Monday, January 05, 2009

நான் எடிட் செய்த புத்தகங்கள் - 0

கிழக்கு பதிப்பகத்துக்காக 2008-ல் நான் எடிட் செய்த புத்தகங்கள் இவை:

1. கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு, என்.சொக்கன்
2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை, என்.சொக்கன்
3. ஒபாமா, பராக்!, ஆர்.முத்துக்குமார்
4. ரத்தன் டாடா, என்.சொக்கன்
5. ஆகஸ்ட் தியாகி அப்புசாமி, பாக்கியம் ராமசாமி
6. சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி, பாக்கியம் ராமசாமி
7. உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல், நூறநாடு ஹனீஃப், தமிழில் நிர்மால்யா
8. ராமகியன்: தாய்லாந்து ராமாயணம், ஆனந்த் ராகவ்
9. நேரு முதல் நேற்று வரை, ப.ஸ்ரீ.ராகவன்
10. மக்களாகிய நாம்!, அ.கி.வேங்கட சுப்ரமணியன்
11. என் ஜன்னலுக்கு வெளியே..., மாலன்
12. ஓ பக்கங்கள் 2007, ஞாநி
13. அள்ள அள்ளப் பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள், சோம.வள்ளியப்பன்

(இவற்றில் சில இப்போதுதான் அச்சாகி வருகின்றன. சில இன்னமும் இணையத்தில் ஏற்றப்படவில்லை. அதனால் கிளிக் செய்து வாங்க இப்போது முடியாது.)

பொதுவாக நான் முழுநேர எடிட்டர் கிடையாது. எடிடிங் துறையில் நான் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம். பெரும்பாலும், நான் வேலை செய்து முடித்த புத்தகங்கள்மீது வேறு யாராவது சில நகாசு வேலைகளைச் செய்வார்கள். ஆனால் என் கையை விட்டுப் போகும்போது கட்டுமானம் சரியாக இருக்கும்; தகவல்கள் விடுபட்டுப் போய்விடாமல் பார்த்துக்கொள்வேன்; எழுத்தாளருடன் பேசி, சரிசெய்யவேண்டியவற்றைச் சரி செய்திருப்பேன்; ஸ்பெல்லிங் தவறுகளைக் களைந்திருப்பேன். லாஜிக் ஓட்டைகளைத் தவிர்த்திருப்பேன். ஆங்கிலப் பெயர்களுக்கான சரியான தமிழ் உச்சரிப்புகளைச் சேர்த்திருப்பேன்.

அடுத்துவரும் சில பதிவுகளில் இந்தப் புத்தகங்கள் பற்றிய என் பார்வையை வைக்கிறேன். நீங்கள் பணம் பற்றிக் கவலைப்படவில்லை என்றால், இவை அனைத்தையுமே வாங்கலாம் என்று பரிந்துரைப்பேன்.

3 comments:

  1. அப்புசாமிக்கு ஸ்யாம் ஓவியம் போடும் அராஜகத்தை மட்டும் மன்னிக்கவே முடியாது. :-)

    ReplyDelete
  2. ப.ஸ்ரீ.ராகவன் புகைப்படத்தை அட்டையில் போட்டு ஏன் பயமுறுத்துகிறீர்கள்.B.S.Raghavan
    என்ற பெயர் ஒரளவு அறிமுகம்.அவரது நேற்று டோண்டுவின் அண்மையில் போன்றது :).

    ReplyDelete
  3. // நீங்கள் பணம் பற்றிக் கவலைப்படவில்லை என்றால், இவை அனைத்தையுமே வாங்கலாம் என்று பரிந்துரைப்பேன். //

    இங்கு மலேசியாவில் நாங்கள் 300% அதிக விலை கொடுத்துதான் புத்தக்கங்களை வங்குகிறோம்....
    கிழக்கு புத்தகங்கள் எப்போ மலேசியாவில் கிடிக்கும்....இங்கு தமிழ் புத்தக கடைகளில் உங்கள் பதிப்பகமே தெரிய வில்லை....

    ReplyDelete