Tuesday, May 18, 2004

பெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்

அமுதசுரபியில் வெங்கட் சாமிநாதன் தான் போயிருந்த ஒரு பெண்ணியக் கூட்டம் பற்றி எழுதுகிறார்.
இங்கே கூட சம்பந்தப்பட்ட [பெண்] கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வலிந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒருதரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால் எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. தம் வாழ்நாளில் ஒரு முறை கூட அந்தக் கவிஞர்கள் இத்தமிழ் வார்த்தையை உச்சரித்திருக்க மாட்டார்கள் என்பது சர்வ நிச்சயமான யூகம். அவர்கள் இக்கூற்றை மறுத்தால் நான் ஏதும் சொல்வதற்கு இல்லை.

ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது. திடுக்கிட வைப்பது சொல்லப்பட்ட கருத்துதானே. இதுகாறும் திடுக்கிட வைத்த கருத்துகளைச் சொல்லி ஸ்தம்பிக்க வைத்த இக்கவிதாயினிகள், அந்த வார்த்தைகள் இல்லாமலேயே சொல்லி விட முடிகிறபோது, இப்போது ஏன் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தியே ஆக வேண்டும் என்று வீம்பு பிடித்து, பின் தயங்கித் தடுமாறி, யோசித்து, யாரும் புழங்காத சம்ஸ்கிருத வார்த்தையில் தஞ்சம் புகுந்து ஏதோ கத்தி சுழற்றி விட்டதாகப் பூரித்துப் போகவேண்டும்?
ஆம். நானும் பெண் கவிஞர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்... யோனி என்னும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். ஆண்டாளும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாஸனம் பண்ணிக் கொடுத்த அல்குல் என்னும் சொல்லை இனிப் புழங்குங்கள். மற்றபடி வெங்கட் சாமிநாதன் இந்தக் கட்டுரையில் சொன்ன சில கருத்துகளுடன் உடன்படுகிறேன், பல கருத்துக்களுடன் உடன்பாடில்லை.

3 comments:

  1. Dear Badri,

    Alhul does not directly mean what you intent to say there. It is a figurative euphemism for the female genital organ. The word is different. We don't normally write that word. As Mr.Venkat Saminathan has said. more than 98/99% of Tamils know the word but don't write it openly. I am not sure whether it is hypocracy.

    iraamaki

    ReplyDelete
  2. ²ý º¡÷ Íò¾¢ ŨÇ츢ȣí¸

    «øÌø ±ýÈ¡ø cunt என்பது பலருக்குத் தெரியாது

    ஆனால் புண்டை என்பது பலருக்குத் தெரியும்

    புண்டை, சுன்னி என்று சொல்லுவதையோ அல்லது

    எழுதுவதையோ நாம் ஏன் கிட்டதட்ட பாவச் செயலாகக்

    கருதுகிறோம்.

    சில அங்க உறுப்புகளை தெள்ளத்தெளிவாக சொல்லாமல்

    எழுதாமல் நமது எழுத்துத் துல்லியத்தை குறைத்து வருகிறோம்

    இதில் சங்கோஜப் பட வேண்டிய அவசியமே இல்லை

    இப்படி செய்து செய்து தான்

    பெண்கள் தங்களுக்கு பிரெஸ்ட் கேன்சர் இருக்கு

    முலை புற்று நோய் இருக்கிறது என்று சொல்வதே இல்லை


    ஆங்கில எழுத்துக்களில் எல்லாம்

    penis, vagina,

    என்ற வார்த்தைகள் சகஜமாக அடிபடுகின்றன

    இண்டி ராம்
    இண்டி ராம்

    ReplyDelete
  3. ஐயோ இண்டி ராம்! மருத்துவரான உங்களுக்கு மருத்துவப்பதங்களுக்கும் நடைமுறைப்புழக்கமான பதங்களுக்கும் வேறுபாடு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். இரண்டினையும் எடுத்தவாக்கிலே மாற்றி, மருத்துவத்துறையிலே நாளாந்தப்பதங்களையும் நாளாந்தத்தேவையிலே மருத்துவப்பதங்களினையும் பயன்படுத்த முடியாதல்லவா? அதே போன்றதொரு சிக்கல் இங்கும் உள்ளது. நீங்கள் சொல்லியிருக்கும் cunt (அல்லது fuck) என்பதை ஆங்கிலத்திலே பயன்படுத்தும் சந்தர்ப்பங்களினையும் vagina (அல்லது copulation/intercourse) என்பதினை ஆங்கிலத்திலே பயன்படுத்தும் சந்தர்ப்பங்களினையும் எண்ணிப்பாருங்கள். உதாரணத்துக்கு, முதலாவது சொற்குழுவை அமெரிக்க FCC ஒலி/ஒளி ஊடகங்களிலே அனுமதிக்காது; ஆனால், இரண்டாவதினை அனுமதிக்கும். [இது குறித்து நேற்று ஒரு மணிநேர நிகழ்ச்சி NPR வானொலியிலே நிகழ்ந்தது. ஒலியச்சுவடிச்சுட்டியினை இயலுமானால், எடுத்துப் பின்னாலே இணைக்கிறேன்] அதேபோலத்தான், நீங்கள் சொல்லும் பதங்களுக்கும் penis/vagina (ஆண்குறி/பெண்குறி|அல்குல்|யோனி) என்பனவற்றுக்குமிடையேயான வித்தியாசம் இருக்கின்றது. நீங்கள் சொல்கின்றதுபோலப் பயன்படுத்தாமலே விடுவதற்கு சமூகத்தின் பொய்த்தன்மைமட்டுமே காரணமென்று சொல்லிவிடமுடியாது. ஏற்கனவே அப்படியான சொற்களின் பயன்பாட்டினாலே அவைமீது ஏற்றப்பட்டிருக்கும் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்டுவரும் மறையான உணர்வுகளும் அடங்கும். அதனாலேயே, பயன்படுத்தமுடியாமலிருக்கின்றது.

    வெங்கட் சுவாமிநாதன் - இராமகி கூறும் அல்குல் & யோனி என்பவை உணர்த்துகின்றதற்கிடையேயான உணர்த்தல்சார்-உடலியல்சார் வேறுபாடு எனக்குத் தெரியாது. பெண்குறி என்றே பயன்படுத்திவிட்டுப்போகலாம். ஆனால், இங்கே அனைவரும் அறிந்த சொற்றொகுதியினைப் பெண்கவிஞர்கள் பயன்படுத்தாததற்குக் காரணங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவையென்றே நினைக்கிறேன்.

    1. ஏற்கனவே பெண்கள் பற்றிய (ஆணாதிக்க உணர்வோடு) இழிவான கருத்தோடு உணர்த்தப்படுகின்ற பதங்களை அவர்கள் பயன்பாட்டிலே இருந்தாலும் பயன்படுத்த விரும்பாமலிருப்பது: அமெரிக்காவிலே மிகவும் பிரபல்யமாக நடந்து, சென்னை/மும்பாயினும் இவ்வாண்டு நிகழ்ந்த பெண்களின் உரிமைகளை, பெண்ணாயிருப்பதாலே ஏற்படும் சிக்கல்களைப் பேசும் தனியாள்நிகழ்ச்சித்தொடரின் பெயர் Vagina Monologue என்றுதான் போட்டுக்கொண்டார்களேயொழிய pussytalk அல்ல. வெங்கட் சுவாமிநாதன் சொல்வதுபோல, பெண்கவிஞர்களின் முக்கிய நோக்கு (சில பெண்கவிஞர்களின் எல்லா ஆண்களும் எங்களின் எதிரிகள் என்ற நிலைப்பாடும் தேவைப்பட்டபோது, பெண் என்பதை ஒதுக்கீட்டளவிலே பெற்றுக்கொள்ளும் விபரீதமும் அவ்வப்போது வெறுப்பேற்றினாலுங்கூட) ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது என்று நான் நினைக்கவில்லை. "ஆணுக்குப் பெண் நிகர்" என்று தமது சமவுரிமையினை முன்னிலைப்படுத்துவதே என்றே நினைக்கிறேன். கேட்போர் சமூகத்தின் கவனத்தினைத் தம்பால் ஈர்க்கும்வண்ணம் அதிர்ச்சிப்பட எழுதுகின்றார்கள் என்றாலுங்கூட, வேண்டுமென்றால், ஆகக்கூடியது, தன்னின்பம் போன்ற தலைப்பிலே எழுதுவார்களேயொழிய தம்மை இழிவுபடுத்தும் என்று எண்ணுகின்ற, ஏற்கனவே இகழ்ச்சிப்படுத்திக்கொண்டிருக்கும் பதங்களினைத் தேரமாட்டார்கள். சொல்லப்போனால், அவர்களுக்கு தமிழ்-சமஸ்கிருதம் என்பதிலே எதனைப் பயன்படுத்தவேண்டுமென்பதும் பெண்ணுணர்வுகளைமுன்வைத்து ஆண்மேலாதிக்கத்தை முட்டித்தகர்க்கும் பொழுதிலே முக்கியமல்ல என்றே நினைக்கிறேன்

    2. பெரும்பாலான இளம் பெண்கவிஞர்கள் தங்களுக்கு முந்திய கவிஞர்களின் சொற்பதங்களையே அப்படியே தம் தேவைகளுக்காக, தமது சிந்தைவெளிப்பாடுகளைச் சொல்லிக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். அந்நிலையிலே யோனி என்பது பயன்பாட்டிலேயே இருந்து வருகின்றது என்று நினைக்கிறேன்.

    3. பெண்களினை ஏன் ஏற்கனவேயிருக்கும் 'அல்குல்' என்பதைப் பயன்படுத்தாமல், 'யோனி' என்று பயன்படுத்துகின்றீர்கள் என்று கேட்போமானால், 'தலித்' என்று பயன்படுத்துகின்றவர்களைப் பார்த்து ஏன் ஏற்கனவே பயன்பாட்டிலே இருக்கும் 'பஞ்சமர்' என்ற பதத்தினைப் பயன்படுத்தாமல் (1960/1970 களிலேயே, இந்தப் 'பஞ்சமர்' என்பதைத் தலைப்பாகக் கொண்டு, கே. டானியல் தனது 'தலித்' புதினத்தினை எழுதியிருக்கின்றார்) இருக்கின்றீர்களென்று கேட்கலாம். ஆனால், அங்கே சொற்கள் முக்கியமானவையல்ல என்றே நினைக்கிறேன். (பார்ப்பனியம்-பிராமணியம் என்பதும் இதே சங்கடத்துக்குள்ளாகும்)

    4. விதிவிலக்காக, பேச்சு வழக்கிலே எழுதப்படும் / காண்பிக்கப்படும் படைப்புகளிலே இப்படியான நேரடிப்பயன்பாடுகள் உணர்த்தவேண்டிய நிலையின் உக்கிரத்தினை அழுத்தத்தினை மேம்படுத்த, நேரடியாகப் பயன்படுத்தப்பட்டுமிருக்கின்றன. படங்களிலே, 'வீடு' படத்திலே, அர்ச்சனாவிடம், கூலிக்காரி கேட்கும் "அவன் உன் ஒரு துண்டு பீக்கட்டிக்குக் கிட்ட வருவானா?" 'தண்ணீர் தண்ணீர் தண்ணீர்' இலே வரும், "குண்டி கழுவத்தண்ணீர்.." வசனம். கதைகளிலே அச்சுதகவிதைக்கு எதிர்வினையாக பத்ரி எழுதியதிலே கடைசியாக வரும் தலித் கவிதை, தவிர, எழுபதுகளிலே இலங்கையின் மலைநாட்டுத்தோட்டபிரச்ச¨¨யினை முன்வைத்து எழுதப்பட்ட குருதிமலையிலே இந்த 'ஸ்ரைக் செய்தால் யார் குண்டி காய்வது' என்ற பதம் வரும். அண்மைக்காலத்திலே, இலங்கையின் புலம்பெயர்ந்த பலர் எழுதும் கதைகளிலே இந்த பு-சு பதங்கள் நிறையவே அச்சிலும் வந்து விழுந்திருக்கின்றன. பல யதார்த்தமாகவும் சில வெங்கட் சாமிநாதன் சொன்னதுபோல அதிர்ச்சியை ஏற்படுத்தவுமே. உதாரணங்களுக்கு, யதார்த்தத்துக்கு, ஷோபா சக்தியின் 'கொரில்லா', சுகனின் இருள்வெளியிலே வந்த கதைகள், சில ஆண்டுகளின் முன்னால், ஓர் எக்ஸில் (உயிர்நிழல்?) சஞ்சிகைப்படிவிலே வந்த ரபேலின் கட்டுரை (இது முழுக்க கழிப்பறைச்சுவர்களின் எழுத்துகளைக் கட்டுடைத்தல் என்பதன்கீழே, கருணாநிதி, ரஜனிகாந்த் ஆகியோரின் சு-, ஜெயலலிதாவின் பு- என்றே முழுக்க முழுக்க வந்துகொண்டிருந்தது. இங்கே நான் முழுக்க எழுதிவிட்டுப்போவதிலே எனக்கேதும் சிக்கலில்லை. பத்ரி விரும்புவாரோ தெரியாதென்பதாலே தவிர்த்திருக்கிறேன்.); அதிர்ச்சிக்கென்றே பு-சு சேர்க்கப்பட்டவை என்று நான் கருதுவது அளவெட்டி சிறீசுக்கந்தராசா எழுதிய சிறீசுவின் சில சிறுகதைகளிலே வரும் சில கதைகள்.

    ஆக, இது வெறும் சமஸ்கிருதச் சொல்லினை தமிழ்ச்சொல்லிலும்விட இங்கிதம் கருதி எடுத்துக்கொண்டு, பொய்யான அதிர்ச்சி வைத்தியம் செய்வதுபோலப்பாவனை பண்ணியது என்று மட்டுமே சொல்லிவிடவும் முடியாது. கூடவே, நேரடியாக, பு-சு என்று எழுதுவதைத் தவிர்த்துக்கொண்டதற்கு மாற்றுக்காரணங்களுமிருக்கக்கூடுமென்பதைச் சொல்லவும் விழைகிறேன்.

    ReplyDelete