Monday, January 16, 2012

புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

இம்முறை அதிகம் வாங்கவில்லை. எப்போதும்போல, போனமுறை வாங்கிய புத்தகங்களையே இன்னமும் படித்து முடிக்கவில்லை...
  1. The Great Temple at Thanjavur, One Thousand Years, 1010-2010, George Mitchell and Indira Viswanathan Peterson, Photographs by Bharath Ramachandran, Marg, Rs. 2,500/- (Coffee table book)
  2. World History, Parragon, Rs. 250 (Nice book for young children. Hardbound, large font, pictures)
  3. The Orient BlackSwan Primary School Atlas, Rs. 130
  4. Temples of India, Myths and Legends, Mathuram Boothalingam, Publications Division, Rs. 115
  5. Mahatma Gandhi, A Great Life in Brief, Vincent Sheean, Publications Division, Rs. 80
  6. Mahatma Gandhi, Romain Rolland, Publications Division, Rs. 60
  7. சங்கச் சித்திரங்கள், ஜெயமோகன், தமிழினி, ரூ. 110
  8. மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும், சா. பாலுசாமி, காலச்சுவடு, ரூ. 140
  9. பாம்புத் தைலம், பேயோன், ஆழி, ரூ. 100
  10. Elements of Hindu Iconography, T.A. Gopinatha Rao, (2 volumes, in 4 books), Motilal Banarsidass, Rs. 2,500 (Bought in the beginning)
-*-

7 comments:

  1. பத்ரி அண்ணனுக்கு வணக்கம்..
    தென் தமிழகத்தை சேர்ந்த நாங்கள் புத்தகம் வாங்க மிகுந்த ஆவலாய் உள்ளோம்.பணி நிமித்தம் காரணமாக சென்னை வர இயலவில்லை..
    எனவே தென் தமிழகத்தில் மதுரை, திருச்சி,நெல்லை ஏதேனும் ஒரு நகரில் புத்தக காட்சி நடத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

    மேலும் இங்குள்ள மாணவர்கள் கல்வியை தாண்டி மற்ற நூல்களை தொடுவது இல்லை என தெரிகிறது.புத்தகங்களை பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது.எனவே தாங்கள் முயற்சி செய்தால் BAPASI கண்டிப்பாக நடத்தும் என நம்புகிறோம்.

    ReplyDelete
  2. மதுரையில் 'வாழ்க்கை விதிகள்' எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. அக்ஷயா, டர்னிங் பாய்ண்ட், மல்லிகை புக் சென்டர் உட்பட. என்.சி.பி.எச். ஷோரூமில் கிழக்கு புத்தகங்களை விற்பதை நிறுத்திவிட்டார்கள் (அந்த இடத்தை இப்போது விகடன் பிரசுரம் பிடித்துக்கொண்டுள்ளது). செல்வி புக் ஷாப் என்ற கடையிலும், சி.பி.எம்.மின் பாரதி புத்தகக் கடையிலும் கிழக்கு நூல்கள் எதுவும் இல்லை. எஸ்.எஸ். காலனி பிரத்தியேக ஷோரூம் மூடப்பட்டுப் பலகாலம் ஆகிறது. கீஷ்டு கானம் என்ற சி.டி, கடையில் கொஞ்ச காலம் சில கிழக்கு புத்தகங்கள் விற்கப்பட்டதுண்டு. இப்போது அதுவும் இல்லை.

    மீண்டும் பிரத்தியேக ஷோரூம் தொடங்கலாமே? பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருந்தால் ரொம்ப நல்லது.

    ReplyDelete
  3. புத்தகக் கண்காட்சியில் தாங்கள் வாங்கிய நூல்களின் பட்டியலை அளித்திருக்கிறீர்கள். புத்தகக் கண்காட்சிக்கு வந்த பிரபலங்கள் வாங்கிய புத்தகங்கள் பற்றி பிரபல் தமிழ் நாளிதழில் தினமும் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இவற்றையெல்லாம் மேலோட்டமாகப் பார்த்த போது யாரும் அறிவியல் நூல்களைப் பொருட்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது. புத்தகக் கண்காட்சியில் அறிவியல் நூல்கள் எடுப்பாகத் தெரிகின்ற வகையில் வைக்கப்படவில்லையா? அல்லது கவர்ந்து இழுக்கின்ற வகையில் அறிவியல் நூல்கள் இல்லையா? அல்லது அறிவியல் நூல்களை வாங்கிய பிரபலங்கள் அதைப் பற்றி பெரிதாகச் சொல்லிக் கொள்ள விரும்ப்வில்லையா? அல்லது அறிவியல் நூல்கள் இன்னமும் வேப்பங்காயாக உள்ளனவா? பதிப்பாளர்/வெளியீட்டாளர் என்ற முறையில் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

    ReplyDelete
  4. The Great Temple at Thanjavur, One Thousand Years, 1010-2010, George Mitchell and Indira Viswanathan Peterson, Photographs by Bharath Ramachandran, Rs. 2,500/- (Coffee table book)

    World History, Parragon, Rs. 250 (Nice book for young children. Hardbound, large font, pictures)


    Temples of India, Myths and Legends, Mathuram Boothalingam, Publications Division, Rs. 115

    Please mention their Publication or other contact details...

    Mikka Nandri Badri

    Mayiladuthurai Sivaa...

    ReplyDelete
  5. மயிலாடுதுறை சிவா: ஒவ்வொரு புத்தகத்துக்கும் பதிப்பாளர் யார் என்று கொடுத்துள்ளேன். முதல் புத்தகத்தை விற்பனை செய்வது Marg. அவர்களுடைய தொடர்பு எண்களை கூகிளிட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சென்னையில் லாண்ட்மார்க், ஹிக்கின்பாதம்ஸ் போன்ற கடைகளில் இந்தப் புத்தகங்களின் பெயர்களைச் சொன்னால் கொடுப்பார்கள். Publications Division என்பது மத்திய அரசின் அமைப்பு. பொதுவாக அவர்களுடைய புத்தகங்கள் பொதுக் கடைகளில் கிடைக்கா. தில்லியில் இருந்தால் அவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்று வாங்கிக்கொள்ளலாம். அதையும் கூகிளில் தேடினால் பிற ஊர்களில் எங்கு வாங்கலாம் என்ற தகவல் கிடைக்கலாம்.

    ReplyDelete
  6. ராமதுரை: நான் ஆங்கிலத்தில் நிறைய அறிவியல், கணிதப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இம்முறை இல்லை. ஆண்டுக்கு ஆண்டு என் விருப்பங்கள் சற்றே மாறுவது வழக்கம். அதற்கு ஏற்றார்போல புத்தகங்களை வாங்குவதுதானே சரி.

    ஒரு பதிப்பாளராக அறிவியல் புத்தகங்களுக்கு தமிழர்களிடையே பெரிய வரவேற்பு ஏதும் இல்லை என்பதை நான் கண்டுள்ளேன். ஆனால் அதற்காக அறிவியல் புத்தகங்களை நான் வெளியிடப்போவதில்லை என்று சொல்லமாட்டேன். இந்த ஆண்டு நிச்சயம் சில அறிவியல் புத்தகங்கள் உண்டு.

    ReplyDelete
  7. பாம்புத் தைலம் - சிறுகதைத்தொகுதியா, நாவலா, கவிதைகளா, ட்விட்டர் செய்தித்தொகுப்பா?

    சரவணன்

    ReplyDelete