ஒருநாள் மாலை நேரம் நான் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். மிகவும் சுவாரசியமான ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு. அதைப்பற்றிக்கூட நான் பதிவு செய்திருக்கிறேன்.
இங்கு அதல்ல விஷயம். என் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். பின் என்னிடம் பேச்சுக்கொடுத்தார். அதன்பின் எனக்குத் தமிழில் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்ததும் தானும் ஒரு கவிஞர்தான் என்றார். நான் அப்பொழுதே அந்த இடத்தை விட்டு ஓடியிருக்கவேண்டும். அவரும் அதை எதிர்பார்த்திருக்கவேண்டும். அதனால் நான் ஓடுவதற்கு முன்னால் தன் பையிலிருந்து மூன்று புத்தகங்களை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.
நானும் வீட்டுக்கு வந்து சும்மா இருந்திருக்கலாம். ஆனால் ஆங்காங்கு படித்தேன். நான் பெற்ற இன்பத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இவர் இரண்டு புத்தகங்களைத் தமிழிலும், ஒன்றை ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். மரியாதை கருதி அவரது பெயர், அவரது புத்தகங்களின் பெயர்களை வெளியிடப்போவதில்லை. இங்கு அவரது ஆங்கிலக் கவிதைகளிலிருந்து ஒரு சாம்பிள் பார்க்கலாம்.
***
Adam and Eve
Adam and Eve, my research in the Eden Garden
O! My dream, no game, no gambler in any port
To agree with submarine, the depth of the sea to report
Thunder reverberated two clouds two sounds, mere a fiction
O! my soggy soil, the solecism, the phillipic an erotic diction.
No event, no evidence, a salient feature
Necromantic sex, eye brows to guard by nature.
The republic, the reality never fails
The necessity not to negotiate in trail.
The virtuous vibration not to confuse, just a new story
The vociferous eliminator ever with energy, O! my glory.
To confirm my name, see a new flame with fame
My imprint with internet, a stuff in golden home.
The ridiculous, the anatomy burst to retaliate
Let the doldrums be negative, I want to negotiate.
One is a company, two the crowd, no conflict in one act play
My pantomime an old replica, I like it in any way.
O! my mobile soil, a new tale to missile
Poor petals in flexible, the fragrance in puzzle.
Earmarked heritage, Adam and Eve an old track
A trade fair with feast, no nerve in trick.
O! my running rumour, roots to deal
Silky worms die, milky breast to feel.
Never at lip service, my label knows maximum
O! Adam and Eve, beat the drums anti clock-wise
Let the pendulum, never be in pandemonium.
depression caused by tamil weather-forecasters
7 hours ago
dont throw this book, simply burn it or bury it underground.
ReplyDeleteஅற்புதமான கவிதை. நிச்சயம் இவர் ஒரு மகாகவியாகத்தான் இருப்பார். தமிழில் இவருக்கு நிகரான கவிஞர்கள் சிலர் இணையத்தில் உள்ளார்கள். உங்களைப் போலவே நானும் பெயர் சொல்ல விரும்பவில்லை.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஇதை மறுபதிப்பு செய்யும் எண்ணம் இருக்கிறதா?
இருந்தால் சில பிரதிகளை நான் முன் பதிவு செய்கிறேன். இதை பரிசளிக்க வேண்டிய நபர்களின் பெரிய பட்டியல் ஒன்று என்னிடம் தயாராய் உள்ளது.
நல்ல தலைப்பு ! ஆமாம், சாரு ஆங்கிலத்தில் எழுத மாட்டாரே !!!!
ReplyDelete//இதை பரிசளிக்க வேண்டிய நபர்களின் பெரிய பட்டியல் ஒன்று என்னிடம் தயாராய் உள்ளது.//
ReplyDelete'அவர்கள்' இதை Best Seller ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே மறுபதிப்பு குறித்து பரிசீலிக்கவும்.
அஞ்சா நெஞ்சைய்யா உமக்கு. இப்படிப்பட்ட ஒரு கன்றாவியை (கவிதை என்று எப்படி சொன்னார் இதை எழுதிய மஹாக(பா)வி?) ஒரு முறை படித்ததோடல்லாமல் பதிவில் உள்ளிட இன்னொரு முறை வேறு படித்திருக்கிறீர்கள். தியாகி பத்ரி வாழ்க!
ReplyDeleteEnjoy!! ;-)
ReplyDeleteIdhaiyum porumaiyaa padichu, yaam petra inbam peruga ivaiyagamnu engaloda pagirndhu konda ungallukku nandri
ReplyDeleteஎன் நண்பர் ஒருவரும் இதே மாதிரி ஆங்கிலத்தில் கவிதைப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார். பில் கிளிண்டன் பாராட்டிய கவிஞர் என்று இப்போதெல்லாம் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்கிறார்.
ReplyDeleteஉலகத்தில் உள்ள தலைவர்களுக்கெல்லாம் (இந்தியத் தலைகள் உட்பட) புஸ்தகத்தை வாசித்து கருத்து சொல்லும்படி அனுப்பி வைத்தார். அமெரிக்கர்களுக்கே உரிய மரியாதை நிமித்தம் "உங்கள் புத்தகம் கிடைத்தது. நன்றி. வாழ்த்துக்கள்" என்று கிளிண்டனின் செயலாளர் அனுப்பிய கடிதம் செய்த வித்தை தான் அது. கூடவே பதில் அனுப்பாத இந்தியத் தலைகளுக்கு வசைமாரியும்.
புஷ் இன்னமும் பதில் அனுப்பவில்லையே என்று போஸ்ட்மேனை நச்சரித்துக் கொண்டிருக்கிறார் இப்போது. நோபல் பரிசுக்கமிட்டிக்கு புத்தகத்தை அனுப்ப என்ன வழி என்றும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.
அடுத்த புத்தகம் அச்சில் இருப்பதால் நண்பர்கள் எல்லாம் மூன்று தெரு தள்ளியே நடமாடுகிறார்கள்.
Oh my head, my head
ReplyDeleteI shall turn instead
Into a darl abysmal ditch
For some relief from such...!
--Nagore Rumi