Sunday, January 08, 2012

உயிர்ச்சொல் - கபிலன்வைரமுத்து

நவம்பர் இறுதியில் வெளியான கபிலன்வைரமுத்துவின் நாவல் உயிர்ச்சொல்.

இது பெரும்பாலும் நிஜக்கதை ஒன்றில் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்டது.

இயற்கையாகக் குழந்தை பிறக்கச் சாத்தியம் இல்லை என்று தெரிந்த தம்பதிகள் முதலில் தத்து எடுத்துக்கொள்ளலாமா என்று பார்க்கிறார்கள். அது ஒன்றாமல் போகவே fertility treatment மூலம் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கருத்தரிக்கிறார்கள்.

குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அவர்கள் வாழ்வில் ஒரு சோதனை. குழந்தை பிறக்கும்போது post natal depression-ஆல் பாதிக்கப்படுகிறார் தாய்.

அந்தக் குடும்பத்தில் நிகழும் குழப்பத்துக்கு இணையாக தமிழக அரசியல் சூழல் மாற்றம் அடைவதாகக் கதை பிண்ணியிருக்கிறார் கபிலன்வைரமுத்து.

Post-natal depression-லிருந்து குழந்தையின் தாய் மருத்துவ சிகிச்சைமூலம் குணமாகும் அதே நேரம், தமிழக அரசியல் சூழலிலும் குழப்பம் ஓரளவுக்கு நீங்குகிறது!

மருத்துவ சப்ஜெக்ட் என்றாலும், கதை தொய்வதில்லை. வேகமாக நகர்வதற்காக கபிலன் பயன்படுத்தும் உத்தி, சிறு சிறு அத்தியாயங்கள், ஸ்க்ராப் புக் வடிவில் கணவனும் மனைவியும் பதியும் பதிவுகளின் தொகுப்பு. மனைவி ஓவியம் வரைபவர். அதற்கேற்றாற்போல கதை நெடுகிலும் அவர் வரையும் ஓவியங்கள். மனைவியின் மனம் மாறுவதற்கேற்ப ஓவியக் கோடுகளில் மாற்றம். இவற்றையும் நீங்கள் கதையுடன் காணலாம்.

அடுத்த ஒரு புதுமை, இந்தக் கதைக்காக என்றே கபிலன் ஒரு பாட்டெழுதி, அதற்கு இசையமைக்கப்பட்டு, பாடல் professional-ஆகப் பதிவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல் அடங்கிய சிடி-யும் புத்தகத்துடன் கிடைக்கிறது.

இந்தப் புத்தகம் வெளியான நவம்பர் மாதம் உங்களில் பலர் சென்னை முழுதும் பல சுவரொட்டிகளைப் பார்த்திருப்பீர்கள். பலர் இது ஒரு சினிமாப் படம் என்றே நினைத்துவிட்டார்கள்!

இந்தப் புத்தகத்துக்கான பல விமரிசனங்களில், இந்த வாரம் கல்கியில் ஒரு மருத்துவர் எழுதியுள்ள நீண்ட விமரிசனம் ஒன்று வந்துள்ளது. படியுங்கள்.

மிக நல்ல முயற்சி இந்தப் புத்தகம்.

(அட்டைப்படத்தில் நீங்கள் பார்ப்பது, நிஜத் தாய், நிஜக் குழந்தை படங்களை. இவர்களுடைய கதைதான் கற்பனை கலந்து புத்தகமாக வந்திருப்பது.)

3 comments:

  1. அருமையா வந்திருக்கு புத்தகம்.நடையும் சிறப்பு. எடிட்டிங்க் எக்ஸலண்ட்!!

    ReplyDelete
  2. கபிலன் வைரமுத்துவின் "உயிர் சொல்" புத்தகம் முடித்தேன்.. நல்ல அருமையான மொழியாடல்.. postnatal psychosis பற்றிய பயம் வந்து விலகியது..

    ReplyDelete
  3. அற்புதமான வெளியிடு, அதுவும் அந்த குறுந்தகட்டில் இருந்த பாடல் அருமை.. ஆனால் இதே போன்ற நாவலுக்கு இசை சேர்த்து ரணம் சுகம் மற்றும் நியான் நகரம் (உயிர்மை வெளியிடு) என்ற இரு நாவல்களை நான் சென்ற வருடம் படித்திருக்கிறேன்.. கபிலனின் உயிர்ச்சொல் தான் முதல் முயற்சி என்றும் புதுமை என்றும் சொல்வது சரியில்லை.. கூடுதல் கவனத்துடன் இன்னும் நிறைய ஆராயவும்!

    ReplyDelete