Wednesday, January 04, 2012

ஜெயமோகனின் புத்தகங்கள்

இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஜெயமோகனின் சில புத்தகங்களை மறு அச்சு செய்கிறோம்.

1. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்
2. ஜெயமோகன் குறுநாவல்கள்
3. ஜெயமோகன் சிறுகதைகள்
4. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் (ஏற்கெனவே ‘நிழல்வெளிக் கதைகள்’ என்று வெளியானவை)இவைதவிர அண்ணா ஹசாரே பற்றி ஜெயமோகன் எழுதியிருந்த ‘அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ என்ற புத்தகம் ஸ்பெஷல் எடிஷனாக புத்தகக் காட்சிக்கு என ரூ. 20/-க்குக் கொண்டுவருகிறோம். அதே தாள், அதே அட்டை, அதே வடிவமைப்பு.

உடனே, ஆகா... இத்தனை நாளும் நம்மை ஏமாற்றி ரூ. 80/-க்குத் தந்தானே என்று சொல்லிவிடாதீர்கள். இப்போது 10,000 பிரதிகள் அச்சடித்துள்ளோம். இதன் தாள், அச்சு, பைண்டிங் விலையே ரூ. 20 ஆகிறது. அதே விலைக்கு, யாருக்கும் லாபம் இன்றித் தருகிறோம். எழுத்தாளருக்கும் இதில் ராயல்டி போகப்போவதில்லை; பதிப்பகத்துக்கும் இதில் பணம் ஏதும் கிடையாது. இதற்கு டிஸ்கவுண்டும் கிடையாது. இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே 10,000 பிரதிகளும் விற்றுவிடும் என்று நம்புகிறோம்.


அதன்பின், இந்தப் புத்தகம் அதன் நார்மல் விலையான ரூ. 80/-க்குக் கிடைக்கும்.

26 comments:

 1. அச்சிட்ட புத்தகங்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதால் மறு அச்சு செய்கிறோம் என்று சொல்ல வருகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. உலகத் தரம் வாய்ந்த எல்லா எழுத்தாளர்களுக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லைதானே.... :)

  ReplyDelete
 2. அந்தக் காலத்தில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட யா.பெரல்மானின் (Y. Peralman)'விளையாட்டுக் கணிதம்', 'பொழுதுபோக்கு பௌதிகம்', வேறொரு ஆசிரியரின் 'சார்பியல் தத்துவம் என்றால் என்ன?' இம் மூன்றையும் கிழக்கு மறு அச்சு செய்யலாம்! இதுபோன்ற புத்தகங்களுக்கு இப்போது காப்பிரைட் இல்லை என்று ஜெயமோகன் எழுதியுள்ளார். விற்பனை அமோகமாக இருக்கும்.ஜெராக்ஸ் பிரதி வேண்டுமானால் நான் தரத்தயார். (ஒரிஜினல் தர முடியாது!)

  ReplyDelete
 3. அண்ணா ஹசாரே ஸ்பெஷல் எடிஷன் ஆன் லயனில் கிடைக்குமா ? இல்லை புத்தக கண்காட்சிக்கு மட்டுமா ?

  ReplyDelete
 4. பபாசியின் புத்தகக் காட்சி விதிகளின்படி 10 சதவிகித டிஸ்கவுண்ட் இல்லாமல் எந்த நூலும் அரங்கில் விற்கப்படக்கூடாது. பத்திரிகைகள், காலண்டர் முதலியவற்றுக்கு மட்டுமே விதிவிலக்கு உண்டு. எனவே 20 ரூபாய் புத்தகத்துக்கு 2 ரூபாய் டிஸ்கவுண்ட் நீங்கள் கொடுக்க மறுத்தால் அது சட்ட விரோதமாகும்.

  ஞாநி

  ReplyDelete
 5. /// எனவே 20 ரூபாய் புத்தகத்துக்கு 2 ரூபாய் டிஸ்கவுண்ட் நீங்கள் கொடுக்க மறுத்தால் அது சட்ட விரோதமாகும். ///

  இவ்வளவுதானே! ரூ.22 என்று 10,000 ஸ்டிக்கர் அடித்து ஒட்டிவிடுங்கள்! சரிதானே ஞாநி சார்?!

  ReplyDelete
 6. கிழக்கு (மறு)பதிப்புகளாக இவற்றையும் கொண்டுவாருங்கள்-

  சம்பத் எழுதிய இடைவெளி

  ரவிச்சந்திரன் (சுஜாதாவின் நன்பர்) எழுதிய தாஜ்மகாலில் சில எலும்புக்கூடுகள் , இனியொரு விதி செய்வோம்

  ReplyDelete
 7. அன்பு அனானி... 22 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டினாலும், பத்து சதவிகிதக் கழிவு இரண்டு ரூபாய் அல்ல. கூட இன்னொரு இருபது பைசா... !

  ReplyDelete
 8. ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே ...இந்த "உலகத் தரம்" என்றால் என்ன ? அதன் நிர்ணயம் யார் செய்கிறார்கள் ?

  ReplyDelete
 9. அன்னா ஹசாரே நேரில் வந்தபோதே கூட சென்னையில் அவருக்கு பத்தாயிரம் பேர் கூட கூடவில்லையே சார்?

  ReplyDelete
 10. ஆனாலும் பாருங்க... ஞாநி சார் நங்குன்னு புடிச்சாரு பாருங்க ஒரு பாயிண்டு... :-))))

  ReplyDelete
 11. மலிவு விலை பதிப்புகளுக்கு கூட புத்தக கண்காட்சியில் டிஸ்கவுன்ட் உண்டா? என்ன?

  ReplyDelete
 12. Anna hasarey ippa good sales product? vazhga corruption..

  "Ragam" Ramesh kumar

  ReplyDelete
 13. அன்புள்ள ஞாநி அவர்களே, நீங்கள் சொல்வது டெக்னிகாலிட்டி! மற்றபடி பத்ரி தள்ளுபடியாக 10% -க்குப் பதில் 75% கொடுத்து அடக்கவிலைக்குத் தருகிறாரே! (ரூ.80 விலிருந்து ரூ.60 தள்ளுபடி). சட்டத்தில் லெட்டர், ஸ்பிரிட் என்பார்களே...ஸ்பிரிட்தானே முக்கியம்?

  சரவணன்

  ReplyDelete
 14. அன்புள்ள அனானி... புத்தகத்தில் என்ன விலை அச்சிடப்பட்டிருக்கிறதோ அதில் 10 சதவிகித கழிவு தரவேண்டுமென்பது பபாசி விதி. நான் அச்சிட்டிருப்பதே ஏற்கனவே 75 சதக் கழிவுக்குப் பிறகு என்ற வாதத்தை ஒவ்வொரு பதிப்பாளரும் தன் நூல்களுக்கு சொல்ல முடியும். ஒவ்வொன்றையும் கணக்கிட்டு பபாசியினர் பரிசீலிக்க முடியாது. எனவே பத்ரிக்கு ஒரே தீர்வுதான் உள்ளது. புத்தகத்தில் 80 ரூபாய் விலை என்று அச்சிட்டுவிட்டு. அவர் 75 சதவிகிதக் கழிவு அளிக்கலாம். பத்து சதவிகிதத்துக்கு மேல் கழிவு அளிகக்கூடாது என்று எந்த விதியும் இல்லை.அச்சிட்ட விலையில் பத்து சதவிகிதம் கொடுத்தே ஆகவேண்டும் என்பது மட்டுமே விதி.

  ReplyDelete
 15. //அன்னா ஹசாரே நேரில் வந்தபோதே கூட சென்னையில் அவருக்கு பத்தாயிரம் பேர் கூட கூடவில்லையே சார்?//
  அருமையான பாயிண்டு திரு லக்கி - அண்ணா ஹசாரே என்ன சிறையிலிருந்து பெயிலில் சென்னைக்கு வந்து இறங்கியவுடன் தியாகியே என்று கூட்டம் சேர்ந்து வரவேற்க்கப்படவேண்டிய நேர்மையாளரா? ஊழல் என்ற சாதாரண விடயத்தை எதிர்க்கும் ஒரு பிர்போக்குவாதிதானே.

  பதிவுலக கீ வீரமணி திரு லக்கி வாழ்க!!

  ReplyDelete
 16. அன்புள்ள ஞாநி அவர்களே,

  /// நான் அச்சிட்டிருப்பதே ஏற்கனவே 75 சதக் கழிவுக்குப் பிறகு என்ற வாதத்தை ஒவ்வொரு பதிப்பாளரும் தன் நூல்களுக்கு சொல்ல முடியும். ஒவ்வொன்றையும் கணக்கிட்டு பபாசியினர் பரிசீலிக்க முடியாது///

  முழுக்க ஏற்றுக்கொள்கிறேன்! நீங்கள் சொல்வது சரியே.

  சரவணன்

  ReplyDelete
 17. ஞாநி, 75% கழிவு தரமுடியாது. அதுவும் விதிதான். 10%க்குமேல் கழிவு தரக்கூடாது. இப்படிக்கொடுத்த சில பதிப்பகங்கள் அடுத்த புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்பது தடைசெய்யப்பட்டிருக்கின்றன.

  ReplyDelete
 18. ஞாநி சொல்றாப்ல 10 பர்சென்ட் கழிவில் புத்தகத்தை 18ரூபாய்க்கு கொடுத்தே ஆகவேண்டும். இல்லாட்டிப்போனா வீ வில் ரைட் இன் தி இந்து.

  ReplyDelete
 19. //இல்லாட்டிப்போனா வீ வில் ரைட் இன் தி இந்து//

  வை நாட் முரசொலி?

  ReplyDelete
 20. ஜெயமோகன் இந்நூல்கள் தற்போது உயிர்மையில் கிடைப்பதில்லையா இல்லை எழுத்தாளர் உயிர்மைக்கு கொடுத்த உரிமையை கிழக்கிற்கு கொடுத்து விட்டாரா.
  அடக்க விலை 20 ரூ விற்பது ரூ 80 என்றால் அதில் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பதை வாசகர்களுக்கு சொல்வீர்களா?80 ரூபாயில் 50% கமிஷன், பிற செலவுகள் என்றாலும் கூட 40 ரூபாய் கிடைக்கும்,அடக்க விலை 20 ரூ என்பதால் அதிலேயே 100% லாபம் வருகிறது.கிழக்கின் நூல்களுக்கு இப்படி விலை வைத்துவிட்டு ஆண்டுதோறும் மகத்தான தள்ளுபடி விற்பனைகளையும் 3/4 முறை
  அறிவிக்கிறீர்கள். ஏன் இப்படி.

  ReplyDelete
 21. கிழக்கு பதிப்பகம் சும்மா கூட கொடுக்கலாம். பாஜக அடுத்து ஆட்சியைபிடிக்க செய்யும் செலவுகளில் இதுவும் ஒன்றுதானே..

  ReplyDelete
 22. முரசொலி பத்திரிக்கை புத்தக கண்காட்சியில் கிடைக்குமா அல்லது அதை பார்க்க அருங்காட்சியகத்திற்கு போகவேண்டுமா??

  ReplyDelete
 23. வை நொட் இன் ”புதிய தலைமுறை”.

  ReplyDelete
 24. கேஜ்ரிவால்Thu Jan 05, 06:18:00 PM GMT+5:30

  பதிப்புலக அண்ணா ஹஜாரே ஞாநி வாழ்க , உண்ணாவிரதம் இருப்பாரா ரூபாய் 2 க்காக ?

  எதிர்பார்ப்புடன்

  ஏழைத்தமிழன்

  ReplyDelete
 25. அந்தக் காலத்தில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட யா.பெரல்மானின் (Y. Peralman)'விளையாட்டுக் கணிதம்', 'பொழுதுபோக்கு பௌதிகம்', வேறொரு ஆசிரியரின் 'சார்பியல் தத்துவம் என்றால் என்ன?' இம் மூன்றையும் கிழக்கு மறு அச்சு செய்யலாம்! இதுபோன்ற புத்தகங்களுக்கு இப்போது காப்பிரைட் இல்லை என்று ஜெயமோகன் எழுதியுள்ளார். விற்பனை அமோகமாக இருக்கும்.,வேண்டுமானால் நான் தரத்தயார். (ஒரிஜினல் தர முடியாது!)---- எமக்கு பிரதி தந்து உதவ முடியுமா?,நன்றி ! ---9443676480

  ReplyDelete
 26. Replying to the second comment here (Wed Jan 04, 12:46:00 PM GMT+5:30). I too have enjoyed many of the soviet union translation books on maths & science during my school days. Thanks to your post I got reminded of Physics for Entertainment book (பொழுதுபோக்கு பௌதிகம்) by Y. Perelman (http://en.wikipedia.org/wiki/Yakov_Perelman). Fortunately I found the english version available free at web archives (https://archive.org/details/physicsforentert035428mbp). Enjoy reading it.

  ReplyDelete