Friday, October 28, 2005

சென்னை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறது

காலையில் அலுவலகம் வந்தால் தெருவில் ஒரு மரம் சாய்ந்து விழுந்திருந்தது. அந்தச் சிறிய சாலை முழுவதுமாக அடைபட்டிருந்தது. ஆனால் வீடுகளுக்கு எந்தச் சேதமும் இல்லை.

விழுந்த மரம்...


இரவு விழுந்திருக்க வேண்டும். காலையில் இரண்டு காவல்துறையினர் வந்தனர். பின் கார்பொரேஷன் தொழிலாளி ஒருவர் கையில் அரிவாளுடன் வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக மரத்தை வெட்டத் தொடங்கியுள்ளார்.

வெட்டப்படுகிறது...


கார்பொரேஷனிடம் இருக்கும் power saw அனைத்தும் பிற இடங்களில் வேலையாக இருக்கும் போல. எங்காவது வாடகைக்கு 'பவர் சா' கிடைக்குமா என்று தேடுகிறோம் இப்பொழுது...

4 comments:

  1. பத்ரி - தகவலிக்கு நன்றி. 'பவர் சா' ஒகே. பவர் இருக்கிறதா ?

    ReplyDelete
  2. Andha baniyan kilindha, douser potta tholilaali, arivalai vaithu marathai vettum kaatchi ennai rombavum kavarandhadhu.
    Adhe samayam, TIDEL vaasalil, irukum siri kuttaiyai kadapadharku yosithu yosithu paarthuvittu, pinbu thirumbi sellum saga tholilaargalai ninaithu nagaiku thondugiradhu.
    Funny People.

    ReplyDelete
  3. தேசிகன்: மின்சாரம் இருக்கிறது. ஆனால் 'பவர் சா' கிடைக்கும் முன்னரே கார்பொரேஷன் ஊழியர்கள் இன்னமும் இருவர் வந்து அரிவாளாலேயே வெட்டி சாலையை கிட்டத்தட்ட சரி செய்துள்ளனர். இரட்டைச் சக்கர வாகனங்கள் போகலாம். கார்கள் செல்ல இன்னமும் ஓரிரு மணிநேரங்கள் ஆகலாம்.

    Good work!

    ReplyDelete
  4. //'பவர் சா ' கிடைக்குமா என்று தேடுகிறோம் //
    NRI தாக்கம் தெரிகிறது.

    ReplyDelete