Friday, December 16, 2005

எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்

சமீபத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் கூவம் கரையோரம் நடந்துள்ள நில ஆக்ரமிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பல்வேறு ஆசாமிகள் பொதுநிலத்தை ஆக்ரமிப்பு செய்திருந்தாலும் இதில் மிகவும் முக்கியமானது டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் செய்துள்ள ஆக்ரமிப்பு.

முன்னாள் அஇஅதிமுக பிரமுகரும் தற்போதைய புதிய நீதிக்கட்சியின் தலைவருமான AC சண்முகம் நடத்திவருவதுதான் டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி; அதன் அடுத்த கட்டமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம். மதுரவாயலில் தன்னிஷ்டத்துக்கு கூவத்தையொட்டி இந்தக் கல்லூரி, பொதுநிலத்தை ஆக்ரமித்து அங்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்களைக் கட்டியிருந்தது. இதில்தான் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்கள் போதிக்கப்பட்டன; மாணவர்களுக்கான ஹாஸ்டல் இருந்திருக்கிறது.

மதுரவாயல் கலெக்டர் உத்தரவின்பேரில் ஆக்ரமிப்புகளை இடிக்க நகராட்சியினர் வர, நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகம் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றனர். ஆனால் நீதிமன்றங்கள் கட்டடத்தை இடிப்பதைத் தடைசெய்யவில்லை. இதனால் முந்தாநாள் முதல் கிட்டத்தட்ட ரூ. 50 கோடி மதிப்புள்ள கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. தி ஹிந்து செய்தியில் பாதி இடித்த நிலையில் உள்ள கட்டடங்களைப் பார்க்கலாம்.

இந்த ஆக்ரமிப்புகளால்தான் வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்களுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பலரும் கருதிகின்றனர். இப்பொழுதைய வெள்ளத்தை சாக்காக வைத்துக்கொண்டு ஆக்ரமிப்புகளை ஒரேயடியாக தட்டித் தரைமட்டமாக்கிவிடலாம். ஆனால் ஒருவகையில் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு நடந்துகொள்வதற்குக் காரணம், அஇஅதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற குட்டித்தலைவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதாகவும் இருக்கலாம். அப்படியானால் ஜெயலலிதாவுக்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளும் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பகுதி பொறம்போக்கு நிலத்தை வளைத்துப்போட்டுச் செய்யப்படும் திருட்டுத்தனங்கள்தான் என்று பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது. இதில் எதிர்க்கட்சியினராகப் பார்த்து அவர்களில் யார் யாரெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகக் கல்லூரிகளைக் கட்டியிருக்கிறார்களோ அதையெல்லாம் ஜெயலலிதா இடித்துவிடலாம். அடுத்த ஆட்சி மாற்றத்தின்போது திமுக மிச்சம் இருக்கும் அஇஅதிமுக பிரமுகர்களின் சட்டத்துக்குப் புறம்பான கல்லுரிகளை ஒருகை பார்க்கலாம். அப்படியாவது திருடர்கள் ஒழிக்கப்படுவார்கள்.

சண்முகம் அம்மாவிடம் கருணை காட்டச்சொல்லி எழுதிய கடிதம் தி ஹிந்துவில் இங்கே. தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டுவிட்டார். அத்துடன் தன் கல்லூரி தொடர்பான வேறொரு 'மிரட்டல் வழக்கில்' முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார் சண்முகம்.

8 comments:

  1. தொடர்பான என்னுடைய பதிவு: எம்ஜியார் பல்கலை

    ReplyDelete
  2. ஒரு கல்லூரி நிர்வாகி...மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்வேணடாமா..
    கஷ்டம்...இது தமிழக அரசின் நல்ல காரியம்...

    ReplyDelete
  3. ACSன் மன்னிப்பு கடிதத்திலிருந்தே தெளிவாகத் தெரிகிறதே இதன் உள் நோக்கம் பொதுநலம் அல்ல என்பது.

    மாணவர்கள்தான் பகடைக் காய்களாக்கப்பட்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. Venkat: I agree with you that Ac Shanmugam should be prosecuted for encroaching on the land, causing damage to public during the floods by his action, cheating and causing insufferable problems to his students, and so on.

    He should be fined as well for the cost of demolishing the college.

    Further, AICTE should seriously consider withdrawing the deemed university status as well as putting the college administration on probation.

    Students can always be placed in other Engineering Colleges.

    ReplyDelete
  5. ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டிடங்களை இடிப்பதற்கு நீதிமன்றங்கள் தடை போடவில்லை என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாக தவறு செய்வோர் அனைவரும் நீதிமன்றம் சென்று தடையுத்திரவு வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் செய்துவருவது இந்தியாவில் பழம்பழக்கமாக இருந்து வந்தது. சமீப காலங்களில் நீதிமன்றங்கள் அவ்வப்போதாவது இப்படிக் கண்மூடித்தனமாகத் தடை விதிக்காமல் இருக்கிறார்கள். இத்தகைய அம்சங்கள் இன்னும் வளர வேண்டும். விரைவில் நீதி கிடைப்பதற்கான காரணிகளாக இவை அமையும். உதாரணமாக இந்த இடத்தில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதே ஆக்ரமிப்பை அகற்றிச் சரி செய்த நீதியாக அமைந்து விடுகிறது. ஐம்பது கோடி மதிப்புள்ள நஷ்டம் ஆக்ரமிப்பாளருக்கு என்பது ஓரளவுக்கு instant justice. மற்றபடிக்கு - ஆக்ரமித்தவர் மீது போடப்படும் கேஸ்கள், அவைகளுக்கு வாங்கப்படும் வாய்தாக்கள், சட்டத்தின் நுணுக்கங்கள், தீர்ப்பு வர ஆகப் போகிற வருடங்கள், இவற்றின் மீதெல்லாம் பெரிதாக நம்பிக்கை வைக்கத் தயக்கமாக இருக்கிறது. இந்தக் கேஸிலேயே ஏ.சி. சண்முகம் அவர் செய்த தவறுகளுக்கு தண்டிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்பினாலும், அவையெல்லாம் உடனடியாக நடந்துவிடும் என்று தோன்றவில்லை. அதனாலேயே, சட்டத்துக்குப் புறம்பாக ஆக்ரமித்தால் அங்கிருந்து உடனடியாகத் தூக்கி எறியப்படுவோம் என்கிற பயத்தை ஆக்ரமிப்பை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதன் மூலம் ஏற்படுத்த வேண்டும். இது புதிய ஆக்ரமிப்புகளைத் தடுக்கும்.

    மற்றபடி நீங்கள் இப்பதிவில் சொல்லியுள்ள கருத்துகள் அனைத்துடனும் எனக்கு உடன்பாடே. எதிர்கட்சி என்பதால் பழிவாங்குகிறார், கல்வி நிலையங்களை இடிக்கலாமா என்பவை எல்லாம் அனுதாபம் சம்பாதிக்கவே உதவும். பாதிக்கப்பட்டவர் ஜாதிக் கட்சியின் தலைவராக இருக்கிற போதும், ஜாதி அரசியலையும், ஜாதி ஓட்டுகளையும் கண்டு சும்மா நிற்காமல் இந்த நடவடிக்கையை எடுத்ததற்கு நிச்சயம் ஜெயலலிதாவைப் பாராட்ட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும்போது பாதிக்கப்படுகிறவர் எதிர்கட்சியாக இருந்தாலும் வரவேற்க வேண்டும். பழிவாங்கல் என்ற கண் கொண்டு அதைப் பார்க்கக் கூடாது. சொந்தக் கட்சியினர் அல்லது கூட்டணி கட்சியினர் இப்படி சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்தால், அவர்கள் மீதும் தமிழக முதல்வர் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர் எடுக்க மறந்தால், ஒன்றுக்கு இரண்டாக தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை அவர் அறிய வேண்டும்.

    இப்படிப்பட்ட ஆக்ரமிப்புகள் தமிழ்நாட்டில் இன்னும் பல இருக்கின்றன. நீர்நிலைகளை ஆக்ரமித்துள்ளவர்கள் மீதான கவனம் வெள்ளத்தால் வந்திருக்கிறது. புறம்போக்கு நிலங்களையும் வனத்துறையைச் சார்ந்த நிலங்களையும் ஆக்ரமித்துள்ளவர்கள் மீதான கவனம் அரசுக்கு வர என்ன நிகழ வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது?

    இதுமட்டுமில்லாமல், ஏரிகளை உடைத்த ஆக்ரமிப்பாளர்கள் மீதும், அத்தகைய நடவடிக்கைகள் இனி நிகழாவண்ணம் தடுக்கவும், அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது? ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கிறார்களா? யாரேனும் இதைக் குறித்துத் தொலைநோக்குப் பார்வையுடன் பேசியிருக்கிறார்களா? அறிந்தால் தெரியப்படுத்தவும்.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  6. சில பின்னூட்டங்கள் மட்டுறுத்தலுக்குப் பிறகு பதிவில் தெரியவில்லை. இங்கு மற்றொரு பின்னூட்டம் இட்டால் தெரிய வருமோ என்று சோதிக்கிறேன்.

    ReplyDelete
  7. Badri,
    i donnt know much about MGR Univ.
    But i will tell you about my college Shanmugha College of engineering(now Sastra Univ). the original Land is just 80 acres.(when I join the college 9yrs before) But now the campus occupied by more then 300 acres. Ellam Purambokku nilam. Athuvum Jail katta allot panna nilam enru vathnthiyum undu. Just by the name of education they can able to occupy more then 200 acres within 9 Yrs.

    ReplyDelete
  8. "ஜாதி அரசியலையும், ஜாதி ஓட்டுகளையும் கண்டு சும்மா நிற்காமல் இந்த நடவடிக்கையை எடுத்ததற்கு நிச்சயம் ஜெயலலிதாவைப் பாராட்ட வேண்டும்
    "


    எனக்கு ஒரு விசயம் புரியல. யாராவது விளக்குங்க.

    கருணாநிதி மற்றும் ஜெயலலிதா (எம்ஜிஆர் காலத்திலும் இருக்கலாம்) ஆகியோர்
    ஆட்சியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளால் பொதுசனம் தங்கள் வீடு உடமைகளை
    அம்போவென்று விட்டுவிட்டு ஊரை காலி செய்து போகும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
    நிவாரணம் வாங்கப் போய் உயிர் சேதம் வேறு.

    இத்தனை காலம் இன்ஹ்ட நிலைமையை ஏற்படுத்தியதற்கு
    இவர்களை யாரும் திட்டவில்லை. மாறாக இப்பொழுது பாராட்டுகிறார்கள்.
    (சிலருக்கு இடிப்பதில் வருத்தம் வேறே).

    what is wrong in this logic?

    ReplyDelete