ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை புத்தகக் கண்காட்சி, புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பர் கல்லூரிக்கு எதிரில் உள்ளது இந்தப் பள்ளி.
இந்த ஆண்டு, கிழக்கு பதிப்பகம் இரண்டு ‘4-ஸ்டால்’களைக் கொண்டுள்ளது. F-7, F-20 ஆகிய இரண்டும் ஸ்டால் எண்கள். இரண்டிலுமே கிழக்கு பதிப்பகத்தின் அனைத்துப் புத்தகங்களையும் (கிழக்கு, வரம், நலம், ப்ராடிஜி, மினிமேக்ஸ், தவம்) வாங்கலாம். கூடவே நாங்கள் விநியோகிக்கும் புத்தகங்களான கீழ்க்கண்டவையும் கிழக்கு ஸ்டால்களில் கிடைக்கும்:
1. வைரமுத்து புத்தகங்கள்
2. லிஃப்கோ அகராதிகள், சில பக்திப் புத்தகங்கள்
3. மீனாட்சி அம்மாள் சமையல் புத்தகங்கள்
4. சுகாவின் தாயார் சந்நதி
5. மங்களம் ராமமூர்த்தி எழுதியுள்ள வரலாற்றுப் புதினமான நந்தி நாயகன்
6. கபிலன்வைரமுத்துவின் புத்தகங்கள்
அடுத்த சில பதிவுகளில் நாங்கள் இந்த ஆண்டு கொண்டுவந்துள்ள சில நூல்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

சார் நீங்கள் உங்கள் பதிப்பகத்தின் மூலமாக பஷீர்,தகழி,வாசுதேவன் நாயர் போன்றோரின் புத்தகங்களை தமிழில் ஏன் மொழி பெயர்க்க கூடாது
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteநண்பரே...புத்தகக் காட்சி நடைபெறுவது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அல்ல.அதற்குப் பெயர் பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை.நீங்கள் மட்டுமல்ல,பபாசி யின் விளம்பரத்திலும் தவறுதலாகவே பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று எழுதப்பட்டுள்ளது.புனித ஜார்ஜ் பள்ளி வளாகம் தனது வாயிலில் வைத்துள்ள பலகையில் பாருங்கள்-ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை என்று சரியாக எழுதியுள்ளார்கள்.
ReplyDelete