தி ஹிந்து, டெக்கான் க்ரோனிகிள், தினமணி, தினமலர் ஆகியவற்றைப் பார்த்தேன். சில பத்திரிகைகளின் இணைய எடிஷன்களைப் பார்வையிட்டேன்.
முதலில் சொன்ன நால்வரும் விரிவான செய்திகளைப் போட்டிருந்தனர். டெக்கான் க்ரோனிகிள் ஜெயமோகனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்திருந்தது. டெக்கான் க்ரோனிகிள் "puzhiyamaraththin kathai' என்று அந்த மரத்தைப் புழிந்து விட்டார்கள். "ஒரு" புளியமரம் என்று சொல்ல மறந்தவர்கள் பலர். அனைவருக்கும் காலச்சுவடு வெளியிட்ட press release போய்ச் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் இந்த கவனக்குறைவு? மலையாள மனோரமா ஆன்லைன் எடிஷனில் அவரது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லியிருந்தனர். ஆனால் மலையாளத்தில் மொழிபெயர்த்த விவரத்தைச் சொல்லவில்லை.
'ஒரு புளியமரத்தின் கதை' ஹீப்ரு மொழிபெயர்ப்பு பற்றி சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இஸ்ரேல் பத்திரிகைகளில் சுந்தர ராமசாமியின் இரங்கல் பற்றி ஏதேனும் வந்திருக்குமா என்று தெரியாது.
சன் டிவி செய்திகளில் சுந்தர ராமசாமி மறைவு பற்றிய செய்து வந்ததாக வெங்கடேஷ் சொன்னார். (நான் பார்க்கவில்லை.)
தமிழ் முரசு பத்திரிகையில் என்ன வந்தது என்று யாருக்காவது தெரியுமா?
சுந்தர ராமசாமி எழுதி காலச்சுவடு பதிப்பாக வந்திருக்கும் அவரது புத்தகங்கள் இதோ.
பெங்குவின் இந்தியா வெளியிட்ட Tale of a Tamarind Tree இப்பொழுது அச்சில் இல்லை என்று தெரிய வருகிறது. காலச்சுவடே இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்யலாம். JJ: Some Jottings, கதா வெளியீடாக வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் Fabmall-ல் கிடைக்கவில்லை. That's it but கூட இப்பொழுது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
அக்.15 தமிழ்முரசு 5ம் பக்கத்தில் வெளியிட்ட செய்தி
ReplyDelete====
பி ர ப ல எழுத்தாளர் சுந்தர ராமசாமி
(74) கலிபோர்னியாவில் நேற்று ந ள் ளி ர வு காலமானார். த மி ழி ன்
மிக முக்கிய படைப்பாளியாக விளங்கிய சுந் த ர ராமசாமி , நாகர்கோவிலில் பிறந்தவர்.
1 9 5 1 ல் த க ழி சி வ ச ங் க ர
பிள்ளையி ன் ‘ தோட்டி யி ன்
மகன்’ மலையா ள நாவலை
தமிழில் மொழி பெயர்த்தவர்.
சி று கதை ஆ சி ரி ய ர் ,
நாவலாசி ரி ய ர் , க வி ஞ ர் ,
வி ம ர் ச க ர் எ ன பன்முகப்
பரிமாணம் பெற்றவர். ‘ ஒரு
புளிய மரத்தின் கதை’, ‘ஜே.
ஜே. சி ல கு றி ப் பு கள்’ ,
‘ கு ழ ந்தைகள் , பெண்கள்,
ஆண்கள்’ ஆகியவை இவரது
புகழ்பெற்ற நாவல்கள்.
டொரன்ட்டோ பல்கலைக்
க ழ க த் தி ன் இ ய ல் வி ரு து ,
டெல் லி யி ல் உள்ள கதா
அமைப்பின் ‘கதா சூடாமணி
வி ரு து ’, ‘ குமாரன் ஆசான்
வி ரு து ’ களை பெற்றவர் .
‘ கா ல ச் சு வ டு ’ இ ல க் கி ய
இதழை தொடங்கியவர்.
அவருக்கு மனைவி கமலா,
ஒ ரு ம க ன் ( கா ல ச் சு வ டு
ஆசிரியர் கண்ணன்), இரண்டு
மகள்கள் உள்ளனர்.
சுட்டி
சுதர்சன் சொன்ன 'சன்டிவி' தமிழ் முரசின் அச்செய்தியை அப்படியே, அடுத்தநாள் அக்.16 சிங்கப்பூர் தமிழ் முரசு போட்டிருந்தது.
ReplyDeleteஎம்.கே.
I first saw the news in DD News scroll bar by 8.30 am Indian time.
ReplyDeleteSUNDARA RAMASWAMY'S BODY WOULD BE PLACED AT HIS RESIDENCE FROM
ReplyDeleteMORNING 10 AM TILL EVENING 5 PM ON FRIDAY OCTOBER 21. AS PER HIS
WISHES THERE WILL BE NO LAST RITES. CREMATION WILL TAKE PLACE AT FIVE
PM.
Kalachuvadu
No.669, K.P.Road
Nagercoil 629 001
TamilNadu
India
Phone Res : 91-4652-578159
Off: 91-4652-278525
Fax : 91-4652-231160
Kannan Mobile : 93675 11084,
94433 15279
Mythili Mobile : 93675 23754
திரு.சு.ராவை ஒருதடவையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போய்விட்டதேயென்று அங்கலாய்ப்பாக
ReplyDeleteஇருக்கிறது.
தனது இலக்கியக்கொள்கைகளில் தெளிவாகவும் தீவிரமாகவும் இருந்தவர் சு.ரா.
எனது முதல் வாசிப்பில் அவரது 'புளியமரத்தின் கதை' அவ்வளவாக ஈர்த்துவிடவில்லை. பின்னால் 'ஜே.ஜே. சில குறிப்புகள்'
என்னை அதிரப்பண்ணியது. எழுதிய காலத்திலிருந்து இன்றுவரை விமர்சிக்கப்பட்டுவருவது அந்நாவல்.
மிகசிறந்தது, சிறந்தது,சுமாரனது,
என்னும் வகைகளில் பல சிறுகதைகளை எழுதிய சு.ராவுக்குத் தன் படைப்புகளையிட்டு மிகைஅபிப்ராயங்கள் என்றுமே இருந்ததில்லை.
ஒரு கலந்துரையாடலின்போது "நானும் இருபது வருஷங்களாக எழுதிவருகிறேன், ஆனால் என்னை 20 வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாதமுமில்லை". என்றாராம். பின் தமிழரின் பிறப்புவீதம் எதுவாகவும் இருக்கலாம்........ ஆனால் தீவிர தமிழ்வாசகனின் பிறப்பு வீதம் ஆண்டுக்கு 200 க்கும் குறைவானதே" என்றுஞ் சொன்னாராம்.
" அவள் பார்க்கப் பார்க்கப் பார்க்கப் பெண்போலவே இருந்தாள்" என எழுதிய நகைச்சுவையாளனை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்ற என் ஆசை நிராசையானது. அவர் பிரிவை ஒப்ப மனம் மறுக்கிறது.
பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.