Wednesday, January 21, 2009

அறிவியலுக்கென ஒரு கூட்டுப் பதிவு

http://www.ariviyal.info/

வெகு நாள்களாகப் பேசிப் பேசி, இப்போது உருவாகியுள்ளது. அருண் நரசிம்மன், வெங்கட்ரமணன், அருள் செல்வன், நான் ஆகியோர் இணைந்து (தமிழில் மட்டுமே) எழுதப்போகும் அறிவியலுக்கான கூட்டு வலைப்பதிவு. இனி வரும் நாள்களில் மேலும் பலரும் இணைந்து எழுதுவார்கள்.

அறிவியல், கணிதச் சமன்பாடுகளையும் எழுத வசதியாக ‘வேர்ட்பிரெஸ்’ மூலம் நிறுவப்பட்ட வலைப்பதிவு இது.

வாசகர்கள், அறிவியல் எழுத்தாளர்கள் பேராதரவு தரவேண்டும். இந்தப் பதிவை உங்களது உற்றார், உறவினர், பள்ளிக்கூட மாணவர்கள் ஆகியோரிடம் கொண்டுசேருங்கள்.

***

தமிழில் கூட்டுப் பதிவுகளை தொடர்ந்து ஒரே தரத்தில் கொண்டுசெல்வது மிகவும் கடினமானது. இதுவரையில் கண்ணுக்குத் தென்படும் உதாரணங்கள் வெகு குறைவே.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் தமிழில் அறிவியல் பதிவுகள் எழுத விழைந்தால் அவர்களை எனக்கு அறிமுகம் செய்யுங்கள்.

15 comments:

  1. Good.

    புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

    விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி! உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்! முடிந்தவரை எளிமையான முறையில் சொல்லித்தாருங்கள்.

    ReplyDelete
  3. அருமையான முடிவு, வரவேற்கிறேன்.

    ReplyDelete
  4. அருமையான முயற்சி! வாழ்த்துக்கள்!

    நகரங்களில் அகலப்பாட்டை வசதி இருந்த போதிலும் இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புப் பெற்ற மாணவர்கள் மிக மிகக் குறைவு. கிராமங்களில் கேட்கவே வேண்டாம். மாநகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு போதிய அளவு இணைய வசதி இல்லையெனினும் வேறு பல ஊடகங்கள் மூலம் அவர்களுக்கு வேண்டிய அறிவைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. என்னுடைய வேண்டுகோள்: குறிப்பிட்ட கால இடைவெளியில் இதில் வெளிவரும் கட்டுரைகளை புத்தகமாக வெளியிடுங்கள். நகர, கிராமப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் எளிதில் கிடைக்கும்படிச் செய்யுங்கள். வெங்கட்ரமணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது கட்டுரைகளை புத்தகமாக வெளியிடுவது பற்றி எண்ணமிருப்பதாகச் சொன்னார்கள்.

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி

    தொடருங்கள்.

    ReplyDelete
  6. நல்ல முயற்சி... பத்ரி.தொடர்ந்து ஈடேற வாழ்த்துக்கள். செயற்கை உயிர் போன்று எனக்கே புரியும்படி எழுதுங்கள்:) பள்ளியில் விட்டதெல்லாம் இங்க கத்துக்குறோம்.
    உமாமகேஸ்வரன் யோசனையைக் கண்டிப்பாக செயல்படுத்துங்கள்.

    ReplyDelete
  7. இயற்பியல்::2005 (http://iyarpiyal.org) போல க்ஷணப்பித்தமாக அமைந்துவிடாமல் இந்தக் கூட்டுப்பதிவாவது தொடர்ந்து இயங்க எம்பிரானை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. தங்களுடைய அறிவியல் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் நண்பர்களுக்கும் சிபாரிசு செய்து வருகிறேன் ,கூட்டு முயற்சியாக நண்பர்களுடன் ஆரம்பித்துள்ள இம்முயற்சி அனைவரையும் சென்றடைய ,மேலும் தங்களுடைய வலைப்பூ சிறந்த பத்து தமிழ் வலைப்பூக்களில் ஒன்றாக குமுதம் வார இதழ் தேர்ந்து எடுத்ததற்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வரவேற்கத்தக்க மிக அவசியமான முயற்சி. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான முயற்சி, வாசிக்க ஆவலாக இருக்கிறோம், உமா மகேஸ்வரன் சொல்வதுபோல் புத்தகமாகவும் வந்தால் நல்ல ஆவணமாக இருக்கும், வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. Great Initiative! All the Best!!

    ReplyDelete
  12. பெயரில்லா நண்பருக்கு,

    இயற்பியல்::2005 குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி! பல நாட்களாக மனதில் ஆறப்போட்டு திட்டங்களிட்டு கடைசியில் ஒரு துரும்பைக்கூட நகர்த்த முடியாமல் போன பல விஷயங்கள் இருக்கின்றன.

    நொடியில் மனதில் தோன்றி இயற்பியல் ஆண்டிற்கு தமிழில் குறைந்தபட்ச பங்களிப்பாக அதைச் செய்ததில் எனக்கு இன்னும் பெருமிதம்தான். (இலுப்பைப்பூதான் என்று நன்றாகவே தெரிகிறது, கூடவே இருப்பிடம் ஆலையில்லா ஊரென்றும்) எனவேதான் மூன்று வருடஙக்ளாக தளத்தை காசு செலவழித்து மூடாமல் வைத்திருக்கிறேன். இப்பொழுதுகூட எப்பொழுதாவது தனிமடலில் அதன் பயனைப் பற்றி மின்னஞ்சல் வந்துகொண்டுதானிருக்கிறது.

    அப்பொழுது கற்றுக்கொண்ட சில பாடங்கள் இந்த கூட்டு முயற்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையும்கூட.

    ReplyDelete
  13. அருமையான முயற்சி.,. நானும் உதவுகிறேன்...எவ்வாறு?

    ReplyDelete
  14. Nice informations and valuable too....keep mounntiingg with more data....sorry let me try to write tamil next time

    ReplyDelete
  15. நல்ல முயற்சி...உங்களை நான் வாழ்த்த போவதில்லை..!
    இவையெல்லாம் உங்களை போன்ற தமிழ்ர்களின் கடமை.மேலும் அறிவியலை தமிழிலேயே தமிழன் கற்க வேண்டும்,எனது ஆசை தமிழ் பொறியியல் வரையாவது வளர வேண்டும் என்பது தான்.
    தனிப்பட்ட வேண்டுகோள்! உங்களது தளப் பட்டியலில் இயந்திரவியலும் இடம்பெற வேண்டும்.
    இவன்
    விஜய் பிரசன்னா

    ReplyDelete