இப்பொழுது ஹைதராபாதில் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. டிசம்பர் 1-11 வரையில். நிஜாம் கல்லூரி மைதானத்தில். தமிழ்ப் பதிப்பாளர்கள் யாரும் கடைகள் போட்டிருப்பதாகத் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் போகவில்லை. பெங்களூர் போல ஹைதராபாதில் தமிழ்ப் புத்தகங்களுக்கு சந்தை இருக்குமா என்று தெரியவில்லை.
ஆனால் நான் போகிறேன். நாளையும், மறுநாளும் கண்காட்சிக்குப் போய் எந்த மாதிரியான புத்தகங்கள் அங்கு விற்பனையாகின்றன என்று பார்த்துவிட்டு வருவேன்.
ஹைதராபாத் புத்தகக் கண்காட்சி பற்றிய தி ஹிந்து செய்தி
சென்னையில் 6-16 ஜனவரி 2006இல் புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது. இம்முறையும் காயித்-ஏ-மில்லத் அரசினர் கலைக்கல்லூரியில்தான். இதுவே இந்தக் கல்லூரியில் நடக்க உள்ள கடைசி சென்னைப் புத்தகக் கண்காட்சி என்று கேள்விப்படுகிறேன். அடுத்த வருடம் இன்னமும் பெரியதாக, தீவுத்திடலில் நடக்கலாம்...
இந்தியாவுக்கு விடுமுறையில் வர விரும்பும் தமிழர்கள் 6-16 ஜனவரியை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
2 hours ago
பத்ரி, சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலுக்கு நன்றி. நிச்சயம் வருவேன்.
ReplyDeletepadri,
ReplyDeletekankaatchikku ungal puthiya puththagankal ennenna? kizhakkil enna special?
கொல்கத்தா புத்தகக் கண்காட்சியிலும் சென்ற முறை தமிழ் பதிப்பாளர்கள் யாரையும் காண முடியவில்லை. இந்த முறை Jan 25 முதல் feb 5 வரை. கிழக்குப் பதிப்பகம் வருகிறதா?
ReplyDeleteநிர்மலா.
நிர்மலா: கிழக்கு பதிப்பகம் கலந்துகொள்வது சந்தேகம்தான். தமிழ் புத்தகங்களுக்கான சந்தை கொல்கொத்தாவில் இருக்காதல்லவா? கலந்துகொள்ளும் கட்டணம் அளவுக்குக் கூட புத்தகங்கள் விற்பனையாக வாய்ப்பிருக்காது.
ReplyDeleteஆனால் நான் வரப்போகிறேன். வங்காளிகளின் படிப்புப் பழக்கம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு. கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் தில்லியிலும் புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது.
சுதீஷ்: கிழக்கு இதுவரையில் வெளியிட்டுள்ள புத்த்ஹகங்கள் பற்றிய தகவல்கள் http://www.newhorizonmedia.co.in/ தளத்தில் உள்ளது.
ReplyDeleteஇன்னமும் சில புத்தகங்கள் அச்சில் உள்ளன. அதுபற்றிய தகவல்களை அடுத்த வாரம் சேர்ப்போம்.
என் பதிவில் நாங்கள் கொண்டுவரும் சில புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தொடர்ச்சியாக அடுத்த வாரம் முதற்கொண்டு எழுத உள்ளேன்.
Badri,
ReplyDeleteRead your article in Dec. Amudhasurabi. Glad to know about your new venture. All the best for the same.
- Suresh Kannan
அன்று மக்கள் தொலைகாட்சியில் உங்கள் வலைபதிவை பார்த்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDelete