கடந்த சில நாள்களாகவே கடும் மழைதான். நேற்று இரவு முதல் மழை அதிகம். தெருக்கள் (கோபாலபுரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர்) முழங்கால் முதல் இடுப்பளவு தண்ணீரில். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் எல்லாவற்றுக்கும் இன்று விடுமுறை.
நான் இருக்கும் இடத்தில் (கோபாலபுரம்) மின்சாரம், கம்பித் தொலைபேசி (ஏர்டெல்), இணையம் (டிஷ்நெட் டி.எஸ்.எல்), மொபைல் (ஹட்ச்) எல்லாமே நன்றாக வேலை செய்கின்றன.
இன்று பல நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளனர். இது மும்பை மழை அளவுக்கு இல்லை என்றாலும் இயல்பு வாழ்க்கை வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து நிறையவே பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
//நான் இருக்கும் இடத்தில் (கோபாலபுரம்) மின்சாரம், கம்பித் தொலைபேசி (ஏர்டெல்), இணையம் (டிஷ்நெட் டி.எஸ்.எல்), மொபைல் (ஹட்ச்) எல்லாமே நன்றாக வேலை செய்கின்றன.
ReplyDeleteAttn: Mr. Thaya"nidhi" Maaran :)
Chennaiyil ini thannirp pancham irukkathu aanal chalaiyora makkal mikuntha siramatthirkku aalaakiyullathu vaethanaiyakum!
ReplyDeleteஇன்னொரு உபவிஷயம் - இன்று சுபமுகூர்த்த நாள் - என் மாமனாரின் சம்பந்தி வீட்டுப் பெண்ணுக்கு சென்னையில் சுமார் நூறு பேர் முன்னிலையில் திருமணம் நடந்தது. ஜே ஜே என்று நடக்க வேண்டிய எத்தனை திருமணங்கள் ஜோ ஜோ என்று நடந்ததோ? (நன்றி: தேசிகன்)
ReplyDeleteஎல்லாவற்றையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் சென்னைவாசியான என்னுடைய அண்ணன் "Hurricane Muniamma hits Chennai" என்று sms அனுப்பியிருக்கிறார்.
ReplyDeletewhy it cant be hurricane asin or huriicane ramya or hurricane jo or
ReplyDeletehurricane trisha
:-))
புயல் நாளை காலையில் கரையைக் கடக்கும் என்று கேள்விப் பட்டேன். அதற்குப் பிறகு மழை குறையும் என்று சொல்கின்றார்கள். அண்ணாநகர், திருமங்கலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறதாம்.
ReplyDeleteoorukku vara vidathu pola irukke!
ReplyDelete