Sunday, September 04, 2011

இலவச மடிக்கணினிகள்

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளைத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்து அதனைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.

அதன்படி, டியூயல் கோர் பெண்டியம் சிப் உடைய, நல்ல தரமான கணினிகளாகவே வாங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கணினி ஒவ்வொன்றும் ரூ. 10,000-க்குள் கிடைக்கலாம் என்பதாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதைய டெண்டர் தகவல்களைப் பார்க்கும்போது, முதலில் வாங்கும் 6,000 கணினிகள், ஒவ்வொன்றும் ரூ. 18,000 என்ற விலைக்கு வரும்போலத் தெரிகிறது. பின்னர் வாங்க உள்ள சுமார் 9 லட்சம் கணினிகளை ஒவ்வொன்றும் ரூ. 14,000 என்று வாங்க விரும்புகிறார்களாம்.

எதற்காக டியூயல் கோர் பெண்டியம் கணினிகளை வாங்கவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. நெட்புக் என்று சொல்லப்படும் குறைந்த விலைக் கணினிகளை வாங்கினாலே போதுமே. இவை ஒன்றும் மோசமான கணினிகள் அல்ல. ரீடெய்ல் சந்தையில் சுமார் ரூ. 13,000 விலைக்குக் கிடைக்கும் இவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்தால் ஒவ்வொன்றும் ரூ. 8,000 என்ற விலைக்கே கிடைக்கலாம். என் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு கணினி இருக்கிறது. அதன் செயல்திறன் அபாரம் என்றுதான் சொல்வேன். மோசமான பொருளை வாங்கித்தரக்கூடாது. ஆனால் அதே நேரம், பணத்தை வீணாகச் செலவழிக்கவும் வேண்டியதில்லை.

மற்றுமொரு காரணம் பேட்டரி. நெட்புக் அடிப்படையில் மின்சாரத்தைக் குறைவாகச் செலவழிக்கும் ஒரு சாதனம். அதன் சிப் குறைந்த சக்தி கொண்டது. இன்றைய பெரும்பாலான வேலைகள் கிளவுட் எனப்படும் இணையச் சேவை வழியாகவே நடக்கின்றன. எனவே குறைந்த சக்தி கொண்ட சிப்பே போதும். இதன் காரணமாக நெட்புக் பேட்டரி கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்குமேல் வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இப்போதும் மின்வெட்டு உள்ளது, அடுத்த பல ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் இருக்கப்போகிறது. இப்போது தமிழக அரசு வாங்கவுள்ள கணினிகளில் பேட்டரி 2-3 மணி நேரம் இருந்தாலே அதிசயம்தான். இதுபோன்ற இடங்களில் நெட்புக் மிகவும் வசதியாக இருக்கும். அதன் எடையும் குறைவே.

***

இத்தனை லட்சம் கணினிகள் திடீரென தமிழகத்தில் கிடைத்தால் அதன் விளைவாக என்னவெல்லாம் நிகழும்? கல்வியில் எந்தவிதமான மாற்றம் ஏற்படும்? புரோகிராமிங் துறையில் பல சாதனையாளர்கள் உருவாவார்களா? அல்லது, எல்லோரும் யூட்யூப் பார்த்து, ஃபேஸ்புக்கில் நேரம் செலவழித்து, உருப்படாமல் போகப்போகிறர்களா?

18 comments:

  1. //எல்லோரும் யூட்யூப் பார்த்து, ஃபேஸ்புக்கில் நேரம் செலவழித்து, உருப்படாமல் போகப்போகிறர்களா?//


    ஆமாம். இப்போதே “மங்காத்தா”வை, காஞ்சனாவை பச்ங்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து மகிழ்கிறார்கள், நெட்டிலும், செல்லிலும். அது இன்னும் அதிகரிக்காதா என்ன? இருந்தாலும் நல்லதே நடப்பதாகக் (கற்பனை என்றாலும்) நம்புவோம்.

    ReplyDelete
  2. இது நடந்தால் உண்மையிலேயே ”புரட்சி”தான்.
    ஜெ தனது பட்டத்துக்கு நியாயம் செய்துகொள்ள ஒரு அருமையான வாய்ப்பு.

    ReplyDelete
  3. I think, the 18K cost involves the cost of operating system also. ELCOT should promote open source and the use of linux operating system for end users - especially for students. desktop operating system like ubuntu, fedora are good for students which they can use it and learn.

    windows 7 OS costs will come around 3-4K which will be basic edition. more over, Dual core processors are outdated as of now and its a failure model. After Pentium 4, only Core 2 Duo chips perform well. Now i3, i5, i7 series perform well. i3 and Core 2 duo is almost same.

    Govt. of TN should provide i5 series loaded with ubuntu operating system. This will bring the cost down. Also students will have lots of programming languages loaded by default.

    Govt. of India has some thing called CDAC which developed BOSS. i am not sure why Hon'ble Amma is not using govt's own operating system.

    Microsoft and laptop companies are going to mint money easily in this deal.

    ReplyDelete
  4. coming to your suggestion of netbook, students should use laptop for all purposes of learning, programming, browsing.

    most netbooks from my point of view are targetted for business users who can just browse and communicate. it is very difficult to use it for programming purposes.

    ReplyDelete
  5. கடைசி வரி நிஜமாகலாம், நெட்புக் குடுத்தால். நெட்புக்கில் அநேக நவீன உருவாக்க மென்பொருட்கள் திணரும்.

    ReplyDelete
  6. Balachandar / Krupa: When it comes to programming hard core stuff, even Intel core i5 will struggle. I am typing this in one such machine. We need a balance. I am of the view that if netbooks are sourced properly, it will be good enough for most entry level programming. Netbooks are more than just business browsing machines, in my opinion.

    Of course, you have to see that not all 9 lakh users who are going to get this are programming oriented. They are going to use the machine for consuming information and education. In that sense, a netbook is more than enough.

    I do not believe that cost of the OS is the real issue here. I know Linux lovers will suggest Ubuntu or likewise. The government has said that BOSS is going to be installed anyway.

    IMO, the cost increase is only because of the hardware. We really have to examine whether this is justified.

    ReplyDelete
  7. //அல்லது, எல்லோரும் யூட்யூப் பார்த்து, ஃபேஸ்புக்கில் நேரம் செலவழித்து, உருப்படாமல் போகப்போகிறர்களா?//
    My suggestion is this laptop should be given with free 3g service where in students can browse only wikipedia and nothing other than that. The cost to provide such a service will be less. Also wikipedia is available in tamil.

    ReplyDelete
  8. இந்தியாவில் பணக்காரனுக்கு (சங்கர மடத்துக்கு) ஒரு நீதி, ஏழை பேரறிவாளனுக்கு ஒரு நீதி. என்ன கொடுமை ?
    களா ?


    http://www.tehelka.com/story_main50.asp?filename=Ne100911sacred.asp

    சங்கரராமன் கொலை வழக்குல இருந்து தப்பிக்க, சாட்சிகளை கலைக்க, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், காவல் துறை அதிகாரியிடம், சுமார் நான்கு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது. பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?


    இப்போ, நீதிபதியிடம் விலை பேசுறான். பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?

    ReplyDelete
  9. Badri, can you suggest some good netbooks available now in the market ?

    ReplyDelete
  10. According to an article in New York Times, the use of technology(laptops,etc) in class rooms does not help much in improving the performance of students.

    http://www.nytimes.com/2011/09/04/technology/technology-in-schools-faces-questions-on-value.html?_r=1&hp

    Bharath

    ReplyDelete
  11. பொர்ட்சி கார் பொர்ட்சிகார்...

    இந்தியாவில் பணக்காரணுக்கு (திராவிடர் கெழகத்துக்கு) ஒரு நீதி, ஏழை மக்களுக்கு ஒரு நீதியா? என்ன கொடுமே. கலா.

    செயலலிதா, கருணானிதியெல்லாம்மும் வெலே பேஸ்றார் பொர்ட்சி கார். திராவிட திம்மிகளே, கொலை கொற்றவாலி கர்ணாநிதி சாரே தூக்ல போட்டீங்லா?

    ReplyDelete
  12. In my opinion, the prospective users should first be graded.
    Like
    1) CompSci students/Research - heavy programming
    2) Other Engg & Science students- Normal programming
    3) Arts/Humanities students - Some/No programming

    and accordingly buy the hardware/software.

    Considering that the students will use them mostly out of their classrooms,
    it also makes sense to go for homePCs (desktops) instead of portables (laptops/netbooks).
    This will help all the family members with access to computers. Can encourage e-governance, billings, applications etc.
    This is actually more feasible considering the govt already manufactured and distributed color TVs.

    Also Govt should invest in developing courseware for all school and college lessons and make it available thru Arasu cable. (Some minimum access to internet for family use also can be provided thru Cable.)

    ReplyDelete
  13. Govt can look at following options.

    1. Free Wifi hotspots in major cities.
    2. Encourage Tamil wikipedia contribution from students through competions.
    3. Encourage student groups to take up projects to develop open source enterprise applications for government institutions/systems.
    4. Encourage localization of softwares to Tamil language.

    If leveraged well, the sudden increase of millions of laptops/netbooks in the state can really help to boost economy and improve society.

    ReplyDelete
  14. Hi
    I also in a view of the author that netbook is more enough.

    As most of the students are going to practice only program codes defined in syllabus.

    As the author pointed out, really it can bring down the cost.

    Add to this my opinion;

    they can procure a good profiled netbook
    and
    they can invest the remaining cost in upgrading all the existing PCs to a i3 or i5 in the labs of the engineering colleges and schools.

    this can some what balance the students experience.

    ReplyDelete
  15. Hi Badri Sir,

    Govt should give laptops or tablets which are content locked and cannot be used as free browsing devices. Govt should not only give device but also content so that students cannot misuse. There are lot of entertainment in education itself. govt can follow the steps of "One Laptop per Child"

    ReplyDelete
  16. In the absence of proper planning to utilise the laptops for education, they will only end up being used for watching porn.

    ReplyDelete
  17. students use laptop to improve our self.some improve automaticaly our state will be improve

    ReplyDelete
  18. மாணவர்களுக்கான இலவச மடிக்கணிணி - மேம்பட்ட பயன்பாட்டிற்கு மேலான சில யோசனைகள்

    http://simulationpadaippugal.blogspot.com/2011/10/blog-post_09.html

    ReplyDelete