Monday, May 24, 2004

புதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்

தி ஹிந்து செய்தி

நிதி அமைச்சர் - பி.சிதம்பரம்
உள்துறை - ஷிவ்ராஜ் பாடில்
பாதுகாப்பு - பிரணாப் முகர்ஜி
வெளியுறவு - நட்வர் சிங்
வர்த்தகம்/தொழில் துறை - கமல் நாத்
மனிதவள மேம்பாடு - அர்ஜுன் சிங்
பாராளுமன்ற விவகாரம் - குலாம் நபி ஆசாத்
மின்சாரம் - பி.எம்.சையீது
ரயில்வே - லாலு பிரசாத் யாதவ்
உணவு/உழவு - ஷரத் பவார்
தண்ணீர் வளம் - பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி
விமானப் போக்குவரத்து - பிரஃபுல் படேல்
தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு - தயாநிதி மாறன்
சட்டம் - H.R.பாரத்வாஜ்
பெட்ரோலியம், எரிவாயு - மணி சங்கர அய்யர்
ஒலி/ஒளிபரப்புத்துறை - ஜெய்பால் ரெட்டி
சுகாதாரம் - அன்புமணி ராமதாஸ்

===

பிரணாப் முகர்ஜி உள்துறை அமைச்சராகவும், ஷிவ்ராஜ் பாடில் பாதுகாப்புத் துறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறியுள்ளது. சிதம்பரம் பல நாட்களாக காங்கிரஸில் இல்லாதிருந்ததால் நிதி அமைச்சராக மாட்டார், வர்த்தகத் துறையில் இருப்பார் என்று எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் சோனியாவும், மன்மோகன் சிங்கும் சிதம்பரத்திடம் நம்பிக்கை வைத்து நிதியைக் கொடுத்துள்ளனர். கமல்நாத் வர்த்தகத்துறையில் இருப்பது சரியென்று படவில்லை எனக்கு. தமிழகக் காங்கிரஸ் விவகாரத்தை குழப்பியடித்துக் கொண்டிருந்தவர் இவர். சர்வதேச அளவில் WTO விஷயங்களில் எந்த அளவிற்கு திறமையாக நம் நாட்டின் குரலை ஒலிப்பார் என்று தெரியவில்லை.

அதேபோல் சையீதிடம் மின்சாரத் துறை வந்தது சரியல்ல என்று தோன்றுகிறது. இது மிக முக்கியமான துறையாகும். ரங்கராஜன் குமாரமங்கலம் அமைச்சராக இருந்தபோதுதான் இந்தியா இந்தத் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்தது. தொடர்ந்து சிவ சேனையின் சுரேஷ் பிரபு திறம்படவே வேலை செய்தார். தாக்கரே அவரைத் தூக்கி எறிந்து விட்டு ஆனந்த் கீதே என்பவரை அமைச்சராக்கினார். இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு யாரையாவது இந்தத் துறையின் அமைச்சராக ஆக்கிப் பிரயோசனமில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மிகுந்த மின்சாரப் பற்றாக்குறையில் இருக்கின்றன. இதில் பல விவசாயம் சார்ந்த மாநிலங்களில் 'இலவச மின்சாரம்' அவ்வப்போது - ஒரு சரியான கொள்கை அடிப்படையில் இல்லாது, வாக்கு வங்கிக்காகவே - வழங்கப்பட்டு வருகின்றது. மாநில மின்சார வாரியம் பணம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் சரியான மின்சாரம் மக்களுக்குக் கிடைக்காததால் ஆளும் கட்சிகள் தோற்றுப் போகின்றன. மத்திய அரசின் உதவி இல்லாமல் மாநில அரசுகள் தாங்களாகவே மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட முடியாது. இப்படிப்பட்ட மிக முக்கியமான துறைக்கு முன் அமைச்சரவை அனுபவம் இல்லாத சையீதைக் கொண்டு வந்திருக்க வேண்டாம். முடிந்த பாராளுமன்றத்தில் துணை அவைத்தலைவராக இருந்தவர் லட்சத்தீவுகளைச் சேர்ந்த சையீது.

மிக முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு அரசியல்/அமைச்சரவை கத்துக்குட்டி தயாநிதி மாறனிடம் கொடுக்கப்பட்டுள்ளது - அதுவும் கேபினெட் அந்தஸ்தில். இதுவும் மிக முக்கியமான துறை. அதிலும் convergence போன்ற விஷயங்கள் இந்த ஐந்தாண்டுகளில்தான் நிகழப்போகிறது. வீட்டிற்கான நேரடி செயற்கைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH), அதன்மூலமே இணையத் தொடர்பு ஆகியவையெல்லாம் ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (எ.கா: DirecTV, Echostar's DishTV). அதைப்போலவே கேபிள் இணைப்பு வழியாக இணையம், தொலைபேசி இணைப்பு ஆகியவை பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ளது (எ.கா: NTL). மொத்தத்தில் ஒரு குழாய் அல்லது செயற்கைக்கோள் டிஷ் மூலம் ஒரு வீட்டிற்கு தொலைபேசி வசதி, இணைய வசதி, தொலைக்காட்சி சானெல்கள் என் எல்லாமும் குவிந்து வருவதே convergence ஆகும். இந்நிலையில் சன் டிவி மற்றும் சுமங்கலி கேபிள் விஷனின் முதலாளி கேபினெட் அமைச்சராக இருப்பது - conflict of interest ஆகுமல்லவா? அதுவும் முன்பின் அனுபவமில்லாத ஒருவர்?

இதுபோன்ற உயர்தர விழுமியங்கள் எதுவும் நம் நாட்டின் அரசியலில் கிடையாதுதான். ஆனாலும் எவ்வளவு காலத்திற்கு நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவது?

தண்ணீர் வளம் காங்கிரஸின் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியிடம் சென்றுள்ளது. நதிகள் இணைப்புக்கு ஒட்டுமொத்தமாக மங்களம் பாடிவிட்டு, உருப்படியாக குறைந்த செலவில் எங்கெல்லாம் கடல் நீரிலிருந்து குடினீரை உருவாக்க முடியுமோ அதைச் செய்யவும், மற்ற இடங்களில் தண்ணீரைச் சிக்கனமாக உபயோகிப்பது, பிற இடங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து சேமித்து வைப்பது போன்றவற்றை கவனிப்பார் என்று எதிர்பார்ப்போம். மற்றொரு முக்கியமான இலாக்கா தரைவழிப் போக்குவரத்து; யாரிடம் போயுள்ளது என்று தெரியவில்லை. திமுகவின் A.ராஜாவுக்கு என்று நினைக்கிறேன். தே.ஜ.கூ அரசில் கந்தூரி மிகத் திறமையாகவும், நேர்த்தியாகவும் இந்த வேலையைச் செய்தார். வரும் அமைச்சர் அந்த அளவிற்கு தொடர்ந்து வேலை செய்வாரா என்று தெரியாது.

அதுபோல் முந்தைய அரசில் பாமகவின் மூர்த்தி ரெயில்வே இணை அமைச்சராக மிக நன்றாக வேலை செய்தவர். ஆனால் இம்முறை பாமக நிறுவனர் ராமதாஸ் திறமையை உடைப்பில் போட்டு விட்டு தன் மகனுக்கு ஒரு மந்திரி பதவியும், புதிதாக உள்ளே நுழைந்துள்ள வேலு என்னும் முன்னாள் IAS ஒருவருக்கு மற்றொரு மந்திரி பதவியும் வாங்கியுள்ளார்.

இதற்கிடையே திமுக, மந்திரி பதவிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோலவே ராம் விலாஸ் பாஸ்வானுக்குக் கோபம்; பல காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம். இவர்கள் எல்லோரும் சற்றே சோனியா காந்தியை நினைவில் வைத்திருப்பது அவசியமாகும்.

6 comments:

  1. Do you think EVKS Ilangovan (who was TNCC chief) will report to Mani Shankar I as junior in petrolium ministry ? or on what ground they agreed to give Anbumani a cabinet post ? he was not even a local panchayat level political leader or having experience. Your comments about D.Maran is true - he is novice and has conflict of interest w.r.t his cable business.

    Mahesh

    ReplyDelete
  2. conflict of interest? Do they even know about it?
    good joke :-)

    ReplyDelete
  3. மணி சங்கர் அய்யர் - EVKS இளங்கோவன்: இன்று காலை பார்த்ததும் சிரிப்பாக வந்தது. எதற்காக இப்படி இருவருக்கும் ஒரே இலாகா கொடுத்து, அதிலும் மணியை கேபினெட் மந்திரியாகவும், இளங்கோவனை இணையமைச்சராகவும் போட்டுள்ளனர் என்று. தமிழ்நாட்டு காங்கிரஸின் குடுமிபிடி அரசியல் பற்றி இவர்களுக்குத் தெரியாதா?

    TR பாலு போக்குவரத்துத் துறை அமைச்சர். பார்க்கலாம் எப்படி வேலை செய்கிறாரென்று.

    அன்புமணி => முழுப்பேரம்தான். இவரை ராஜ்ய சபா MP ஆக்குவதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்தாயிற்று.

    அன்புமணி, தயாநிதி ஆகியோருக்கு முன்னனுபவம் தேவையில்லை. மந்திரி பதவிகள் என்பது சொகுசான பரிசு என்பதைப்போல ஆகி விட்டது. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்!

    ReplyDelete
  4. பத்ரி, நதிநீர் இணைப்பே வேண்டாம் என்று சொல்கிறீர்களா? கடல் நீரிலிருந்து குடிநீரை மட்டுமே பெற முடியுமே தவிர பாசன நீர் பெற முடியாது என்பது என்னுடைய கணிப்பு. இரண்டு திட்டங்களையும் நாம் கைகழுவி விடக்கூடாதென்பதே என்னுடைய எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  5. நதிநீர் இணைப்பு வேண்டும் என்று சொல்வதற்குத் தேவையான தகவல்கள் நம்மிடையே இல்லை. குடிநீர் மற்றும் உடல் தூய்மைக்கான தேவையை பெரும்பாலும் கடல்நீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றின் மூலமும், குடிநீரல்லாத வீட்டு உபயோகத்திற்கான நீரை (துணி தோய்க்க, தரை கழுவ...) soft கழிவு நீரைத் தூய்மைப்படுத்தியும் உபயோகிக்கலாம்.

    பாசனத்துக்கான நீரை இம்மாதிரிப் பெற முடியாது என்று ஒத்துக் கொள்கிறேன். அதற்காக கங்கையிலிருந்து காவிரி வரை நீர்கொண்டு வர வேண்டுமா? கங்கைப் பகுதியில் அதிகமான விவசாயமும், காவிரிப் பகுதியில் வேறெதாவதும்தான் செய்ய வேண்டும்.

    560,000 கோடி ரூபாய்கள் பல்வேறு வகைகளில் பயன்படலாம்.

    ReplyDelete
  6. http://sify.com/news/politics/fullstory.php?id=13482537

    Theory ? Antipathy to Chidambaram (and being made FM) made MK to make noises about ministerial berts ?

    -Mahesh

    ReplyDelete