Thursday, February 02, 2006

விமான நிலைய ஊழியர் போராட்டம்

தி ஹிந்து

தில்லி, மும்பை விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை இடதுசாரிகளும் அவர்களது தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன.

இடதுசாரிகளின் நிலைப்பாடு தனியார்மயத்தை எதிர்ப்பது. ஆனால் தனியார்மயத்துக்கு எதிராக அவர்களால் எந்தவித மாற்று முறையையும் வைக்க முடியவில்லை.

கடந்த சில வருடங்களில் அரசு நிறுவனங்களின் தனியாதிக்கத்தை மாற்றி தனியாரையும் அந்தந்தத் துறைகளில் அனுமதித்ததனால் பல நன்மைகள் மக்களுக்குக் கிட்டியுள்ளன. தொலைத்தொடர்பு ஒரு முக்கியமான உதாரணம். இப்பொழுது ரயில் பாதைகளில் தனியார்கள் சரக்கு ரயில்களை ஓட்டலாம் என்று மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த முடிவு மிக முக்கியமானது. அரசால் வேண்டிய அளவு சரக்கு ரயில்களை விடமுடியவில்லை. வேகமாக வளரும் பொருளாதாரத்தில் கட்டுமானத்தை விரிவாக்க ஏகப்பட்ட தனியார் முதலீடு தேவைப்படுகிறது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் தனியாரை அனுமதித்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று விமானச்சேவை இந்தியாவில் வெகுவாக முன்னேறிவருகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் சிறப்பான சேவை கிடைத்துவருகிறது. அதிகமான விமானங்கள், பல சிறு நகரங்களுக்கு இணைப்பு விமானச் சேவை ஆகியவையெல்லாம் தனியார் வரத்தால் மட்டும்தான் சாத்தியமாகியுள்ளன. ஆனால் இப்படி அதிகமான வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை விமான நிலையங்களால் வழங்க முடிவதில்லை. ஓரளவுக்குத் தொடர்ச்சியாக விமானப் பயணம் மேற்கொள்பவன் என்ற முறையில் கடந்த ஓரிரு வருடங்களில் விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நேரடியாகச் சந்தித்துள்ளேன். அரசால் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவால் - முதலீடுகளைச் செய்து வசதிகளைப் பெருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தனியாரை அழைத்து கூட்டு நிறுவன முறையில் வசதிகளைப் பெருக்க முடிவு செய்தனர். அதுவும் நெருக்கடி அதிகமான தில்லி, மும்பை நகர விமான நிலையங்களில் மட்டும்தான்.

இதன்படி அரசும் தனியாரும் பங்குதாரராக உள்ள கம்பெனி ஒன்று தில்லி, மும்பை விமான நிலையங்களைப் பராமரிக்கும். ஆக இது முழுமையான தனியார்மயமாதல் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதி அரசுக்கு வருமானப் பங்காக அளிக்கப்படும். நிலம் அரசின் பெயரில்தான் இருக்கும். இந்த கம்பெனிக்கு நீண்டகால வாடகைக்கு வழங்கப்படும்.

ஏற்கெனவே வேலையில் இருக்கும் அனைவருக்கும் வேலை தொடர்ந்து இருக்கும். மாருதி உத்யோகில் இது நடக்கவில்லையா? பெரிதாக வளரும் எல்லா நிறுவனங்களிலுமே மேலும் அதிகமாகத்தான் வேலையாள்கள் எடுக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு மேல்முதலீடு எதுவும் செய்யாமலேயே வருமானத்தையும் பெறும், பொதுமக்களுக்கும் விமானச் சேவை நிறுவனங்களுக்கும் வசதிகள் பெருகும். ஆனால் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இந்தத் தனியார்மயமாக்கத்தால் வேலைகள் போய்விடும் என்று எதைவைத்துக்கொண்டு சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

முன்னொரு காலத்தில் வங்கிகள் கணினிமயமானபோதும்கூட அதைக் குருட்டுத்தனமாக எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இறங்கியவர்கள் இந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள். இன்று ஒவ்வொரு வங்கியும் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டு அதனால் மக்களுக்குப் பெருத்த பயன் கிட்டியுள்ளது. அதே நேரம் வங்கித்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகமாகியுள்ளன.

குருட்டு எதிர்ப்பு இடதுசாரிகளின் கொள்கை முடிவு.

ஆனால் பிற இடங்களில் நடந்ததுபோலவே இடதுசாரிகளின் வேலை நிறுத்த முடிவு சில நாள்களில் மறக்கப்படும். தோழர்கள் வேலைக்குத் திரும்புவார்கள். அவர்களது வேலை பறிபோகாது. ஆனால் இந்த வேலை நிறுத்தம் நடக்கும்போது பல ஆயிரம் மக்களது நேரமும் பணமும் இதற்கிடையில் விரயமாகும். அதைப்பற்றியெல்லாம் இடதுசாரிகள் கவலைப்படுவதில்லையே?

12 comments:

  1. இடதுசாரிகள் ஆண்ட காலத்தில்தான் கொச்சியில் நெடும்பாஸ்ஸேரி விமானநிலையம் இந்தியாவின் முதலும் தனியுமான தனியார் துறை விமானதாவளம் கட்டமைக்கப் பட்டது.

    தில்லி பற்றி தெரியாது; மும்பையில் மட்டுமாவது, புதிய பன்னாட்டு விமானநிலையம் வரவிருப்பதால், அதனை தனியார் கட்டுமானத்திற்கு விட்டு பிறகு மெதுவாக தற்போதைய விமானநிலையத்தை decommission செய்திருக்கலாம்.

    ReplyDelete
  2. இந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு ஆர்வமும் இருப்பதாக தெரியவில்லை. கௌரவ் சப்னிஸ் எழுதி இருக்கும் இந்தப் பதிவை படித்துப் பாருங்கள். வேலை நிறுத்தம் பெரிய அளவில் நடந்தது என்று காட்ட எப்படி காவல் துறையை தூண்டி தடியடி நடத்த வைத்துள்ளார்கள் என்று தெரியும். மலையாளிகளும் வங்காளிகளும் ஓட்டுப் போடுவதன் விளைவு இந்திய முழுமைக்கும். இந்த இரு மாநிலங்களும் ஆதரிக்காவிட்டால் அரசியல் தளத்தில் இடதுசாரிகள் இந்தியாவில் இல்லாமலே போயிருப்பார்கள்.

    ReplyDelete
  3. மலையாளிகளும் வங்காளிகளும் ஓட்டுப் போடுவதன் விளைவு இந்திய முழுமைக்கும்.

    மிகுதிப்பேர் பிஜேபிக்கு ஓட்டுப்போட்டதன் விளைவு பாபர்மசூதி, குஜராத் என்பதையும் காங்கிரசுக்குப் போட்டதன் விளைவு போபர்ஸ்பீரங்கி, மிஸா என்பதையும் மறந்ததேனோ? வர வர எடுத்ததற்கெல்லாம் இடதுசாரிகளையும் தீவிரவாதத்தையும் சாடுவது மத்தியதட்டிலே குந்திக்கொண்டு ஆபிஸ் லஞ் அவர்லே ப்ளாக் தட்டும் நமக்கெல்லாம் ஒரு பாஷனாகி விட்டது. ;-) இதுல பாரின்வேறே போயி க்யூபா, காஸ்ட்ரோன்னு இஷ்டபடி காஸ் கழிப்பது அடுத்த லெவல் ;-)

    தொழிலாளிகளுக்கும் இடதுசாரிக்கட்சிகள் தொழிற்சங்கமேல்மட்டங்கள் இடையே இருக்கின்ற இடைவெளிக்கு இடதுசாரிகளின் சொசைட்டியை அப்டேட் பண்ணிக்கொள்ளாத தத்துவவறுமையும் தொழிற்சங்கத்தலைவர்களின் மாபியா மெண்டாலிட்டியுமே காரணம். ஆனால், சுத்தமாக திறந்த வெளியிலே க்ரேவிட்டியிலே காப்பிடலிசத்தை விழவிடுவதுதான் சுத்தமான ஒத்தைவழின்னா சொல்ல ஏதும்மில்லை சாமி.

    ReplyDelete
  4. ரொம்ப சரியா சொன்னீங்க பத்ரி.

    கம்யூனிஸ்ட் கட்சி ஒழிஞ்சாதான் நாடு உருப்புடும்.

    வேலை செய்யாம எப்படி சம்பாதிக்கலாம் இதுதான் இவங்க யோசிக்கிறது.

    சைனா மாதிரி கம்யூனிஸ்ட் நாட்டிலேயே தனியார் கம்பெனிகள் கோலோச்சி இருக்கறதுனாலதான் அது பொருள் சந்தையில் அமெரிக்காவின் வலதுகையா இருக்கு.

    ஒரு மனிதனின் கண்,மூக்கு,கை,கால் இவை ஒவ்வொன்றும் ஒரு கூட்டணி கட்சி என்றால் இந்த கம்யூனிஸ்ட் மலம். அது வெளியேறினால்தான் மனிதன் நிம்மதியாக இருக்க முடியும். அது உள்ளே இருந்தால் வேலைக்கு ஆவாது.

    ReplyDelete
  5. Let the leftists read this news...

    http://www.indianexpress.com/archive_full_story.php?content_id=87042

    ReplyDelete
  6. பின்னூட்டத்தில் வரும் கருத்துகள் அனைத்துடனும் எனக்கு உடன்பாடு கிடையாது. அவற்றை என் கருத்துகளாகப் பார்க்கவேண்டாம்.

    இடதுசாரிக் கருத்துகளுக்கு அவசியமும் தேவையும் எப்பொழுதும் உண்டு. இன்று அதனால்தான் பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இடதுசாரிக் கட்சிகள், தலைவர்கள் முன்னிலைக்கு வருகின்றனர்.

    ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் இடதுசாரிகள் எடுக்கும் பல நிலைப்பாடுகள் சகித்துக்கொள்ள முடியாத நிலையில்தான் உள்ளன. முக்கியமாக இப்பொழுது நடக்கும் விமான நிலைய தனியார்மயமாக்கல் எதிர்ப்பு.

    மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது; வங்காளிகள்/மலையாளிகள் மீதும் பழிபோடுவது சரியல்ல.

    கவுரவ் சப்னிஸ்; இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிகளுக்கு நன்றி. சப்னிஸ் சொல்லியிருப்பதுபோல யாரும் ஆர்வத்துடன் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது போலத் தெரியவில்லை. நடப்பதெல்லாம் நாடகமே. இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்காக நடப்பதே இது.

    ReplyDelete
  7. ஏற்கெனவே வேலையில் இருக்கும் அனைவருக்கும் வேலை தொடர்ந்து இருக்கும்.

    Really.... Do you know what happened after to the employees of Madura Bank.....

    அதே நேரம் வங்கித்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகமாகியுள்ளன.

    I am sure that you are JOKING... The job oppurtunities in the Bank are on the decline..... The Voluntary retirement scheme was introduced to BRING DOWN THE JOB OPPURTUNITIES......

    குருட்டு எதிர்ப்பு இடதுசாரிகளின் கொள்கை முடிவு.

    That is the real problem with left.... They oppose for the sake of opposing... While privatisation of Banks and Insurance is not needed in India AT PRESENT (may be later, but not now), It is high time we privatise the airports.


    இந்தத் தனியார்மயமாக்கத்தால் வேலைகள் போய்விடும் என்று எதைவைத்துக்கொண்டு சொல்கிறார்கள் என்று புரியவில்லை.... Ha Ha Ha... I will tell you,.... There are a lot of people, who call themselves as "Union Leaders" and don't do any work. They will loose the job in a private concern and NOT THE GENUINE WORKERS... So the statement, is infact :) correct :) :)

    ReplyDelete
  8. //இடதுசாரிக் கருத்துகளுக்கு அவசியமும் தேவையும் எப்பொழுதும் உண்டு.

    ஏன் என்று சற்று விளங்க்குங்களேன். அவர்களுடைய பிறழ்வான சித்தாந்தத்தால் இவ்வுலகில் யாரும் பயனடையார்.

    //அதனால்தான் பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இடதுசாரிக் கட்சிகள், தலைவர்கள் முன்னிலைக்கு வருகின்றனர்.

    எந்தக் காரணத்தால் கேரளத்திலும் வங்கத்திலும் முன்னுக்கு வருகிறார்களோ அதே காரணத்தாலே இலத்தீன் நாடுகளிலும் முன்னுக்கு வத்து அந்நாடுகளின் எதிர்காலத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். மக்கள் போதிய பொருண்மிய அறிவும் விழிப்புணர்ச்சியும் பெறும் வரை இந்த பொருண்மிய வளர்ச்சிக் கொல்லிகள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

    //மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது;

    நான் ஒரு வலதுசாரி இருந்தும் அவர்களை "மலம்" என்பது கீழ்த்தனமானதென்றெண்ணுகிறேன். நீங்கள் அதை ஏற்கத்"தக்கது" என்று சொல்வது எனக்கு வியப்பும் மனவருத்தமும் அளிக்கிறது

    ReplyDelete
  9. Strikes by Govt/public sector employees in india are not a new pheonomenon. Unfortunately or fortunately, people are used to these kind of circumstances. The employees too are well aware of the proceedings and they are neither enthusiastic nor emotive regarding bandhs/strikes. The trade unions too knew their limitations and could adjust according the situations. As for their political bosses, this is just another ritual of the leftist kind.

    By the way, any privatization or multinational entry in the aviation sector will only do service to a microscopic minority of indians. For the larger people, it has nothing to offer. Moreover, this trend is bound to increase our dependency on other nations (read US and other Western Powers) only.

    ReplyDelete
  10. "மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது"

    Badri - is there a typo here or is this what you had meant?

    -sk

    ReplyDelete
  11. //மற்றபடி இடதுசாரிகளை 'மலம்' என்று சொல்வது ஏற்கத்தக்கது;

    ஏற்கத்தக்கது அல்ல என்று சொல்ல நினைத்து, எழுதும்போது தவறு நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  12. டாக்டர் ப்ரூனோ: மஜுரா பேங்க் - ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டது. இரண்டு ஒரேமாதிரியான நிறுவனங்கள் இணைக்கப்படும்போது சில வேலைகளாவது போகத்தான் செய்யும். இரண்டுமே தனியார் நிறுவனங்கள் என்பது இங்கு முக்கியம்.

    பல பொதுத்துறை வங்கிகள் வாலண்டரி ரிடையர்மெண்ட் ஸ்கீமைக் கொண்டுவந்துள்ளன. அதை ஏற்றுக்கொண்டு தாங்களாகவேதான் பலர் வெளியேறியுள்ளனர். அப்படி வெளியேறியவர்களுக்குக் கை நிறையப் பணம் கிடைத்துள்ளது. வெளியில் அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர்கள் வேறு வாய்ப்புகள் இன்றி வெளியேற்றப்படவில்லை.

    வங்கித்துறையில் கடந்த பத்து வருடங்களில் எத்தனை புதிய பிராஞ்சுகள் தொடங்கப்பட்டுள்ளன? எத்தனை புதிய இளைஞர்களுக்கு வேலைகள் கிடைத்துள்ளன? நிச்சயமாக ஃபைனான்சியல் செக்டாரில் ஏகப்பட்ட புதிய வேலைகள் கிடைத்துள்ளன. பொதுத்துறை, தனியார் துறை என்று இரண்டையும் சேர்த்து.

    பொதுத்துறை வங்கிகளை அரசு தனியார் மயமாக்கவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே இருந்த துறையில் தனியார் வங்கிகளையும் அனுமதித்தனர். விளைவாக இன்று ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் பெருமளவில் வளர்ந்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய வங்கியாக ஐசிஐசிஐ உருவாகியுள்ளது. மக்களுக்கும் இதனால் ஏகப்பட்ட பயன்கள் கிடைத்துள்ளன.

    ReplyDelete