எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:
* 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது.
* 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான்.
* போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது.
* 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது.
* 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது.
* நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது.
* தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு]
* சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது.
* கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர் தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார்.
* தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம்.
[இதற்கடுத்து தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று எஸ்.பொ விளக்கியதை முதலாம் பதிவில் படியுங்கள்.]
தொடரும்.
மீன்களின் நடனம்
51 minutes ago
இந்தப் பதிவு பலருக்குப் பயன்படும் பத்ரி. ஏனெனில் பல தமிழர்களே, ஏதோ ஒரு சிங்கள தேசத்தில் பிழைக்கப்போன தமிழர்கள் இப்போது தனிநாடெல்லாம் கேட்டுப் போராடி வருவதாகத்தான் இந்தப் பிரச்சனையைப் பார்க்கின்றனர். நமது வரலாற்று அறிவு அப்படியாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆதாரமான தகவல்களைத் தருவதற்கு நன்றி.
ReplyDeleteபாடப்புத்தகங்கள் எதுவும் சமகாலப் பிரச்சினைகளைப் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. இந்தியர்களுக்கு இந்தியாவின் பல மாநிலங்கள் (முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள்) பற்றி எதுவுமே தெரிவதில்லை. அண்டை நாடுகள் பற்றி எதுவும் தெரிவதில்லை. (அமெரிக்கா பற்றி மட்டும் எப்படியோ, தப்பும் தவறுமாக கற்றுக்கொள்கிறார்கள்.)
ReplyDeleteவெகுசன ஊடகங்கள் எதற்கும் உருப்படியான விஷயங்களைப் பற்றிப் பேச ஆசையில்லை. ஆனால் தற்பொழுது தமிழில் காணக்கிடைக்கும் பல சிற்றிதழ்கள் (அவர்களுடைய கண்ணோட்டத்தில் இருந்தாலும்) பல புதிய விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றனர்.
இந்த மாத உயிர்மையில் கருணா/பிரபாகரன் பிரச்சினையைப் பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. யாராவது படித்தீர்களா? அதைப்பற்றி சுட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தேன், மறந்து விட்டேன்.
comment by ravi srinivas
ReplyDeletesankaran krishna has written an article on the construction of sinhalese identity and srilankan history
through a distorted version of history using the book by jayawardane as an example.it was translated (abridged) and published in nirapirikai.if u can get
a copy read that.
பத்ரி, இந்தக்கட்டுரையினை எடுத்து தட்டச்சிட்டு இங்கே தருவதற்கு நன்றி. எஸ். பொ அவர்களின் காலமுறைப்படியான தரவுகளிலே சில இடங்களிலே தெளிவின்மையும் தவறுகள் இருந்தாலுங்கூட [சங்கிலி என்று ஒன்றுக்கு மேற்பட்ட மன்னர்கள் இருந்திருக்கின்றார்கள்; http://www.chandrage.com/personal/sbarrkum/newsgroups/history2.txt தமிழ்த்தேசிய எழுச்சிக்காலம்]. கண்டியிலே இருந்த ஆட்சியினைத் தமிழர்களின் ஆட்சி என்று சொல்லிவிடமுடியாது. ஒல்லாந்தர் காலத்திலிருந்தே கண்டியின் ஆட்சியிலே ஒரு குழப்பமான நிலைதான் இருந்திருக்கின்றது. பௌத்தகுருமார்களினதும் அவர்களது ஆதரவு பெற்ற பிரதானிகளினதும் ஆதரவு குன்றிய அரசர்களும் அரசியும் பதவி கவிழ்க்கப்பட்டோ அல்லது பலம் குன்றியோ இருந்திருக்கின்றார்கள். போர்த்துக்கீசர்களுக்கெதிராக ஒல்லாந்தர்கள் பொம்மையாட்சிக்கு வளர்த்தெடுத்த டச்சுக்கிறீஸ்தவ மதம் தழுவிய சிங்கள இளவரசர்/இளவரசிகள் மீண்டும் சிங்கள நாமங்களுடன் [Wimaladharmasuriya I / ] அரச/அரசிகளாகி கண்டித்தேசியத்தினைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இது சந்திரிகா அம்மையாரின் தந்தையார் ¦Solomon West Ridgeway Dias Bandaranaike இன் பௌத்த தேசிய எழுச்சியை முன்னிறுத்திய தன்மையுடனும் Don David Carolis என்றிருந்து Anagarika Dharmapala (பௌத்தத்தின் பெருமையைப் பேசிய மேல்நாட்டார், Col. Olcult இன் நண்பருங்கூட) என சிங்களபௌத்த தேசியத்தினை முன்னிறுத்தியதுடனும் ஒத்துப்பார்க்கவேண்டியதாகும்
ReplyDeletehttp://www.ozlanka.com/reviews/sinhalaness.htm
http://www.sangam.org/BOOKS/Sinhala-ness%20and%20Sinhala%20Nationalism.pdf
http://www.londonbuddhistvihara.co.uk/Dharmapala.htm
இக்காலப்பகுதியின் ஒரு கண்டிய மன்னனான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (அல்லது முதலாம் இராஜசிங்கன்?) [ http://www.dhammathai.org/buddhistnews/m04/bnews20_3.php ] ஓர் இந்துவாக இருந்ததாலே குருமார், பிரதானிகளின் தாங்குபலத்தினையும் இழந்திருக்கின்றான். பொதுவாகவே, ஆதிதொட்டு சிங்களமன்னர்களுக்கு, ஆரம்பத்திலே கலிங்கம், பல்லவ பாண்டிய மன்னர்களின் மண உறவுகளும் கடைசிக்கண்டியரசுக்காலப்பகுதியிலே நாயக்கர்களின் தொடர்பும் இருந்திருக்கின்றது. கடைசியாக கண்டி அரசனாக இருந்து ஆங்கிலேயர்களாலே கைப்பற்றப்பட்டு இறந்த ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஒரு நாயக்கனே; தன் தமக்கையாரின் கணவனான அரசன் இறந்ததினாலே இவன் பதவிக்கு வருகின்றான். அவனுக்கு உள்நாட்டு ஆதரவின்றிப்போகவும் இதுவொரு காரணம்; இவன் கடைசியிலே ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தமிட்டதிலே தமிழிலே கையெழுத்து இட்டிருக்கின்றான் என்கிறார்கள்; மெய்பொய் தெரியாது; ஆனால், தெலுங்கு இணைப்போடான நாயக்கர்களை முழுக்க முழுக்க தமிழரசு என்று கொண்டிருக்கமுடியுமா என்று தெரியவில்லை.
http://www.lankalibrary.com/geo/kings/sri%20vikrama%20rajasinha.htm
இவனுடைய ஒரு மனைவி பெயர் வேறு இராசாத்தி/இராசம்மா என்பார்கள் (ஆதாரம் என்னிடமில்லை). அவளுடைய இரத்தக்கறையுடனான மேற்சட்டை இன்னும் கொழும்பு நூதன அருங்காட்சிச்சாலையிலே இருக்கின்றது. கடைசியிலே இந்த மன்னன் வேலூரிலேயே இருந்து இறந்திருக்கின்றான். அண்மையிலே அவனுடைய சந்ததியினர் ஒருவரைப் பற்றியும் சங்கிலியன் சந்ததியிலே ஒருவரைப் பற்றியும் பதிவுகள் தளத்திலே ஒரு கட்டுரை வந்திருந்தது. சொல்லப்போனால், சந்திரிகா குமாரணதுங்காவின் தாய்வழியான ரத்வத்தை/நீலப்பெரும குடும்பத்தினருக்கே தெலுங்கு/தமிழ் ஆதிதான் காணப்படுகின்றது என்று சொல்கின்றார்கள்.
இலங்கையிலே ஒரு தமிழரசு மட்டுமே இருந்ததென்று சொல்லிவிடமுடியாது. யாழ்ப்பாணத்தின் ஆட்சிக்குக்கீழே வடமாகாணத்தின் மேற்பகுதியே இருந்திருக்கின்றது. மீதி வன்னியர்கள் கைவசம் இருந்திருக்கின்றது; தமிழர் சனத்தொகையிலே செறிந்திருந்தாலுங்கூட, திருகோணமலை, மட்டக்கிளப்பு பகுதிகள் வன்னியர்கள் கைவசமும் கண்டி மன்னன் கைவசமுமே அதிகபட்சம் இருந்திருக்கின்றது.
தமிழ்த்தேசியம் 1983 இலே ஒரேநாளிலே வெடித்துக்கிளம்பியதாகச் சொல்லிவிடமுடியாது; எழுத்துவடிவ ஆதாரபூர்வமாகப் பார்க்கப்போனாலே, 1977 இலே தமிழர்விடுதலைக்கூட்டணி (இ·து இறந்த மலைநாட்டுத்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டைமான், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஆகியோரினையும் அப்போது உள்ளடக்கியிருந்தது) தமிழ்த்தேசியத்தினையே வட்டுக்கோட்டைத்தீர்மானமாக முற்போட்டு வென்று எதிர்க்கட்சியாக 17 ஆசனங்களுடன் அந்த நேரத்திலே பதவிக்கு வந்தது. http://www.eelam.com/introduction/vaddukoddai.html
நாவலரின் மீதான கருத்துக்கு சூரியநாராயணனின் கருத்தோடு ஒட்டி, விபரமாக எழுத எண்ணுகிறேன்.
ரவி ஸ்ரீனிவாஸ்,
சங்கரன் கிருஷ்ணா [ http://www.politicalscience.hawaii.edu/Faculty/krishna/krishna.htm ] இலங்கை அரசியல் குறித்து ஒரு நூல் எழுதியிருக்கின்றார். Postcolonial Insecurities: India, Sri Lanka and the question of Nationhood; அதை சில ஆண்டுகளுக்கு முன்னாலே வாசித்தேன். ஆனால், இவருடைய கருத்துகள் எப்போதுமே -கிளிப்பிள்ளை/கீறல் விழுந்த ஒலித்தட்டுப்போல மீளச் சொல்வதற்கு மன்னிக்கவேண்டும் - இந்தியநலத்தினை முன்னிறுத்திய பார்வையாகவே எப்போதுமே இருக்கின்றது.
Daily Times OPTION [Tuesday, March 30, 2004]: "Fictions of homogeneity" Sankaran Krishna
http://www.dailytimes.com.pk/default.asp?page=story_29-3-2004_pg3_3
அண்மையிலே கருணா விவகாரம் உச்சமடைந்திருந்த காலத்திலே இவர் எழுதிய ஒரு பத்தி இதற்கு மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இலங்கை விவகாரம் குறித்து வரலாறு வாசிக்கும்போது, தனியே ஈழத்தமிழ்ப்பின்புலம் சார்ந்த தொழில்முறை வரலாற்றாளர்கள் (மனோகரன், ஸ்ரான்லி தம்பையா)/ஸ்ரீலங்காசிங்களப்புலம் சார்ந்த ஆசிரியர்கள் (ரோஹான் குணரட்ன), இந்தியப்புலம் சார்ந்த பத்திரிகையாளர்கள், தொழில்முறை வரலாற்றாய்வாளர்கள் (எம். ஆர். நாராயணசுவாமி, சங்கரன் கிருஷ்ணா, சகாதேவன், பி. ராமன், வி. சூர்யநாராயணன்), புலி ஆதரவு ஈழத்தமிழ் வரலாற்றாளர்கள் (ரி. சபாரத்தினம், சச்சி ஸ்ரீகாந்தா, டி. சிவராம்), புலி எதிர்ப்பு ஈழத்தமிழ் வரலாற்றாளர்கள் (ரி. இராஜசிங்கம், டி. பி. எஸ். ஜெயராஜ்) என்று பல பகுதியினரையும் சேர்த்து வாசித்தே ஒரு முடிவுக்கு வரமுடியும்.
உயிர்மையின் கருணா/பிரபா கட்டுரை பற்றி, பதிவுகள் தளத்திலே அண்மையிலே சிலர் "பேசிக்"கொண்டார்கள். நான் வாசிக்கவில்லையாதலால், கருத்தேதும் சொல்லமுடியவில்லை.
மீதி பின்னாலே.
மறுப்புக்கூற்று: மேலே தரப்பட்டவை எனக்குத் தெரிந்ததும் கூடவே இணையத்திலே ஆதாரங்களை இணைக்கக்கூடியதுமான தகவல்கள் மட்டுமே என்பதையும் கூடவே சுட்டிக்கொள்வது பாதுகாப்பானது. ஆனால், எனக்கு இலங்கை வரலாறு எந்தளவு தெரியுமென்பது கேள்விக்குறியாகினுங்கூட, குறைந்தபட்சம் முன்னாள் சந்திரிகா குமாரணதுங்காவின் தாயார் காலத்துச் சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் முன்னாள் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினருக்கான தோற்றுப்போன வேட்பாளருமான asian times ரி. இராஜசிங்கம் போல ஒருபக்கச்செய்தியினை அப்படியே அமுக்காமலேனும் இணைப்புகளைக் குறித்துப் பதிவு செய்யுமளவுக்குத் தெரியும். ஹி! ஹி! ஹி!!
-/r.
some more links:
ReplyDeletehttp://lakdiva.org/codrington/chap10.html
http://lakdiva.org/codrington/chap11.html
http://www.hostkingdom.net/srilanka.html
http://www.tamil.net/people/george/jaffna.html
http://www.viator-publications.com/bk.php?ibk=26
http://www.tamilcanadian.com/pageview.php?ID=55&SID=28
http://www.sinhalanet.com/Wimala%20Dharmasuriya%20IIto%20end.htm
[also please keep in mind, while facts are related to the Kings' names and reign years, the comments are by the ones, who run the webpages]
ravi srinivas
ReplyDeletetnx siddharth.i am not aware of his recent writings.i referred to that in the context of history and construction of a srilankan identity. nothing more nothing less.
Ravi Srinivas,
ReplyDeleteIt's Ramani. Blogspot automatically puts me into my blogspot identity Siddhartha ('che' Guevara). I totally understand what you meant. I haven't read that particular article. My only intention is to point out his other works too. That's all.
P.S.: Have your phone number changed or what?
no ramani it is the same.i am back.
ReplyDelete