காலையில் காரில் வந்துகொண்டிருக்கும்போது தெரியாத்தனமாக வானொலியில் மேற்படி பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கும் பண்பலை வரிசைக்கு வந்துவிட்டேன். வெங்கலக் கடையில் யானை புகுந்தது போன்ற கர்ணகடூரமான இசையில் நடுநடுவே ஒருசில சொற்கள் காதில் விழுந்தன.
தலைவலி தாள மாட்டாமல் வேறு அலை வரிசைக்கு 'தப்பித்தேன்-பிழைத்தேன்' என்று எடுத்தேன் ஓட்டம்!
இந்தப்பாடலைக் கேட்கும் எத்தனை பேர் 'யாக்கை' என்னும் சொல்லுக்குப் பொருள் தேடி அலைவர் என்று நினைக்கிறீர்கள்?
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
>>பொருள் தேடி அலைவர் என்று நினைக்கிறீர்கள்--<<
ReplyDelete'மாட்டி ஓஸே'வைக் கூட சரியாகப் புரிந்து கொள்கிறார்கள். இரட்டைக் கிளவி எல்லாம் கற்றுக் கொடுத்தார்; இந்த மாதிரி வார்த்தை எல்லாம் அநேகரிடம் அறிமுகமாகியுள்ளதால் யாருமே தேடி அலையமாட்டார்கள் ;)
>>கர்ணகடூரமான இசை---<<
இருநூறு தடவை கேட்டால் பிடித்துப் போய் விடும் பத்ரி.
'மாட்டி ஓஸே' என்றால்? இது ஏதாவது தமிழ்ப்பாட்டில் வருகிறதா?
ReplyDeleteஇந்தப் பாட்டை இருநூறு தடவை கேட்டாலும் காதும் தலையும் வலிக்கும் என்றே தோன்றுகிறது. அவ்வளவு மோசம்.
'Secret of Success' - பாய்ஸ் பட ஆரம்பத்தில் வரும் வரிகள். 'மாற்றி யோசி' என்பதன் மரூஉ.
ReplyDeleteமுதல் தடவை கேட்டபோதும் 'ஃபனா' என்னும் அந்தப் பாடல் பிடித்திருந்தது. காட்சியமைப்பை பார்த்தபிறகு உங்களுக்கும் பிடித்துப் போக வாய்ப்பிருக்கிறது?!