Tuesday, September 27, 2011

2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி

வெகு நாள்களுக்குப் பிறகு 2ஜி பற்றி எழுதுகிறேன். என் கருத்தில் இப்போதும் மாற்றமில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் இல்லாமல் கொடுத்ததால் நஷ்டம் ஏதும் வந்துவிடவில்லை என்றே தொடர்ந்து சொல்லிவந்துள்ளேன். இப்போதும் அப்படியே.

சுவாமி என்ன வாதிடுகிறார்? இராசா தனியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அமைச்சரவை, இரு அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித்து, முடிவை அவர்களே எடுக்குமாறு கூறியது. அந்த இரு அமைச்சர்கள் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதமபரமும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசாவும். எனவே ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் சும்மா கொடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டது என்றால் அதற்கு இருவருமே காரணம். எனவே இராசாவைப் போலவே சிதம்பரத்தையும் விசாரித்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்கிறார் சுவாமி.

நியாயமான வாதம்தான். இதனால்தான் அரசு ஆரம்பத்திலிருந்தே, ஒரே குரலில் பேசியிருக்கவேண்டும். ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாததால் நஷ்டம் ஏதும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருந்தால் இத்தனை கூத்தும் தேவையே இல்லை. கொள்கை முடிவு. அவ்வளவுதான். ஆனால், இந்தக் கொள்கை முடிவை எடுக்க அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தரப்பட்டது என்று நிரூபணம் ஆனால் அல்லது ஏதோவிதத்தில் பணம் கைமாறியுள்ளது என்றால் அப்போதுதான் குற்றம் நடந்திருக்கிறது என்று ஆகிறது. அந்த நோக்கில் விசாரணை நடந்தால், வழக்கின் நடைமுறையும் வேறுவிதமாகச் சென்றிருக்கும்.

பின்னால் வந்த நிதியமைச்சர் பிரணவ் முகர்ஜி, சிதம்பரம் ஏலம் விடாதது தவறு என்று சொன்னால், அதனால் பெரிய சிக்கல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முகர்ஜியின் கருத்து தவறு என்று சிதம்பரத்துக்குத் தோன்றலாம். சிதம்பரத்தின் கருத்து தவறு என்று முகர்ஜிக்குத் தோன்றலாம்.

தினம் தினம் சுவாமி ஏதோ புது ஆவணங்களை எடுத்துக் காண்பித்து அடித்து ஆடுகிறார். அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அரசுத் தரப்பு விழிக்கிறது. இதில் பாவம், சிக்கிக்கொண்டவர்கள் இராசாவும் கனிமொழியும்தான். அவர்களை இன்னமும் சிறையில் வைத்திருக்க என்ன முகாந்திரம் உள்ளது என்றே தெரியவில்லை. கூப்பிட்டால் தினம் தினம் நீதிமன்றத்துக்கு வந்து வாதாட அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஊரைவிட்டு ஓடிப் போய்விடுகிறவர்கள் மாதிரித் தெரியவில்லை. பின் எதற்குச் சிறை?

நாளை அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று முடிவானால், சிறை நாள்களைத் திருப்பித் தரமுடியுமா நீதிமன்றத்தால்?

கலைஞர் தொலைக்காட்சி விவகாரத்தில் சிக்கல் இல்லாமல் இல்லை. பணம் எதற்காகவோ அங்கே உள்ளே வந்துள்ளது. அதனை விசாரிக்கலாம்; கடுமையான அபராதம் போடலாம். ஆனால் லட்சம் கோடிகள் கையாடப்பட்டதாகச் சொல்லி, இருவரைச் சிறையில் வைத்து, கடைசியில் வழக்கே பிசிபிசுத்துப் போகும்போலத் தோன்றுகிறது. இன்றுவரை வலுவான வழக்கு ஏதும் என் கண்ணுக்குத் தெரியவில்லை.

சுவாமி மட்டும் ஆனால் அயராது போராடுகிறார். அந்த ஒரு விடாமுயற்சிக்காக மட்டும் அவரைப் பாராட்டலாம்.

20 comments:

  1. It's impossible to question the policy decision unless a financial transaction(or motive) can be unearthed. But there is a valid case against Raja(& Kanimozhi) for favoring certain companies by advancing dates, allowing ineligible real estate companies,tweaking FCFS rule i.e. whoever comes with the check within the stipulated time. In my view, the contentious issue against Chidambaram is his approval for divesting i.e. company started divesting even before roll out of services and chidambaram said this does not amount to sale of spectrum license.

    ReplyDelete
  2. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதனால் பணம் மடைமாற்றிவிடப்பட்டது. அதற்கும் ஏலத்தில் விடாமல் இருந்ததற்குமான தொடர்பு என்ன? ஆகிய காரணங்களுக்காகத்தான் கனிமொழியின் கைது.

    ReplyDelete
  3. First come First served is ok. ஆனால் ராஜா FCFS பாலிஸியை கடைபிடிக்கவில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய தேதியை எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று மாற்றியது(prepond), FCFS க்கான க்ரைடீரியாவை மாற்றியது (விண்ணப்பித்த தேதி அல்ல, சர்வீஸுக்கான கட்டமைப்புகளை நிறைவேற்றுவதில் FCFS), திடீரென்று ஒரு மணி நேரத்தில் கோடிகளில் வங்கி காசோலை என்று எல்லாவற்றிலும் பித்தலாட்டம் நடந்துள்ளது.

    பல்வாவிடம் வாங்கிய பணம் கடனுக்காக என்பதை CBஈ வழக்கு பதிவு செய்த பின்பு கூறியது என்பதெல்லாம் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்கின்றன. மேலும் DOTயின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டது, அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு லைசென்ஸ்கள் வழங்கியது, ஓட்டாண்டிகள் "லா லா" பாடல் முடிவதற்குள் பணக்கார்கள் ஆவது, நீரா ராடியாவும், டாடாவும் ராஜாவிற்காக lobby செய்தது, ராஜாவின் மருத்துவமனைக்காக டாடா நிலம் தருவது என்பதெல்லாம் வழக்கிற்கு சம்பந்தமில்லாதது என்(று நீங்கள் நம்புவது)கது கவனிக்கத் தக்கது.

    --Ganesh

    ReplyDelete
  4. ஆரியர்கள் தீயொரியெல்லாம் நிரூபிக்கப்பட்டுவிட்டதா சார்?

    ReplyDelete
  5. கனேஷ் என்ற ஏமாளிக்கு என் அனுதாபங்கள், பத்ரிதான் அறிவு ஜீவியாயிற்றே? அவருக்கு தெரியாதா இதெல்லாம், அவர் அமெரிக்க, கார்ப்பொரேட் ஆதரவாளர் என்று ஏற்கனே வாய் மலர்ந்துள்ளார், அவர் இதை எதிர்த்தால் தவறு. நாளை அவரும் இந்த தொழிலில் வந்து திகார் சென்றாலும் இதை தான் சொல்வார்.

    ReplyDelete
  6. இந்த பதிவின் அரைக்கால், முழுக்கால் புள்ளி கூட விடாது முழுமையாக ஒத்துப்போகிறேன் என்று சொல்லத்தான் பின்னூட்டப் பெட்டியை கிளிக் செய்தேன்.
    ஆனால், கணேஷ் வந்து குழப்பி விட்டுவிட்டார். பத்ரி, கணேஷின் கேள்விகளுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? தெரிந்து கொள்ள மிக ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  7. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் இல்லாமல் கொடுத்ததால் நஷ்டம் ஏதும் வந்துவிடவில்லை என்றே தொடர்ந்து சொல்லிவந்துள்ளேன்
    --------------------------------------------------
    சார்!
    இலவசமாக கூட கொடுக்கலாம் - ஆனால், அதை வாங்கிய நிறுவனங்கள், விலையை மிக குறைவாக வைக்க வேண்டும், மற்றும் , அந்த நிறுவனகளுக்கு அதிக வருமான வரி போட வேண்டும்( அவை வாடிக்கையாளர்களை சேர்த்து தலை எடுத்த பிறகு) என்றல்லவா கூறி வந்தீர்கள்!

    ஆனால் ஏலம் இல்லாமல் வாங்கிய நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் விலை அதிகமாக தானே வாங்குகிறார்கள் :(
    இதாற்கு தங்களின் கருத்து என்ன ?

    ReplyDelete
  8. mr.badhri please read daily pioneer, who unearthed the scam not the hindu who were supporting raja, the telecom minister decides suddenly on one fine day that all those who apply by today 3pm only will be given license and that too they should apply with the bank dd for heavy sum, and in the mad rush some of the influential companies only apply and get it. and laters these very companies sell it to others for huge profits

    ReplyDelete
  9. நடராஜ்: பிரதாப் பானு மேத்தா எழுதியுள்ள அருமையான கட்டுரை - http://www.indianexpress.com/news/yes-ministers/852882/0

    இப்போது சுவாமி கோர்ட்டில் கிளப்பியிருக்கும் வழக்கைத் தவிடுபொடியாக்கியிருக்கலாம் ஒரு அரசு சரியாக வாதிட்டிருந்தால். கொள்கை முடிவே தவறு என்பதாகத்தான் இன்று நாட்டில் பெரும்பாலானோர் பேசுகிறார்கள். இல்லை என்று ஒரு குரலில் ஆரம்பத்திலிருந்தே அடித்துப் பேசியிருக்கவேண்டும் மன்மோகன் சிங் அண்ட் கோ. இல்லாமல் செய்து இப்போது குக்கி திருடிய குரங்குபோல முழிக்கிறார்கள். நன்றாக நாசமாகப் போகட்டும்.

    அடுத்த பிரச்னை, FCFS என்பதில் நடந்துள்ள குழப்படிகள். அதில் லஞ்சம் இருக்கலாம். அதனை விசாரிக்கும் முறையே வேறு. அதனை விசாரியுங்கள்; தவறுகள் நடந்திருந்தால் தண்டனை கொடுங்கள் என்றுதான் நான் சொல்லிவந்துள்ளேன். ஆனால் கொள்கையே தப்பு, அதனால்தான் 1,75,000 கோடி நஷ்டம் என்று சொல்வதைத்தான் கடுமையாக எதிர்க்கிறேன்.

    ***

    ராம்குமார்: நான் பலமுறை இவற்றை இங்கே விளக்கியிருக்கிறேன். இன்றுவரை யாரும் ஸ்பெக்ட்ரத்தை “இன்னொருவருக்கு” விற்று லாபம் சம்பாதித்துவிடவில்லை. சிஏஜிக்கே புரியவில்லை என்பதால் உளறிவைத்திருக்கிறார்கள். பயனீர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படப் போவதில்லை. பாஜகவுக்கு நியாயமாக நடந்துகொள்கிறார் சந்தன் மித்ரா. அவ்வளவுதான்.

    ***

    வெங்கட்:

    மொபைல் சேவை விலை அதிகமாகிவிட்டதா? எந்த நாட்டில்? எனக்கு மாதம் 500-600 ரூபாய்க்கு மேல் ஆவதில்லை. (1998-ல் மாதாமாதம் 25,000 ரூபாய் கட்டிக்கொண்டிருந்தேன். பணவீக்கத்தையும் சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போதைய என் செலவு ஜிபிஆர்எஸ் சேர்த்து!)

    இன்று, மாதம் 99 ரூபாய் போஸ்ட் பெய்ட் கனெக்‌ஷன்கூடக் கிடைக்கிறது. வெறும் இன்கமிங் கால் மட்டும் போதும் என்று வைத்திருப்பவர்களுக்கு அவ்வளவுதான் செலவே. உலகில் ஏதேனும் ஒரு நாட்டில் இதைவிடக் குறைந்த விலையில் மொபைல் சேவை கிடைக்கிறதென்றால் சொல்லுங்கள். நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக அந்த நாட்டுக்குச் சென்றுவிடலாம்.

    ReplyDelete
  10. FCFSக்கான தேவைகளை பற்றி அருண் ஷோரி மிக விரிவாக பேசியிருக்கிறார். அதுவும் 2001 காலகட்டத்திற்கான தேவைகள் மட்டுமே என் கிறார். அது கூட அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு மட்டுமே. காங்கிரஸ் ஆட்சியின் போது முடிவெடுக்கும் உரிமை டெலெகாம் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு மாற்றப்படுகிறது. இந்த இரு அமைச்சகம் மட்டும் இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம் என்றும், கருத்து வேறுபாடு இருந்தால் பிரதம மந்திரியையோ அல்லது மற்ற அமைச்சகங்களையோ ஈடுபடுத்தலாம் என்பதாக மாற்றப்படுகிறது(தயாநிதி மாறனால்). சிதம்பரம் 2G விஷயத்தில் ஏலம் விடும் முறைக்கு ஆதரவாக இருந்திருக்கிறார் என்று office memorandam மூலம் தெரிய வருகிறது. ஆனால் ராஜாவின் முடிவுகளை தடுத்து நிறுத்த எந்த முடிவும் செய்யவில்லை. சிதம்பரம் நினைத்திருந்தால் அமைச்சரவையின் பரிசீலனைக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றிருக்கலாம் என்பது தான் தற்போதைய நிதி அமைச்சரின்(அல்லது அவரது அமைச்சகத்தின்) கருத்து.

    இது தவிர பாதுகாப்பு அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் நாட்டின் பாதுகாப்பை மனதில் கொண்டு சில கம்பெணிகளுக்கு(AT Salad, ISI தொடர்புடைய கம்பெணி) லைசென்ஸ் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இவையனைத்தும் எந்த காரணங்களும் இன்றி புறக்கனிக்கப்பட்டுள்ளன. CBI கொள்கை முடிவுகளை மட்டும் கேள்வி கேட்கவில்லை.

    ஆனால் இதில் சிதம்பரம் மட்டும் குற்றவாளியல்ல. பிரதம மந்திரியும் குற்றவாளியே. ஏனெனில், நிதி அமைச்சரிடமிருந்து பிரதம மந்திரிக்கு சென்ற கடிதங்களில் இந்த விவாதங்கள் இடம் பெருகின்றன. இன்னும் சரியாக சொன்னால், ப்ரதம மந்திரியையே முதன்மை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.

    --Ganesh

    ReplyDelete
  11. In a country like india ,U cannot keep even a normal person in jail for 8 months.I believe,If a(ex) minister can be put on jail for 8 long months,the magnitude of crime is so huge and a chance of criminal culpability is so strong.I do not think that the judiciary is toeing along the public sentiment in this case.Just because the govt has given mobiles at low price doesn't fit the argument.Kerosine is given at subsidised rates,that doesn't prove that nothing is wrong in the system.

    Muthu krishnan

    ReplyDelete
  12. Whether there is any issues in the FCFS implementation, it is being investigated and it is for courts to decide on this matter.But it is being made out that the entire queue is modified and the impression is, deserved companies didn't get the spectrum itself.

    In reality, even with the so called changes in FCFS, it doesn't have any real impact in 21 circles.
    **************
    Circles other than Delhi:

    start up specturm has been given to all the license holders.

    If the priotity list is based on 'FCFS by application date' or 'date of complying LOI conditions', all the licenses have got spectrum. No one is without specturm now.

    Only impact is whether they got the spectrum in 2008 or 2009.Given the delays in starting the service by the licenses, this timing has not benefitted anyone in real terms.Datacom ( the company moved up in the queue in almost all circles),is not at all charged by CBI till now.
    ********************
    In Delhi:

    Swan moves to 1st position from 2nd and got the spectrum in 2008.
    Spice came down to 2nd position from 1st and still didn't receive the spectrum.

    ********************

    ReplyDelete
  13. பத்ரி,

    ///இன்று, மாதம் 99 ரூபாய் போஸ்ட் பெய்ட் கனெக்‌ஷன்கூடக் கிடைக்கிறது.///

    ரூ.99 எல்லாம் தேவையில்லை! ப்ரீபெய்ட் என்றால் ரூ.30 போதும் (வோடஃபோன்)!!

    ~சரவணன்

    ReplyDelete
  14. Sir,
    The mobile rates are lower only because of the population of this country, the mass popularity of mobile phones and the heavy competition in the market. The companies that were awarded the 2G spectrum sold the same to real telecom companies for a bomb and so all the government and public money went to those few pockets. I dont understand how you are conveniently overlooking this basic fact. If the spectrum was bought by the real telecom companies for the original price then probably we would be making calls at 1p/minute throughout the country.

    -Saro

    ReplyDelete
  15. கொள்கை முடிவு. அவ்வளவுதான். I fully agree with this. But tamil nadu goverment also taken a decision on implementing new education standards, how come its been stopped by high court? This is also கொள்கை முடிவு

    ReplyDelete
  16. This is my understanding.

    1. The fact that there is no consensus within the Government and more people favored Auction shows that Govt had difference of opinion in the policy. And fixed license is forced possibly because of corporate lobbying. Much like how Nuclear Reactor companies lobby.

    2. Because the telecom operator has paid more money as license cost does not mean that they cant provide cheap services. The 3G rates are not alarming. They are in comparison with the Broadband charges. The call rates are not Rs16/minute. Even the Data rates are moderate. Cheap price is because of competition and not necessarily because of cheap license fee.

    2. A business cannot be profitable on Day 1. Each business takes some amount of time to break even. In 2000 Telecom companies did not have money to setup a business. Hence it was decided to share the profit instead of upfront cost. But now they have enough money. So they can afford to pay the upfront cost. From consumer point of view the telecom companies charge you either to make up for the initial license fee or for the tax telecom companies pay to Government as part of revenue sharing model. Irrespective of the model the consumers are anyway charged. There is no difference. So let me reiterate. Cheap price is because of competition and to some extent TRAI and not because of cheap license fee.

    3. If a business is ready to pay say 3000 crores for a license and if the Government says no no Rs 1000 crores is enough, then it means that its a loss to the nation. If anyone says that cheap license fee will lead to cheap mobile charges and hence should be charged lesser, then the govt should first remove the 45% tax in Petrol as Fuel is more essential to citizens then Mobile.

    4. In U.S, i dont remember the state, there was heavy lobbying(by AT&T and the likes) to waive of some charges with a promise that they will improve the broad band connection in return. Nothing of that sort happened even after the waiver. Now U.S lags in broad band connection compared to countries like Singapore, Japan, Korea and even some Euorpean countries.

    Point is, the greedy private companies are not going to do anything to enhance the lifestyle of people unless they are forced to or if there is a popular demand. Unlike Government they are not doing charity. So you cant expect that from them. In a developing economy, its better the Government maximizes its revenue and distributes its by investing in core areas. That does not mean i support MNREGA. I mean in infrastructure, education and healthcare.

    ReplyDelete
  17. @R.Sriram

    *****the greedy private companies are not going to do anything to enhance the lifestyle of people unless they are forced *******************

    It is not the job for private companies to enhance the lifestyle of people. A level playing field for private players will benefit the consumers .

    ******the Government maximizes its revenue and distributes its by investing in core areas.*****

    This is a typical leftist thinking. I dont want my country to become a Soviet/Cuba.

    ReplyDelete
  18. @Anon

    I agree that the job of private companies is not to enhance the lifestyle of people. And it is also not their job to lobby for benefits at the cost of common man. Level playing field does not mean bending backwards to support them. Level playing field means transparent and quick decision making on the part of Government without any bias. Whether it is profitable to them are not depends on their adoption.

    While i agree on Minimum government maximum governance, where most people differ is in the definition of governance.

    My point is not to maximize revenue by Govt involving in all business activities. Point is to maximize its revenue so that it can invest in areas like education, healthcare and infrastructure to improve the lifestyle of common man across the board without any bias. Even by your terms its not the job of private players. So its the job of Government and it needs money to implement them.

    My idea is of market economy overseen by Regulatory bodies like TRAI/IRDA etc. If this is leftist, so be it. Pure market economy aint successful. Look at the income spread(gap) between poor and rich even in so called rich nations. Why are European countries falling apart.

    ReplyDelete
  19. பொன்.முத்துக்குமார்Thu Sep 29, 10:00:00 PM GMT+5:30

    பத்ரி,

    சிஏஜி அறிக்கை சொல்லிய நஷ்டம் மிகைப்படுத்தப்பட்டது அல்லது தவறான யூகம் அல்லது அடிப்படையற்றது என்றே கொள்வோம்.

    நமது தேசத்தில் தொலைதொடர்புத்துறை என்பது அசுரவேகத்தில் வளர்ந்துவரும் துறை; இன்னும் தேவையும் செய்யவேண்டியவையும் நிறையவே இருக்கிறது; வருமானம் மிக மிக அதிகமாக கொட்டக்கூடிய துறை. எனும்போது, 2G அலைக்கற்றை என்பது காமதேனு போன்றதொரு revenue generating resource. இதை ஏலத்தில் விட்டு அதிக பணம் ஈட்டவேண்டியதுதானே அரசின் கடமையாக இருக்கவேண்டும் ? கொள்கை முடிவு என்பது புடலங்காய் சமாசாரம். 2001-ல் பின்பற்றவேண்டிய நடைமுறையையே பின்பற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஏதேனும் நிர்ப்பந்தம் உள்ளதா என்ன ?

    சாதாரண சாலை போடும் ஒப்பந்தமே டென்டர் விட்டுத்தானே கொடுக்கிறோம், அப்படி இருக்கையில் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம் தரக்கூடிய 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெறும் அடிமாட்டு விலைக்கு எதற்கு கொடுத்திருக்க வேண்டும் ?

    ReplyDelete
  20. அக்டோபர் மாத சிறகு இதழ் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
    http://siragu.com/

    இந்த இதழில் பல சிறப்பான கட்டுரைகள் வெளி வந்திருக்கின்றன.
    நண்பர்கள் படித்து உங்கள் கருத்தோகளை தெரிவியுங்கள்.
    மேலும் உங்கள் நண்பர்கள் வட்டாரத்திற்கு அனுப்பி வாசித்து கருத்துகள் தெரிவிக்கும்படி கேட்டு உதவி செய்யுங்கள்.

    ReplyDelete