Tuesday, December 13, 2005

தமிழிசை விழா

தமிழிசைச் சங்கத்தின் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் சார்பில் இந்த வாரம் 17-18 (டிசம்பர் 2005) தேதிகளில் சென்னை போக் (செவாலியே சிவாஜி கணேசன்) சாலை, முருகன் திருமணக்கூடத்தில்மண்டபத்தில் ஓர் இசைவிழா நடக்க உள்ளது.

[குறிப்பு (14 டிசம்பர் 2005): மேற்படி நிகழ்ச்சி தமிழிசைச் சங்கத்தின் சார்பில் நடைபெறுவது அல்ல. பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் சார்பில் நடைபெறுவது. இதன் தலைவர் ராமதாஸ். கோகுலகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கிறார். தமிழிசைச் சங்கம் என்பது வேறு. அதன் வருடாந்திர நிகழ்ச்சிகள் இந்த வருடமும் நடைபெறுகின்றன. தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.]

தமிழ்ப்பண்கள் - சமயச்சார்பற்ற மற்றும் இந்து, இஸ்லாமிய, கிறித்துவப் பாடல்கள் - பாடப்படும் என்று தெருவில் வைக்கப்பட்டிருந்த ஒரு தட்டியின் மூலம் அறிகிறேன்.

இந்த விழா மூன்றாவது வருடமாகத் தொடர்ந்து நடக்கிறது. தமிழிசைச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஓய்வுபெற்ற குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி P.R.கோகுலகிருஷ்ணன். இந்த விழாவுக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர் பாமக தலைவர் ராமதாஸ். பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் தலைவர் பாமக ராமதாஸ். இந்த விழாவினைத் தொடக்கி வைக்க வருபவர் தமிழிசைச் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி P.R.கோகுலகிருஷ்ணன்.

-*-

தமிழ் இசை - அதாவது புராதனமான தமிழ்ப்பண்கள், தமிழில் இயற்றப்படும்/பட்டுள்ள கீர்த்தனைகள், பாடல்கள் ஆகியவை சென்னை இசைவிழாக்களில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. நல்ல பெயர் பெற்ற தமிழ்ப் பாடகர்கள், முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்களைப் பாடி இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தாலும்கூட ம்யூசிக் அகாடெமி, நாரத கான சபா போன்ற இடங்களில் கச்சேரி என்று வந்துவிட்டால் அந்தப் பாடல்களை - அவை எவ்வளவுதான் உள்ளத்தை உருக வைக்கக்கூடியனவாக இருந்தாலும் - கண்டுகொள்வதில்லை.

அவ்வப்போது ஒரு துக்கடாவாக ஒரு திருப்பாவை, ஒரு பாரதியார் பாடல், ஒரு பாபனாசம் சிவன் பாடல் - அவ்வளவுதான். எம்.எஸ்ஸுக்குப் பிறகு ஆய்ச்சியர் குரவையை இசை உலகமே மறந்துவிட்டது போலும். (சிலப்பதிகாரம் இசைத்தட்டு ஒன்று வாங்கியுள்ளேன். இன்னமும் போட்டுக்கேட்க நேரமில்லை.)

இதற்கு மாற்றாக தமிழிசையை முதன்மைப்படுத்தி சென்னை இசை மாஃபியாவை மீறி இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அதைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் தமிழிசைச் சங்கத்துக்கும் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்துக்கும் நமது பாராட்டுகள்.

தமிழிசையை மைய நீரோட்டத்துக்குள் கொண்டுவரமுடியும் என்றே நினைக்கிறேன். அதற்குச் சில வருடங்கள் பிடிக்கலாம். இன்னமும் அதிகமான புரவலர்கள் தேவை. இரண்டு நாள்கள் மட்டும் நடக்கும் விழா போதாது. 10-15 நாள்கள் தொடர்ச்சியாக நடக்கும் விழாக்கள் - பல இடங்களிலும் - தேவை. முக்கியமான சபாக்களை தமிழிசை ரசிகர்கள் ஊடுருவி உறுப்பினர்களாக வேண்டும். பின் தேர்தல்களில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு டிசம்பர் இசை நிகழ்ச்சியிலும் குறைந்தது 25% முழுத்தமிழ் இசைக்காக நேரம் ஒதுக்கவேண்டும். பாடகர்களை தமிழிசையை அதிகப்படுத்தச் சொல்லவேண்டும். சென்னை இசை மாஃபியாக்களை ஒழிக்க இது ஒன்றுதான் வழி.

32 comments:

  1. இசை மாஃபியாக்கள் என்ற கடுமையான சொற்பிரயோகத்தை பயன்படுத்துவதன் காரணம் என்ன?

    சற்று விளக்கமாக எழுதாத பட்சத்தில் நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்பட்டதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.

    உங்கள் கருத்தை சற்று விளக்கிக் கூறுங்கள்.

    ReplyDelete
  2. Why should people who like only Tamil songs try to get administrative positions in music academy ?

    Let there be a parallel vizha like this.People who like only Tamil songs can go here and people who like telugu,sanskrit,malayalam,tamil,kannada songs can go to music academy.People who like both can go and enjoy both festivals.

    Nobody has the right to say 25% should be in this language etc.Tomorrow, another rule might come that singers have to sing 25% songs on one particular religious God etc.

    The singer can sing what he/she wants and people can have a choice in attending the concerts.So, a parallel vizha is better as consumers have choice.

    ReplyDelete
  3. I agree with the central point of your post, but would like to second Rajkumar's question and opinion...

    ReplyDelete
  4. ஆனா, தமிழை தமிழா உச்சரிக்க வேண்டும் என்ற சட்டமும் கூடவே போட வேண்டும். "ச" வை "ஷ" வாக உச்சரித்து, ஒரு அம்மாள் பாடியதைக் கேட்டு கொலை வெறியே வந்துவிட்டது. அதுக்கு புரியாத தெலுங்கும், சமஸ்கிருதமுமே பரவாயில்லை :-)

    ReplyDelete
  5. Some of my views:

    This is an issue from the days of Kalki(from 1940s as far as I know) and Sabhas are refusing to acknowledge that Tamil does contain lot of songs that can be fit into Karnatic Ragas. Kalki's fight with Ariyakkudi and other big shots regarding Tamil songs are history.

    The problem is two fold as not only the Sabhas are refusing to acknowledge, but the singers too. True, most of them are ready to perform for the cassetts/CDs but why can't they insist that they will allocate 25%(to start with) of their allotted time for Tamil Keertanais?

    As much as I love Unnikrishnan's Bharathiyar's songs, I can't say the same of his Thiyagaraja Keertanais(no offense here, but I cannot enjoy my music in the language that I can't understand).

    ReplyDelete
  6. பத்ரி ,
    உங்கள் சிந்தனையுடன் முழுதாக ஒத்துப்போகிறேன். நன்றி

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி பத்ரி. மார்கழி வயிற்றெரிச்சலுக்குப் பால் வார்க்கும் போல இருக்கிறது!
    அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை இவர்கள் பெயர்களை இப்போதெல்லாம் வானொலிகளிலோ மற்ற ஊடகங்களிலோ கேட்க முடிகிறதா என்று தெரியவில்லை. அண்ணாமலையரசர், ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்றவர்களுக்குப் பின் தமிழிசையை பொதுமைப் படுத்துவதில் சொல்லிக் கொள்ளும்படி யாருமிருப்பதாகத் தெரியவில்லை. தந்தை பெரியார் தமிழிசை மன்றம் சில குறுந்தகடுகளை வெளியிட்டிருந்தது. அது இன்னமும் பணியைத் தொடர்கிறதா என்று அறிய ஆவல்.

    உஷா சொன்ன கொலைவெறி பாரதியின் பல பாடல்களைப் பல பிரபங்களின் வாயிலிருந்து கேட்ட போது வந்தது. உதாரணமாக "ஷொல்ல வல்லாயோ கிளியே ஷொல்ல நீ வல்லாயோ" என்று கேட்கையில் இவர்கள் "சிட்டுக்" குருவியை எப்படிப் பாடுவார்களோ என்று தோன்றும் (அப்போது ச்சிட்டு என்று சொல்லிக் கொள்வார்களாயிருக்கும்).

    சிலப்பதிகாரக் குறுந்தகட்டின் தகவலை/விமர்சனத்தை முடியும் போது பதியவும்.

    ReplyDelete
  8. ஒரு பின்னூட்டமடித்துக் காணாமல் போய்விட்ட நிலையில்,
    இப்போதைக்கு நன்றி மட்டும்!

    ReplyDelete
  9. /Why should people who like only Tamil songs try to get administrative positions in music academy ?
    /
    Yes. That is so correct, because Music academy is NOT in Tamil Nadu. That is why. hihi...

    /Nobody has the right to say 25% should be in this language etc.Tomorrow, another rule might come that singers have to sing 25% songs on one particular religious God etc.
    /
    get a life dude.. are you sane?

    ReplyDelete
  10. சுந்தரவடிவேல்: உங்கள் பின்னூட்டம் காணாமல் போகவில்லை. என் மட்டுறுத்தும் பட்டியலில் என் அனுமதிக்காகக் காத்திருந்தது.

    ராஜ்குமார்/ஸ்ரீகாந்த்: சென்னை இசை மாஃபியா பற்றி விளக்கமாக எழுதவேண்டும். எழுதுகிறேன். இந்த வார்த்தையில் கடுமை எதுவும் இல்லை.

    சிலப்பதிகாரம்: (உண்மையில் மணிமேகலையிலிருந்து இரண்டு பாடல்களும் சிலம்பிலிருந்து 13ம் உள்ளன) - Srishti Carnatica Pvt. Ltd. வெளியீடு (சவும்யா, சஷிகிரன், ஸ்வர்ணமால்யா). விலை ரூ. 150

    ReplyDelete
  11. Who are the artists who are participating in this vizha supported by Ramadoss?
    Any famous singers?

    ReplyDelete
  12. நல்ல பதிவு. ராமதாசின் முயற்சியைப் பாராட்டுவோம். கருணாநிதி இதைப்பற்றியெல்லாம்
    மேடையில் பேசினாலும் , இப்படி எதுவும் உருப்படியாக செய்ததில்லை. இத்தனைக்கும்
    இசைக் குடும்பத்திலிருந்து வந்தவர்.

    இதே விமர்சனங்கள் நடனக்கலை மீதும் வைக்கலாம். இப்பொழுது எங்கு பார்த்தாலும்,
    ஒரே சம்ச்கிருதமயமாக்கல்தான் தெரிகிறது. தமிழ் terminology யே காணாமல்
    போய்விடும் போலிருக்கிறது.

    பால முரளி தானே இயற்றிப் பாடிய முழு நீள தமிழ் கீர்த்தனைகள் (துக்கடா அல்ல)
    கேட்டதுண்டு.

    ReplyDelete
  13. Sundaravadivel
    'Vaitrerichal' will only lead to gastric problems.

    Best thing is to make your kids learn carnatic music and excel in it.Then,things will fall in place.

    ReplyDelete
  14. சென்னை சபாக்களின் நாள்படி விவரங்களைத் தெரிந்துகொள்ளப் போகவேண்டிய தளம்:
    http://kutcheribuzz.com/decseason2005/schedules.htm

    இங்கு நான் சொன்ன முருகன் திருமணமண்டப நிகழ்ச்சிநிரல் இல்லை. ஆனால் தமிழிசைச் சங்கத்தின் முழுமையான நிகழ்ச்சி நிரல் இங்கே உள்ளது: http://kutcheribuzz.com/decseason2005/schedules/tamilisai_shed.htm

    ReplyDelete
  15. Dear Badri
    you beat me to this!

    http://nadopasana.blogspot.com/2005/12/2005-concert-schedules.html

    Anyways, there is a link to a previous post regarding this year's Sangeetha Kalanidhi M.Chandrasekharan

    ReplyDelete
  16. þஇசை என்பது தமிழோ, தெலுங்கோ, வட மொழியோ கேட்பதற்கு இனி¨மையாக இருக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன், பொங்கு தமிழ் இசை என்ற பெயரில் "விண்" தொலைக்காட்சியில் வந்த இந்தத் தமிழ் இ¨சையினை கேட்டு அவஸ்தைப்பட்டேன். அவ்வளவு அபஸ்வரக் களஞ்சியம்.

    இரண்டாவது பாடல் தாய்மொழியில் இருந்தால்தான் பொருள் புரியும். அப்போதுதான் இரசிக்க முடியும் என்று ஒர் கருத்து. அருணகிரி நாதரின் "அத்தைத் திரு முத்தித் திரு" என்ற பாடலைப் பாடும் போது, எந்த்தனை பேர் அர்த்தம் தெரிந்து இரசிக்கிறார்கள்.

    தமிழி¨சைக்கு நான் எதிரியில்லை. பாபனாசம் சிவனது பல பாடல்கள் எளிமையானவையாகவும், பொருள் புரிபவையானவையாகவும், இரசிக்கத் தக்கனவாகவும் இருக்கும். தமிழ்ப் பாடல்கள் என்பதனாலேயே தள்ளி ஒதுக்கவும் வேண்டாம். தலை மீது வைத்து ஆடவும் வேண்டாம்.

    அரசியல் பண்ண விரும்புவர்கள் அபஸ்வராமாக இருந்தாலும், தமிழிசை என்ற ஒரே காரணத்திற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தட்டும். பாடட்டும். உட்கார்ந்து கேட்க, பத்ரி ரெடியா?

    உணர்சை வசப்பட்டு, இப்படித் தீவிரமாகத் தமிழிசி¨யை ஆதரிக்க தமிழ் மொழியின் பேரில் பரிவு இருப்பதாகத் தோன்றவில்லை. மாற்று இசையின் பேரில் ஓர் ஆங்காரமென்றே தோன்றுகின்றது. "தமில் வால்க" என்று கத்தும் அரசியல் தொணடனின் தொனிதான் தெறிக்கிறது உங்கள் கட்டுரையில்.இசை நிகழ்ச்சியினை கேட்காமலேயெ, இதற்கு இவ்வளவு ஆதரவா? அரசியலில் இறங்க எண்ணமா?

    ReplyDelete
  17. உதாரணமாக "ஷொல்ல வல்லாயோ கிளியே ஷொல்ல நீ வல்லாயோ" என்று கேட்கையில் இவர்கள் "சிட்டுக்" குருவியை எப்படிப் பாடுவார்களோ என்று தோன்றும்

    ஒரு பிரபல பாடகர் 'ஏறு மயிலேறி ' என்று பாடுவது எப்போதும் எருமையிலேறி
    என்றே கேட்கும்.

    ReplyDelete
  18. சிமுலேஷன்: ஆமாம். அரசியலுக்குத்தான் போகப்போகிறேன். உங்களிடமும் வந்து எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்பேன்.

    இசை மாஃபியா என்று சொன்னால் நான் உணர்ச்சி வசப்பட்டதாக ராஜ்குமார், ஸ்ரீகாந்த் சொல்கிறார்கள். சென்னை இசை மாஃபியாவை ஊடுருவி தமிழிசையை அதிகப்படுத்த வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் உணர்ச்சி வசப்பட்டதாகத் தோன்றுகிறது என்று எனக்குப் புரியவில்லை.

    தமிழிசை வேண்டுபவர்கள் எங்கேயாவது போகட்டும், தனியான parallel விழாவை நடத்தட்டும் என்கிறார் anonymous. ஆக status quo என்னவோ அதனையே தொடரவேண்டும் என்பது அவர் வாதம். Status quo என்னவாக இருந்தாலும் அதுதான் entrenched mafiaவுக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் ஏற்புடையது. எனக்கு மாற்றம் ஏற்புடையது. அவரவர்க்கு அவரவர் கருத்து.

    சிமுலேஷன் தன் பின்னூட்டத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டதாகத் தோன்றியது. தமிழிசை அதிகமாகக் கேட்கப்படவேண்டும் என்று சொன்னாலே பலருக்கு டென்ஷன் அதிகமாகிவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை. தமிழிசை பாடுபவர்கள் அபத்தமாகப் பாடினார்கள் என்கிறார் சிமுலேஷன். அதிலிருந்து ஒரு சூப்பர் ஜம்ப் அடிக்கிறார்... "தமிழிசை பாடினாலே அபத்தமாக இருக்கும், அந்த அபத்த இசையைக் கேட்க நீங்கள் தயாரா?" என்று என்னை நோக்கி ஒரு கேள்வி. நான் அவர் போயிருந்த கச்சேரிக்குப் போகாமலேயே தமிழிசை பற்றி எழுதியது என் தப்பு என்கிறார்.

    சிமுலேஷன் இசையறிஞர். தமிழ் சினிமாப்பாடல்கள் என்னென்ன ராகம் என்பது பற்றி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியிருக்கிறார். நான் இசை ரசிகன் மட்டுமே. அவர் போகும் கச்சேரிக்கு நானும் போகவேண்டும், அவரைப்போலவே இசையை எடைபோடவேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது நியாயமில்லை.

    இந்தப் பதிவுக்கு வரும் மேலோட்டமான எதிர்ப்புகளைப் பார்க்கும்போது ராமதாஸுக்கு வரும் எதிர்ப்புகள் எவ்வளவு காட்டமாக இருக்கும் என்று புரிகிறது. தமிழிசைக்கான அவரது அமைதியான முயற்சிகள் வெற்றிபெற என் ஆதரவும் வாழ்த்துகளும் நிச்சயம் உண்டு.

    ReplyDelete
  19. நன்றி பத்ரி. காலையில் தமிழிசைச் சங்கம் என்று பார்த்த போது கொஞ்சம் ஐயம் வந்தது. தமிழிசை பற்றி பாரதி எழுதியிருக்கும் கருத்துக்களை படித்துவிட்டு கொஞ்சம் யோசிக்கலாம். அப்புறம் இசைக்கு வேண்டுமானால் மொழி தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு மொழிக்கு (அதுவும் இசைத் தமிழ் இருந்த மொழிக்கு) இசை வேண்டும்; அது வளர்க்கவும் நவீனப்படுத்தப்படவும் வேண்டும். சில மொழிகளில் நவீன இசை முயற்சிகள் சிறப்பாக அமைவது இயல்பிலேயே கடினமானது. உ.ம்: ஜெர்மன் (இது எனது இசை ஈடுபாடுள்ள ஜெர்மானிய நண்பர் மூலம் அறிந்தது) ஆனால் தமிழ் அப்படியான மொழியில்லை என்பதை பழைய இலக்கியங்கள் தொடங்கி இன்றைய திரைப்பாடல்கள் வரை கேட்டு மகிழ்ந்தவர்கள் ஒத்துக்கொள்வர். எனவே மொழி சிறப்பானதாக இருக்கும் போது சங்கீதம் நேர்த்தியானதாக இல்லாமல் இருந்தால் அது பாடல் பயிற்சி இன்மை, அக்கறையின்மை, நல்ல கலைஞர்களை ஆதரிக்காத மனப்பான்மை இதையே காரணமாகச் சொல்லலாம்.

    இசைக்கு மொழி தேவையில்லை; முக்கியமில்லை என்பவர்கள் ஒன்று மொழியே இல்லாமல் வெறும் இராக ஆலாபனையே போதும் என்று இருக்கமுடிகிற சங்கீத ஞானிகளாக இருக்கவேண்டும் அல்லது வேறு உள்நோக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  20. டி.கே. கலா என்று ஒருவர் ஒருமுறை தொலைக்காட்சியில் கல்கியின் பாடல்களை மிக அருமையாய் பாடினார். ஆனால்
    பாடுபவர்களுக்கும் அந்த மொழி தெரியாது, கேட்பவர்களுக்கும் தெரியாது, இதில் என்ன ஆத்மார்த்த ரசனை இருக்கும்?
    ஒருமுறை, சென்னையில் நடந்த ஒரு பரத நிகழ்ச்சி, தமிழ் பாடல்களுக்கு நடுநடுவே விளக்கம் அழகிய ஆங்கிலத்தில். நடந்த
    இடம் தமிழகத்தின் தலை நகரில். நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தமிழ் தெரிந்தவர்கள்தான் :-)

    ReplyDelete
  21. "Music Academy Mafia" vs "Thamizmanam Mafia"

    Let us see who wins this year!

    ReplyDelete
  22. //உஷா சொன்ன கொலைவெறி பாரதியின் பல பாடல்களைப் பல பிரபங்களின் வாயிலிருந்து கேட்ட போது வந்தது. உதாரணமாக "ஷொல்ல வல்லாயோ கிளியே ஷொல்ல நீ வல்லாயோ"

    I think, this is M.S.Subbulakshmi. Isn't right?

    I think, she is not Brahmin. Isn't right? :-)

    ReplyDelete
  23. தகவல்களுக்கு நன்றி பத்ரி

    ReplyDelete
  24. I think, this is M.S.Subbulakshmi. Isn't right?
    I think, she is not Brahmin. Isn't right? :-) /////////

    Yes. She is related to our own Thamizina Kavalar Karunanidhi. :-)

    ReplyDelete
  25. //இசை மாஃபியா என்று சொன்னால் நான் உணர்ச்சி வசப்பட்டதாக ராஜ்குமார், ஸ்ரீகாந்த் சொல்கிறார்கள். சென்னை இசை மாஃபியாவை ஊடுருவி தமிழிசையை அதிகப்படுத்த வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் உணர்ச்சி வசப்பட்டதாகத் தோன்றுகிறது என்று எனக்குப் புரியவில்லை.//

    Dude, that was a pretty uncharacterestic twisting of words by you. What I said was that I agree with your central thesis - that Tamil should be given more prominence, but questioned the usage of the term Mafia for the current organizers. You replied that you will explain further in a later post. Fine. Please do that, but don't put words into my mouth in the meanwhile and make it appear as if I said that your whole post was unnecessarily emotional.

    The organizers and singers have always been way too conservative, way too dogmatic in their way too narrow definition of what constitutes "pure" Classical carnatic music. You will hear no arguments from me on that count.

    But, the term mafia is used for any organization or organizations that colludes to protect a turf by force. So, tell me how KGS, Music Academy, and NGS colluded to keep Tamil music at bay and tell me what "turf" they are protecting and how they use any "force".

    The easiest mistake to make is to attribute sinister intelligence to an action that is easily explained by banal stupidity.

    ReplyDelete
  26. பத்ரி,

    ரொம்பவும் குழு-சார்ந்த (esoteric?) ஒரு கலையாக கர்நாடக மரபிசை அறியப்படுவது, அந்தக் கலை அழிய வகை செய்வதாகும். வலிந்து போர்த்திக்கொண்ட போலியான மேட்டிமையே வெகுஜனங்களை ஒதுக்கிவைக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

    தமிழ்ப் பாடல்களை (சிலப்பதிகாரம் ஆனாலும், தேவாரம் ஆனாலும்,முத்துத்தாண்டவரானாலும், பாபனாசம் சிவனானாலும்) அதிகம் பாடுவது இந்த வகை மரபிசையையே மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்யும். (இதுவும் மிக அவசியம் என்று நினைக்கிறேன்)

    ஆனால் தமிழிசை என்பது ஒரு தனித்துவமான இசைமுறை. ராகங்களுக்கும் பண்களுக்கும் உண்டான தொடர்பு என்கிற ரேஞ்சில் போனால் தமிழிசை நீர்த்துப் போய்விடுகிறது. ஆனாலும் இந்தத் தொடர்பு படுத்துதலே எந்தப் புதியனவற்றையும் அறிமுகப்படுத்தும் வழி.

    ஆக, தமிழ்ப்பாடல்களைப் பாடுவது என்பது மட்டுமல்லாமல் சில ஓதுவார்களிடம் மட்டுமே தஞ்சம் அடைந்து குற்றுயிராக இருக்கும் உண்மையான தமிழிசையை அதன் முழுமையான வடிவில் அரங்கேறச் செய்யவும் வேண்டும். Todd McComb போல தமிழிசைவடிவங்களில் ஆர்வமுள்ளவர்கள் தமிழிசை குறித்த விவரங்களைத் திரட்டி வைக்கலாம். தமிழிசைச் சங்கம் போன்ற அமைப்புகள் மார்கழி கலாட்டாவில் தமிழிசையை முதன்மைப் படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை அமைக்கலாம்.

    ஒரு பிரதேசத்தின் இசை அந்தப் புலத்தோடும், அம்மக்களோடும் பெருந்தொடர்பு கொண்டது. தமிழோடும், தமிழரோடும், தமிழ்ப் புலத்தோடும் தொடர்புள்ள இந்த இசைமுறை இவற்றை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள உதவும் என்றும், இவற்றிலெல்லாம் நம்மை அடையாளங் கண்டுகொள்ளச் செய்யும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

    இசை மாஃபியா என்று நீங்கள் சொன்னதுடன் எனக்கும் முழு உடன்பாடே.

    ReplyDelete
  27. தண்டபாணி தேசிகர் திருவயாறில் தமிழில் பாடியதற்காக அவர் பாடிய மேடையை அலம்பி விட்டதாகப் படித்திருக்கிறேன். புஷ்பவனம் குப்புசாமி கர்நாடக சங்கீதம் பயில விரும்பியபோது அது மறுக்கப்பட்டதாகவும் பிறகே அவர் அண்ணாமலைப் பல்கலையில் சேர்ந்து பயின்றதாகவும் அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். இதையெல்லாம் தமிழிசை குறித்த பயங்களையும், அதே போல மாற்று முயற்சிகள் காலத்துக்காலம் எடுக்கப்படுவதையும் காட்டுகின்றன.

    இதே நேரத்தில் பல இடங்களில் தமிழிசைக்காக கர்நாடக சங்கீதம் நன்றாக அறிந்தவர்களும் உழைப்பதையும் நினைவிற்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  28. திரு பத்ரி

    தமிழிசைக்காக வலுவாக பரிந்துரைத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் 'இசை மா·பியா' என்று சொல்வது கடுமையாக இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தின் ஆரம்ப கால பயிற்சிகளில் ஒரு தமிழ்ப் பாடல் கூட கற்றுத்தரப்படுவதில்லை. கர்நாடக சங்கீத பாடகர்கள் தமிழ்ப் பாடல்களை சரியாக உச்சரித்துப் பாடுவதில்லை. இசையை ரசிக்க மொழி தேவையில்லை என்பது தத்துவார்த்த ரீதியாக சரியாக இருந்தாலும் உண்மையில் தமிழ்ப் பாடல்கள் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கின்றன். பாரதியார் மற்றும் ஊத்துக்காடு பாடல்கள் தரும் நிறைவை தெலுங்குக் கீர்த்தனைகள் தருவதில்லை.

    ("அன்பென்ற மழையிலே..." மிக அற்புதமான ஒரு பாடல். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மேலும் மேலும் அப்பாடலின் மேல் மரியாதைக் கூடிக் கொண்டே போகிறது.)

    நடராஜன்

    ReplyDelete
  29. பத்ரி,

    னீங்கள் உணர்ச்சி வசப்பட்டதை தொடர்ந்து, நானும் உணர்ச்சி வசப்பட்டதாக அறிந்து,
    மீண்டும் இருவரும் உணர்ச்சி வசப்படுவதை நிறுத்தி விடுவோம். விஷயத்திற்கு வருகின்றேன்.

    ஏற்கெனவே கூறியவாறு, னான் தமிழிசை என்றாலே எதிர்க்க வேண்டும் என்று ஒரு போதும் கூறவில்லை. பாரதியாரின் "சின்னஞ் சிறு கிளியே"வையும், கோபாலக்ருஷ்ண பாரதியின், "இதுதானோ தில்லைஸ்தலம்"மையும், இராஜாஜியின் "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா"வையும், சேது மாதவ ராவின் "சாந்தி நிலவ வேண்டும்"மையும், கேட்ட எவரும் தமிழிசைக்கு எதிர்ப்பாளராக இருக்க முடியாது.

    எனது வாதம் என்னவென்றால், தமிழைசையில், தமிழை மட்டும் பார்த்து வியந்து. இசையினைக் கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதே.

    அடுத்தபடியாக, பொருள் தெரிந்த பாடலைக் கேட்டால், அதனை மேலும் இரசிக்க முடியும் என்ற வாதம். இதில் எனக்கு பரிபூரண உடன்பாடு உண்டு. ஆனால், தமிழ்ப்பாட்டு என்றாலே, எல்லொருக்கும் பொருள் புரிந்து விடாது. உதாரணாமாக, பாரதியின், சின்னஞ்சிறு கிளியேவை இரசிக்கத் தெரிந்தவர்களுக்கு, அதே பாரதயின், "தன்னை மறந்து ஸகல உலகினையும்" என்ற மஹாசகதி வெண்பாவினை, கச்சேரியில் பாடினால், எத்தனை பொருள் அறிந்து கொள்வர்? புரியாத வடமொழியை விட, புரியாத தெலுங்கினை விட, ஒரளவு பொருள் தெரிந்த, தமிழ் மேல் என்று இதற்கு மறு வாதம் வைக்கக் கூடும். ஆனால், உண்மை என்னவென்றால், பாடகர்கள், இதுவரை இயற்றப்பட்ட, அனைத்து வடமொழிப்பாடல்களயுமோ, அல்லது அனைத்து தெலுங்குப் பாடல்களையுமோ பாடுபவதில்லை. வாக்கியேயக்காரர்கள் எனப்படும் பெரியோர்கள் எழுதி, பண்பட்டு, பிரசித்தி பெற்ற பாடல்கள மட்டுமே பாடுகிறார்கள். அந்தப் பாடல்களின் வார்த்தைகளால்
    மட்டுமே அவை புகழ் பெறவில்லை. அதன் புகழுக்குக் காரணம், ட்யூன்களுமாகும். இன்று புதிதாக ஒர் பாடலை வழக்கத்திற்குக் கொண்டு வந்து புகழ் பெறச் செய்ய வெண்டுமென்றால், அதன் ட்யூன், நன்றாக இருந்த்து மக்கள் மனதைக் கவர வெண்டும். இல்லையென்றால், தமிழ் என்ற ஒரே காரணத்திற்காக யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

    புகழ் பெற்ற தமிழிசைச் சங்கம், பல வருடங்களாக, ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழிசை நடத்தி வருகின்றது. மற்ற சபாக்களில் பாடும் பலரும், இங்கும் பாடுகிறார்கள். நானும் சென்று கேட்டிருக்கின்றேன். னன்றாகவே இருந்திருக்கிறது. பொங்கு தமிழ் இசையினை ஆதரிக்கும் எத்தனை பேர் அங்கு (ராஜா அண்ணாமலை மன்றம்) சென்று தமிழிசையினைக் கேட்டு இரசித்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

    பொங்கு தமிழ் இசையின் ஒரே ஒரு அபஸ்வர நிகழ்ச்சியை மட்டும் கேட்டு விட்டு, பொதுமைப் படுத்தியதற்கு மன்னிக்கவும். (all generalizations are false, including this என்ற பதத்தில் எனக்கு நம்பிக்க உண்டு.) இந்த முறை நிகழ்ச்சி எப்படி இருந்தது என்று யாரேனும் கேட்டு விட்டுச் சொல்லட்டும். கச்சேரியினக் கேட்காமலே, அதற்கு ஆதரவு என்பதனை விட, ஒரு சோறைப் பதம் பார்த்து, ஒரு பானை எப்படி இருக்கும் என்று சொல்வது மேலல்லவா? :)))

    இங்கு விவாதத்தில் பங்கு பெற்ற பலரும், அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களை (அன்பென்ற மழையிலே..) எல்லாம் கூறி, அவையெல்லாம் கச்சேரியில் பாடப்படுவதில்லையே என்ற தொனி தெறிக்க எழுதி இருந்தார்கள். "அம்மா என்றழைக்காத உயிரில்லயே" என்ற ஜேஸ¤தாஸின் பாடல், உலக மக்கள் அனவரையும் கவர்ந்த பாடல்தான். அதற்காக, அவர் அதனைக் கர்னாட சங்கீதக் கச்சேரியில் பாடினால் எப்படி இருக்கும்?

    னான் மீண்டும் ஒரு முறை கூற விரும்புவது என்னவென்றால், தமிழிசையில், இசை இருந்தால் மட்டுமே ஆதரியுங்கள். வெறும் தமிழ் மட்டும் இருந்தாலே போதும் ஆதரிப்போம், என்று கூறாதீர்களென்றுதான்.

    மற்றபடி மேட்டுகுடி மக்கள் இசை, வைரத்தோடுகளின் கூட்டம், மாபியா கும்பல் போன்ற
    விவாதங்களில் கலந்துகொள்ள விரும்பவில்லை.

    அன்புடன் சிமுலேஷன்

    ReplyDelete
  30. பத்ரி,

    விளக்கமாக எழுதாத பட்சத்தில் உணர்ச்சி வசப்பட்டதாக தோன்றுகிறது என்றுதான் நான்கூறியிருக்கிறேனே தவிர, உணர்ச்சி வசப்பட்டீர்கள் என அறுதியிட்டு கூறவில்லை.

    தமிழிசை வளர்க்கப்பட வேண்டும் என்பதில் என்க்கும் அதீத ஆர்வம் உண்டு.வேறு கோணத்தில் ஆராய்ந்தால் மொழியையும் தாண்டி, மனங்களை வசிகிரீக்கும் தன்மை இசைக்கு உண்டு.

    அதைத்தான் இளையராஜா சிந்து பைரவியில் செய்தார்.மரிமரி நின்னே படலுக்கு காரைக்குடி தியேட்டரில் முன்வரிசைக்காரர்கள் விசிலடித்த ஆச்சர்யத்தை நிகழ்த்தியவர் இளையராஜா.

    தமிழிசையை ஒழிக்க வேண்டும் என்று யாராவது கங்கண்ம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்களா? அவ்வாறான சூழல் இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள நானும் ஆசைப்படுகிறேன்.

    கர்நாட இசையின் ஆர்வலர்கள் குறைந்து வரும் இத்த்ருணத்தில், தமிழிசை மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க பயன்புடுமா? என்பதை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

    தமிழ் ஆர்வமும், தமிழிசை ஆர்வமும் வேறுபடித்தி அலசவேண்டிய விசயங்கள்.தமிழிசை பாடதவர்களை எதிர்ப்பதைக் காட்டிலும் ( எதிர்ப்பதை தப்பு என்று சொல்லவில்லை),ஜனரஞ்சக இசையில் "பருவாயில்லை" என்றெல்லாம் பாடி தமிழை கொலை செய்பவர்களை அதிகம் எதிர்க்க வேண்டும்.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  31. (என் பெண்ணுக்கு கர்நாடக இசைக்கு ஆசிரியர் கிடைத்தும் ஒதுக்கிவிட்டு தமிழும் தெரிந்த ஒரு ஆசிரியருக்காகத் காத்துக்கொண்டிருக்கிறேன்.)

    This should have been the first step we all out to have taken long time ago.

    I feel sad for ramki ayya.He has written "waited for 3 generations".
    Instead of waiting for others to sing and dance as we like,if we could have produced ***one*** person equal to a Sowmya,Sudha,Bombay jayashree,sanjay subramaniam, we would not have been crying about this now.

    மற்றபடி ஒரு துரும்பைக் கூட என்னால் இந்த விஷயத்தில் கிள்ளிப்போடமுடியாது என்பதை அறிந்தே இருக்கிறேன்.

    Why not?!
    You can by making your daughter equal to the artistes mentioned above.All it takes is equal committment and devotion to that art.The next generation will sing and dance to our tunes only if we create the next generation.

    நாங்கள் ரகசியமாக வேறு பெயரில் அழைப்போம். :)) பத்ரி பெருந்தன்மையாக மாஃபியா என்று சொல்லி நிறுத்தியிருக்கிறார்; அவ்வளவுதான்.

    Having such ideas of course will not make any difference as it has not done for 3 generations.Who cares for JSri,Badri,Ramki ayya,anonymous ideas and opinions.And why should they care for our opinions?
    But our kids will care for our opinions.So, making our children learn the art and then excel in it will bring the change.

    ReplyDelete
  32. சரியான நேரத்தில் எழுதப்பட்ட ஒரு பதிவு. தமிழிசையை வளர்க்கும் எண்ணம் இப்பவாவது வந்ததேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்.

    "மாஃபியா" ந்னு சொன்னவுடனே பலருக்கு மூக்கு சிவந்துட்டதே!

    மாஃபியா பத்தி "பொட்டீக்கடைக்கு" போய் பாருங்க...தமாசா பேசிக்கறாங்க!:-)

    ReplyDelete