட்டதுல காப்பி அடிக்கறதுலயே இவ்வளவு கொழப்பம் பாருங்க! :)
//என் கருத்துப்படி மிகச்சிலரைத்தவிர யாரையும் நான் ஜெயிலுக்கே அனுப்பமாட்டேன்.//
ReplyDeleteநீங்கள் ஜெயிலுக்கு அனுப்பும் அந்த ஒரு சிலரை இங்கே வெளியிட முடியுமா?
{ஜெயில் வார்டனையாவது அனுப்புவீர்களா?}
(கவுடியா மடத் தெருவில் இரவு 8.45 க்கு வன்முறையில் ஈடுபட்ட அந்த வயதான வாட்ச்மேனும், ஆயுதம் ஏந்திய இளைஞனும் பட்டியலில் நிச்சயம் உண்டு என்று நம்புகின்றோம்)