Monday, September 12, 2011

சரஸ்வதி ஆறு, சிந்து நாகரிகம், ஆரியர்கள்

சென்ற வார இறுதியில் மிஷன் தனினோ சரஸ்வதி ஆறு பற்றி தமிழ் பாரம்பரியக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார். பேச்சு ஆங்கிலத்தில். அதன் காணொளி கீழே.

சுருக்கமாக:

* சரஸ்வதி ஆற்றின் கரையில்தான் ரிக் வேதம் எழுதப்பட்டிருக்கவேண்டும். வேறு எந்த ஆற்றையும்விட மிக அதிகமாக அந்த ஆற்றின் பெயரே குறிப்பிடப்படுகிறது.

* சரஸ்வதி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக வற்றிச் சுருங்கியுள்ளது. காரணங்கள் பல. மாபெரும் சமவெளிப் பகுதியான இந்தப் பகுதியில் பெரும் நிலநடுக்கங்களால் மேடு பள்ளம் பெருமளவு மாற்றம் கொள்ளும். அப்போது ஆறுகளின் பாய்ச்சல் பகுதியில் பெரும் மாற்றம் ஏற்படும். அப்படித்தான் சட்லெஜும் யமுனையும் திசை மாறியுள்ளன. முன்னர் சரஸ்வதிக்கு நீர் தந்துகொண்டிருந்த சட்லெஜ் சிந்துவுடன் சேர்ந்துகொண்டது. அதேபோல் சரஸ்வதியில் வந்துசேர்ந்த யமுனை திசை மாறி கங்கையுடன் சேர்ந்துகொண்டது. விளைவு: சரஸ்வதி வற்றத்தொடங்கியது.

* சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்றே இதனை அழைக்கவேண்டும். அகழ்வாராய்ச்சியில் எங்கெல்லாம் இந்த நாகரிகம் பரவியிருந்தது என்பதைக் காணமுடிகிறது. ஆரம்பகால நாகரிக இடங்கள் மிக அதிகமாக இருப்பது சரஸ்வதியில்தான். முற்றிய (மெச்சூர்) நாகரிக இடங்கள் ஏதும் சரஸ்வதி படுகையில் கிடையாது; மாறாக சிந்துவின் கரையில் உள்ளன.

* ஆரியப் படையெடுப்பு அல்லது குடியேற்றம் என்ற கருதுகோள் பற்றிய ஒரு சுருக்கமான விவாதம்.

* ஓர் ஆறு வாக்கின் கடவுளாதல்.

* கேள்வி பதில்கள்



2 comments:

  1. சரஸ்வதி என்ற ஒரு ந்தி இருந்த்தாக நான் நம்பவில்லை. அப்படியானால் புஷ்பக விமானமும் இருந்த்தா? அப்சரஸ்கள் இருந்தார்களா?

    ReplyDelete
  2. புஷ்பக விமானத்துக்கும் அப்சரஸ்களுக்கும் சாட்சி இல்லை. ஆனால் சரஸ்வதி நதி என்ற நதி இருந்ததாகக் கூறப்படும் தடத்தில் இன்னும் பூமிக்கு அடியில் ஒரு நதியின் போக்கு தெரிவதாக செயறகைக் கோள் படங்கள் கூறுகின்றன. இந்தியா டுடேயில் பத்து வருஷங்களுக்கு முன்னால் மிக விவரமான கட்டுரை வெளியாகி இருந்தது.

    ReplyDelete