Friday, January 30, 2009

இலங்கைப் பிரச்னையும் தீக்குளித்தலும்

தமிழகத்தில் அடிமட்டத்தில் இலங்கைப் பிரச்னை தொடர்பான ஒரு கொந்தளிப்பு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. அதன் culmination-தான் நேற்று சாஸ்திரி பவனுக்கு எதிரில் நடந்த முத்துக்குமாரின் தீக்குளிப்பு.

இந்த மக்கள் கொந்தளிப்பின் ஒரு விளைவுதான் பல கல்லூரிகளில் மாணவர்கள் பாடங்களைப் புறக்கணித்து தெருவில் போராடுவது. மாணவர்கள் படிப்பின்மீது அக்கறையில்லாமல்தான் இதனைச் செய்கிறார்கள் என்று அரசுகள் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இதுபோன்ற மாணவர் போராட்டங்கள்தான் இட ஒதுக்கீடு, மொழிப் போராட்டம் ஆகியவற்றில் கடுமையாக வெடித்துள்ளது.

மத்திய அரசு, இலங்கைப் பிரச்னை விஷயத்தில் கடந்த ஒரு வருடமாக நாடகம் மட்டுமே ஆடிவருகிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆர்வம் காட்டினால் இலங்கையில் போர் நிறுத்தம் என்பதை எளிதில் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அதற்குரிய எந்த முயற்சியையும் இந்த அமைச்சகம் எடுக்கவில்லை. “விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழித்துக் கட்டும் முயற்சியில் எத்தனை தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை; அதனால் எந்தப் பாதகமும் இல்லை” என்பது ராஜபக்‌ஷே மற்றும் சிங்களத் தீவிரவாதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது தமிழக, அதன் காரணமாக இந்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கக்கூடாது.

ஆனால் அதுதான் நடந்துள்ளது. இதில் குற்றம் முழுவதுமே திமுக மேல்தான். பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், அவர்களால் முடிந்தவரை, இந்தப் பிரச்னையை முன்னெழுப்பியுள்ளனர். ஆனால் திமுக முன்னின்று நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மழையில் கைகோர்த்து நிற்பது, கடிதங்கள் எழுதுவது ஆகியவை பிரயோசனமில்லாமலேயேதான் இருந்துள்ளன.

இன்று காலம் சற்று அதிகமாகவே கடந்துவிட்டது. தேர்தல் இரண்டே மாதங்களில் என்ற நிலையில் இன்றைய மத்திய அரசை ஆட்டுவிக்கும் திமுகவின் பலம் குறைவுதான். ஆனால் ஆறு மாதங்களுக்குமுன், திமுக, மத்திய அரசை வற்புறுத்தி, போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்திருக்கமுடியும். செய்யவில்லை.

இலங்கைப் பிரச்னையை ஒரு காரணமாக வைத்து இன்று தமிழகத்தில் தேர்தல் நடந்தால் அதனால் விளைவுகள் தெளிவாக இருக்காது. அதற்குக் காரணம், எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் அதிமுகவும் காங்கிரஸ்+திமுகவும் இலங்கைப் பிரச்னையில் கிட்டத்தட்ட ஒரே நிலையை எடுத்துள்ளதுதான். அத்துடன் மூன்றாவது அணி என்று எதுவும் வலுவாக இல்லாததுமே.

“பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியோர் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்களா? அப்படிச் செய்தால் அவர்களால் என்ன சாதிக்கமுடியும்?” என்ற கேள்வி எழுகிறது. நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் இதுவே சட்டமன்றத் தேர்தலாக இருந்து, இவர்கள், இலங்கைப் பிரச்னையில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் கள்ள மௌனத்தை முன்னெடுத்து வைத்தால், தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். குறைந்தபட்சம் இந்தக் கூட்டணியால் 60-70 இடங்களைக் கைப்பற்ற முடியும். அத்தகைய நிலையில் இலங்கைப் பிரச்னையில் குறிப்பிட்ட நிலையை எடுக்கவைக்க தமிழக, அதன்மூலம், மத்திய அரசைச் செலுத்தமுடியும்.

இலங்கைப் பிரச்னையை முன்வைத்து தெளிவான அரசியல் கூட்டணியை உருவாக்க முடியாததே இன்றைய ஏமாற்றங்களுக்குக் காரணம். இருக்கும் கட்சிகளில் அல்லது கூட்டணிகளில் ஏதோ ஒன்றை மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கமுடியும். அதைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள்.

***

விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்‌ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.

எனவே, இலங்கைப் பிரச்னையின் ஒரு தீர்வு, வலுவான விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கை அரசுடன் அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தையில் இறங்குவதில்தான் உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. அப்போதுதான் சிங்களத் தரப்பும் போருக்கு பதில், கொஞ்சம் விட்டுக்கொடுத்தாவது அமைதி பெறுவதே மேலானது என்ற எண்ணத்துக்கு வரும்.

இந்த நிலை மீண்டும் வருவதற்கு, விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் வலுப்பெற வேண்டும். தொடர்ந்து சண்டைபோட அல்ல. தங்களால் இலங்கை ராணுவத்துக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தமுடியும் என்பதைக் காண்பிப்பதற்கு. அப்படிப்பட்ட நிலையில், இந்தியா போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை, ஃபெடரல் அமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, இடைத் தரகராக இருந்து விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் பேசவைத்து ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கினால், நீண்டகால அமைதி இலங்கையில் ஏற்படச் சாத்தியங்கள் உண்டு. அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழேபோடவும், அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வலுவாகும் காலகட்டத்தில் அவர்கள் செய்யவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலாவது, மாற்றுக் கருத்துள்ளவர்களைக் கொலை செய்யாதிருத்தல். இரண்டாவது, பிற ஈழத்தமிழ் அமைப்புகளுக்கு நேசக்கரம் நீட்டி, கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவரவர் அவரவர் வழியில் தத்தம் இலக்கை அடைவதை ஏற்றுக்கொள்ளுதல். மூன்றாவது, இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துடனும் - முக்கியமாக, காங்கிரஸ் - உறவை வளர்த்துக்கொள்ளுதல்.

அது வரும் பத்தாண்டுகளுக்குள் நடைபெற்றால் அனைவருக்கும் நல்லது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மறைமுகமாக ராஜபக்‌ஷேவை ஜெயிக்கவைத்த சோக நிகழ்வு மீண்டும் கண்ணுக்கு முன் வருவதைத் தடுக்க முடியவில்லை.

16 comments:

 1. //விடுதலைப் புலிகள் மீண்டும் வலுவாகும் காலகட்டத்தில் அவர்கள் செய்யவேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன//
  They should start with a leadership change.
  How about theepan or ramesh becoming the LTTE supremo?

  ReplyDelete
 2. Badri,

  //இந்த நிலை மீண்டும் வருவதற்கு, விடுதலைப் புலிகள் அமைப்பு, மீண்டும் வலுப்பெற வேண்டும். தொடர்ந்து சண்டைபோட அல்ல. தங்களால் இலங்கை ராணுவத்துக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தமுடியும் என்பதைக் காண்பிப்பதற்கு. அப்படிப்பட்ட நிலையில், இந்தியா போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை, ஃபெடரல் அமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, இடைத் தரகராக இருந்து விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் பேசவைத்து ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கினால், நீண்டகால அமைதி இலங்கையில் ஏற்படச் சாத்தியங்கள் உண்டு. அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழேபோடவும், அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவேண்டும்.//

  This is what the basis of Rajiv Gandhi's peace treaty between Jeyawardhana and LTTE.

  - LTTE did not buy that because it is not going to have a seperate 'Tamil Eelam' but it was suggesting a federal setup for Eela Tamilians.

  - LTTE wont agree for anything less than a seperate nation. What do you mean by 'திமுக, காங்கிரஸ், அதிமுகவின் கள்ள மௌனத்தை முன்னெடுத்து வைத்தால்'? Why should DMK / Congress / ADMK should support LTTE's greedy purpose?

  As usual you voiced the 'politically correct' opinion and at the end of the post making some meaningful suggestions. Why dont you just be honest and write what you want to write?

  Get a life yaar.

  ReplyDelete
 3. Quite interesting take on the Lankan imbroglio. It would indeed be a happy augury if LTTE and Lankan Government stop fighting and resolve their issues across the table.

  ReplyDelete

 4. இலங்கைப் பிரச்னையை ஒரு காரணமாக வைத்து இன்று தமிழகத்தில் தேர்தல் நடந்தால் அதனால் விளைவுகள் தெளிவாக இருக்காது. அதற்குக் காரணம், எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் அதிமுகவும் காங்கிரஸ்+திமுகவும் இலங்கைப் பிரச்னையில் கிட்டத்தட்ட ஒரே நிலையை எடுத்துள்ளதுதான். அத்துடன் மூன்றாவது அணி என்று எதுவும் வலுவாக இல்லாததுமே.

  “பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியோர் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்களா? அப்படிச் செய்தால் அவர்களால் என்ன சாதிக்கமுடியும்?” என்ற கேள்வி எழுகிறது. நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் இதுவே சட்டமன்றத் தேர்தலாக இருந்து, இவர்கள், இலங்கைப் பிரச்னையில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் கள்ள மௌனத்தை முன்னெடுத்து வைத்தால், தேர்தல் முடிவுகள் ஓரலவுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். குறைந்தபட்சம் இந்தக் கூட்டணியால் 60-70 இடங்களைக் கைப்பற்ற முடியும். அத்தகைய நிலையில் இலங்கைப் பிரச்னையில் குறிப்பிட்ட நிலையை எடுக்கவைக்க தமிழக, அதன்மூலம், மத்திய அரசைச் செலுத்தமுடியும்.

  கிட்டத்தட்ட இதைத்தான் இன்று நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்! பாமக + விடுதலைச் சிறுத்தைகள் (வட மாவட்டத் தொகுதிகள்) மதிமுக + கம்யூனிசிட்டுகள் (தென் மாவட்டத் தொகுதிகள்) + மக்கள் அலை இருந்தால் 70 இடங்களுக்கும் மேலாகக்கூடக் கிடைக்க வாய்ப்புண்டு. அதிமுகவும் காங்கிரசும் தென் மாவட்டங்களில் வாக்குகளைப் பிரித்துக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் இவ்வாய்ப்பு வலுப்பெறும்.

  ReplyDelete
 5. //ஆனால் ஆறு மாதங்களுக்குமுன், திமுக, மத்திய அரசை வற்புறுத்தி, போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்திருக்கமுடியும். செய்யவில்லை.
  //

  Why should GoSL stop the war when they are in the verge of winning.
  Even if DMK/ India had persuaded GoSL would not have listened. It would have been a needless snub to India.

  ReplyDelete
 6. //Why should GoSL stop the war when they are in the verge of winning.
  Even if DMK/ India had persuaded GoSL would not have listened. It would have been a needless snub to India.//
  *India would atleast not supported the war..by giving weapons and logistic support.
  *Would have raised a human rights violation issue in the UN
  *Being a significant economy, GoSL can not ignore Indian pressure.

  ReplyDelete
 7. //*Would have raised a human rights violation issue in the UN
  *Being a significant economy, GoSL can not ignore Indian pressure.
  //
  I dont think, Sarath fonseka or mahinda rajapakse would have cared about india in their reckless drive to finish off LTTE.
  UN is such a useless organisation, no body gives a damn to it.
  India made a sensible decision in shutting up its mouth. At least now India has not antagonized the winning side. It may be insensitive but it was the most sensible thing to do.

  ReplyDelete
 8. விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழித்துக் கட்டும் முயற்சியில் எத்தனை தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை; அதனால் எந்தப் பாதகமும் இல்லை//

  காங்கிரசின் நிலையும் இதுதான். முதலில் புலிகளை ஒழித்து கட்டட்டும். எங்களைப் பகைத்து எங்கள் சொல்வழி கேட்காமல் எங்களை அவமானப்படுத்தினால் இதுதான் தீர்ப்பு என்பதே இந்திய நிலை. இப்போது!

  ReplyDelete
 9. Srilankan Tamils are victims of war between SL army and LTTE. We Indian Tamils are victims of TN political drama. Atleast now major parties like DMK, AIADMK, Congress are knowing the limits of India with another countries internal matter and are talking only about the innocent SL tamils. But PMK, Left,MDMK, VC are just using the situation to pump up the emotions in TN and gain political mileage. If PMK is so concerned about SL tamils and really want to shake the country it should have asked its MP's to resign from UPA govt. But Ramadoss will give a high tone dialogue everyday for newspaper and we fools will listen to it.

  SL has got a chance to eliminate LTTE after 30 years and they are not going to stop the war. India also can't ask another country to stop fighting terrorists. India needs to send more aid for innocent people and ask for a political solutions.Entire world is watching this war in SL and it is of great strategic importance for India.

  We Tamilnadu people should come to senses and stop hurting ourselves. As Indians we should think about out country's relationship with another country and should understand it is a foreign policy issue. We should ask for safety of innocent tamils in SL and for a long lasting peaceful political solution. If we are going to get caught up in political drama and their high emotional rhetoric it is not God save SL Tamils, it is GOD SAVE TAMILNADU.

  ReplyDelete
 10. இலங்கைப் பிரச்சனையில் உங்களுடைய கருத்து மிகவும் வியப்பாக உள்ளது. ஈழப் பிரச்சனை தீர புலிகள் வலிவடைய வேண்டுமென்றால், காஷ்மீர் பிரச்சனை தீர லஷ்கரும் வலுவாக உங்களுடைய ஆதரவு உண்டா? ஹமாஸ், உல்பா, மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட வகையராக்களிலும் இதே நிலைதானா?

  இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி புலிகளை ஒழிக்க இலங்கையால் முடியும். எதோ இந்தியா கொடுத்த ரேடார்களும், ராவின் உதவியும் மட்டுமே இலங்கைக்கு இந்த வெற்றியைக் கொடுக்கவில்லை. 7 டிவிசன்களில் 50 ஆயிரம் வீரர்கள் கொண்ட இராணுவத்தை எதிர்கொள்ள பல நாடுகளின் இராணுவத்தாலேகூட முடியாது. ஐபிகேஎஃபிலேயே 20 ஆயிரம் வீரர்கள்தான் இருந்தார்கள். புலிகள் இவர்களுக்கு நிகராக வலுவாகவேண்டும் என்பதெல்லாம் நகைப்புக்குரியது. இலங்கை இராணுவம் வலுவேயில்லாமலிருந்த 1987 களிலேயே இந்தகைய தராசு வேலைகளை செய்துபார்த்து புலிகளின் உண்மை சொரூபத்தை இந்தியா தெரிந்துகொண்டது வரலாறு.

  புலிகள் இருக்கும் வரை ஈழத்தமிழருக்கு எந்த விமோசனமுமில்லை. கடைசி புலியும் அவனுக்கு உதவும் கடைசி தமிழனும் சாகும்வரை இந்தப் போர் நடந்துதான் ஆகவேண்டும்.

  மேலும் ஈழத்தமிழரிடம் இன்று எந்தவிதமான நியாயமான கோரிக்கைகளுமில்லை. அவர்கள் கேட்டது பெரும்பாலும் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்திலேயே கொடுக்கப்பட்டுவிட்டது. மேலும் வேண்டுமானால் அவற்றைக் கோரிப்பெற தமிழர் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அப்படியே நிலைமை மோசமானாலும் இந்தியா இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும் என்று கோரினாலும் அதில் நியாமிருக்கும். இதையெல்லாம் விடுத்து ஒரு தீவிரவாத அமைப்பு வலுவடையவேண்டும் என்று நீங்கள் கோருவது உலக நடப்புகள் பற்றிய உங்கள் அறிவை கேள்விக்குறியதாக்குகிறது.

  ReplyDelete
 11. ****** இவர்கள், இலங்கைப் பிரச்னையில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் கள்ள மௌனத்தை முன்னெடுத்து வைத்தால், தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் *****

  கிழிக்கும்.

  ReplyDelete
 12. இந்த மாதிரி எழுதறது, அரசியல்வாதிங்க நடத்தற வெட்டி பேச்சல்லாம் கேட்டுட்டு தான் முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு இருக்காரு.
  .
  இந்தியாவால ஒரு மண்ணும் செய்யமுடியாது. எந்தவிதமான ஆயுதம் தராம இருக்கலாம். அதுனாலையும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. கலைஞர, வைகோவ, ராமதாச மற்றும் எல்லாரையும் குறை சொல்றத நிறுத்துங்க. இத வச்சிக்கிட்டு அரசியல் பண்ணாம இருந்து இருக்கலாம். அவ்வளவு தான். அப்படி செய்ய முடியாம போனது ஒரு துரதிஷ்டமே.

  இலங்கை தமிழர்கள் இந்தியா கிட்ட எதுக்கு இவ்வளவு நம்பிக்கை வச்சி இருக்காங்கன்னு தெரியல. உலக அளவுல ஒவ்வொரு நாட்டுலயும் கூட்டம் கூட்டி தான் அவங்க நிலைய பிரகடனப்படுத்தனும். போனவாரம் டென்ஹாக்ல மீட்டிங் நடந்தது. மொத்தமா ஐநூறு பேரு இருந்து இருப்பாங்க.(இந்த நாட்டுல பத்தாயிரம் பேரு இருப்பாங்கன்னு தான் நினைக்கறேன்) அத கூட இங்க உள்ள மெயின்ஸ்ட்ரீம் மீடியா முன்னூறு பேருதான்னு சொல்றாங்க. இவற்றை எல்லாம் சரி செய்ய ஒருவித தலைமையும் இல்லாததும், எதற்கெடுத்தாலும் கலைஞரை குறை கூறுவதும்/ எதிர்பார்ப்பதும் சரியான வழி இல்லை.

  அதேபோன்று விடுதலைபுலிகளை காரணம் காட்டி ஆட்சி களைப்பு வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் ஆதரிக்கும் எவரும் இதற்காக தமிழகத்தில் வாக்களிப்பார்கள் என்று தோன்றவில்லை. ப்ளாக் எழுத்தாளர்களையும் / சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்தையும் வைத்து நமது மக்களின் மனநிலையை நிர்ணயிக்க முடியாது.

  2003, 2004 இலங்கையில் அதிக வன்முறை இல்லாத காலகட்டம். அப்பொழுது இந்தியா / விடுதலைபுலிகள் / ஐநா / இலங்கை அரசாங்கம் அனைவரும் சேர்ந்து ஒருவித இறுதி நிலையை எடுத்து இருக்கவேண்டும்.

  ReplyDelete
 13. நான் ஒரு ஈழவள நாட்டுத் தமிழன். என் நாடு இரத்தத்தில் வாடிக்கொண்டுள்ளது.என் தாய்த் தமிழகம் எமக்காய் எழுந்திருப்பது தெம்பு தருகின்றது. இங்கு சில ஆழமான ஒரு கருத்துகளை முன்வைக்க விரும்புகின்றேன்.

  1)எட்டப்பன்கள் எங்களுக்குத் தேவையில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் நாம்.

  2)மகிந்த செய்வது கண்ணுக்குத் தெரிகிறது. எழுந்து எதிர்த்து நிற்கின்றோம். ரணில் ஒழிந்து தாங்கிய ஆரிய இராமனைப் போன்றவன் சமாதானம் எனும் பெயரில்.இது தெளிவாக உணரப்பட வேண்டியது.
  நீங்கள் படிக்கும் செய்திகள் திரிக்கப்பட்டு,மறைக்கப்பட்டு வந்திருக்கக்கூடும். எனவே ரணிலின் திருவிளையாடல் தெரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு. இதனால்த்தான் எமக்கு யாரும் வேண்டாம் என்று முடிவு செய்து வாக்களிக்க செல்லவில்லை.

  3)காங்கிரசுக்கு அன்பாக ஒன்று சொல்ல விரும்புகின்றேன்........சின்ன வயதில் இருந்து இந்தியாவின் நரித்தனம் தெரியாது இலங்கைக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாகவே எனது உள்ளம் வழமையான எங்கள் தமிழரிடம் இருந்ததுபோல் என்னிடமும் இருந்தது.அதனால் கிரிக்கட்டில்கூட இலங்கை தோற்க பிரார்த்திப்பேன் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என நோக்கில்.
  ஆனால் இன்று அப்படியில்லை.விரக்தி!

  என்னைப்போல் எல்லாத்தமிழரும் ஏமாறுகின்றனர்.........ஏமாற்றாதீர்! இந்தியாவே எம்மை ஏமாற்றாதீர்!

  நன்றி

  ReplyDelete
 14. // குறைந்தபட்சம் இந்தக் கூட்டணியால் 60-70 இடங்களைக் கைப்பற்ற முடியும்.//

  60-70 இடங்களில் டெபாசிட் வேண்டுமானால் போகும். 1991 மே 21 யோடு தமிழகத்தில் இலங்கைப் பிரச்சனை தேர்தல் முக்கியத்துவம் இழந்துவிட்டது, என நினைக்கிறேன்.

  தனது முன்னாள் தலைவரை கொன்றவர்களை எந்த பிற நாடும் இன்னமும் மிகக் கடுமையாக நடத்தியிருக்கும். இப்போது புஷ்ஷை ஈராக்/ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவத்தை அனுப்பியதற்காக கை வைத்தால் ஒபாமா அந்த நாட்டை உருத்தெரியாமல் அழித்துவிட மாட்டாரா? அந்த மாதிரி யோசித்தால் இந்தியாவில் நிலைப்பாடு கொஞ்சம் பெட்டர்தான்.

  புலிகளால் முன்பு பரப்பபட்ட இந்திய விரோத கருத்துகளை... விஸ்தரிப்புவாத அரசு மற்றும் IPKFவை அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டோம் என்ற பிரச்சாரத்தை இந்திய அதிகாரவர்ககம் மறக்குமா? புலிகளை குறைவாக எடை போட்டு படை அனுப்பியது இந்தியாவின் தவறு. இந்திய தலைவனை கொன்று இந்திய விரோத கருத்துகளை பரப்பி இந்தியாவை பகைத்துக் கொண்டது புலிகளின் தவறு. இந்திய ஆதவில்லாமல் ஈழத்தமிழனுக்கு ஒன்றும் கிட்டாது

  புலிகளின் தவறுகளுக்கு அப்பாவி தமிழனும் விலை தர வேண்டியுள்ளது கொடுமைதான். புலிகள் தோல்விக்கு பின்பு சிங்கள வெறிக்கு பலியாகப் போகும் தமிழனின் நிலையை நினைத்தாலே குலை நடுங்கிறது.

  ReplyDelete
 15. ஒரு சரியான தீர்வில்லாத மோசமான அமைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது, யாருக்கும் தீவிரமான திட்டமோ அதை ஏற்க வைக்கும் செல்வாக்கோ இல்லை, ஒரு திசையில்லாத போராட்டம் அதனால்தான் இந்திய அரசு எந்த நெருக்கடிக்குள்ளும் போகவில்லை, அவரவர் ஆட்சியை காப்பாற்றவேண்டிய கவலை வேறு, சரி பிரபாகரன் இவர்கள் ஒரு திட்டம் உண்டாக்கினால் கேட்பாரா என்று இவர்களுக்கு யாருக்கும் தெரியாது பின்னர் என்ன செய்வது, இப்படி திசை தெரியாமல் போர் நிறுத்தம் செய்ய எப்படி ஒரு நாடு இன்னொரு நாட்டை வற்புறுத்தமுடியும். எனது கருத்துக்கள்
  www.dhavaneri.blogspot.com இந்தவலைபூவில் உள்ளன.

  ReplyDelete
 16. //..இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி புலிகளை ஒழிக்க இலங்கையால் முடியும். எதோ இந்தியா கொடுத்த ரேடார்களும், ராவின் உதவியும் மட்டுமே இலங்கைக்கு இந்த வெற்றியைக் கொடுக்கவில்லை....//

  இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் அண்மையில் வன்னியில் காயமடைந்தது கேள்விப்படவில்லையா?

  //.. 7 டிவிசன்களில் 50 ஆயிரம் வீரர்கள் கொண்ட இராணுவத்தை எதிர்கொள்ள பல நாடுகளின் இராணுவத்தாலேகூட முடியாது. ஐபிகேஎஃபிலேயே 20 ஆயிரம் வீரர்கள்தான் இருந்தார்கள்...//

  The most difficult part of my entire command was managing the withdrawal of the IPKF. At one stage we had 70,000 troops, we slowly brought them down to 50, 40, and then to 30,000.

  சொன்னது நானல்ல. ஐபிகேஎஃப் காலத்தில் தலைமைதாங்கிய General Kalkat !
  http://www.rediff.com/news/2000/mar/27lanka.htm


  புலிகள் இருக்கும் வரை ஈழத்தமிழருக்கு எந்த விமோசனமுமில்லை. கடைசி புலியும் அவனுக்கு உதவும் கடைசி தமிழனும் சாகும்வரை இந்தப் போர் நடந்துதான் ஆகவேண்டும்.

  :)..:)...)

  //...மேலும் ஈழத்தமிழரிடம் இன்று எந்தவிதமான நியாயமான கோரிக்கைகளுமில்லை....//

  :(..:(....:(

  ///...அவர்கள் கேட்டது பெரும்பாலும் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்திலேயே கொடுக்கப்பட்டுவிட்டது....//

  அது நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டதா? இல்லை என்பதே சிங்களவர்களின் கருத்தும் கூட. சந்திரிகா காலத்தில் அவரின் வாயாலேயே கூறியிருந்தார். அத்துடன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சரத்துகள் பல ஸ்ரீலங்கா சட்டத்துக்கு உட்படாது என கூறி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது. முக்கியமாக தமிழர் பிரதேசங்களின் இணைப்பு.

  ///..மேலும் வேண்டுமானால் அவற்றைக் கோரிப்பெற தமிழர் அரசியல் கட்சிகள் இருக்கின்றன...//

  1948 இருந்து கோரி...கோரி..கோரி பெற்றுவிட்டார்கள்!


  //...அப்படியே நிலைமை மோசமானாலும் இந்தியா இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும் என்று கோரினாலும் அதில் நியாமிருக்கும்.....//

  கோரினோமே! ஆனால் இந்தியா 100கோடி தானிய உதவி செய்ததே. ஞாபகமில்லையா?

  பாலாஜி உங்களை நல்ல பரந்த வாசிப்பு பழக்கம் உள்ளவரென நினைத்திருந்தேனே..கெடுத்துவிட்டீர்களே!!!

  ReplyDelete