Tuesday, September 20, 2011

கூடங்குளம் அணு உலைகள்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் கடந்த சில நாள்களாக மக்கள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். எப்போதும் மாறிவரும் அரசியல் சூழலில் திடீரென முதல்வர் ஜெயலலிதா, மக்களைத் திருப்திப்படுத்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவைக்கும்வரை வேலையை நிறுத்திவையுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அணு மின்சாரத்தைப் பொருத்தமட்டில் நமக்குமுன் பல தரப்புகள் உள்ளன.

1. அணு மின்சாரம் என்பது வேண்டவே வேண்டாம். அதில் உள்ள ஆபத்துகள் மிக அபாயகரமானவை. எதிர்காலச் சந்ததியினரைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை. அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது கடினம். சிறு விபத்து என்பது தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். உலகம் எங்கிலும் அணுப் பிளவு அல்லது சேர்க்கை வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது தடைசெய்யப்படவேண்டும். வளர்ந்த நாடுகள் பலவும் (கடைசியாக ஜெர்மனி) அணு மின்சாரத்திலிருந்து பின்வாங்க முடிவெடுத்துவிட்டது. ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகும்கூடவா நாம் அணு மின்சாரம் வேண்டும் என்று கேட்பது? எனவே உடனடியாக கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடுவிடுவதே சிறந்தது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற அணு மின் நிலையங்களையும் உடனடியாக மூடவேண்டும்.

2. அணு மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கக்கூடாது. ஏனெனில் அங்கு அணு மின் நிலையம் அமைக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரே குழப்படி மட்டும்தான். இவ்வாறு 1980-களிலிருந்தே இந்த அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடிவந்தவர்கள் முன்வைக்கும் 13 காத்திரமான கருத்துகள் இங்கே. எஸ்.பி. உதயகுமார் போன்றோரை அலட்சியப்படுத்திவிட முடியாது. அவர்களது கருத்துகள் ஆணித்தரமானவை.

3. அணு மின்சாரம் வேண்டும். முக்கியமாக மின் பற்றாக்குறை, வளர்ச்சி தடைபடுதல் போன்றவை தாண்டி, இன்றைக்கு அணு மின்சாரம் ஒன்றால்தான் ‘சுத்தமான’ (மாசு குறைவான) மின்சாரத்தை வழங்கமுடியும். அனல் மின்சாரம் தயாரிப்பதால் புகை, சாம்பல் போன்றவை வெளியாகின்றன. கரியமில வாயுவினால் பூமி சூடாதல் அதிகமாகிறது. இப்படியே போனால், கடல் மட்டம் அதிகமாகி உலகின் பல பகுதிகள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் மின்சாரத் தேவையோ அதிகமாகிக்கொண்டே போகிறது. அணு மின்சாரம் ஒன்றால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும். - இப்படிச் சொல்கிறது ஒரு தரப்பு.

4. அணு மின்சாரம் தேவையே இல்லை. மரபுசாரா முறைகள்மூலம் - உதாரணமாக சூரிய ஒளி, காற்றாலை, ஜியோதெர்மல் ஆகியவை மூலமாகவெல்லாம் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். டிரான்ஸ்மிஷன் நஷ்டத்தைக் குறைத்தாலே போதும். மேலும் மக்கள் தம் தேவையைக் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் செய்வதன்மூலம், அணு மின்சாரம் இல்லாமலேயே, வேண்டிய அளவு மின்சாரத்தைப் பெறலாம். எனவே அணு மின்சாரம் அவசியமா, தேவையா என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்லவேண்டியது இல்லை. - இது ஒரு தரப்பு.

***

முழு விவாதத்துக்குள் இறங்குவதற்குமுன் மூன்று விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.

1. பொதுவாகவே வளர்ச்சி என்பதை முன்வைக்கும் பொருளாதார வலதுசாரிகள், பொதுமக்களின், அதுவும் முக்கியமாக ஏழை எளிய மக்களின் கஷ்டங்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவதில்லை. இது வருத்தம் தரக்கூடியது. மக்களுக்கு அடுத்துதான் நாட்டு வளர்ச்சி, கார்பொரேட் நிறுவனங்களின் வளர்ச்சி எல்லாமே என்பது என் கருத்து. கூடங்குளம் விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாக வளர்ச்சி என்பதற்காக ஏழை மக்கள் தரவேண்டிய விலை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. பெருமளவு இடப்பெயர்ச்சி இல்லாமல் பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள இடங்களில் சாத்தியமே இல்லை. இந்த இடப்பெயர்ச்சியைக் கவனமாகக் கையாளவேண்டியது அவசியம். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவில் எந்த மாநில அரசும் மத்திய அரசும் இதனை ஒழுங்காகச் செய்ததே இல்லை.

ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. பிறகு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் அரசின்மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் வருவதே இல்லை. சட்டம் இயற்றி நிலத்தைக் கையகப்படுத்திக்கொள்ள எளிதாக முடியும் அரசுகளுக்கு இழப்பீட்டை கௌரவமான முறையில் தரத் தெரிவதே இல்லை.

2. பொது விவாதம். அரசின் செய்கைகள் பற்றி அரசு ஒருபோதும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை. மேலும் பொதுக்களத்தில் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை அழைத்து அவர்கள் பேச இடம் தருவதே இல்லை. பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்வதே இல்லை. அரசியல்வாதிகளையும் சமூகத் தலைவர்களையும் கூட்டி உட்காரவைத்து பலாபலன்களை விவாதிப்பது இல்லை.

மொத்தத்தில் ஏழை மக்களை நம் அரசுகள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. அவர்களது வாழ்வாதாரம் பற்றியோ மாற்று ஏற்பாடுகள் பற்றியோ ஒருவித ஏளனத்துடன்மட்டுமே அணுகுகின்றன.

3. கார்பொரேட் செயல்பாடுகள்: அணு உலைகள் அமைப்பது தொடர்பாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கை மாறலாம் என்ற நிலையில் இதிலிருந்து லாபம் பெற நினைக்கும் பெருநிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறை மோசமானதாக உள்ளது. அணு உலைகளால் அனைவருக்குமே ஆபத்து என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அணு உலைகளால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதில் தம்முடைய நஷ்டம் எவ்வளவு குறைவாக இருக்குமாறு ஒப்பந்தம் போடுவது என்று இந்த நிறுவனங்கள் லாபி செய்கின்றன. அதற்கு அமெரிக்க அரசும் பிரான்சு அரசும் தம்மால் முடிந்த அளவுக்கு இந்திய அரசின் கைகளை முறுக்கப் பார்க்கின்றன. தம் நாட்டில் எம்மாதிரியான செயல்பாடுகளை இந்த அரசுகள் அணு உலை நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனவோ அந்த அளவுக்காவது பிற நாடுகளிலும் அவற்றின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தார்மிக நிலையை எடுக்கக்கூட இவர்கள் தயாராக இல்லை. இதுபோன்ற நேரங்களில் நம் மத்திய அரசும் வலுவாக நடந்துகொள்வது இல்லை.

இதைப் பார்க்கும் யாருக்குமே நம் அரசின்மீது நம்பிக்கை வைக்கத் தோன்றாது. போதாக்குறைக்கு சில பத்தாண்டுகளாக போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேராமல் இருக்கிறது.

ஜப்பானிலேயே மோசமான விபத்து ஏற்படும் அளவுக்குப் பாதுகாப்புக் குறைவு உள்ளதென்றால், இந்தியா போன்ற நாட்டில் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி நடந்துகொள்ளும் என்பது நமக்குத் தெரியாதா என்கிறார்கள் பலரும். அந்த அளவுக்கு கார்பொரேட் நிறுவனங்கள்மீது நமது நம்பிக்கையின்மை வளர்ந்துள்ளது.

***

இப்படிப்பட்ட சூழலில், அணு மின்சாரம் என்பது நமக்குத் தேவையா? தேவை என்றால் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்? அவற்றை நாம் எப்படி நம்புவது? நம் அரசையும் கார்பொரேட் பன்னாட்டு நிறுவனங்களையும் நாம் எப்படி நம்புவது? பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு என்ன இழப்பீடு?

முக்கியமாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டு விரைவில் இயக்கப்படப்போகும் ரஷ்ய அணு உலைகள் பாதுகாப்பானவைதானா?

(தொடரும்)

13 comments:

  1. பகிர்விற்கு நன்றி அண்ணா !!!

    ReplyDelete
  2. There is something called 'fuel cell' technology to manufacture electricity. Its made by many companies but there is one company 'Bloom Energy' in silicon Valley. Its run by an Indian, and its energy servers power big data centers like Google, Facebook etc. They have an Indian office in Bangalore rajaji nagar. I am hoping that, this technology will become popular in coming years.

    Somehow govt never turns towards alternative energies.

    ReplyDelete
  3. //அணுப் பிளவு அல்லது சேர்க்கை வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது தடைசெய்யப்படவேண்டும்//

    இப்ப எங்கெல்லாம் அணுபிளவு மூலம் மின்சாரம் எடுக்கிறாங்கனு சொல்ல முடியுமா? இன்றைய தேதியில் viable option அணு பீளவுதானே? சேர்க்கை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லயே? For fusion we can get fule from waves!!! no need atomic element!!! How we joine two atoms by heating where we get that much heat? All I want to say is fusion word not needed here.

    ReplyDelete
  4. @Silicon Sillu: Bloom Energy is unreliable and its claims are dubious. Read Wikipedia:

    /// Jonathan Fahey of Forbes wrote:
    Are we really falling for this again? Every clean tech company on the planet says it can produce clean energy cheaply, yet not a single one can. Government subsidies or mandates keep the entire worldwide industry afloat... Hand it to Bloom, the company has managed to tap into the hype machine like no other clean tech company in memory."[37]////

    Saravanan

    ReplyDelete
  5. ராமதுரை எழுதியது
    உலகில் தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 400க்கும் மேற்பட்ட அணுமின்சார நிலையங்கள் உள்ளன. புகுஷிமே விபத்துக்குப் பிறகும் இவை இயங்கி வருகின்றன. ஜப்பானில் மட்டும் 50க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் உள்ளன.புகுஷிமாவுக்கும் பிறகும் ஜப்பானின் கிழக்குக் கரையில் இன்னமும் பல அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    ஏதோ ஓர் ஊரில் ரயில் விபத்து ஏற்பட்டு 100 க்கும் அதிகமானவர்கள் இறந்தால் மறு நாள் ரயிலில் ஏறுபவருக்கு மனக் கிலேசம் ஏற்படுவது இயல்பு. ஆனால் எங்கோ ரயில் விபத்து ஏற்பட்டதும் ரயில் வண்டிகளே கூடாது என்று போராட்டம் நடத்துவது விவேகமானது அல்ல. ஆபத்து அம்சம் எல்லாவற்றிலும் உள்ளது. வீட்டின் சமையல் அறையில் காஸ் கசிவு ஏற்பட்டால் ஆபத்து. மின் வயர்களிலிருந்து மின்சாரம் கசிந்தால் ஆபத்து. டூவீலரில் சென்றால் ஆபத்து. சாலையில் நடந்து சென்றாலும் ஆபத்தே. விமானப பயணங்களில் ஆபத்து அம்சம் உள்ளது என்பதால் விமானங்களை ஒழித்துக் கட்டி விடவில்லை. போதுமான நம்பகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்ப்து தான் முக்கியம். ஆகையால் தான் நாம் காஸ் மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். அணுமின் நிலையங்களுக்கும் இது பொருந்தும். இந்தியாவில் இன்றையத் தேவை 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அணுசக்தி சட்டம் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். அமெரிக்காவில் அணுமின் நிலையங்களைக் கண்காணிக்க ரெகுலேடரி கமிஷன் இருப்பது போல இந்திய அணுமின் நிலையங்களின் பாதுகாப்பைக் கவனிக்க சுய அதிகாரம் கொண்ட தனி கமிஷன் வேண்டும். இவற்றை வற்புறுத்திப் போராட்டம் நடத்தினால் அது பொருத்தமாக இருக்கும்
    ராமதுரை.

    ReplyDelete
  6. also see the related subject in the blog

    http://holyox.blogspot.com/2011/09/blog-post_20.html

    thiyagarajan

    ReplyDelete
  7. How different is this argument from your no loss argument on 2G spectrum scam :)

    Isnt that the case of some greedy/corrupt businessman avoiding auction to increase their profit at the cost of the citizens.

    ReplyDelete
  8. நண்பர் திரு பத்ரி,

    Mad பத்திரிகையில் எழுபதுகளில் வெளிவந்த ஒரு சித்திர சிரிப்பு. தாடி வைத்துக்கொண்டு, நெற்றியில் துணிய கட்டிக்கொண்டு கையில் electronic கிட்டாருடன்
    நவீன உலகின் உற்பத்தி மற்றும் வாழ்வுமுறை உலகை மாசுபடுத்துகிறது என்று கிளர்ந்தெழுந்த கூட்டத்தின் ஒரு பிரதிநிதி சொல்லுவார் " எதற்கு இந்த
    அளவிற்கு முன்னேற்றம், இது உலகை நாசமாக்கும், இது தேவையா, என்னை பாருங்கள், எனக்கு வேண்டியதெல்லாம் என் கித்தாரும் அதில் உள்ள பிளக்கை போட ஒரு இடமும் மட்டுமே என்று!!!!

    இந்திய ஏழைகளின் முன்னேற்றும் is directly proportional to amount of power generated ! நீங்க என்னதான் தலைகீழா குதித்தாலும் சகாய விலையில் கிடைக்ககூடிய மின்சாரம் உற்பத்தியாவது இந்த மூன்று வழியில்தான் - நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிப்பு, தண்ணீர் ஆணை, அணுமின் நிலையங்கள்! இந்த நிலைமை இன்னமும் ஒரு ஐம்பது வருடங்களுக்கு இருக்கும்! Controlled nuclear fusion reactorகள் என்பது இந்த நாள் வரை பகல் கனவாகவே இருக்கிறது! Solar power முதல் மற்ற எல்லா வழிமுறைகளுமே மொத்த மின்சார உற்பத்தியில் ஒரு ஐந்து அல்லது பத்து சதவிகிதத்திற்கு மேல் போக வாய்ப்பே இல்லை.
    ஏனென்றால் அவைகளை நிறுவுவதற்கான செலவு மற்றும் அவை தரும் சொற்ப மின்சாரம் அவைகளை ஒரு ஒப்புக்கு சப்பாணி போலாதான் பார்கத்தூண்டும்!!
    நிலக்கரியை கண்டபடி கொளுத்தினால் என்னவாகும் என்று தெரியும். இருந்தாலும் அதை செய்கிறோம். காற்று மாசுபடுதல் நம் கண்முன்னே! இதற்க்கு மேல் மிக மிக பெரிய அணைகளையும் கட்ட முடியாது! கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நீர் தேக்கங்கள் நிறுவி அங்கிருந்து மின்சாரமும் எடுக்கப்படுகின்றது! நிலைமை
    இப்படி இருக்கும் பொழுது, மக்கள் கேட்க்கும் மின்சாரம் எங்கிருந்து வரும்???

    மந்திரம் செய்யலாமா??? புதையல் போல மின்சாரத்தை எங்கேயாவது தேடலாமா????

    ReplyDelete
  9. இந்த கேள்விகளுக்கு யாருக்கும் பதில் இல்லை!!

    தரமான, செல்லுபடியான ஒரு மாற்று வழிமுறையை சொல்லாமல், அணுமின் நிலையம் மட்டும் வேண்டாம் என்று கூத்தடிக்கும் கூட்டங்கள்தான் இந்திய ஏழைகளின் முதல் எதிரி!! இந்திய ஏழ்மையை இன்னமும் பெரியதாக ஆக்க நினைப்பவர்கள் இவர்கள்!!

    When the ignorant finds a just cause to fight for, its a question of time before their ignorance gets used!

    திரு ஜெயமோகன் போன்றவர்களே அணுமின் நிலையங்களை எதிரித்து எழுதும்பொழுது நீங்கள் எழுதுவதில் ஆச்சரியமே இல்லை!

    (லண்டன் மாநகரம் நூற்றி இருபது வருடங்களுக்கு முன் சகிக்க முடியாமல் இருந்தது. அவ்வளவு மாசு! குதிரைகளின் சாணம் ஊரையே நாசமாகியது.
    தொழிற்சாலைகளின் மாசு படு பயங்கரம்! தேம்சு நதி கூவத்தை விட பல மடங்கு கொடுமை ! ஏறக்குறைய அந்த நாளைய எல்லா தொழில் நகரங்களின்
    நிலைமையும் இதேதான். ஆனால் அது நடந்ததால் தான் உலகம் அடுத்த கட்டத்திற்கு வந்தது! இந்தியர்களும் அடுத்த கட்டத்திற்கு வர வேண்டும்!
    அதற்க்கு நமக்கு மின்சாரம் இப்போதைய தேவை! அணு சக்த்தியை தள்ளி வைப்பதால் நஷ்டம் எழைகளுக்குதான்!! )

    ReplyDelete
  10. நோ: நான் எங்கே அணுமின் நிலையங்களை எதிர்த்து எழுதியிருக்கிறேன்? நீங்கள் என் வலைப்பதிவுக்குப் புதிதனவராக இருக்கலாம். 123 ஒப்பந்தம் குறித்து நான் நிறைய எழுதியிருக்கிறேன். புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறேன்.

    நான் மீதத்தை எழுதி முடிக்கவில்லை. அப்போது பேசுவோம்.

    ReplyDelete
  11. ராஜரத்தினம்: இன்றில்லாவிட்டாலும் நாளை அணுச்சேர்க்கை மூலமாகவும் (not cold fusion!) மின்சாரம் தயாரிக்க உள்ளோம். அப்போதும் கதிர்வீச்சு குறித்த கேள்விகள் எழும்பும். எனவே விவாதத்துக்காக அதனையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. This debate on nuclear power and koodankulam needs to be viewed from several angles.

    1. Nuclear Fission power generation is decreasing in countries that started using them first.
    The use of nuclear power has been decreasing in relative terms with respect to other forms of energy generation, due to economics of power plant construction and operational costs. By various mechanisms nuclear power is heavily subsidised. The US produces more than 1,00,000 MW of nuclear power from more than 100 power plants but it is only around 20% of their power usage. France produces around 60,000 MW but it is around 75% of the country's usage. India produces less than 10,000MW and is only about 2% of the country's electricity usage.
    In the US there have been no new reactors built for more than 30 years. The plants have been modified or given life extensions. The Indo-US nuclear deal which opens up the Indian power sector for the US Nuclear Industry has to be viewed in this background.
    The number of power plants peaked worldover in the 1970s and declined with a slight resurgence recently. 26 years after Chernobyl, the fukushima incident has raised issues in many countries. The only countries of the world without nuclear powerplants (built or being built) are Australia and Central African countries.

    In environmental terms, on a daily basis the nuclear fission power plants are less damaging than thermal coal power plants. Water discharge into
    the sea by the power plants cause less damage than discharge of sewage and chemical plants.

    2. Renewable energy - wind, solar, sea - use for power generation are not as efficient as nuclear energy. The regionality, seasonality and time-dependency makes it necessary to have power storage options, like batteries. Disposal of used solar cells, batteries etc make the technology not so 'green' as advertised. The use of renewable sources for energy generation is growing but not sufficiently rapidly due to science and technology limitations. Increased research is needed to overcome the problem of efficiency of conversion. Biological systems do the conversion of solar or wind power into chemical energy very efficiently.

    3. Coal (and older oil) based power plants are economically feasible. The technology is well developed and accessible to all countries. But, the resources are limited and there is lot of political and economic control that prevents their being available at low cost. The coal power plants damage the environment severely on a day to day basis.

    4. Hydel power projects are possible only where there is sufficient water flow. Moreover, the dams that are required often result in submergence of large areas of land.

    5. Nuclear fusion power that drives our Sun and other stars is clean, efficient technology. Biological energy generation systems that have evolved are clean and efficient. But we are nowhere near harnessing these technologies. We need more research and understanding of the mechanisms.

    6. So where do we go for power now?
    We need to use the available power generation technologies wisely. Given our current science and technology, any project be it house building or roads or chemical / power / anyother industries leads to alteration of environment and livelihood effects. The answer is not to say 'no' to use of available technology but to find out how best we can minimise the damages, develop an open and transparent human friendly system of sharing resources, environment, livelihood capacities. We need power plants that use the safest and cleanest technologies available currently. Ultimately we need to change our development perspectives, so that as a nation and as a world our power dependency is not inequal and skewed.

    I know these are general views but it is necessary that we revisit our world views whenever we get stuck in our local issues.

    I hope this helps us to view our issues with a better perspective.

    Krishnaswamy
    TNSF

    ReplyDelete
  13. Thank you for presenting both sides fairly.

    In the end, wisened by the blog-post and the comments thereon by readers, I strongly feel as under:
    1. Nuclear route for power generation can not be abandoned, more so by India
    2. The government should be more transparent, keeping the stake-holders well-prepared for the consequences.
    3. Trust element in the present decision makers is suspect: both politicians and bureacracy are tainted; they may not have the interests of all in their choices. Techno-managers (management-graduates, backed by Tech degrees) can be trusted for fair decisions.
    4. In any case, though we may think a hundred times before we start work for the next plant, what has been built upto this stage should be put to use at the earliest, with focussed and time-bound actions for displacement, rehabilitation, etc,

    ReplyDelete