Monday, September 26, 2011

உள்ளாட்சித் தேர்தல்

சமீபத்தில் இரண்டு அரசியல்வாதிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் அஇஅதிமுக கிடையாது. இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை ஏதும் இருக்காது என்றே அவர்கள் கருத்து தெரிவித்தனர். வெற்றிபெறுவதில் அஇஅதிமுகவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை என்பதால் வன்முறையில் இறங்கமாட்டார் என்றும் அது அவருடைய இமேஜுக்கு இழுக்காகிவிடும் என்று இப்போது ஜெயலலிதா கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் வாக்குப்பதிவு மந்தமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அஇஅதிமுக 1, திமுக 2 என்று முடிவுகள் வரும் என்பது முடிவாகிப்போன விஷயம். தமிழகத்தின் நம்பர் 3 யார் என்பது இந்தத் தேர்தலில் தெரியப்போகிறது. தேமுதிகவும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்த கூட்டணி 3 என்று வைத்துக்கொண்டால், காங்கிரஸுக்கு எத்தகைய மரண அடி விழப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஃபுட்கிங் சரத்பாபு சுயேச்சையாகப் போட்டிபோடுகிறார். சைதை துரைசாமி எளிதில் ஜெயித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

வார்டு கவுன்சிலர் இடத்துக்கு சுயேச்சையாக நிற்பது பற்றிச் சில மாதங்களுக்குமுன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இடையில் வீடு மாற்றி வேறு இடத்துக்குக் குடிபோக முடிவெடுத்தேன். இந்த மாதக் கடைசியில் வீடு மாறியிருப்பேன். புது வீடு இருக்கும் வார்டில் தேர்தலுக்கு நின்றால்தான் உபயோகமாக இருக்கும். ஆனால் அந்தப் பகுதியில் இன்னும் யாரையுமே தெரியாது. இரண்டு வாக்குக்குமேல் தேறாது! எனவே இம்முறை தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அடுத்த உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து. அப்போது பார்க்கலாம்.

7 comments:

  1. Varungala "AMERICA JANADHIPATHI"

    ReplyDelete
  2. We welcome your decision for participation but unfortunately need to wait so long. I am quite ambitious about this. All well educated people with interest towards nation shall come forward and take the responsibility in politics.It is the one area which is going to determine the future of our generations.
    In that way Food king sarath is trying to hit hard every time. Would like to know your opinion about this.

    Dhivakaran

    ReplyDelete
  3. //இடையில் வீடு மாற்றி வேறு இடத்துக்குக் குடிபோக முடிவெடுத்தேன்//

    வாடகைவீடா? நம்பலாமா?

    ReplyDelete
  4. சொந்த வீடுதான்.

    ReplyDelete
  5. பத்ரி,

    இரண்டு வாக்குகள் தேறும் என்பதெல்லாம் அதீத நம்பிக்கைதான்.

    - செல்வராஜ்.

    ReplyDelete
  6. தங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது.
    ஒரே ஒரு விஷயம்: கவுன்சிலர் ஆவது அந்தப் பகுதி மக்களுக்கு நம்மாலான நன்மையை செய்வதுதற்குதான் என்றால்
    அதற்காக இன்னும் ஐந்து ஆண்டுகள் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பதவி, அதிகாரம் இல்லாவிடினும் அடிப்படை தேவைகளுக்காக "போராடுவதே" மக்களுக்கு செய்யும் நன்மைதான். இந்த ஒரு விஷயத்தில்தான் சரத்பாபு என் ஆதரவை இழக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் தலை காட்டிவிட்டு பின்பு தன் தொழிலுக்குள் மூழ்கி போய்விடுகிறார்.
    நீங்களும் அதுபோல இருக்காமல் இப்போதிருந்தே களப்பணி ஆற்றி காலம் கைகூடி வரும்போது "கவுன்சிலர்" என்ன "மேயர்" ஆக வாழ்த்துகிறேன்.
    - சரவணன்

    ReplyDelete
  7. Sir,

    Mr.V.Gopalakrishnan
    (http://gopalakrishanvelu.blogspot.com
    http://gopalakrishNanvelu.blogspot.com)

    a bold RTI activist is competing for councilor post in ward 138(K.K.Nagar). He has worked to bring out info in many issues including the issues like Housing board allotments, appointment of Tripathy as Information commissioner, etc.

    Request you to kindly go through his work in his blogs,and also promote him if you find him ight candidate.

    ReplyDelete