Tuesday, October 11, 2005

அசாம் பழங்குடிச் சண்டைகள்

Army deployed after Assam riots

ஆகஸ்ட் மாதம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட துப்பாக்கி மொழி என்னும் புத்தகத்தை எடிட் செய்யும்போதுதான் அசாமின் பல பழங்குடிகளின் பெயர்களையும் அவர்களுக்கு இடையேயான சண்டைகளையும் பற்றி ஓரளவுக்கு நான் அறிந்துகொண்டேன்.

வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள பழங்குடியினருக்கு இடையேயான சண்டைகளை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பான்மை அசாமியர்களுக்கும் பங்களாதேஷிலிருந்து குடியேறும் முஸ்லிம் வங்காளிகளுக்கும் இடையேயான பிரச்னை ஓரளவுக்கு எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது.

ஆனால் கர்பி ஆங்க்லாங், திமாசா, ஹமார் பழங்குடியினர் காலம் காலமாக அசாமில் சில மாவட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள். அனைவரும் இன்னமும் தொடர்ச்சியாக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது குழப்பத்தை விளைவிக்கிறது. பழங்குடியினருக்கு இடையேயான சண்டைகள் பெரும்பாலும் பாரம்பரிய நிலங்களைப் பிறர் கையகப்படுத்த முயற்சி செய்யும்போதும் விளைச்சல் குறையும்போதும் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இந்தப் பழங்குடிகளின் மக்கள்தொகை ஓரளவுக்கு கட்டுக்குள்தான் இருக்கிறது. பெருமளவு அதிகரிக்கவில்லை. அவர்களது வாழ்க்கை முறையிலும் அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால் இந்தப் பழங்குடிகளுக்கு நிலையான தலைமை ஏதும் இருப்பது போலத் தெரியவில்லை. மாநில அரசாங்கமும் இந்தப் பழங்குடித் தலைவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதில்லை போலத் தெரிகிறது. இல்லாவிட்டால் பிரச்னை முற்றி ஆயுதத் தகராறு வருவதற்கு முன்னாலேயே பஞ்சாயத்து செய்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கமுடியும்.

2 comments:

  1. இக்குழுச் சண்டைகள் காலங்காலமாக இருப்பவை என நினைக்கிறேன். சமீபத்தில் வாசித்த புத்தகம் (Savaging the civilized - Ramachandra Guha - Oxford Uni. Press) ஒன்றில் கூட இதைப் பற்றி வாசித்த நினைவுள்ளது. அசாம், நாகாலாந்து போன்ற இடங்களைப் போல் அல்லாமல் அருணாசலப்பிரதேசம் அமைதியாக இருப்பதும் அப்புத்தகத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

    ReplyDelete
  2. assam arasaangam palangudi makkalidam vote vanguvathu kuriththu kattum akkarai avarkal maththiyil otrumai artppaduthuvathilum kaatta vaendum!

    ReplyDelete